#KB_சுந்தராம்பாள் நமக்கு ஔவையாராக மட்டுமே அறிந்த கொடுமுடி பாலம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பற்பல துறைகளில் புகழ் ஈட்டியவர். அவர் கொடுமுடி கோகிலம் என்ற சிறப்புப்
பெயருடனும் அழைக்கப்பட்டவர் ஆவார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில்
பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு, 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 11ல் சுந்தராம்பாள் பிறந்தார். அவருக்கு
கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம் வயதிலேயே தந்தையை இழந்த சுந்தராம்பாள், தாயார் ஆதரவில் வளர்ந்தார். லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி பயின்றார். குடும்ப வறுமைநிலை காரணமாக
இவர் ரயில்களில் பாடி பிச்சை எடுத்து வந்ததாகவும், அப்போது ஒரு நாள் நடேசையர் என்பவர் இவரது பாடும் திறமையைக் கண்டு இவரை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டதாகவும் சுந்தராம்பாள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். பாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டிருந்த சுந்தராம்பாள்,இளம் வயதிலேயே பாடும்
ஆற்றலை வளர்த்துக் கொண்டார். வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் #நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்ல தங்காளின் மூத்தப் பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று, ஆண் வேடத்தில் முதன் முதலாக நடித்தார்.
அந்நாடகத்தில் பசிக்குதே வயிறு
பசிக்குதே என்றப் பாட்டை, மிக அருமையாகப் பாடி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தனக்கிருந்த ஆற்றலினால் சொந்தக்
குரலிலேயே பாடி நடித்தார்.
அதனைத் தொடர்ந்து 1920 களில் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின்
பல
ஊர்களிலும் அவர் நடித்த நாடகங்கள் நடைபெற்றன. 1925 இல் தாய்நாடு திரும்பினார். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், பவளக்கொடி, ஞானசெளந்தரி போன்ற அக்காலத்தில் புகழ் பெற்ற பல்வேறு நாடகங்களில் சுந்தரம்பாள் நடித்தார். இந்நிலையில் மீண்டும் சுந்தராம்பாள் 1926 இல் தனது நாடகக் குழுவுடன்
கொழும்பு சென்றார். அவரின்
நாடகப் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது. அக்காலத்தில் எஸ்.ஜி.கிட்டப்பா தனது குரல் வளத்தாலும், நடிப்பாலும் பலரது கவனத்தை ஈர்த்து, புகழுடன்
விளங்கி வந்தார். கொழும்பில் சுந்தரம்பாளுடன் இணைந்து நடிப்பதற்கு கிட்டப்பாவுக்கு வாய்ப்பு கிட்டியது. 1926 ஆம் ஆண்டு
சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த
வள்ளி திருமணம் நாடகம் அரங்கேறியது. நாடகங்களில் இணைந்து நடித்த இருவரும்,
பின்னர் திருமண பந்தத்திலும் இணைந்து தம்பதிகளாகினர்.
நாடகங்களில் சுந்தரம்பாள் பாடிய சுந்தரத் தமிழ்ப் பாடல்கள், இசைத் தட்டுகளில் பதிவாகி எங்கும் ஒலிக்கத் தொடங்கின. இந்நிலையில்
1933 டிசம்பர் 2 கிட்டப்பா அகால மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 28 சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து சுந்தராம்பாள் வெள்ளை சேலை கட்டத் தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் இணை சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி
வரை காப்பாற்றி வந்தார். பின்னர்
நெடுங் காலமாக பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் 1934ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவற்றில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து, பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தி செயல்பட்டார். 1935 இல் நந்தனார் நாடகம் பக்தநந்தனார்
என்றப் பெயரில் திரைப் படமான போது, அப்படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். அவற்றில் அவர் பாடியவை 19 பாடல்கள். அடுத்ததாக மணிமேகலை என்றப் படத்தில் நடித்தார். 1938ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940இல் அப்படம் வெளிவந்தது. அப்படத்தில் 11
பாடல்களை அவர் பாடியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 1953 இல் ஜெமினி பட நிறுவன தயாரிப்பில், ஔவையார் என்றப் படத்தில் அவர் அபாரமாக நடித்தார். அப்படத்தில் அவர் பாடியப் பாடல்கள் பட்டித் தொட்டியெங்கும் ஒலித்தன. பாமரர்கள் பலரும் அவரின் பாடல்களால் பரவசமடையும்
நிலை உருவானது. பொறுமை
என்னும் நகையணிந்து, கன்னித் தமிழ் நாட்டிலே,வெண்ணிலவே, போன்றப் பாடல்கள் அப்படத்தில் புகழ் பெற்றவை. ஒளவையார்
படத்தில் 48 பாடல்கள். அவற்றில் அவர் பாடியவை 30. 1964ல் சிலப்பாதிகாரம் கதையைத் தழுவிய கலைஞர் கருணாநிதியின், பூம்புகார்
படம் வெளி வந்தது. இப்படி பக்திப் படங்களில் நடித்துப்
பாடல்கள் பாடி நன்னெறியைப் பரப்பிவந்த சுந்தராம்பாளின் வைராக்கியம் பெரிது. ‘பணத்துக்காக எந்த வேடத்தையும் ஏற்க மாட்டேன்’ என்று கொள்கையோடு இருந்தவர் சுந்தராம்பாள். அதற்கு உதாரணமே கலைஞர் கருணாநிதி அளித்த பட வாய்ப்பை மறுத்த நிகழ்வு. பிறகு கடவுள் மறுப்பு வசனம் எதுவும் பேச மாட்டேன் என்று
ஒப்பந்தத்தில் எழுதி கையெழுத்து இட்ட பிறகு கவுந்தி அடிகளாக நடிக்க ஒப்புக் கொண்டார். தொடர்ந்து,
திருவிளையாடல்- 1965
மகாகவி காளிதாஸ்-1966
கந்தன் கருணை-1967
உயிர் மேல் ஆசை-1967
துணைவன்-1969
சக்தி லீலை-1972
காரைக்கால் அம்மையார்-1973
திருமலை தெய்வம்-1973
மணிமேகலை உள்ளிட்ட 12 படங்களில்
சுந்தராம்பாள் அடுத்தடுத்து அபாரமாகப் பாடி நடித்தார். அரசியல் ஈடுபாட்டில் காங்கிரஸ் பிரசாரங்களில் சுந்தராம்பாள் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியப் பாடல்களையும் பாடி வந்தார். காமராசர் ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில்,
தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார். பத்மஸ்ரீ விருதுடன் இசைப் பேரறிஞர் விருதும், சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதும் அவருக்குக் கொடுக்கப்பட்டன. சுந்தராம்பாள் 1980 செப்டம்பர் 19, 72வது வயதில் வானகம் எய்தினார். நான் கண்ட நாடக கலைஞர்கள் என்ற புத்தகத்தில்
பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள்,
“நடிப்பதில் மிகவும் திறமை யுடையவர். ஆயினும் இவருடைய பெயரினை தமிழ் நாடெங்கும் பரவச் செய்தது இவருடைய அபாரமான சங்கீதக் கலையே. நல்ல ராக, தாள ஞானமுடையவர். நான் கண்ட அளவில் இவர்களுடைய சங்கீதத்தில் ஈடு ஜோடு இல்லாத பெருமை என்னவென்றால் பக்க வாத்தியங்கள்
இல்லாமலே மிகவும் இனிமையாகப் பாடும் திறமே யாம். அநேக சங்கீத வித்வான்கள் பக்க வாத்தியத்தோடு பாடுவது ஒரு மாதிரியாக இருக்கும். பக்க வாத்தியம் இல்லாமல் பாடுவது வேறு ஒரு மாதிரியாய் இருக்கும். இவரது பாட்டில் அப்படியில்லை. பக்க வாத்தியங்கள் இல்லாமல் பாடினாலும் காதுக்கு மிகவும் இனிமையாக
இருக்கும். இது ஒரு அரிய குணம்.” என்று சுந்தராம்பாள் பற்றி குறிப்பிட்டிருப்பார்.
இன்றும் மங்கா புகழுடன் இப்பூவுலகில் வாழ்கிறார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
ஒரு சமயம் மகா பெரியவா, காஞ்சி மடத்தில் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்து கொண்டு இருந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த பூஜை நடக்கும். நடுவில் எதற்காகவும் நிறுத்த மாட்டார். ஆராதனை செய்யும்போது பேசவும் மாட்டார். அவர் பூஜை செய்வதை தரிசிக்க வந்த கூட்டம் அன்று மிக அதிகம்.
வழக்கமான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவா. பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்தில் ஒரு பாட்டி தன் பேத்தியுடன் தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தார். பெரியவா பூஜை பண்ணுவதை பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில் அந்தப் பாட்டி தன் பேத்தியிடம் ஏதோ சொல்வதும், அந்தக்
குழந்தை, "ஊஹூம் முடியாது இப்பவே” என்று சொல்லி அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. குழந்தை வீட்டுக்குப் போக அடம் பிடித்து, பாட்டி சமாதானப் படுத்துவதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தை, "அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப்
#தீட்சிதர் 'தீட்சிதர்கள், நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்வதையே தொண்டாகக் கருதி வாழ்ந்து வருபவர்கள். எப்போதும் மனத்தில் ஈசனையும், மடியில் விபூதிப் பையையும் வைத்திருப்பவர்கள். அர்ப்பணிப்பு மனோபாவத்தில், சிவனாரிடம் முழுவதுமாகச் சரணடைந்தவர்கள்' என்று பெரியபுராணத்தில், தில்லைவாழ்
அந்தணர் சருக்கம் எனும் பகுதியில், தீட்சிதர்களைப் போற்றி விவரித்துள்ளார் சேக்கிழார் பெருமான். ‘தில்லை மூவாயிரம்’ என்றொரு வாசகம் மிகப் புராதனமானது. அதாவது, தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் மூவாயிரம் பேரைக் குறிப்பிடும் வாசகம் அது. தை மாதத்தில், வியாழக்கிழமையும் பூச
நட்சத்திரமும் கூடிய நன்னாளில், ஆனந்த நடனக் காட்சியை வியாக்ரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும், தேவர் பெருமக்களுக்கும் காட்டி அருளினார் ஆனந்தக் கூத்தன். அந்த வேளையில், திருக்கயிலாயத்தில் இருந்து சிவனாருடன் மூவாயிரம் வேத விற்பன்னர்களும் வந்தார்கள். அவர்களுக்கு குருவாக இருந்து நடராஜ
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்#சாபமும்_வரமே சுதீட்சண முனிவரின் ஆஸ்ரமத்தில் ஒரு நாள் பூஜையறையில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்டது. முனிவர் சென்று பார்த்த போது அவர் பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமங்களை இரண்டு குரங்குகள் தலைக்கு ஒன்றாக எடுத்துச் செல்வதைக் கண்டார். அவற்றின் பின்னால் ஓடினார
அவை அதை ஏரியில் எறிந்து விட்டு ஓடி விட்டன. பிறகு முனிவர் அதை தேடி பிடித்து,
மீண்டும் ஆஸ்ரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார். இப்படி ஒரு முறை அல்ல, பலமுறை நடந்தது. அவருக்குக் கோபம் வந்தது. எனினும் குரங்குகளுக்குச் சாபம் கொடுத்து என்ன பயன் என்ற எண்ணம்தான் அவருக்குத் தோன்றியது.
பிறகு சிறிது யோசித்து விட்டு, ஏ குரங்குகளே இனி நீங்கள் இருவரும் எதைத் தண்ணீரில் எறிந்தாலும் அவை மிதக்கக் கடவது என்று சாபம் கொடுத்தார். அன்று முதல், அவரது சாளக்கிராமங்கள் அந்தக் குரங்குகளால் அவ்வப்போது ஏரியில் எறியப்பட்டு மிதப்பதும், அவர் அவற்றை எடுத்து வருவதும் வழக்கமாகிப் போயின.
#கருந்தார்குழலி_உடனுறை_அக்னீஸ்வரர்_திருக்கோவில்
திருப்புகளூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 75வது தலமாகும். ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம்
முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு
கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு #அக்னீஸ்வர_சுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப் பட்டதால் #சரண்யபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. அக்னீஸ்வரர் கோயிலின் நான்கு புறமும் அகழி சூழ்ந்து
#ஶ்ரீசுதர்சனசக்ரம்
ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள
ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது. ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் ஸ்ரீ
பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’. ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன். பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச்
செல்லும் வாகனமாகவும் அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.
ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், அனந்தாழ்வார் என ஆழ்வார் என்ற அடைமொழி இவர்கள் மூவர் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும். ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களிலும், ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர்