ஆணின் விந்தணு குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயம் தேவையா?
Technically NO! #அறிவோம்_மரபியல்
நன்றி @noorulhaneef
Somatic cell nuclear transfer (SCNT) எனும் முறையில் ஆணின் விந்தணு துணையின்றி ஒரு கருவை உருவாக்க முடியும்!
எப்படி? வாங்க பாக்கலாம்!
(1/13)
எனவே நமது இனப்பெருக்க செல்கள் (கருமுட்டை, விந்தணு) 23 chrகளும் மற்ற உடல் செல்கள் (somatic cells என்றழைக்கப்படும் எலும்பு, கண், ரத்தம் போன்ற ஏனைய செல்கள்) 23 ஜோடி (46) chrகளும் கொண்டிருக்கும். (3/13)
ஒரு கரு உருவாவதற்கு மிக முக்கியமானவை 1. அதற்கு chrகள் 23 ஜோடிகள் இருக்கவேண்டும் 2. தாயின் முட்டையிலிருந்து அது வளர்வதற்கான ஊட்டச்சத்துக்கள் வேண்டும் .
இந்த அடிப்படையை வைத்து ஆணின் துணையில்லாமல் கருவை உருவாக்கும் மரபியல் முறை தான் somatic cell nuclear transfer #SCNT (4/13)
விஞ்ஞானிகள் இந்த SCNT முறையில் பெண்ணின் கரு முட்டையில் இருந்து உட்கருவை (nucleus) நீக்கிவிட்டு (உட்கருவில் தான் மரபணுக்கள் இருக்கும்) (enucleated egg) விந்தணுவின் துணையில்லாமல் ஏதேனும் ஒரு உடல் செல்லிலிருந்து (somatic cell) உட்கருவை (5/13)
(உடல் செல்லின் உட்கருவில் 23 chr"ஜோடிகள்" இருக்கும்) எடுத்து உட்கருநீக்கப்பட்ட கருமுட்டையில் பொருத்தி ஒரு முழு கருவை உருவாக்குகின்றனர் (6/13)
இந்த தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளதா?
ஆம்.
1996இல் ஸ்காட்லாந்தை சார்ந்த மரபியல் விஞ்ஞானிகள் இம்முறையை பயன்படுத்தி டாலி எனும் ஆட்டுக்குட்டியை உருவாக்கினார். ஆரோக்யமாக வளர்ந்த டாலி தன் வாழ்நாளில் பலகுட்டிகளையும் ஈன்றது. தன் ஆறு வருட ஆயுளுக்குப்பின் நுரையீரல் நோயால் (7/13)
பாதிக்கப்பட்ட டாலியை விஞ்ஞானிகள் euthanize செய்தனர். இதே ஆராய்ச்சி சில குரங்கினங்களிலும் செய்யப்பட்டு குரங்குக்குட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சரி இது மனிதர்களில் இவ்வகை ஆராய்ச்சி நடந்துள்ளதா?
Absolutely yes.
(8/13)
மனிதர்களிலும் ஆராய்ச்சிக்கூடங்களில் SCNT சோதனை செய்யப்பட்டுள்ளது/செய்யப்பட்டு வருகின்றது
எனில் ஒரு முழு குழந்தையை உருவாக்கவா?
இல்லை!
சுருக்கமாக, மனிதர்களில் ethical காரணங்களினால் SCNTமுறை குழந்தையை உருவாக்கப்பயன்படுவதை விட நோய்சிகிச்சைக்கான ஆராய்ச்சிக்கே பயன்படுத்தப்படுகின்றது9
SCNT மூலம் ஒரு உடல் செல்லின் உட்கருவை பெண்ணின் உட்கருநீக்கப்பட்ட கருமுட்டையில் வைக்கும் போது அதிலிருந்து உருவாகும் கரு பன்முகத்தன்மைமிக்க குருத்தணுக்களை கொண்டிருக்கும் (embryonic stem cell). இந்த குருத்தணுக்கள் பல்வேறு குணப்படுத்தமுடியாத நோய்களுக்கு சிகிச்சையாக
(10/13)
பயன்படுமா என்ற ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இவ்வகை ஆராய்ச்சிகள் பெண்ணின் ஒப்புதலுடன் அவரின் கருமுட்டை தானமாகப்பெறப்பட்டு ஆய்வுக்கூடங்களில் நடத்தப்படுவன.
(11/13)
So இந்த SCNT முறையை கருத்தில் கொண்டோமானால் technically ஆண்களின் விந்தணுக்கள் ஒரு சாத்தியமான வீரியமிக்க கருவை உருவாக்கத்தேவை இல்லை
அப்ப ஆண்கள் நாங்கள் தேவையே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்?
(12/13)
ஆண்களுக்காக மரபியலின் சார்பாக ஒரு நற்செய்தி:
You are needed, bro! You are an essential part of genetics and nature!
எப்படி 🥹🥹
- தொடரும்
(அது epigeneticsன்ற பெரிய கத, அதான், விளக்கமாக இன்னொரு 🧵இல் சொல்றேன் )
(13/13)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உண்மைய சொல்லனும்னா இந்திய கலாச்சார கட்டமைப்பு ரொம்ப ரொம்ப இறுக்கமா இருக்கு. அதுக்குள இருக்குறவங்களுக்கும் அது சுதந்திரம் கொடுக்குறது இல்ல, வெளிய போகணும்னு நினைக்கிறவங்களையும் நிம்மதியா இருக்க விடுறது இல்ல. (1/4)
தன் வாழ்க்கைக்கான முடிவுகள் எடுக்குறதையே parents guilt, social guiltன்னு குற்றஉணர்ச்சிலேயே தான் வச்சிருக்கு.
Teenager love பத்தி யோசிச்சா guilt
படிப்பு வரலேன்னா guilt
நல்ல marks எடுக்கலேன்னா parentsஅ அவமதிச்ச guilt
நம்ம life partnerஅ நம்மளே தேர்ந்தெடுத்தா guilt (2/4)
தயிருக்கும் குளிர்காலத்துல இதே நிலைமை தான். அப்போ இட்லி புளிக்கிறதுக்கும் குளிருக்கும் என்ன சம்பந்தம். வாங்க பாப்போம். 1. இட்லி எப்படி புளிக்குது:
மனிதர்கள் ஆதிகாலத்துல இருந்து பல உணவுப்பொருட்கள நொதிக்க வச்சி (fermentation) சாப்ட்டுகிட்டு இருக்கோம். Fermentationனா ஒரு 2/18
உணவுப்பொருள நுண்ணுயிரிகளின் துணைக்கொண்டு அதில் உள்ள glucoseஐ வளர்சிதை மாற்றம் (metabolize) செய்து carbondioxideஅயும் lactic acidஅயும் உற்பத்தி செய்வது. carbondioxide உணவுக்கு பஞ்சு போன்ற softnessஅயும் lactic acid புளிப்பு சுவையையும் குடுக்குது. இட்லிய நொதிக்க வைக்கறதுக்கு 3/18
மனிதர்களுக்கு புற்றுநோய்கள் வருவது நாம் அனைவரும் அறிந்ததே. பலசெல்உயிரிகள் அனைத்திற்குமே புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமெனில் யானை போன்ற மிகப்பெரிய, எண்ணிக்கையில் அதிக செல்களை கொண்டவிலங்கிற்கு அதிகமாக cancer வருமா?
(1/12)
Surprisingly, வருவதற்கான வாய்ப்பு மிக மிகக்குறைவு.
அது எப்படி சாத்தியம்? வாங்க பாக்கலாம்.
Thread கொஞ்சம் technicalஆ போகும்போது adjust பண்ணிக்கோங்க. (2/12)
பலசெல்உயிரிகளின் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்குமே குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. தன் ஆயுட்காலம் முடிந்த செல் நிர்ணயிக்கப்பட்ட மரணப்பாதையை (apoptosis) தேர்ந்தெடுத்து தன்னை மாய்த்துக்கொள்ளும். மேலும் ஒரு செல் இரண்டு செல்லாக பிரிந்து செல்களின் பெருக்கம் நிகழும் போதும் கூட (3/12)
ஆனால் மார்ஷல் மற்றும் வாரன் எனும் இரு மருத்துவர்களின் ulcer தொடர்பாக வெளியிட்ட 1982ல் ஆய்வுகள் இந்த உலகத்திற்கு வேறு ஒரு உண்மையை பறைசாற்றின. Dr. வாரன் தனது ஆய்வகத்தில் ulcer நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடல் திசுமாதிரிகளில் இருந்து ஒரு வளைந்த சூழல் (spiral) வடிவ பாக்டீரியாவை 2/8
கண்டறிகிறார். நோயின் தீவிரமும் பாக்டீரியாவின் எண்ணிக்கையும் நேர்மறைத் தொடர்பில் இருப்பதையும் (postive correlation) காண்கிறார். முதலில் அந்த பாக்டீரியாவின் தன்மைகுறித்து ஆராய அதை ஆய்வகத்தில் வளர்ப்பது சிரமமாய் இருந்தாலும் பின் இரு மருத்துவர்களும் அதில் வெற்றி பெறுகின்றனர். (3/8)
பள்ளிக்காலங்களில் எங்கள் classல ஒரு பொண்ணு.
அவ தான் எப்பவுமே first rank. Perfection, Home work complete பண்றது, exams எல்லாத்திலயுமே அவ தான் top. Teachers எல்லாருக்கும் favorite. எங்களுக்குள்ள second இல்லனா third rankக்குத் தான் போட்டி இருக்கும்.
(1/6)
யாராலையுமே அவள beat பண்ணமுடியலன்றது classகுள்ள எப்படி மாறுச்சுனா "அவ teachers' favoriteன்றதால அவளுக்கு question papers கெடைச்சிடுது அதனால தான் அவ I rank எடுக்குறா அவளுக்கு தெறமைல்லாம் இல்லன்னு" ஒரு group conspiracy உருவாக்கிட்டு இருந்தாங்க.
(2/6)
அப்போ தான் நானும் என் friendஉம் கொஞ்சம் extra hard-work போட்டு மாறி மாறி first rank எடுக்க ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் ஒரு student மட்டும் தான் இந்த classல படிப்பாளின்ற concept மாதிரி அந்த classல நெறய நல்லா படிக்கிற students உண்டுன்ற பேரு கிடைச்சது.
(3/6)
A must watch video!
கீழே உள்ள வீடியோவில் பேராசிரியர் எரிக் க்ரீன் NHGRI ஆய்வகத்தில் நமது மரபணுத்தொகுப்பின் (genome) 1000இல் ஒரு பகுதியை சுவர்களில் அச்சிட்டுள்ளதை விளக்குகின்றார். நமது மரபணுவின் 1000இல் ஒரு பகுதி ஆக்கிரமித்துள்ள இடம் ~80 அடி.
எனில், மனிதனின் மொத்த மரபணுத்தொகுப்பு (~320 கோடி A, T, C மற்றும் G nucleotide மூலக்கூறுகள்) ஆக்கிரமிக்கத் தேவைப்படும் இடம் கிட்டத்தட்ட 15.5 மைல்கள்.
ஆச்சர்யம் என்னவெனில் இந்த மொத்த மரபணுத்தொகுப்பும் நமது செல்களுக்குள் கிட்டத்தட்ட ஒரு மில்லிமீட்டரை 100ஆல் வகுத்தால் எவ்ளவு சிறிய இடம் இருக்குமோ (10micrometer) அவ்வளவு சிறிய கருவிற்குள் (nucleus) அமையப்பெற்றுள்ளது.