#நற்சிந்தனை
சுமாலி என்ற வேடுவரின் மகன் ரத்னாகரன். அவன் அம்பெய்யும் கலையில் தலைசிறந்த வீரனாகத் திகழ்ந்தான். அவனுக்குத் திருமணமாகி மனைவி மக்கள் எனப் பெரிய குடும்பம் உருவான பின், குடும்பம் நடத்துவதற்குப் போதுமான அளவு வருமானம் வேடுவத் தொழிலில் கிடைக்காததால், வழிப்பறி கொள்ளைக்காரனாக
மாறினான். சில சமயங்களில் அவன் வழிப்பறி செய்யும் போது, தங்கள் உடைமைகளை வழங்க மறுக்கும் மக்களைக் கொல்லவும் துணிந்து விட்டான். ஒருநாள் ஒரு துறவி அந்த வழியாக வருவதைக் கண்டான்.
அவர் கையில் வீணை இருப்பதையும் பார்த்தான். வீணைக்குள் பொற்காசுகளை அந்தத் துறவி ஒளித்து வைத்திருப்பதாகக்
கருதிய ரத்னாகரன், கத்தியைக் காட்டி அவரை வழிமறித்து அவரது உடைமைகள் அனைத்தையும் தன்னிடம் தந்து விட்டுச் செல்லுமாறு கூறினான். ஆனால் அவனையோ அவனது கத்தியையோ பார்த்து அந்தத் துறவி அஞ்சவில்லை.
“இந்த வீணை மட்டும் தான் என் உடைமை. வேண்டுமானால் இதை எடுத்துக் கொள்ளப்பா!” என்று கூறினார். தன்
கத்திக்கு அஞ்சாமல் நின்றபடியால், இவர் சாதாரண துறவியாக இருக்க வாய்ப்பில்லை, தன்னை கைது செய்வதற்காக மன்னன் அனுப்பிய காவலாளியாக இருக்கக் கூடும் என்று கருதிய ரத்னாகரன், அவரைக் கத்தியால் குத்திக் கொல்லப் போனான். அப்போது அவனைத் தடுத்த துறவி, “நீ என்னைக் கொல்! நான் தடுக்கவில்லை. ஆனால்
அதற்கு முன் ஒரு கேள்வி. உன் குடும்பத்தை வாழ்விக்கத் தானே நீ கொள்ளை அடிக்கிறாய்? நீ கொள்ளை அடித்துக் கொண்டு போய்க் கொடுக்கும் செல்வத்தில் பங்கு கொள்ளும் உனது குடும்பத்தார், இதனால் ஏற்படும் பாபத்தில் பங்கு கொள்வார்களா? இதற்கு விடையளித்து விட்டு என்னைக் கொல்!” என்றார். “நீ இங்கேயே
இரு! நான் வீட்டுக்குப் போய் என் குடும்பத்தாரிடமே இக்கேள்வியைக் கேட்டு அதற்கான விடையோடு வருகிறேன்” என்று சொல்லி அவரை அங்கிருந்த மரத்துடன் கட்டிப் போட்டு விட்டுச் சென்றான் ரத்னாகரன். முதலில் தன் பெற்றோரிடம், “நான் இத்தனை நாள் வழிப்பறி செய்து தான் செல்வம் கொண்டு வந்தேன். அதில் பங்கு
கொண்ட நீங்கள் அதனால் உண்டாகும் பாபத்தில் பங்கு கொள்வீர்களா?” என்று கேட்டான்.
“அதெப்படி? பெற்றோரைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை! நீ அதைச் செய்தாய். அதனால் பாபங்களில் எங்களுக்குப் பங்கு கிடையாது. முழுவதும் உன்னையே சேரும்!” என்றார்கள். தன் மனைவியை கேட்டபோது, “சாஸ்திரங்கள் கூறுவது
என்னவென்றால், கணவன் செய்யும் அனைத்துப் புண்ணியங்களிலும்
மனைவிக்குப் பாதி பங்குண்டு. ஆனால் கணவன் செய்யும் பாபங்களில் மனைவிக்குப் பங்கில்லை. மனைவி செய்யும் புண்ணியங்களில் கணவனுக்குப் பங்கில்லை. ஆனால் அவள் செய்யும் பாபங்களில் பாதி பங்கு கணவனுக்கு உண்டு!” என்றாள்.
“என் குழந்தைகளாவது
என் பாபங்களில் பங்கு கொள்வார்களா?” என ரத்னாகரன் புலம்பிய போது, அவன் மனைவி, “இல்லை! 12 வயது வரை குழந்தைகள் செய்யும் பாபங்களும் உங்களையே சேருமே ஒழிய, உங்கள் பாபங்கள் அவர்களை இப்போது பாதிக்காது!” என்றாள். வெறுத்துப் போய் துறவியிடம் வந்தான் ரத்னாகரன். அவரது கால்களில் விழுந்து நடந்ததை
கூறி அழுதான். “தாங்கள் யார்?” என்று கேட்டான். “நான் தான் நாரதன்!” என்றார் அந்தத் துறவி. “நான் இத்தனை நாள் பாபங்களே செய்து பாபியாக வாழ்ந்து விட்டேன். இதிலிருந்து மீள வழி கூறுங்கள்!” என்று வேண்டினான். அப்போது அவர், “ராம நாமத்தை நீ ஜபம் செய் அது உனது அனைத்துப் பாபங்களையும் போக்கும்”
என்றார். ஆனால் அவனது வாயில் ராம நாமம் வரவில்லை. அருகில் இருந்த மரத்தைக் காட்டிய நாரதர், “இதன் பெயர் என்ன?” என்று கேட்டார். “மரா” என்றான்.
“இதை ஜபம் செய்” என்று சொல்லி விட்டு நாரதர் புறப்பட்டார்.
‘மரா’ ‘மரா’ ‘மரா’ என்று மரத்தை நினைத்தபடி ரத்னாகரன் ஜபம் செய்தான். அவனைச் சுற்றி ஒரு
புற்றே உண்டாகிவிட்டது. அதைக் கவனியாமல் ஜபம் செய்த அவனுக்கு அந்த மரத்தில் பகவான் காட்சி காட்சியளித்தார். பின்னாளில் அவர் #வால்மீகி என்ற பெரிய ரிஷியாக உருவாகி நமக்கு ராமாயணத்தை அளித்தார். இதைக் கைலாயத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வதி, சிவபெருமானிடம், “அவர் ‘மரா’ ‘மரா’
என்று தானே ஜபித்தார். எப்படி ராமனுடைய தரிசனம் அவர்க்குக் கிட்டியது?” என்று கேட்டாள். அதற்குப் பரமசிவன், “தன் அடியார்கள் எத்தகைய வார்த்தைகளைச் சொன்னாலும் அதில் உள்ள மங்களமான
விஷயங்களை மட்டும் கேட்பவராகத் திகழ்கிறார் திருமால். இவன் ‘மரா’ ‘மரா’ என்றாலும், அதை ‘ராம’ ‘ராம’ எனச்
சொல்வதாக ஏற்று பகவான் அவனுக்குக் காட்சி அளித்தார்.
‘சுசி’ என்றால் மங்களகரமான என்று பொருள்.
‘ச்ரவா:’ என்றால் கேட்பவன். அடியார்கள் பேசும் வார்த்தைகளில் உள்ள அமங்களமான அம்சங்களை விலக்கி மங்களமானவற்றை மட்டும் கேட்டு அவர்களுக்கு அருள்புரிவதால் திருமால் ‘சுசிச்ரவா:’ என்று
அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 119-வது திருநாமம்!” என்றார்.
“சுசிச்ரவஸே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, அன்னப்பறவையைப் போல்
சாரமான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளும் உயரிய பண்பைத் திருமால் அருள்வார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 9
காரியமும் எண்ணமும் நெருங்கின தொடர்புடையவை. காரியமே இல்லாமல் உட்காருகிறேன் என ஆரம்பித்தால் அப்போது மனத்தில் இல்லாத கெட்ட எண்ணங்கள் படை எடுத்து வரும். There is a proverb ‘an idle mind is a devil’s workshop’. ஆகவேதான்—சித்தம் நின்று அத்வைத ஞானம் ஸித்திக்க வேண்டுமானால் அதற்குமுன்
அந்தச் சித்தம் சுத்தப்பட வேண்டும்! கர்மங்களாலேயே இந்தச் சித்த சுத்திக்கு வழி பண்ணிக் கொள்ள முடியும் என்பதால்தான் ஆதி சங்கரர் வேத கர்மாக்களை நிலைநாட்டினார்.
பாப சிந்தனைகளைப் போக்குகிற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவா மனப்பான்மை, தியாகம் எல்லாம். பொதுவாக அன்பு என்று சொல்லலாம்.
இந்த அன்பை சகல ஜீவ ஜடப் பிரபஞ்சத்துக்கும் மூலமான பரமாத்மாவிடம் திருப்பி விடுவதுதான் பக்தி. நமக்கு அந்தப் பரமாத்மாவே ஆதாரமாகையால் அதனிடம் மனசைத் திருப்பப் பழக்கினால் சுலபமாக அது அங்கே ஈடுபட்டு நிற்கிறது. பாப சிந்தனையே இல்லாமல் போய், ஏற்கனவே ஜன்மாந்தரங்களாக ஏற்றிக் கொண்டிருந்த பாப
Read 10 tweets
Sep 9
#MahaPeriyava It is a must read for all Periyava devotees.
Once Maha Periyava undertook his divya darshana yatra with His entourage to Sri Saila kshetra which is known as the 'Dakshina Kailash'. When they reached Kurnool, Acharyal was given a grand reception at the borders of the
city. Sri Maha Periyava was accommodated in a bhajan mandapa where He gave a discourse on Sanatana Dharma in Telugu to the large gathering of devotees. At the end of the lecture, He gave the devotees His blessings and prasadam and continued on His yatra. After they passed a
distance of seven or eight miles, a fertile Zamin village was sighted. All the people in the village with their family and children came to the boundary of the village and welcomed Maha Periyava with purna kumbham. Thereafter, the Zamindar of the village prayed to Sri Maha
Read 57 tweets
Sep 8
#Thiruvonam Every month, on the day the star of Shravanam falls, fasting is done. It is called Shravana Vratham. Among the 27 stars only Thiruvonam belonging to Vishnu & Thiruvadhirai belonging to Lord Shiva have the special prefix 'Thiru' which marks the respect for those stars. Image
It is customary for Vaishnavites to undertake the Thiruvona (Shravana) fast every month. Thiruvonam in Avani (Aug-Sept) month is very special. Kerala Hindus celebrate Onam festival in this month. When Vamana took incarnation, Maha Vishnu incarnated on Thiruvonam. Just with a Image
request of 3 ft of land He vanquished Mahabali's arrogance. After Bali agreed to give, Vamana became gigantic. Then the Supreme Lord forgave Maha Bali and appointed him as the Emperor of the Underworld. Maha Bali Chakravarty comes to Earth once a year to see the people of Kerala, Image
Read 11 tweets
Sep 8
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு குயவன் பானைகளை செய்த பிறகு வெய்யிலில் காயவைப்பான். சில பானைகள் காய்ந்து விடும். சில பானைகள் காயாமல் இளக்கமாக இருக்கும். ஏதேனும் பசு அந்த பக்கமாக போகும் போது, காய வைக்கப்பட்ட பானைகள் மீது நடந்தால், சில பானைகள் உடைந்து விடும். குயவன் மீண்டும் அவற்றை பயன்
படுத்த முற்படும்போது, உடைந்த நன்றாக காய்ந்த பானையின் துண்டுகளை தூக்கி போட்டு விடுவான். அதை மீண்டும் உபயோகிக்க முடியாது. ஆனால் சரியாக காயாத இளக்கமான பானை துண்டுகளை பொறுக்கி எடுத்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து, இளக்கி, களிமண்ணாக மாற்றி மீண்டும் புது பானை செய்ய உபயோகப் படுத்துவான். அதே
போல் தான் நன்றாக கடவுளை உணராதவர்கள், சரியாக வேகாத பானை போல. மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும். நன்றாக வேக வைக்கப்பட்ட விதை அல்லது வறுத்த பயறு மீண்டும் முளைக்காது. அதே போலத் தான், ஸ்ரீ கிருஷ்ணன் மீது கொண்ட பக்தித் தீயால் தன்னை உணர்ந்தவன், இறை நிலையை உணர்ந்தவனுக்கு மீண்டும்
Read 4 tweets
Sep 8
#நற்சிந்தனை
ஒரே வ‌குப்பில் ப‌டிக்கும் ந‌ண்ப‌ர்க‌ளான‌ 2 மாண‌வ‌ர்க‌ள் ஒரு குறும்பு செய்ய தீர்மானித்தனர். மாலை இருட்டிய பிறகு கிராம‌த் தெருவில் மேய்ந்து கொண்டு இருந்த‌ 3 எருமைக‌ளின் முதுகில் 1, 2, 4 என்று எண்க‌ளை எழுதி விட்டு யாருக்கும் தெரியாம‌ல் எருமைக‌ளை ப‌ள்ளி வ‌ளாக‌த்துக்குள்
ஓட்டி விட்டு எதுவும் தெரியாத‌து போல் வீடு திரும்பின‌ர். காலையில் ப‌ள்ளிக்குள் நுழைந்த‌ த‌லைமை ஆசிரிய‌ருக்கு ஏதோ வித்தியாச‌மாக‌த் தெரிந்த‌து. "என்ன‌து இது, ஏதோ கெட்ட வாடை ப‌ள்ளிக்கூட‌ ந‌டைபாதைக‌ளில் வீசுகிற‌தே?” என்று ச‌க‌ ஆசிரிய‌ர்க‌ளை அழைத்து விசாரித்த‌ போது, "வாச‌ம் ம‌ட்டும்
இல்ல‌ சார், சாணி கெட‌க்குது சில‌ வ‌குப்ப‌றைக‌ளில்" என்று முக‌ம் சுளித்த‌ன‌ர் ஆசிரிய‌ர்க‌ள். உட‌னே ப‌ள்ளி முழுவ‌தும் தேடிய‌தில் மூன்று எருமைக‌ளும் சிக்கின. தேமே என்று இர‌வு முழுவ‌தும் ப‌ள்ளிக்கூட‌ வ‌குப்ப‌றைக‌ளில் சுற்றிக் கொண்டும் ஓய்வெடுத்துக் கொண்டும் இருந்த‌வை இப்போது
Read 8 tweets
Sep 8
#MahaPeriyava
“My daughter is almost past the marriageable age. For the past four years, I have looked at every horoscope possible. Not one horoscope matched the girl's horoscope. The moment the horoscopes of the prospective groom and the girl were handed over to the astrologer,
he would purse his lips in displeasure. 'The young man's horoscope is excellent,' he would say. But it does not match our Kamala's horoscope.” Said the father of the girl to Maha Periyava.
"Do you now have the horoscope of any prospective groom?"
"Yes. The boy is of an excellent
background, good looking. Everyone is happy. But we have not gone to the astrologer yet. We are in fact scared to do so".
"Do you have the girl's horoscope?"
"Yes".
"Give me both".
The two were placed before Periyava. Periyava picked up both in his hands and looked at them for a
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(