#NeetResult
தமிழ்நாட்டில், 1.32,167 பேர் நீட் தேர்வு எழுதி, 67787 பேர் நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவம் & சார்ந்த படிப்பில் ஆர்வம் கொண்டவர்கள். இதில் தேர்ச்சி அடையாத 64380 பேர்களில் சராசரியாக 40000 பேர் மீண்டும் NEEt Repeater Coaching
சேருவார்கள். அது போக அடுத்த பேட்ச் 1.30 லட்சம் பேர்கள் வேற...
அது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது தேர்ச்சியடைந்த 67787 பேர்களுக்கும் மருத்துவ சீட் கிடைக்குமா என்றால் அதுவும் கிடைக்காது. தமிழ்நாட்டில் இருப்பது 5300 இடங்கள்தான். அந்த இடங்களிலும் 4000 இடங்களை இதற்கு முன் பல பேட்ச்
மாணவர்கள் பல முறை Neet Repeater Course எழுதி அனுபவம் பெற்றவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த ஆண்டு +2 எழுதிய மாணவர்களுக்கு அதிகபட்சம் 1000 பேர்களுக்கு சீட் கிடைத்தாலே பெரிய விஷயம். அந்த 1000 பேரிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் 20% இருக்கக்கூடும். இதற்குமுன் +2 மதிப்பெண் அடிப்படையில்
மருத்துவப்படிப்புகளுக்கு கட் அஃப் போட்டு சேர்த்த போது, ரிசல்ட் வந்த அன்றே பிள்ளைகளுக்கு ஓரளவு முடிவுன் தெரிந்து விடும். ஒரே உழைப்பு.. ஒரே தேர்வு. அதுவும் பள்ளி, டியூஷனிலேயே முடிந்து விடும். இதற்கென தனி கோச்சிங் வகுப்புகள், அதுவும் பல முறை ரிப்பீட்டர் கோர்ஸ் தேவைப்பட்டிருக்கவில்லை
நீட் கொண்டு வரும்போது சொன்ன காரணங்களில் ஒன்று, தமிழ்நாட்டில் +2 பள்ளிகளே தனி தொழிற்ச்சாலை போல இயங்குகின்றன. அதில் படிக்கும் மாணவர்களே 90% இடங்களை எடுத்துக் கொள்கின்றனர் என்பது. அதற்கான எளிமையான தீர்வு, ஒரு பள்ளியில் இருந்து அதிகபட்சம் 300 பேர்களுக்கு மேல் +2 தேர்வு எழுத அனுமதி
இல்லை என ஓர் அரசாணை இட்டிருந்தாலே போதும். இப்போதே அதே பள்ளிகள் அதே போல பல ஆயிரம் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு +2 பாடங்களுக்கான நேரத்திலும் நீட் கோச்சிங் கொடுத்துக் கொண்டு உள்ளனர். இந்த 5200 இடங்களையும் மீண்டும் ஆக்கிரமிக்கப் போவது ஆண்டுக்கு பல லட்ச ரூபாய் பள்ளிக்கும், கோச்சிங்
வகுப்புகளுக்கும் செலவிடக் கூட வசதியும், பல ஆண்டுகள் வீட்டில் இருந்து ரிப்பீட்டர் கோச்சிங் எடுக்க முடியும் சூழலும் கொண்டவர்கள்தான்!
முந்தைய தவறுகளை, குறைகளை ஓரளவேனும் குறைக்க உதவினால்தான் அதன் பெயர் சீர்திருத்தம். முன்பை விட ஏழை எளிய மாணவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதற்கா
அரசும், நீதிமன்றங்களும்!
7.5% இடஒதுக்கீடு மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் இடங்கள்தான் இப்போதைக்கு ஓர் ஆறுதல். அதையேனும் 15% ஆக மாற்ற முடியுமா என அரசு முயல வேண்டும். கல்விக்கான எல்லாவித தகுதித் தேர்வுகளையும் நீக்குவதே நிரந்தர தீர்வு. அதற்கான காலம் ஓருநாள் வந்தே தீரும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#Thread
விமலா டீச்சர் இன்று மாலை இறந்து விட்டாரென செய்தி வந்தது. ஐந்தாம் வகுப்பு வரை அரசு உதவிப் பள்ளியில் படித்த என்னை ஆறாவது டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில மீடியம் சேர்த்து விட்ட போது எனக்கு இங்கிலீஷ் பாடபுத்தகங்கள் மீது வெறுப்பே வந்து விட்டது. சின்ன சின்ன சொற்களுக்கு
கூட பொருள் தெரியாமல் முழிப்பேன். வகுப்பே சிரிக்கும். (அவர்களுக்கும் தெரியாது என்பதை பின்னாளில்தான் தெரிந்து கொண்டேன்) அவமானமா இருக்கும். Lifco dictionary வைத்து பாடபுத்தகத்தில் மேலே தமிழில் எழுதி வைத்துப் படித்தை ஒரு நாள் டீச்சர் பார்த்துட்டாங்க. அவர்தான் எனக்கு வகுப்பாசிரியர்.
இனிமே, தினம் ஸ்கூல் முடிஞ்சு என் வீட்டுக்கு வாடா என்றழைத்து எனக்கு விரல் பிடித்து ஆங்கிலம் எழுத, உச்சரிக்கக் கற்றுக் கொடுத்தார். அவரது கணவர் தமிழ் ஐயா வில்சன் தனராஜ் தான் எனது தமிழ் ஆர்வத்துக்கும் காரணம். அவரைப்போல வகுப்பெடுக்கும் ஓர் ஆசிரியரை வாழ்நாளில் நான் கண்டதில்லை.
#Thread
"நடங்க! ஓடாதீங்க" என்பதுதான் மருத்துவர்களின் post covid கால அட்வைஸ். புதுசா ஜிம்லே சேருபவர்கள் நிச்சயம் இதைக் கடைபிடியுங்க.
Cardio Exercises are the basic requirement for the Wight loss program in any Gym.
இதிலே டிரெட்மில் ஜாகிங், ரன்னிங் இரண்டுமே குறைந்த நேரத்தில்
அதிக கலோரி எரிப்பு என்பதாலும், ஜிம் டைம் அதிகபட்சம் ஒரு மணி நேரமே என்பதாலும் பெரும்பாலும் இவைகளையே பரிந்துரைப்பார்கள். Cardio exercise means making your heart pump blood faster into your system. எனவே, கார்டியோ பயிற்சி செய்பவர்கள் படிப்படியாக தனது இதயத்தைப் பழக்கிட வேண்டும்.
இதுகுறித்து @athisha வின் நல்ல கட்டுரை ஒன்று இருக்கும். படிப்படியாக... முதலில் நடை. பிறகு வேக நடை.. பிறகு intermittent jogging... என மாதக்கணக்கில் பயிற்சி தேவை. மூன்றே மாதத்தில் விஜய், ஆர்யா வாக மாறி விட முடியாது.
பெண்கள் முக்கியமாக நீண்ட காலப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
#thread
எனது இந்த ட்வீட்டை வைத்து ஒரு புதிய சர்ச்சையை சங்கிகள் கிளப்பி உள்ளனர். நமது @kryes UC Berkeley யில் முனைவர் பட்டம் பெற்றாரா எனும் அபத்தமான கேள்வியுடன்! இதுபோன்ற திட்டமிட்ட கவனக் கலைப்புகளுக்கு பதில் அளித்து இவர்களுக்கு மதிப்பு தந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியுடன்
இருக்கிறேன். ஆனால், நம்ம முருகர் காலையில் சில விளக்கம் தந்துள்ளார் போலிருக்கு. அவரது அந்த அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை. அது தேவையற்றது. அவர்கள் கோருவது எளிய விஷயம்தானே! முனைவர் பட்டச் சான்றிதழை வெளியிட்டு விடலாமே என சிலர் கருதுவதால் இந்த விளக்கம். 1. இந்தச் சர்ச்சையைக்
தொடங்கி பரப்புவது முழுக்க anonymous IDs. இவர்கள் நம்முடனே உலவும் நிஜ மனிதர்கள்தான். ஆனால் ஏன் இந்த முகமுடி? நிஜ அடையாளம் கொண்டவர்களுடன் எதிர்கருத்து பேசுவது வேறு! இது போன்ற முகமுடிகளுடன் முட்டிக் கொண்டு மண்டை வீங்குவது வேறு. அவர்களிடம் ஏதோ ஒரு கட்டத்திலேனும் புரிய வைக்க இயலும்.
#Thread
ஒரு மாதத்தில் இரண்டு பொதுக்குழுக்களை அதிமுக நடத்தியது. இரண்டுமே வாரநாட்களின் முற்பகலில், தேசிய நெடுஞ்சாலை அருகே நடத்தப்பட்டது. முதல் கூட்டத்தில் இரு அணிகளும் கலந்து கொண்டு கூட்ட அரங்கில் பேனர் கிழிப்பு முதல் தண்ணீர் பாட்டில் வீச்சு வரை சகலமும் நடத்தினர். ஆனால், வெளியில்
ஒரு அசம்பாவிதமும் இன்றி மிகச் சிறப்பான பாதுகாப்பை அளித்து பொதுக்குழுவை நடத்திய காவல்துறை ஒத்துழைப்பு தந்ததை மக்கள் பார்த்தனர். ஆனால், அதிமுக தலைவர்கள் யாருக்கும் காவல்துறைக்கு நன்றி சொல்லும் குறைந்தபட்ச பண்பு கூட இல்லை. முதல் பொதுக்குழுவில் நடந்த கலாட்டாவை காட்டி அடுத்தப்
பொதுக்குழுவுக்கு அனுமதி மறுத்திருக்க முடியும். ஆனால், பெருந்தன்மையான நடந்து கொண்ட அரசுக்கு எவரும் நன்றி சொல்லவில்லை.
ஆனால், அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு பிரிவினர் மோதிக் கொண்ட கலவரத்துக்கு அதிமுகவினரே எதிரணி மீது மட்டுமே குற்றம் சாட்டும்போது, சில நடுநிலைகள் காவல்துறை
#thread
அறம் என்பது யாதெனில்...
ஒரு முறை எழுத்தாளர் பவா செல்லதுரை சாகித்ய அகாடமியின் போர்ட் மெம்பராக இருந்தார். அவருடைய இறுதி ஆண்டில், அப்போது மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட "சிதம்பர நினைவுகள்" புத்தகம் வந்திருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் அதைப் போலொரு பேசப்பட்ட
மொழியாக்கப் படைப்பு தமிழில் வந்ததில்லை என உறுதியாக சொல்வேன். சில ஆயிரம் புத்தகங்கள் இன்று வரையில் அச்சிடப்பட்டு பல ஆயிரம் தமிழ் வாசகர்களை சென்றடைந்த புத்தகம் அது. அதை எழுதிய மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் மிகப் பிரபலமான மனிதராகவே மாறிவிட்டார். உண்மையில் மனதை
உருக்கிடும் வாழ்வனுபவங்களின் தொகுப்பு. அதை விட ஒரு மனிதன் அப்பட்டமாக உண்மையைப் பேசி விட முடியாது எனுமளவுக்கு நேர்மையான கட்டுரைகள். அது தமிழில்தான் எழுதப்பட்டதோ என எண்ணுமளவுக்கு அற்புதமான மொழியாக்கம் வேற!
சரி! விஷயத்துக்கு வரலாம்.
அந்த ஆண்டில் தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான
பகலில் அதிகபட்சம் ரூ 3.50 க்கு கிடைக்கும் தனியார் மின்சாரத்தின் விலை இரவில் யூனிட் 20 ரூபாய்! நேற்றிரவு மட்டும் 35 கோடிக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி உள்ளோம். இதே விலையில்10 நாளைக்கு வாங்கினா ரூ 350 கோடி போச்சு. அதிலும் கணிசமான பில் அதானிக்கு போகும் என்பது வேற விஷயம்.
மத்தியத் தொகுப்பில் இருந்து இதேபோல மின்சாரம் குறைவாக தந்தாலோ, நமக்குத் தேவையான நிலக்கரி அளவைக் குறைத்தாலோ வரும் மே மாதம் மிக அதிகமான பவர் கட் மற்றும் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். இரவில் நாம் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை இயன்றவரை குறைத்து சிக்கமாக இருந்து அரசுக்கு ஒத்துழைக்க
வேண்டும். மிக அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளை இரவு ஷிஃப்ட் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். விவசாய கரண்ட் முழுவதும் பகலில் தடையில்லாமல் தந்து விட்டு இரவில் நிறுத்தலாம். தென்மேற்கு காற்று தொடங்கி காற்றாலைகள் உற்பத்தி வந்து விட்டால் மீண்டும் மின்மிகை மாநிலமாக ஆகிடலாம்.