#புரட்டாசி_ஸ்பெஷல்
புரட்டாசி மாதச் சனிக்கிழமைகளில் திருமலையப்பனுக்காக வீடுகளில் #மாவிளக்கு போடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதன் பின்னால் ஒரு அழகான ஐதீகம் உள்ளது. திருமலையில் வாழ்ந்த சில முனிவர்கள் அங்கிருந்த ஒரு மரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபட்டு வந்தார்கள்.
அதைக் கண்ட ஒரு வேடன் அவர்களிடம் சென்று, ஏன் இந்த மரத்தை வணங்குகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு முனிவர்கள், உங்களைப் போன்ற வேடுவர்களுக்கு அருள் புரிவதற்காகவே பெருமாள் இப்படி மரத்தின் வடிவில் இங்கு காட்சி தருகிறார் என்று விடை அளித்தார்கள். என் போன்ற தாழ்ந்தவனுக்கும் அருள்
புரிவதற்காக இந்த வடிவில் பெருமாள் வந்திருக்கிறாரா என்றெண்ணிப் பரவசப்பட்ட அந்த வேடன், அடுத்த நாள் முதல் வேட்டைக்கு வருகையில், தேனும் தினைமாவும் கொண்டு வந்து மரத்திலுள்ள பெருமாளுக்குச் சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டான். மலையப்பனின் அருளால் அந்த வேடனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மகனுக்கு விவரம் வந்த பின் அவனையும் தன்னோடு மலைக்கு அழைத்து வந்து மரத்திலுள்ள பெருமாளுக்குத் தேனும் தினைமாவும் சமர்ப்பித்து வந்தான் வேடன்.
இந்நிலையில் ஒருநாள் வேடன் தேன் கொண்டு செல்ல மறந்துவிட்டான்.
மரத்துக்கு அருகில் சென்று தன் பையைப் பிரித்துப் பார்த்த போது, தினைமாவு மட்டுமே
இருப்பதைக் கண்ட வேடன், அந்தப் பையைத் தன் மகனிடம் கொடுத்து, இங்கேயே இரு. நான் தேன் கொண்டு வந்து விடுகிறேன். தேனையும் தினைமாவையும் பெருமாளுக்குச் சமர்ப்பித்து விட்டு அதன்பின் நாம் சாப்பிடுவோம் என்று சொல்லிவிட்டுத் தேனைத் தேடிச் சென்றான். வேடுவன் வருவதற்கு நீண்ட நேரம் ஆனதால், பசி
தாங்காத அவன் மகன் வெறும் தினைமாவைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்து விட்டு, அதை உண்ணப் போனான். அப்போது தேனுடன் வந்த வேடன் மகனின் செயலைக் கண்டு கோபம் கொண்டு அவனை அடிக்கப் போனான். ஆனால் பின்னால் இருந்து ஒரு கை வேடுவனின் கையைத் தடுத்தது. திரும்பிப் பார்த்தால் சாட்சாத் திருவேங்கடமுடையானே
அங்கு நின்று கொண்டிருந்தார்.
“உன் மகன் தேன் கலக்கவில்லை என்று யார் சொன்னது? அவன் தினைமாவோடு சேர்த்து, பக்தி என்னும் தேனைக் கலந்து எனக்கு அர்ப்பணித்தான். அதை நான் ஆனந்தமாக உண்டுவிட்டேன்!” என்று கூறினார். திருமாலைத் தரிசித்துப் பரவசமடைந்த வேடுவனும் அவன் மகனும் திருமலையப்பனின்
திருவடிகளில் விழுந்து பணிந்து அருள் பெற்றார்கள் என்பது வரலாறு.
இந்தச் சம்பவம் நடைபெற்ற நாள் புரட்டாசி மாதச் சனிக்கிழமை ஆகும்.
அதனால் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் அந்த வேடுவன் சமர்ப்பித்த தினைமாவுக்கு இணையாக அரிசி மாவும், தேனுக்கு இணையாக வெல்லமும் கலந்து மாவிளக்கு போடும்
வழக்கம் ஏற்பட்டது.
ஓம் நமோ வேங்கடேசாய!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#உழவாரப்_பணியின்_பலன்
ஓர் ஊரில், வட்டிக்கு பணம் கொடுத்தும், அநியாய வட்டி வசூலித்தும், வட்டி தராதவர்களை அவமானப் படுத்தியும் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். இதனால், அவன் பலரின் சாபத்திற்கு ஆளானான். ஆனாலும் அவனுக்கு அவன் செல்வத்தின் காரணமாக மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.
இந்நிலையில் கர்ப்பம் தரித்திருந்த மேகநாதன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் தருணம் வந்தது.
மனைவிக்குப் பிரசவ வலி வந்த செய்தியைக் கேட்டு, கடையிலிருந்து வீடு நோக்கி சென்றான் மேகநாதன். செல்லும் வழியில் சிவாலயம் ஒன்று குடமுழுக்கிற்காக திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிலர் கோவிலை பெருக்கி
சுத்தம் செய்தனர். சிலர் தோரணம் கட்டினர். சிலர் விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏணியில் நின்றபடி மதில் சுவற்றுக்கு ஒரு ஏழை தொழிலாளி வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவரது சுண்ணாம்பு மட்டை கீழே விழுந்து விட, அவ்வழியாக சென்ற செல்வந்தரைப் பார்த்து, ஐயா தர்மப்பிரபு, தயவு
#திருவரங்கம்#தேயும்_பாதணிகள் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள, பெருமாள் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் தேய்மானத்திற்கு பின் ஸ்ரீரங்கம் #திருக்கொட்டாரம் எனும் இடத்தில் தூணில் மாட்டி வைக்கப் பட்டிருப்பதை அங்கு சென்றவர்கள் கண்டிருக்கலாம். இந்த காலணிகளைச் செய்யவென்றே காலம் காலமாக
தனித் தொண்டர்கள் இருக்கிறார்கள். இரண்டு செருப்பையும் இரண்டு ஊர்களில் தனித்தனியாக செய்வார்கள். இரண்டுமே ஒன்று போலவே இருக்கும் என்பது அதிசயம். 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த செருப்புகளை அரங்கனின் திருப்பாதத்தில் இருந்து கழற்றுவார்கள். அவை பயன்படுத்தப் பட்டவை போல தேய்மானம் கொண்டு
இருக்கும் என்பதும் அதிசயம். பெருமாள் முற்காலத்தில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களுடன் பேசுவதும் கட்டளை இடுவதும் நாம் கேள்விப் பட்ட விக்ஷயம். தற்பொழுது கலிகாலத்தில் இவைகள் நடக்குமா என்ற ஐயம் இருப்போர்க்கு கலியுகத்தில் அரங்கன் பாமரர்கள் கனவில் தோன்றி அருள்பாலிக்கும் அற்புத சம்பவம்
#MahaPeriyava
A devotee from Madras was travelling in the Bombay Mail train during his pilgrimage to have a darshan of Sri Raghavendra Brindavan at Mantralaya. He was sleepy. When the train stopped at a station, he thought it was his destination and got down hurriedly. He had a
look at the name board of the station only after the train left the station. It was Gundakkal!
“Ada Devuda! I have got down here”
SriMatham devotee Joshi and his friends, who arrived on the same train, came across the devotee, who was standing confused. Maha Periyava was staying
in Hagari at that time. Joshi and his friends were proceeding to have his darshan then.
“I got down here sleepily,” said the Mantralaya man.
“It is not drowsiness. You have alighted here only in a clear state! Come, let us go to Hagari and have darshan of Periyava,” said Joshi.
#திருவரங்கம்#பிள்ளைலோகாச்சாரியார் அவர் உறங்க ஆரம்பித்த சில மணித் துளிகளில் திடீரென அறைக்கதவு தட்டப்பட்டது. அறைக் கதவைத் திறக்க, அவருடைய சீடர் விளாஞ்சோலை தாசர் நின்றிருந்தார். மன்னிக்க வேணும் ஸ்வாமி தங்களைக் காண ஒரு வயோதிகர் வந்திருக்கிறார். நானும் பலமுறை சொல்லிப் பார்த்து
விட்டேன் இந்த நேரத்தில் வேண்டாம் என்று, அவர் இப்பொழுதே பார்க்கவேண்டும் ஒன்று அடம்பிடிக்கிறார். பிள்ளைலோகாச்சாரியார் மடத்தின் வாயிலை நோக்கி நடந்தவர், அப்படியே மேசிலிர்த்து நின்றார்! நரைத்த தாடி மீசையுடன் மடத்தின் நுழைவாயிற் படியில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தார் அந்தப் பெரியவர்!
பார்வையில் தீட்சிண்யம்!
வாரும் பிள்ளைலோகாச்சாரியார். நீர் பதவியேற்றதற்கு வாழ்த்துச் சொல்ல வந்தேன். சிம்ம கர்ஜனையாக ஒலித்தது அவர் குரல்!
நீர் யாரென்று அடியேன் அறியாலாமா ?
பிள்ளை நீ என்றால் நான் உனது தந்தை ஸ்தானம் என்று வைத்துக்கொள்ளேன்! எத்தனையோ ஆசான்கள் உனக்கு முன்பாக இருந்து
#மகாபெரியவா
ஒரு சமயம் மகா பெரியவா, காஞ்சி மடத்தில் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்து கொண்டு இருந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த பூஜை நடக்கும். நடுவில் எதற்காகவும் நிறுத்த மாட்டார். ஆராதனை செய்யும்போது பேசவும் மாட்டார். அவர் பூஜை செய்வதை தரிசிக்க வந்த கூட்டம் அன்று மிக அதிகம்.
வழக்கமான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவா. பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்தில் ஒரு பாட்டி தன் பேத்தியுடன் தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தார். பெரியவா பூஜை பண்ணுவதை பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில் அந்தப் பாட்டி தன் பேத்தியிடம் ஏதோ சொல்வதும், அந்தக்
குழந்தை, "ஊஹூம் முடியாது இப்பவே” என்று சொல்லி அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. குழந்தை வீட்டுக்குப் போக அடம் பிடித்து, பாட்டி சமாதானப் படுத்துவதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தை, "அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப்