• இந்தி திணிப்புக்கு எதிராக போராடி இரு மொழி கொள்கையை இன்று வரை செயற்படுத்த வைத்த
• மாநில அரசுபணிக்கு tnpsc யை உருவாக்கிய
• கோவில் கொடியவரின் கூடாரமாகாமல் தடுக்க அறநிலைத்துறையை உருவாக்கிய
• எளிய மக்கள் பயணிக்கும் வகையில் பொது போக்குவரத்தை உருவாக்கிய
• குடிசைமாற்று வாரியத்தை உருவாக்கிய
• கிராமம் தோறும் மின்வசதியை ஏற்படுத்திய
• தொழில்வளம் பெருக அரசு தொழிற்பேட்டையை உருவாக்கிய
• அதிகப்படியான அரசு மருத்துவகல்லூரிகளை கட்டிய
• பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுத்த
• 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய
• மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்சாவை ஒழித்த
• எல்லோரும் சமம் என்பதன் சாட்சியாய் சமத்துவபுரம் அமைத்த
• மாணவர்களுக்கு பஸ்பாஸ்,சைக்கிள், காலை, மதிய உணவு வழங்கும்
• கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் அனைவருக்கும் மருத்துவம் வழங்கும்
• விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும்
• பட்டதாரி பெண்களுக்கு மாதாமாதம் ஊக்கத்தொகை வழங்கும்
• பெண்களுக்கு இலவசபஸ் பயணத்தை அமல்படுத்தி
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் வகையில் "மக்கள் நல திட்டங்கள்" பலவற்றை செய்து இந்தியாவிலேயே அதிக வரி கட்டும் மாநிலங்களில் 3வது இடத்திலும்
உயர்கல்வியில் அதிக மாணவர்கள் படிக்கும் 51.4% சேர்க்கை கொண்டு இந்தியாவில் முதல் மாநிலமாக திகழும்
மருத்துவம் கல்வி உள்கட்டமைப்பில் ஐரோப்பிய நாடுகள் அளவுக்கு வளர்ந்து நிற்பதாய் பொருளாதார நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் போன்ற சான்றோர் புகழும் #தமிழ்நாடு
நாங்கள் யார் என்பதை எங்களின் செயல்பாடே சொல்லும் சார்