#அறிவோம்_கோவில்கள்#ஸ்ரீவாஞ்சியம்
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவராக விளங்கும் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி திருக்கோவில். வாழ்வில் ஒருமுறையேனும் சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம். உலகிலேயே எம தர்ம ராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்டு வழிபடும் ஸ்தலமாக என்ற
சிறப்பு பெற்றது ஸ்ரீ வாஞ்சியம். காசிக்கு ஒப்பான சிறப்புடையதாக ஆறு தலங்கள் போற்றப் படுகிறது.(திருவெண்காடு, திருவையாறு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடை மருதூர், ஸ்ரீவாஞ்சியம்). இந்த ஆறு தலங்களுள் அளப்பரிய மகிமை பொருந்திய தலமாகத் திகழ்வது திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அமைந்துள்ள
ஸ்ரீவாஞ்சியம். வியாசர் அருளிய ஸ்காந்த புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் இந்தத் தலத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது, அதில் இருந்து கோயிலின் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம். பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில்
அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீவாஞ்சிநாதர். அம்பாளின் பெயர்
ஸ்ரீமங்களாம்பிகை. இந்தத் தலத்தில் தேவர்களும் முனிவர்களும் கடும் தவமிருந்து சிவபூஜை செய்திருக்கிறார்கள். தெய்வங்களே இங்கு வந்து, சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டிருக்கிறார்கள். லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டு
விட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். உலகில் உள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும். தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ)
மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம் ஸ்ரீ வாஞ்சியம் எனப்படுகிறது. மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதி காலத்தை தர வேண்டும் என்றும் அருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர
பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும் எமதர்ம ராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடை பெறுகின்றன. இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும்
என்பது மரபாகும். ஒரு முறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,என வேண்டினாள். அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று
பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார். அதன் படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது.
எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. மரணபயம், மனச்சஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவது இல்லை. மேலும் கோயில்
எதிரிலேயே சுடுகாடு இருக்கிறது. பிணத்தை எரியூட்டியவுடன் அங்கிருந்தபடியே சுவாமியை வணங்கி இறந்தவர் சிவனடி சேர வேண்டிக் கொள்கிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும். ஸ்ரீவாஞ்சியம் தலம் தேவார மூவராலும் மணிவாசகப்
பெருமானாலும் பாடல் பெற்றுள்ள தலம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகவும் மேலும் பல சிறப்புக்களை பெற்ற தலமாகவும் திகழ்கிறது ஸ்ரீவாஞ்சியம். மூல மூர்த்தி வாஞ்சிநாதர் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார். அம்பிகையின் திருநாமம் மங்களாம்பிகை. எமன் அருள் பெற்ற தலமாதலால்
இங்கு எமனே சுவாமிக்கும் அம்பிகைக்கும் வாகனத் தொண்டு புரிகிறார். ஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகுவும் கேதுவும் ஒன்றாக ஒரே சிலையில் பாம்பு உடலாகவும் மனித முகமாகவும் ஓரே நிலையில் சஞ்சர்க்கின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம் காலசர்ப்ப தோஷம் நீங்கி
நலம் பெறலாம். இத்தலத்தின் பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் இறந்த பின், அவரது பிள்ளைகளால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே செய்து, முக்தி கிடைக்க வழி தேடிக் கொள்ளலாம். இதற்கு ஆத்ம தர்ப்பணம் எனப்பெயர். மேலும் இத்தலத்து
தீர்த்தத்தை பருகினால் மரண அவஸ்தைப் படுகிறவர்களுக்கு சிரமம் நீங்கும் என்கிறார்கள். இத்தலத்தில் இறந்தாலும், வேறு இடத்தில் இறந்தவர் களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலும் சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் (சிவாயநம) கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம். பிற தலங்களைப் போல்
ஸ்ரீவாஞ்சிய தரிசனப் பேறு எளிதில் கிடைக்கப் பெறுவதில்லை. தல யாத்திரை மேற்கொள்ள விழையும் அன்பர்களுக்கு இடர்களோ தடங்கல்களோ சோதனைகளாக வந்த வண்ணம் இருக்கும். அல்லது பல காரணங்களால் தாமதப் படவும் வாய்ப்புகள் உண்டு. ஆன்மாக்களின் கர்ம வினைப் பலன்கள் எளிதில் இத்தலத்தை அடைய விடுவதில்லை.
இருப்பினும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமியையே உபாயமாகப் பற்றி, உறுதியான பக்தியோடு முயற்சி மேற்கொள்ளும் அடியவர்களுக்குப் பெருமான் பெரும் கருணையோடு தரிசனம் தந்தருளி ஆட்கொள்கிறார். இவ்வூருக்கு 'ராஜகம்பீர சதுர்வேதி மங்கலம்' என்றும் பெயர் உள்ளது. லிங்க ஸ்வரூபமாக இருக்கும் சிவபெருமான் -கிருத
யுகத்தில் ரத்தின மயமாகவும், திரேதா யுகத்தில் பொன் மயமாகவும், துவாபர யுகத்தில் வெள்ளி வடிவமாகவும் கலி யுகத்தில் கல்மயமாகவும் தரிசனமளித்து வருகிறார். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நமது மகரிஷிகள் பிராண பயம் ,கொடிய உபாதைகள், பயம் ஆகியவற்றைப் போக்கும் சக்தி வாய்ந்த மந்திரப்
பிரயோகம் செய்த யந்திரங்களை பெருமானின் பீடத்திற்கு அடியின் ஆழத்தில் மனித உடலின் வடிவில் பிரதிஷ்டை செய்தள்ளனர். இவற்றில் இதயம்,ஸ்வாச கோசம், கை கால்கள்,கழுத்து கண்கள், சிறுநீரகங்கள், மர்ம ஸ்தானங்கள் என்று நமது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் பாதுகாக்கும் பல யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்
பட்டுள்ளன. பிரிந்தவர்கள் ஒன்று சேர பிராத்திக்கும் தலம் இது. அஷ்டமாதிபதி தசா, சனி தசா நடப்பவர்கள் வழிபட வேண்டிய ஸ்தலமும் ஆகும். அதிலும் கார்த்திகை மாத கடை ஞாயிறு வழிபாடு செய்ய அற்புதங்கள் நிகழ்த்தும் திருத்தலம் இது. இங்கு மிக விமர்சையாக கொன்டாடப்படும் கார்த்திகை கடைசி ஞாயிறு விழா.
மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் திருக்கோயில்திருவாரூரில் இருந்து 18 km தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 36 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 28 km தொலைவிலும், நன்னிலத்தில் இருந்து 6 km தொலைவிலும் அமைந்து உள்ளது.
திருச்சிற்றம்பலம்!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
பல வருஷங்களுக்கு முன் காஞ்சி மஹா ஸ்வாமிகள் மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஆனந்ததாண்டவ புரத்தில் எழுந்தருளி இருந்தார். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் மஹானை தரிசிக்க அங்கே சென்றிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்திருந்த சிறுவர்களிடம் நோட்டுப் புத்தகங்களைக்
கொடுத்து, அதில் ராம நாமம் எழுதிக் கொண்டு மாலையில் வரும்படி சொல்லி அனுப்பினார் மகாபெரியவா.
அதே போல மாலையில் அச்சிறுவர்கள் ராம நாமம் எழுதி வந்து அவரிடம் தந்தனர். அங்கிருந்த சிறுவர்களில் ஒருவனைப் பார்த்து ராம நாமம் சொல்லுமாறு பணித்தார் மஹான். பக்கத்தில் இருந்தவர்கள் தயங்கியவாறு,
அவனால் பேசமுடியாது ஸ்வாமி என்றனர். அவர்களைக் கையமர்த்தித் தடுத்த மஹான், மீண்டும் அந்தச் சிறுவனைப் பார்த்து, "ம் நீ ராம நாமம் சொல்லு!" என்று பணித்தார். என்ன ஆச்சரியம்! வாய் பேச இயலாத அந்தச் சிறுவன் முதலில் சற்று திணறிவிட்டு, பின்பு படிப்படியாக தெளிவான உச்சரிப்பில் ராம நாமம் சொல்ல
#நற்சிந்தனை விச்வரதன் என்ற மன்னரின் மகன் க்ஷத்திர பந்து. அவன் சிறு வயது முதலே தீய சகவாசத்தால் எந்த நற்குணமும் இல்லாதவனாகவும், பிறரைத் துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டவனாகவும் வாழ்ந்து வந்தான். அவனது இம்சைகளால் வேதனைப்பட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரண்மனைக்குச் சென்று,
அந்த இம்சை இளவரசனான க்ஷத்திரபந்துவை நாட்டை விட்டு வெளியேற்றும்படி மன்னரிடம் வேண்டினார்கள். தன் மகனைத் திருத்த மன்னரும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அவன் திருந்தாததால், க்ஷத்திரபந்துவைக் காட்டுக்கு அனுப்புவது எனத் தீர்மானித்தார். அனுப்பியும் வைத்தார். நாடு நிம்மதியானது. ஆனால்,
காட்டுக்குச் சென்ற பின்னும் க்ஷத்திரபந்து திருந்துவதாகத் தெரியவில்லை. காட்டில் வாழும் மிருகங்களுக்கும், தவம் புரியக் காட்டில் வசிக்கும் துறவிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்தக் காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவர் அங்கிருந்த ஒரு குளத்தில் நீராட சென்றார். அப்போது ஈரமாக இருந்த
#ஸ்ரீமன்நாராயணீயம் நூறு தசகங்களை கொண்டது. ஒவ்வொரு தசகத்திலும் தோராயமாக பத்துப் பாடல்கள் இருக்கும். இதை இயற்றியவர் #நாராயண_பட்டத்திரி அவர் தன் குருவின் வியாதியை தான் வாங்கிக் கொண்டு தன்ஆச்சாரயனுக்கு அந்நோயிலிருந்து விடுதலை கொடுத்து, மற்ற மாணாக்கர்களுக்கு அவர் தொடர்ந்து பாடம்
எடுக்கும்படி உதவினார். ஆனால் அவர் ஏற்றுக் கொண்ட வாத நோய் அவரை மிகவும் வருத்தியது. அவர் பணக்கார வீட்டுப் பிள்ளை. அவர் வீட்டு வேலையாள் அவரின் துன்பத்தைக் காண பொறுக்காமல் ஒரு ஜோசியரிடம் சென்று பரிகாரம் வேண்டினார். அவர், நாக்கில் மீனை வைத்துக் கொண்டு குருவாயூரப்பன் கோவிலில் அவரை பாட
சொல்லு என்றார். இதை வந்து பட்டத்திரியிடம் வேலையாள் சொன்னார். முதலில் அதிர்ச்சி அடைந்தார், பின் புரிந்து கொண்டார். மகா விஷ்ணுவும் மச்சாவதாரத்தில் இருந்து பாட ஆரம்பித்தார். தினம் அவரை தூக்கிக் கொண்டு கோவிலில் ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டுப் போய் விடுவார்கள். மாலை வந்து திரும்பவும்
#மகாபெரியவா
என் மனைவிக்கு எப்போதும் உடம்பு சரியில்லை. தலைவலி என்று படுத்துக் கொண்டே கிடக்கிறாள். சமையல் செய்வதில்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில்லை சொல்லிக் கொண்டே போனார் நடுத்தர வயது பக்தர். கொஞ்ச நேரத்துக்குப் பின் பெரியவா சொன்னார்கள், "இதையே உன் சிநேகிதர்களிடம் சொல்லி
பார், சம்சாரத்தை டைவர்ஸ் பண்ணுன்னு உபதேசம் பண்ணுவா. உன் பந்துக்களிடம் சொல்லு, அவள் கிடக்கிறாள் கழிசடை, பிறந்தகத்துக்கு அனுப்பிவிட்டு, வேற நல்ல பெண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கோ என்பார்கள். ஜோஸ்யரிடம் போய்க் கேட்டுப் பார், ராகு தசை,கேது தசை பரிகாரம் பண்ணணும் என்பார்.
டாக்டரிடம்
போ. எக்ஸ்-ரே ரத்தப் பரிசோதனை இஸிஜி டெஸ்ட் எடுக்கச் சொல்லி, ஒரு பக்கம் நிறைய மருந்து எழுதிக் கொடுப்பார். சொந்தக்காரப் பாட்டியைக் கேள், உனக்குத் திருஷ்டி தோஷம், செய்வினை,ஆபிசாரம் இருக்கு. மந்திரவாதியிடம் போ என்பாள். சரி என்னிடம் வந்தே, என் சம்சாரத்துக்கு உடம்பு குணமாகணும்னு என்னை
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆழ்வார்களிலே, நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தாராம். 1) மத்ஸ்ய 2) கூர்ம 3) வராஹ 4) நரசிம்ம 5) வாமன 6) பரசுராம 7) ஸ்ரீராம 8) பலராம 9) கிருஷ்ண 10) கல்கி
அவதாரங்களை வரவழைத்தார். முதல் சுற்றில் மத்ஸ்ய, கூர்ம,
வராஹ மூன்று அவதாரங்களும் முறையே மீன், ஆமை, பன்றி ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி, நிராகரித்து விட்டார். நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால், அவரை நிராகரிக்கவில்லை. நரசிம்மர் முதல் கல்க
வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள். இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார். மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி, மூவடி நிலம் கேட்டு, பின் பெரிய காலால், மூவுலகையும் அளந்தவர் நீங்கள். அதுபோல போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள
#மகாபெரியவா#நற்சிந்தனை
உத்தமமான குரு தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பர். அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய தொடங்கி விடும்.
மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம் குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது மிக அவசியம். அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை
நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு. காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய கணவனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள் தான் என்ற ஒரு பேதைமையும் உண்டு. ஒருமுறை அந்த