#சடாரி சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பட்ட கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப் படுகிறது. சடகோபன நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக
அறியப் படுகிறார். சடாரி சாற்றப் படுவதற்கு வைணவ சம்பிரதாய ரீதியாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஒரு குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன், இந்த பூவுலகத்தில் உள்ள மாயை அந்த குழந்தையை பிடிக்கும் வகையில் செயல்படும் வாயு ‘சடம்’ என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் கர்ம
வினைகளால் கட்டுப்பட்ட இந்த பூமியில் பிறக்கும் பொழுது, அதன் உச்சந்தலையில் சடம் என்ற காற்று படுகிறது. அவ்வாறு பட்டவுடன், குழந்தை அதன் முன் ஜென்ம நினைவுகளை மறந்து, உலக மாயையில் சிக்கிக் கொள்கிறது. மாயையை தோற்றுவிக்கும் சடம் என்ற அந்த வாயு உச்சந்தலையில் படும் காரணத்தால் குழந்தைகள்
பிறந்தவுடன் அழுகின்றன என்பது நம்பிக்கை. ஆனால், சடம் என்ற வாயுவால் பாதிக்கப் படாதவர் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று போற்றப்படும் நம்மாழ்வார். பிறக்கும் குழந்தைகள் அழுவது உலக நியதி. ஆனால் இவர் பிறந்த போது அழாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். அதன் காரணமாக, அவருக்கு மாறன் என்று
பெயர் வந்தது. #விஷ்வக்சேனரின் அம்சமாக பிறந்த #நம்மாழ்வார் தாயின் கருப்பையில் இருக்கும்போதே, சடம் என்னும் வாயுவை கோபமாக பார்த்ததால் #சடகோபன் என்றும் அழைக்கப்படுகிறார். அவரை திருமாலின் திருவடி அம்சம் என்று கூறப்படுவது சம்பிரதாயம் ஆகும். அதன் அடிப்படையில், பெருமாளின் பாதங்களில்
சடகோபம் என்ற சடாரி வைக்கப்பட்டு பூஜை முடிந்த பின்னர் அது பக்தர்களின் தலையில் வைக்கப்படுகிறது. நம்மாழ்வாரையே பெருமாளின் திருப் பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது. அதன் மூலம் பக்தர் மனதில் உள்ள அகந்தை அகன்று, மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.
சம்பிரதாய ரீதியாக சடாரி வைக்கும் போது, குனிந்து, புருவங்களுக்கு மத்தியில், வலது கை நடுவிரலை வைத்து, வாய் பொத்தி ஏற்றுக் கொள்வது முறையாகும். வானமாமலை தலத்தில் மட்டும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப் பட்டுள்ளது. பொதுவாக பெருமாளை தரிசனம் செய்யும் போது நாம் முதலில் அவருடைய
திருப்பாதங்களை தான் பார்க்க வேண்டும் அதன் பிறகே மேல் நோக்கி அவர் திருமுகத்தை பார்க்க வேண்டும் என்பது நியதி (பாதாதிகேசம்). பெருமாளை விட, அவருடைய திருப்பாதங்களுக்கு மதிப்பு அதிகம். ராமர் ஆட்சி செய்த காலத்தை விட, அவருடைய திருப்பாதுகை ஆட்சி புரிந்த ஆட்சி காலம் மிகவும் மேன்மையாகப்
பேசப்பட்டது. பெருமாளுடைய திருப்பாதங்களை பணிந்து ஆசீர்வாதம் பெறுவதற்கு இணையானது தான் சடாரி பெறும் வழிமுறை. இதனால் நமக்கு இருக்கும் ஆணவம் அழிந்து பக்தி மேம்படும். பெருமாள் கோவில்களில் கட்டாயம் சடாரி வைத்து, துளசி தீர்த்தம் கொடுத்து வழி அனுப்புவார்கள். ஒவ்வொரு முறை நாம் பெருமாள்
கோவிலுக்கு செல்லும் பொழுதும் சடாரியை நாம் நம் தலையில் வைத்துக் கொள்ளும் எண்ணிக்கைக்கு ஏற்ப நம் தலையெழுத்து நன்முறையில் மாறும் என்பது ஐதீகம். பாதுகையை நம் தலையில் கோயில் பட்டர்கள் வைக்கும்போது அதன் மூலமாய் பெருமாள் திருவடி சம்பந்தம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. இந்த வகையில் நமக்குப
பெருமாள் திருவடியை ஸ்பரிசம் அருளியவர்கள் இருவர். ஒருவர் ஆழ்வார், மற்றது பாதுகை. ஆகவே இருவருக்கும் சடாரி என்ற திருநாமம் இருப்பதில் வியப்பில்லை. ஆழ்வாருடைய அமுதத் திருவாய் ஈரத்தமிழைப் பயின்று எம்பெருமானை அடிபணிவோர்க்குப் பரமனருள் சித்திக்கும். அதற்குப் பாக்கியமில்லாதவர்களுக்கு,
பாதுகை அப்பேற்றை அளிக்கிறது. #சுவாமி_தேசிகனின் பெருமை அவர் வடமொழியில் அருளிச் செய்துள்ள #பாதுகா_ஸஹஸ்ரம் என்னும் ஸ்தோத்திரம் அதை அருளுவதற்கான காரணம் என்ன? பகவானுடைய திருவடி மகிமையை பக்தர்களாகிய நாம் அறிந்து உய்யும்படி தாய் போன்ற கருணையுடன் ஆயிரம் பாடல்கள் பாடினார் நம்மாழ்வார்.
அந்த இன்தமிழ் ஆயிரத்துக்கு பிரதி சம்பாவனையாக ஆழ்வாருக்கு வட மொழியில் ஆயிரம் சமர்ப்பித்தார் நம் தேசிகன். சிலருக்கு வாழ்க்கையில் தீராத பிரச்சனைகளும் கஷ்டங்களும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி பெருமாள் கோவிலுக்கு சென்று சடாரியை சாற்றிக் கொள்வதால் அவர்கள் கர்மவினைகள்
தீர்ந்து நன்மைகளை அடைவார்கள்.
இந்த புரட்டாசியில் பெருமாள் கோவில் சென்று சடாரி சாற்றிக் கொள்வோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீசுதர்சனசக்ரம்
ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள
ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது. ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் ஸ்ரீ
பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’. ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன். பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச்
செல்லும் வாகனமாகவும் அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.
ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், அனந்தாழ்வார் என ஆழ்வார் என்ற அடைமொழி இவர்கள் மூவர் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும். ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களிலும், ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர்
#புரட்டாசி_ஸ்பெஷல்
புரட்டாசி மாதச் சனிக்கிழமைகளில் திருமலையப்பனுக்காக வீடுகளில் #மாவிளக்கு போடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதன் பின்னால் ஒரு அழகான ஐதீகம் உள்ளது. திருமலையில் வாழ்ந்த சில முனிவர்கள் அங்கிருந்த ஒரு மரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபட்டு வந்தார்கள்.
அதைக் கண்ட ஒரு வேடன் அவர்களிடம் சென்று, ஏன் இந்த மரத்தை வணங்குகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு முனிவர்கள், உங்களைப் போன்ற வேடுவர்களுக்கு அருள் புரிவதற்காகவே பெருமாள் இப்படி மரத்தின் வடிவில் இங்கு காட்சி தருகிறார் என்று விடை அளித்தார்கள். என் போன்ற தாழ்ந்தவனுக்கும் அருள்
புரிவதற்காக இந்த வடிவில் பெருமாள் வந்திருக்கிறாரா என்றெண்ணிப் பரவசப்பட்ட அந்த வேடன், அடுத்த நாள் முதல் வேட்டைக்கு வருகையில், தேனும் தினைமாவும் கொண்டு வந்து மரத்திலுள்ள பெருமாளுக்குச் சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டான். மலையப்பனின் அருளால் அந்த வேடனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
#MahaPeriyava
There was a village named Nerunjippettai near Mettur. Sri Maha Periyava visited this place in the year 1928. The village chief Sri Sundaram Reddiar and the then MLA, Sri Gurumurthy were devoted to Periyava and they, along with other elders of the village, used to
often go and have His Darshan. One can, then, imagine their joy when Periyava came to their village! One day the village folk and devotees were sitting around Periyava and chanting ‘Jaya Jaya Sankara! Hara Hara Sankara!’, and there came the chanting of ‘Govinda…Govinda’ from a
distance. Hearing this, Periyava enquired, “Where does this Govinda chanting come from?”
“Nearby, there is a hill by name ‘Paalamalai’; on its top there is a temple called, ‘Sri Siddheswarar Temple’. People who go there for darshan, keep chanting the ‘Govinda’ nama while climbing
#நற்சிந்தனை நம் உடலுக்குள் ஆத்மா உண்டா? அது அழிந்து போகாதா? உடல் அழிந்து போகிறதே, விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்கினார். பால் பயனுள்ளது தான். ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப் போகும். அதில் ஒரு துளி உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது. தயிரான பால்
இன்னும் ஒரு நாள் தான் தாங்கும். அப்படியே விட்டால் கெட்டுப் போகும். அதைக் கடைய வேண்டும். கடைந்தால் வெண்ணெய் ஆகி விடும் கெடாது. வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது. அப்படியே விட்டால் கெட்டுப் போகும். அதை உருக்க வேண்டும். சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும். அந்தப் பரிசுத்தமான
நெய் கெடவே கெடாது. அது போலத் தான் நம்மை ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் மூழ்க செய்தால் நம் ஆன்மா மறு பிறப்பில் இருந்து விடுதலை பெறும். கெட்டுப் போகும் பாலுக்குள் கெடாத நெய் இல்லையா அது போலத் தான். நம் அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஸ்ரீ கிருஷ்ணன் அருள் என்றும் உண்டு நமக்கு.
#குருபக்தி ஒரு மாலை வேளையில் சைதன்ய மகாபிரபு ஸ்ரீ கிருஷ்ண மஹா மந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்று தனது சீடர்களோடு அகண்ட நாம பஜனை செய்து கொண்டு இருந்தார். அப்போது ஹரி தாஸ் தாகூர், சைதன்ய சைதன்ய என்று பஜனை செய்து கொண்டு
சைதன்ய மகா பிரபுவை பார்த்து ஆனந்த கண்ணீரில் நனைந்தார். அப்போது அவரின் உயிர் பிரிந்து மோட்சம் கிட்டியது சைதன்ய மகா பிரபுவோ அந்த ஹரி தாஸ் தாகூர் சரீரத்தை தன் கையால் ஏந்தி ஆனந்த நர்த்தனம் செய்து மிக பரவசமாக ஆடினார். பின்னர் அந்த சரீரத்தை தன் கையால் சுமந்து கொண்டு பூரி சமுத்திரத்தில்
குளிபாட்டினார். அப்போது சைதன்யர், ஸ்ரீ கிருஷ்ணரின் மீது தூய பக்தி கொண்ட ஹரிதாசின் தொடர்பால் இந்த சமுத்திரமே தூய்மையாகி மகா பவித்திரமாகி விட்டது என கூறி தம் கைகளாளே அவருக்கு சமாதி உண்டு பண்ணினார் இப்போதும் அச்சமாதியை பூரி சென்றால் தரிசிக்கலாம்.
ஜெய் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு
#KB_சுந்தராம்பாள் நமக்கு ஔவையாராக மட்டுமே அறிந்த கொடுமுடி பாலம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பற்பல துறைகளில் புகழ் ஈட்டியவர். அவர் கொடுமுடி கோகிலம் என்ற சிறப்புப்
பெயருடனும் அழைக்கப்பட்டவர் ஆவார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில்
பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு, 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 11ல் சுந்தராம்பாள் பிறந்தார். அவருக்கு
கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம் வயதிலேயே தந்தையை இழந்த சுந்தராம்பாள், தாயார் ஆதரவில் வளர்ந்தார். லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி பயின்றார். குடும்ப வறுமைநிலை காரணமாக
இவர் ரயில்களில் பாடி பிச்சை எடுத்து வந்ததாகவும், அப்போது ஒரு நாள் நடேசையர் என்பவர் இவரது பாடும் திறமையைக் கண்டு இவரை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டதாகவும் சுந்தராம்பாள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். பாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டிருந்த சுந்தராம்பாள்,இளம் வயதிலேயே பாடும்