“தம்பி அடிக்க வா,”
எனச் சொல்லியிருந்தால்
எதிரியின் தலையெடுக்க
கோடி பேர் திரண்டிருப்பான்!
அவரோ,
“தம்பி படிக்கவா,”என்றார்;
தலையின்றிக் குனிந்தகூட்டம்
தலையெடுத்து நிமிர்ந்தது;
மூன்று கோடிப்பேரில்
இரண்டு கோடிபேரைத்
தொலைத்துவிட்டு,
மீதியுள்ள பேர்க்கு
மன்னனாக எண்ணவில்லை
எம் அண்ணா!
நோய்க்கு
மருத்துவம் செய்துகொள்ள
உயிரோடிருத்தல் அவசியமென
உணர்ந்தார்;
கையிலெடுத்த வாளைத்
தூக்கிப்போட்டார்;
மறுக்கப்பட்ட
பேனாவை எடுத்தார்;
மைக்கைப் பிடித்தார்;
விரல்தேய எழுதினார்;
நாதேய பேசினார்; சூதில் பழம்தின்று
கொட்டைப்போட்ட
சைவ ஓநாய்களையே
ஏமாற்றிக் குனியவைத்தார்;
அவற்றின் முதுகிலேறி
சவாரி செய்தார்;
ஆயிரம் ஆண்டுகளாய்
சிம்மாசனத்தில் படிந்திருந்த
பூணூலைப் பிய்த்தெறிந்தார்.
***
அவர் பெயர் ராமானுஜம்.
தன்னுடைய மூட்டை முடிச்சுக்களோடு சென்னை செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார். அவரைப்போலவே மூட்டை முடிச்சுகளோடு இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள்.
காலை ரயில் என்பதால் காலியாக இருக்கிறது.
தயாராக வந்திருந்த எல்லோரும் கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொள்கிறார்கள்.
காலியாக உள்ள இடங்களில் எல்லாம் தன்னுடைய மூட்டை முடிச்சுக்களை வரிசையாக அடுக்கிவைத்து விட்டு, காலை சாஷ்டாங்கமாக நீட்டி படுத்து சொகுசாக தூங்கத் தொடங்குகிறார்.
அவரைப் போலவே அந்த சிலரும் தூங்கத் தொடங்குகிறார்கள்.
திருச்சி ஸ்டேஷன் வந்ததும் டிக்கெட் வாங்கி காத்திருந்த சிலர் அந்த கம்பார்ட்மெண்டில் ஏறுகிறார்கள். அவர்களுக்கு உட்கார இடம்வேண்டும் என்பதால்,சலித்துக்கொண்டே தன்னுடைய மூட்டைமுடிச்சுக்களை எடுத்து கீழே வைக்கிறார் ராமானுஜம்.
இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.*
*அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள்* -
*இது ராமாயணம்*
*ஓர் அழகிய இளம் மங்கை.
அவளுக்கு முதிர்ந்த கணவன்.
மனமுவந்து வாழ்கிறாள்.
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.