> நம் பரிணாம வளர்ச்சிப்பாதையில் நமது அறிதிறனை (cognitive function) அதிகரிக்கச் செய்ததும் அது தான்
> நம்மை நமது கிளைச்சகோதரர்களான நியாண்டர்தால்களிடம் இருந்து பிரித்து காட்டியதும் அது தான்
(1/11)
> அவர்களை வென்று நாம் (Homo sapiens) ஆதிக்க இனமாக உருவாக துணை செய்ததும் அது தான்.
நியாண்டர்தால்களுக்கும் நமக்கும் மூளையின் அளவில் பெரிய மாற்றம் இல்லையென்றாலும்
சேர்ந்து வாழ்ந்த காலத்தில் நம் இரண்டு இனங்களுக்கு இடையில் புணர்வுகள் இருந்தாலும்
(2/11)
இன்றும் நம்மிடையே 2% நியாண்டர்தால்களின் DNA காப்பாற்றப்பட்டு வந்தாலும்
நம்மைப் போல் சிந்திக்கும் திறனும், மொழிவளமையும், கவிதை பாடும் ஞானமும், தொழில் உருவாக்கும் திறனும் இல்லாமல் போனது எதனால்?
(3/11)
2013ஆம்ஆண்டு சுமார் 27,000 ஆண்டிலிருந்து 75,000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த 13 நியாண்டர்தால்களின் படிமங்களை ஆய்வு செய்த போது நியாண்டர்தால்கள் மூளையின் பெரும் பகுதி அவர்களது பார்வை (visual cortex) மற்றும் பெரிய உடலை கட்டுப்படுத்துவற்குமான பகுதியை கொண்டிருப்பதையும் அதே வேலையில்
4/11
சம காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் மூளை நுண்சிந்தனை திறனையும் சமூக இணக்கத்திற்கான திறனையும் கொடுக்கும் பகுதியைப் (neocortex) பிரதானமாக கொண்டிருப்பதையும் கண்டறிந்தனர்.
மூளையின் அளவு பெரிய வித்தியாசம் இல்லாத பட்சத்தில் இந்த மாற்றம் எவ்வாறு நடந்திருக்கும் என்பதற்கான பதில்
(5/11)
தற்போது வெளியான (8th September, 2022) ஆய்வறிக்கை தந்துள்ளது.
அதில், சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் மரபணுவில் தற்செயலாக ஏற்பட்ட ஒரே ஒரு மரபணு திரிபு நமது சிந்தனைத்திறனிற்கும், தக்கெனபிழைத்து வாழ்வதற்கும் மிகப்பெரிய சாதகமாகவும்
(6/11)
அது கிடைக்கப்பெறாத நியாண்டர்தால்களுக்கு disadvantageஆகவும் ஆனது குறிப்பிடப்பட்டுள்ளது.
அது TKTL1 எனப்படும் மரபணுவில் ஏற்பட்ட மாற்றம். தாயின் கர்ப்பத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சியடையும்போது வெளிப்படும் இந்த மரபணுவில், நமது மூதாதையர்களுக்கு ஏற்பட்ட திரிபினால்,
(7/11)
நமது cognitive functionஐ நிர்ணயிக்கும் neocortex நிறைய செல்களை பெற்று பெருவளர்ச்சி அடைகின்றது.
இந்த வளர்ச்சி நியாண்டர்தால்களின் கருவிலோ இன்னும் மற்ற primateகளிலோ நடப்பதில்லை.
இந்த மரபணு மாற்றம் இயற்கையில் நாம் நமது போட்டியாளர்களை வென்று மொத்த உலகத்தையும் கோலோச்சவும்
(8/11)
நமக்குள் ஒரு சமூகமாக இணைந்து செயல்பட்டு survival successற்கு வழிசெய்யவும் நமக்கு தற்செயலாய் கிடைக்கப்பெற்ற மிக பெரிய ஜாக்பாட்களில் ஒன்று!
(9/11)
தற்போது இந்த ஆய்வு முடிவுகளை மேலும் உறுதி செய்ய இந்த மரபணு திரிபைக்கொண்ட மூளை organoidகள் (ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்பட்ட முழுவதுமாக செயல்படும் தன்மை கொண்ட உறுப்பு மாதிரிகள்) உருவாக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
Googleதான் ஒட்டு மொத்த அறிவுக்களமா?
அது ஒண்ணு சொல்லிடுச்சுன்னா blindஆ நம்பலாமா?
Google ஒரு search engine
நீங்க என்ன term போட்டு தேடுறீங்களோ அதுக்கு சாதகமான availableஆ இருக்குற எல்லா informationனையும் கொண்டு வந்து கொட்டிவிடும்.
(1/7)
ஒரு example:
கீழே நான் குடுத்த "biased" search term அடிப்படையில் google தந்தresults.
இந்த resultsஅ மட்டும் வச்சு கடுகுக்கு மட்டுமே பல நோய்களை குணப்படுத்தும் தன்மையிருக்குனு முடிவுக்கு வரது எவ்வளவு அபத்தம்.
இத நம்ம நம்புறது மட்டும் இல்லாம
“கடுகு ஒரு அதிஅற்புத மருந்து”னு 2/7
பொது வெளியிலையும், whatsapp மூலமா நம்ம குடும்பத்துல உள்ளவங்களுக்கும் எந்த ஒரு தார்மீக பொறுப்பும் இல்லாம share பண்றோம்.
இந்த mentality எந்த துறையை பாதிக்குதோ இல்லையோ health care பயங்கரமா பாதிக்குது. இன்னைக்கு google use பண்ண தெரிஞ்ச எல்லாருமே doctors தான்.
(3/7)
ஏதாவது scientific evidence கேட்டா சட்டுனு அந்த பக்கம் googleல அவங்களுக்கு இஷ்டமான search term போட்டு 2ஏ நிமிஷத்துல 4 thesis, 5 research articles, 6 screenshotன்னு share பண்ணிட்டு போயிட்டே இருக்காங்க
இப்ப நம்ம என்ன பண்ணுமாம் இதையெல்லாம் ஒண்ணு ஒண்ணா படிச்சி அவங்க 1/3
argumentக்கும் இந்த papersக்கும் சம்பந்தம் இல்லனு prove பண்ணணுமாம்.
அடுத்து உடனே மறுபடியும் 4 thesisன்னு repeat பண்றாங்க
கொஞ்சம் responsibilityயோட argue பண்ணா healthyயா இருக்கும்ல 2/3
இனி வெரும் link மட்டும் அனுப்பிச்சு படிச்சி பாத்துக்கோன்னு argue பண்றவங்களுக்கு reply பண்ண போறது இல்ல 3/3
ஆணின் விந்தணு குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயம் தேவையா?
Technically NO! #அறிவோம்_மரபியல்
நன்றி @noorulhaneef
Somatic cell nuclear transfer (SCNT) எனும் முறையில் ஆணின் விந்தணு துணையின்றி ஒரு கருவை உருவாக்க முடியும்!
எப்படி? வாங்க பாக்கலாம்!
(1/13)
எனவே நமது இனப்பெருக்க செல்கள் (கருமுட்டை, விந்தணு) 23 chrகளும் மற்ற உடல் செல்கள் (somatic cells என்றழைக்கப்படும் எலும்பு, கண், ரத்தம் போன்ற ஏனைய செல்கள்) 23 ஜோடி (46) chrகளும் கொண்டிருக்கும். (3/13)
உண்மைய சொல்லனும்னா இந்திய கலாச்சார கட்டமைப்பு ரொம்ப ரொம்ப இறுக்கமா இருக்கு. அதுக்குள இருக்குறவங்களுக்கும் அது சுதந்திரம் கொடுக்குறது இல்ல, வெளிய போகணும்னு நினைக்கிறவங்களையும் நிம்மதியா இருக்க விடுறது இல்ல. (1/4)
தன் வாழ்க்கைக்கான முடிவுகள் எடுக்குறதையே parents guilt, social guiltன்னு குற்றஉணர்ச்சிலேயே தான் வச்சிருக்கு.
Teenager love பத்தி யோசிச்சா guilt
படிப்பு வரலேன்னா guilt
நல்ல marks எடுக்கலேன்னா parentsஅ அவமதிச்ச guilt
நம்ம life partnerஅ நம்மளே தேர்ந்தெடுத்தா guilt (2/4)
தயிருக்கும் குளிர்காலத்துல இதே நிலைமை தான். அப்போ இட்லி புளிக்கிறதுக்கும் குளிருக்கும் என்ன சம்பந்தம். வாங்க பாப்போம். 1. இட்லி எப்படி புளிக்குது:
மனிதர்கள் ஆதிகாலத்துல இருந்து பல உணவுப்பொருட்கள நொதிக்க வச்சி (fermentation) சாப்ட்டுகிட்டு இருக்கோம். Fermentationனா ஒரு 2/18
உணவுப்பொருள நுண்ணுயிரிகளின் துணைக்கொண்டு அதில் உள்ள glucoseஐ வளர்சிதை மாற்றம் (metabolize) செய்து carbondioxideஅயும் lactic acidஅயும் உற்பத்தி செய்வது. carbondioxide உணவுக்கு பஞ்சு போன்ற softnessஅயும் lactic acid புளிப்பு சுவையையும் குடுக்குது. இட்லிய நொதிக்க வைக்கறதுக்கு 3/18
மனிதர்களுக்கு புற்றுநோய்கள் வருவது நாம் அனைவரும் அறிந்ததே. பலசெல்உயிரிகள் அனைத்திற்குமே புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமெனில் யானை போன்ற மிகப்பெரிய, எண்ணிக்கையில் அதிக செல்களை கொண்டவிலங்கிற்கு அதிகமாக cancer வருமா?
(1/12)
Surprisingly, வருவதற்கான வாய்ப்பு மிக மிகக்குறைவு.
அது எப்படி சாத்தியம்? வாங்க பாக்கலாம்.
Thread கொஞ்சம் technicalஆ போகும்போது adjust பண்ணிக்கோங்க. (2/12)
பலசெல்உயிரிகளின் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்குமே குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. தன் ஆயுட்காலம் முடிந்த செல் நிர்ணயிக்கப்பட்ட மரணப்பாதையை (apoptosis) தேர்ந்தெடுத்து தன்னை மாய்த்துக்கொள்ளும். மேலும் ஒரு செல் இரண்டு செல்லாக பிரிந்து செல்களின் பெருக்கம் நிகழும் போதும் கூட (3/12)