#ஶ்ரீசுதர்சனசக்ரம்
ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள
ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது. ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் ஸ்ரீ
பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’. ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன். பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச்
செல்லும் வாகனமாகவும் அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.
ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், அனந்தாழ்வார் என ஆழ்வார் என்ற அடைமொழி இவர்கள் மூவர் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும். ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களிலும், ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர்
இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது. இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர். ஸ்ரீ மகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை ஸ்ரீ சுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார். உலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா சுதர்ஸனமே’!
‘புனரபி ஜனனம் புனரபி மரணம்’ (மீண்டும், மீண்டும் பிறந்து மரித்தல்) என்ற உலக நியதியான இயற்கை ஸ்ரீ சுதர்ஸனரை ஆதாரமாகக் கொண்டே நிகழ்கிறது. இவர் ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், #பரதாழ்வான் எனப்பட்டார். வைணவ ஆலயங்களில் நிகழும் பிரத்மோத்ஸவ விழாவின்போது,
தினமும் காலை, மாலையில் ஸ்ரீ சுதர்ஸனர் எழுந்தருளிய பின்பே, பெருமாள் புறப்பாடு (வீதியுலா) நடைபெறும். ஜுவாலா கேசமும், திரிநேத்ரமும், பதினாறு கரங்களும், பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால், முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள்
தீவினைகள், தோஷங்கள், கெடுதிகள் யாவும் நீங்கும். அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும். புராணப் பெருமைகள் மிகுந்த, மதுரை அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில், கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் ஆகிய திருத்தலங்களில்
விசேஷமானவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். தென்திசையின் திலகமான திருமாலிருஞ்சோலையை வந்து சேவித்த பீஷ்மாச்சாரியார், ‘சங்க, சக்ர, கதா, கட்கி சார்ங்கதன்வா கதாதர’ என சகஸ்ரநாமத்தில் - கள்ளழகரான விஷ்ணுவைப் போற்றுகிறார். இங்கு பாதுகாப்பு கருதி மாலவனின் திருக்கர சக்கரம், தாயார் சன்னதிக்கு
பின்புறம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. வேறெங்கும் இல்லாத தரிசனமாக ‘பிம்பரூபத்தில்’ மேற்புறம் ‘ஹிரண்ய சம்ஹார நரசிம்மர், கீழ்ப்புறம் ஸ்ரீ வராக ஸ்வாமியாக சிறப்புடன் திகழ்கிறார். பக்த வாத்ஸல்யனான இவரை – மனம், வாக்கு, காயம் (உடல்) என திரிகரண சுத்தியுடன் ஸ்ரீ சுதர்ஸனரைப்
பிரார்த்தித்து, நெய் விளக்கேற்றி வழிபட நினைத்தது நிறைவேறும். சகல சுகங்களும் பெற்றுச் சிறக்கலாம். ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும், சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமேயும், இயன்றதை நிவேதனம் செய்து, பூஜித்து, சேவிக்கலாம். தினமும், “ஸ்ரீ சுதர்ஸனாய ஹம்பட்” என்ற மந்திரத்தையும்,
“ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி,
தந்நச் சக்ர ப்ரசோதயாத்,”
என்ற ஸ்ரீ சுதர்ஸன காயத்ரீயையும் ஜபிக்கலாம். இவ்விதம் வழிபட்டு வரம் பெறலாம். நிச்சயம் நினைத்தது நிறைவேறும்!
ஸ்ரீ சக்ரத்தாழ்வார் தன்னை நாடி வந்து வணங்குவோருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்கிறார்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#உழவாரப்_பணியின்_பலன்
ஓர் ஊரில், வட்டிக்கு பணம் கொடுத்தும், அநியாய வட்டி வசூலித்தும், வட்டி தராதவர்களை அவமானப் படுத்தியும் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். இதனால், அவன் பலரின் சாபத்திற்கு ஆளானான். ஆனாலும் அவனுக்கு அவன் செல்வத்தின் காரணமாக மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.
இந்நிலையில் கர்ப்பம் தரித்திருந்த மேகநாதன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் தருணம் வந்தது.
மனைவிக்குப் பிரசவ வலி வந்த செய்தியைக் கேட்டு, கடையிலிருந்து வீடு நோக்கி சென்றான் மேகநாதன். செல்லும் வழியில் சிவாலயம் ஒன்று குடமுழுக்கிற்காக திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிலர் கோவிலை பெருக்கி
சுத்தம் செய்தனர். சிலர் தோரணம் கட்டினர். சிலர் விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏணியில் நின்றபடி மதில் சுவற்றுக்கு ஒரு ஏழை தொழிலாளி வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவரது சுண்ணாம்பு மட்டை கீழே விழுந்து விட, அவ்வழியாக சென்ற செல்வந்தரைப் பார்த்து, ஐயா தர்மப்பிரபு, தயவு
#திருவரங்கம்#தேயும்_பாதணிகள் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள, பெருமாள் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் தேய்மானத்திற்கு பின் ஸ்ரீரங்கம் #திருக்கொட்டாரம் எனும் இடத்தில் தூணில் மாட்டி வைக்கப் பட்டிருப்பதை அங்கு சென்றவர்கள் கண்டிருக்கலாம். இந்த காலணிகளைச் செய்யவென்றே காலம் காலமாக
தனித் தொண்டர்கள் இருக்கிறார்கள். இரண்டு செருப்பையும் இரண்டு ஊர்களில் தனித்தனியாக செய்வார்கள். இரண்டுமே ஒன்று போலவே இருக்கும் என்பது அதிசயம். 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த செருப்புகளை அரங்கனின் திருப்பாதத்தில் இருந்து கழற்றுவார்கள். அவை பயன்படுத்தப் பட்டவை போல தேய்மானம் கொண்டு
இருக்கும் என்பதும் அதிசயம். பெருமாள் முற்காலத்தில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களுடன் பேசுவதும் கட்டளை இடுவதும் நாம் கேள்விப் பட்ட விக்ஷயம். தற்பொழுது கலிகாலத்தில் இவைகள் நடக்குமா என்ற ஐயம் இருப்போர்க்கு கலியுகத்தில் அரங்கன் பாமரர்கள் கனவில் தோன்றி அருள்பாலிக்கும் அற்புத சம்பவம்
#MahaPeriyava
A devotee from Madras was travelling in the Bombay Mail train during his pilgrimage to have a darshan of Sri Raghavendra Brindavan at Mantralaya. He was sleepy. When the train stopped at a station, he thought it was his destination and got down hurriedly. He had a
look at the name board of the station only after the train left the station. It was Gundakkal!
“Ada Devuda! I have got down here”
SriMatham devotee Joshi and his friends, who arrived on the same train, came across the devotee, who was standing confused. Maha Periyava was staying
in Hagari at that time. Joshi and his friends were proceeding to have his darshan then.
“I got down here sleepily,” said the Mantralaya man.
“It is not drowsiness. You have alighted here only in a clear state! Come, let us go to Hagari and have darshan of Periyava,” said Joshi.
#திருவரங்கம்#பிள்ளைலோகாச்சாரியார் அவர் உறங்க ஆரம்பித்த சில மணித் துளிகளில் திடீரென அறைக்கதவு தட்டப்பட்டது. அறைக் கதவைத் திறக்க, அவருடைய சீடர் விளாஞ்சோலை தாசர் நின்றிருந்தார். மன்னிக்க வேணும் ஸ்வாமி தங்களைக் காண ஒரு வயோதிகர் வந்திருக்கிறார். நானும் பலமுறை சொல்லிப் பார்த்து
விட்டேன் இந்த நேரத்தில் வேண்டாம் என்று, அவர் இப்பொழுதே பார்க்கவேண்டும் ஒன்று அடம்பிடிக்கிறார். பிள்ளைலோகாச்சாரியார் மடத்தின் வாயிலை நோக்கி நடந்தவர், அப்படியே மேசிலிர்த்து நின்றார்! நரைத்த தாடி மீசையுடன் மடத்தின் நுழைவாயிற் படியில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தார் அந்தப் பெரியவர்!
பார்வையில் தீட்சிண்யம்!
வாரும் பிள்ளைலோகாச்சாரியார். நீர் பதவியேற்றதற்கு வாழ்த்துச் சொல்ல வந்தேன். சிம்ம கர்ஜனையாக ஒலித்தது அவர் குரல்!
நீர் யாரென்று அடியேன் அறியாலாமா ?
பிள்ளை நீ என்றால் நான் உனது தந்தை ஸ்தானம் என்று வைத்துக்கொள்ளேன்! எத்தனையோ ஆசான்கள் உனக்கு முன்பாக இருந்து
#மகாபெரியவா
ஒரு சமயம் மகா பெரியவா, காஞ்சி மடத்தில் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்து கொண்டு இருந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த பூஜை நடக்கும். நடுவில் எதற்காகவும் நிறுத்த மாட்டார். ஆராதனை செய்யும்போது பேசவும் மாட்டார். அவர் பூஜை செய்வதை தரிசிக்க வந்த கூட்டம் அன்று மிக அதிகம்.
வழக்கமான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவா. பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்தில் ஒரு பாட்டி தன் பேத்தியுடன் தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தார். பெரியவா பூஜை பண்ணுவதை பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில் அந்தப் பாட்டி தன் பேத்தியிடம் ஏதோ சொல்வதும், அந்தக்
குழந்தை, "ஊஹூம் முடியாது இப்பவே” என்று சொல்லி அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. குழந்தை வீட்டுக்குப் போக அடம் பிடித்து, பாட்டி சமாதானப் படுத்துவதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தை, "அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப்