#ரிஷி_ஆபஸ்தம்பர்
ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தியவர் ஆபஸ்தம்பர். அவருக்கு அந்த பெயர் வந்ததை தெரிந்து கொண்டால் அவரின் அலாதி பெருமை நமக்கு தெரிய வரும். ஒரு சமயம் வேதவிற்பன்னரான பிராம்மணர் ஒருவர் ஸ்ராத்தம் செய்தார். போஜனம் செய்விக்க ஒரு பிராம்மணருக்காக காத்திருந்தார். வெகு நேரம்
கழித்து ஒரு பிராம்மணர் வந்தார். அவர் நல்ல பசியுடன் இருந்தார். அவரை அமர்த்தி இலை போட்டு தானே பரிமாறினார் கர்த்தா. வந்த பிராம்மணர் சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். பிராம்மணனுக்கு நல்ல பசிபோலும் என்று எண்ணி இவரும் கேட்கக் கேட்கப் போட்டார். போடப் போட அனைத்தும்
ஒரு நொடியில் காலியாயிற்று! கர்த்தாவின் கண்களில் முதலில் இருந்த வினயம் மறைந்து ஏளனம் குடி கொண்டது. அதைத் தன் செயல்களிலும் காட்டினார். அதைப் பொருட்படுத்தாத அதிதி இன்னும் போடு இன்னும் போடு என்று கேட்டுக் கொண்டிருந்தார். அபரிதமாக உண்டும் திருப்தி அடையாமல் தனக்கு வேண்டுமென்றே தொல்லை
கொடுக்க இவர் வந்திருக்கிறார் என்று கர்த்தா நினைத்தார். சமைத்தவை எல்லாம் காலியாகிவிட்டன. இன்னும் வேண்டும் கொண்டு வா என்று பிராம்மணர் கேட்கவே கர்த்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது. காலியான சமையல் பாத்திரத்தைக் கொண்டு வந்து பிராம்மணரின் இலையின் மேல் கவிழ்த்து திருப்தி ஆயிற்றா என்று
கேட்டார். (போஜனம் முடிந்தபோது கர்த்தா ப்ராம்மணர்களை 'த்ருப்தாஸ்தா' என்று கேட்க வேண்டும். திருப்தியடைந்த ப்ராம்மணர்கள் 'த்ருப்யத:' என்று 3 முறை சொல்ல வேண்டும். அப்பொழுது தான் ஶ்ராத்தம் நல்ல முறையில் பூர்ணமடைந்தது என்று அர்த்தம்) ஆனால் அந்த பிராம்மணர் 'ந' என்று சொன்னார். ‘எனக்கு
திருப்தி இல்லை' என்பது இதன் பொருள். கர்த்தாவுக்கு கோபம் தலைக்கேறியது. இவர் கேட்கக் கேட்க கொண்டுவந்து கொட்டினேனே! மலை போல உணவுப் பண்டங்களைத் தின்றுவிட்டு திருப்தி இல்லை என்று சொல்லி என்னை அவமானப்படுத்தி நான் செய்த ஶ்ராத்தத்தையும் இந்த ப்ராஹ்மணர் கெடுத்துவிட்டாரே என்று சினந்தார்.
கர்த்தா நல்ல தபஸ்வியே. கோபத்தால் முகம் சிவந்த அவர் சாபம் கொடுக்க கையில் ஜலத்தை எடுத்து அபிமந்திரித்து பிராஹ்மணரின் தலையில் எறிந்தார். அப்பொழுதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. வந்த பிராம்மணர் தன் கை அசைவினால் அபிமந்திரித்து எறிந்த ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தினார்! கர்த்தா இதைப்
பார்த்து பிரமித்து நின்றார். தான் எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்திய அவர் சாதாரண மனிதர் அல்ல¸ தன்னை விட உயர்ந்தவர் என்பதை அறிந்து¸ 'பூஜ்யரே! நீங்கள் யார்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்?' என்று கேட்டார்.
அதற்கு அந்த பிராம்மணர் பதிலளித்தார். நான் ஒரு முனிவன். நான் அதிகம்
உண்டதால் என்னை ஏளனம் செய்தாய். உன் பார்வைகளாலும் செயல்களாலும் என்னை அவமதித்தாய். ஶ்ராத்தத்திற்கு வரும் பிராமணர்களிடம் உன் மூதாதையர்களின் ஒரு அம்சத்தை வைத்து பகவான் அனுப்புகிறான் என்பதை மறந்து நீ நடந்து கொண்டாய். உனக்கு புத்தி புகட்டவே நான் இப்படி நடந்து கொண்டேன். ஶ்ராத்தத்தை பய
பக்தியுடன் கோப தாபங்களை விட்டுச் செய்யவேண்டும் என்பதைத் தெரிந்து கொள் என்றார். அதற்குக் கர்த்தா¸ 'ஸ்வாமி! என் தவறை நான் உணர்ந்து கொண்டேன். மன்னியுங்கள். இனி இம்மாதிரித் தவறுகளைச் செய்ய மாட்டேன். நான் செய்த ஶ்ராத்தம் பூர்ணமாகவில்லையே! அதற்கு என்ன செய்ய வேண்டும்?' என்று வினவினார்.
அதற்கு அந்த பிராம்மணர்¸ நான் 'ந' என்று சொல்லி ஶ்ராத்தம் பூர்ணமாகாமல் உள்ளது. புருஷ ஸூக்தம் பாராயணம் செய். இந்த தோஷம் பரிகாரம் ஆகும் என்றார். அதை பாராயணம் செய்து ஶ்ராத்தத்தை முடித்தார் கர்த்தா.
ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தியதால் அவரை ஆபஸ்தம்பர் என்று அழைத்தார்கள். ஆப என்றால் நீர்.
நீரை ஸ்தம்பிக்க வைத்து அந்தரத்தில் நிறுத்தியதால் அவர் ஆபஸ்தம்பரானார். ஆபஸ்தம்பரின் க்ருஹ்ய சூத்ரம் பிரசித்தமானது. ஶ்ராத்த காலத்தில் புருஷ ஸூக்தமும் காடகோபநிஷத்தும் பாராயணம் செய்யும் நியமம் இருக்கிறது. அதுவும் இந்த சம்பவத்தால் தொடங்கியது.
ஆபஸ்தம்ப தர்மசூத்திரம் முதல் ஆயிரமாண்டு
முதல் தற்போது வரை இந்து சமயத்தில் பின்பற்றப்படும் சமஸ்கிருத மொழியில் உள்ள தர்மசாத்திர நூல்களில் ஒன்றாகும். இது கிருஷ்ண யசூர் வேதத்தின் தைத்திரியக் கிளையில் அமைந்த மூன்று தர்மசாஸ்திர நூல்களில் ஒன்றாகும். பிற தர்மசாஸ்திர நூல்கள் பௌதயான தர்ம சூத்திரம் மற்றும் ஹிரண்யகேச தர்ம சாஸ்திர
நூல்கள் ஆகும். கிருஷ்ண யஜூர் வேத சாகையைக் கொண்டு, ஆபஸ்தம்ப முனிவர் இந்த தர்மசூத்திர நூலை இயற்றியதால் இதற்கு ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் எனப்பெயர். இரண்யகேசின் மாணவரான பௌதயானரின் மாணவரே ஆபஸ்தம்பர் ஆவார். இந்த மூவரும் கிருஷ்ண யசூர் வேதத்தை மையமாகக் கொண்டு கல்பம் சூத்திரங்களை இயற்றினார்
போதயானர் உட்பட மொகஞ்சதாரோ மெசப்படோமியா கணிதவியலாளர்களின் கணித முயற்சிகளை சமஸ்கிருதத்தில் தொகுத்தவர். இவர் ஆபஸ்தம்ப தர்மசூத்திரம் எனும் நூலை இயற்றியுள்ளார். பித்தாகரஸ் தேற்றத்தின் முதல் நிரூபணம் தந்தவர். வேத கணிதத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
* த்ருப்தாஸ்ம:
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பூம்பாரை_வேலப்பர்_கோவில் கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும். இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . மிகவும் சக்திவாய்ந்த நவபாஷான முருகன்.
இந்தியாவில் உள்ள எல்லா
கோவில்களிலும் ஐம்பொன், வெங்கலம் கல்லால் ஆன சுவாமி மூர்த்தங்களை காண முடியும். ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமானமூர்த்தங்கள் உள்ளன. 1. பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் 2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர்
உலகிலேய
நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்ற மாமுனிவராகும். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர். ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷானத்தால் உருவாக்கியவர் என்பது தெரியாத செய்தி. அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி
#MahaPeriyava Once a devotee asked Mahaswamigal, why do we keep food for Crows during Mahalayam? Are our ancestors taking forms of Crows? Why do they come as this low standard bird? Why not a high standard bird? With a gentle smile Mahaswamigal answered, "We call the Crow Kaka in
Tamil. Do we address any other creature by its sound? Do we call a Cat 'Meow?' Because a Parrot says 'Kiki' do we call it a 'Kiki?' A Crow is called by its sound that makes it special. Ka means Kaapaathu or Protect me. So, when you keep food for a Crow and say 'Kaa kaa' you are
asking your ancestors to protect you. You say a Crow is lowly because it is freely available and it eats anything! But let me tell you, a Crow is beautiful. Why? It wakes up at 'Brahma Muhurat', 'Amrit Vela'. It caws and wakes you up. Even Cocks may not wake up on time many days
#பவித்ரோத்சவம் பவித்ரோத்சவம் என்பது வைஷ்ணவ கோவில்களில் நடக்கும் ஒரு முக்கிய உத்சவம். புனிதப்படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். ஒவ்வொரு கோயிலிலும் ஆவணி அல்லது புரட்டாசி மாதங்களில் பவித்ரோத்ஸவம் 3, 5, 7 அல்லது 9 நாட்களுக்குக் கொண்டாடப்படும்.
போதும் மற்றைய திருவிழா காலங்களில் மந்த்ர லோபம் (தவறான மந்திர உச்சரிப்பு) ஏற்படக்கூடும். அதனால் எம்பெருமானுடைய ஸாந்நித்யம் குறைய வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஏற்படும் குறைகளைப் போக்குவதற்காகப் பவித்ரோத்சவம் கொண்டாடப்படுகிறது. அதே போல பூஜை செய்யும்போது தவறுகள் ஏற்படலாம். சில உத்சவங்கள்
நடைபெறாமல் தடைப் பட்டு போகலாம் (கரோனா காலத்தில் ஏற்பட்ட மாதிரி). கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை பெருகும். அதே சமயம் அங்கே வரும் பக்தர்களின் குணங்கள், மாறுபட்ட நடத்தைகள், அவர்களால் ஏற்படும் தீட்டுக்கள் போன்றவைகளால் மூர்த்திகளின் இறை
#மகாபெரியவா 1933இல் திருவிடைமருதூரில் தைப்பூசத் திருவிழா. எட்டாம் நாள் தேர் உலா. கொல்லன்கோடி மூலையைத் தேர் அடைந்த போது முட்டுக்கட்டைகள் நசுங்கியதால், தேர் நேரே வடம் போக்கித் தெருவழிச் சென்று பள்ளத்தில் இறங்கிவிட்டது. அந்த ஆண்டு கும்பகோணம் மஹாமகத்திற்கு விஜயம் செய்த மகாபெரியவா
புனித நீராடலை முடித்துக்கொண்டு திருவிடைமருதூருக்கு வந்து பச்சையப்பன் தெருவில் தங்கினார். மஹாலிங்க சுவாமி தேர் தடைப்பட்டு நிற்பதைக் கேட்டறிந்தார். ஒருநாள் திடீரென்று எழுந்து புறப்பட்டு வேகமாக நடக்கலானார். மக்களும் கூடவே பின்தொடர்ந்தனர். பெருங்கூட்டமே சேர்ந்து விட்டது. ஸ்ரீ
சுவாமிகள் தேர் இருந்த இடத்தையடைந்து மஹாலிங்கேஸ்வரரைச் சுற்றிவந்து தரிசித்தார். பிறகு தேரின் வலப்புறமாகச் சென்று நின்று, தேரின் வடத்தைத் தம் கரத்தால் பற்றி கூடியிருந்த மக்களைப் பார்த்து, ஒன்றாகத் தேரை இழுக்குமாறு உரக்கப் பணித்தார். இதற்குள் கோயில் அதிகாரிகள், பணியாளர்கள் கூடினர்.
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கலியுகத்தில் முக்திக்கு ஒரே வழி பகவானின் ரூப லாவண்யங்களின் மகிமை கேட்டால் போதும் ஜென்மாந்திர பாவங்கள் தீயினில் தூசாகும். அதேபோல பகவானின் நாம சங்கீர்த்தனம் பஜனை எங்கெல்லாம் கேட்கிறதோ அங்கு நாம் உட்கார்ந்து அதை பக்தியோடு கேட்டாலே போதும். பாட்டு பாடத் தெரியவில்ல
என்ற கவலை வேண்டாம். பஜனை பண்ணத் தெரியவில்லை என்கிற வருத்தம் வேண்டாம். சமஸ்க்ருத ஸ்லோகங்களை பிழை இல்லாமல் உச்சரிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் வேண்டாம். பகவானின் ஆயிரம் நாமங்களான விஷ்ணு ஸகஸ்ரநாமத்தை பீஷ்மாச்சாரியார் நமக்கு மிகப் பெரிய பொக்கிஷத்தை வழங்கியுள்ளார். மனதார, பக்தியுடன்
விஷ்ணு சஹாஸ்ரனாமத்தை சொன்னாலே போதும் முக்தி அடைந்து விடலாம். முழுவதும் சொல்ல முடியாதவர்கள் #இலகு_பாராயணமாக
ஶ்ரீராமராமேதி ரமேராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே
என்பதை மட்டும் சொன்னாலே விஷ்ணுஸகஸ்ரநாமத்தை முழுவதும் சொன்ன பலன் கிடைத்து விடும்.
#நங்கவரம்_சுந்தரேஸ்வரர்_ஆலயம்
திருச்சி அருகேயுள்ள பெருகமணி கிராமத்தை அடுத்துள்ள நங்கவரத்தில் அமைந்துள்ளது சுந்தரேஸ்வரர் ஆலயம். சோழ நாட்டை ஆண்டுவந்த சோழ மன்னர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. மன்னனும், ராணியும் வேண்டாத தெய்வம் இல்லை. ஒரு சிவனடியாரின் அறிவுறுத்தலில் சிவ
தலங்கள் பலவற்றிற்கு சென்று தரிசித்து வந்ததன் பயனாக அரசனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் நரி முகம் கொண்டிருந்தாள். குழந்தையின் உடலமைப்பு பெண் உருவில் இருந்த போதிலும் முகம் மட்டும் நரியின் முகமாக இருந்தது. மன்னரும் ராணியும் வேதனைப் பட்டனர்.
வருடங்கள் ஓடின. பேதை பெதும்பையாகி
மங்கை பருவம் அடைந்தாள். ஆனாலும் அவள் முகம் நரி முகமாகவே இருந்தது. மந்திரிகளும், மன்னனின் நலம் விரும்பிகளும் இறைவனுக்குப் பரிகாரம் பூஜைகள் செய்தால் இந்தக் குறையை சரி செய்துவிடலாம் என்றனர். அதன்படி மன்னனும் ஒவ்வொரு ஆலயமாகச் சென்று பரிகாரப் பிரார்த்தனைகள் செய்தார். பலன் கிட்டவில்லை.