#கருந்தார்குழலி_உடனுறை_அக்னீஸ்வரர்_திருக்கோவில்
திருப்புகளூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 75வது தலமாகும். ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம்
முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு
கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு #அக்னீஸ்வர_சுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப் பட்டதால் #சரண்யபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. அக்னீஸ்வரர் கோயிலின் நான்கு புறமும் அகழி சூழ்ந்து
இருந்தது. கோயிலுக்குள் செல்ல வழியில்லாததால், முன்பகுதி அகழியை தூர்த்து வழி ஏற்படுத்தினர். ராஜராஜன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதன் மூலம் தொன்மையான கோயில் என்று தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரால் பாடல் பெற்றது. 6 அல்லது 7ம் நூற்றாண்டு கோயிலாக இது
இருக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. திருவாரூரில் மண்டபம் கட்டி வருவோர்க்கெல்லாம் அன்னதானம் செய்வதற்காக சுந்தரமூர்த்தி சுவாமிகள் புகலூரானை பாடி படிக்காசு வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு திருப்புகலூர்
கோயிலுக்கு வரும்போது இரவாகிப் போனதால் கோயில் மூடப்படவே, வாசலிலேயே தலையில் செங்கல் வைத்து உறங்கி இருக்கிறார். அவர் வந்த நோக்கத்தை அறிந்த அக்னீஸ்வரர் அவர் தலைக்கு அடியில் வைத்திருந்த செங்கல்லை தங்க கல்லாக மாற்றிக் கொடுத்தார். நேரில் தரிசிக்காமல் நான் விரும்பி வந்ததை அள்ளிக்கொடுத்த
அக்னீஸ்வரரை என்னவென்று புகழ்வேன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் மனமுருகி பாடியிருக்கிறார். அன்று முதல் புதிதாக வீடுகட்ட விரும்புவோர், அக்னீஸ்வரர் முன்பாக 6 செங்கல் வைத்து பூஜித்து, அதில் மூன்றை இறைவனுக்கு கொடுத்து விட்டு மீதி மூன்றை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். அந்த கற்களை
வீட்டில் தினந்தோறும் பூஜித்து வீடுகட்டும்போது வாசல்நிலை மேல் ஒன்றும், ஈசான்ய மூலையில் ஒன்றும், பூஜை அறைமேல் ஒன்றும் வைத்து கட்டினால் எவ்வித தடையுமின்றி கிரஹபிரவேசம் நடக்கும் என்பதோடு, அந்த வீட்டிற்கு என்றும் அக்னீஸ்வரர் அருள்பார்வை இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதற்காக
ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகிறார்கள். அவர்களுக்குரிய செங்கல் கோயில் வாசலில் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நளமகராஜன், சனி தோஷம் விலக இக்கோயில் குளத்தில் குளித்து எழுந்த போதுதான் இங்கிருந்து 7 கல் தொலைவில் இருக்கும் திருநள்ளாற்றில் விலகிக் கொள்கிறேன் என்று சனிபகவான்
அசரீரியாகக் கூறினார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீஸ்வர பகவான் அனுக்கிரஹ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். காக்கையை தோளில் சுமந்தபடி நளமகராஜனுக்கு இக்கோயிலில் சிலை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள போலகம் கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்ற அவரின் தாய் அம்பாள்
கருந்தார்குழலியை வேண்ட, அம்பாளே வெள்ளைப் புடவை அணிந்து மருத்துவச்சியாய் சென்று சுகப்பிரசவம் செய்து கொடுத்ததால், சூளிகாம்பாள் என்று அழைக்கப் படுகிறார். அதற்காக அக்குடும்பத்தினர் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த நிலம் இன்றும் மருத்துவ காணி நிலம் என்று அழைக்கப்படுகிறது. இன்று வரை
இப்பகுதியில் பிரசவத்தால் யாரும் இறந்ததில்லை என்பதிலிருந்து அம்பாளின் அருள் விளங்கும். திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டும் பெண்கள் சாயரட்சை கால பூஜையின்போது அம்பாளுக்கு வெள்ளைப் புடவை சாற்றி வேண்டுதல் செய்தால் அது நிச்சயம் பலிக்கும் என்பது நம்பிக்கை. நன்னிலம்
நாகப்பட்டினம் சாலையில் 10.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. நன்னிலத்திலிருந்து பேருந்துகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5.30 – 12.00
மாலை 4.00 – 8.00
கோவில் முகவரி:
அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், திருக்கண்ணபுரம் வழி, நாகப்பட்டினம் மாவட்டம் 609704.
#உழவாரப்_பணியின்_பலன்
ஓர் ஊரில், வட்டிக்கு பணம் கொடுத்தும், அநியாய வட்டி வசூலித்தும், வட்டி தராதவர்களை அவமானப் படுத்தியும் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். இதனால், அவன் பலரின் சாபத்திற்கு ஆளானான். ஆனாலும் அவனுக்கு அவன் செல்வத்தின் காரணமாக மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.
இந்நிலையில் கர்ப்பம் தரித்திருந்த மேகநாதன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் தருணம் வந்தது.
மனைவிக்குப் பிரசவ வலி வந்த செய்தியைக் கேட்டு, கடையிலிருந்து வீடு நோக்கி சென்றான் மேகநாதன். செல்லும் வழியில் சிவாலயம் ஒன்று குடமுழுக்கிற்காக திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிலர் கோவிலை பெருக்கி
சுத்தம் செய்தனர். சிலர் தோரணம் கட்டினர். சிலர் விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏணியில் நின்றபடி மதில் சுவற்றுக்கு ஒரு ஏழை தொழிலாளி வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவரது சுண்ணாம்பு மட்டை கீழே விழுந்து விட, அவ்வழியாக சென்ற செல்வந்தரைப் பார்த்து, ஐயா தர்மப்பிரபு, தயவு
#திருவரங்கம்#தேயும்_பாதணிகள் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள, பெருமாள் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் தேய்மானத்திற்கு பின் ஸ்ரீரங்கம் #திருக்கொட்டாரம் எனும் இடத்தில் தூணில் மாட்டி வைக்கப் பட்டிருப்பதை அங்கு சென்றவர்கள் கண்டிருக்கலாம். இந்த காலணிகளைச் செய்யவென்றே காலம் காலமாக
தனித் தொண்டர்கள் இருக்கிறார்கள். இரண்டு செருப்பையும் இரண்டு ஊர்களில் தனித்தனியாக செய்வார்கள். இரண்டுமே ஒன்று போலவே இருக்கும் என்பது அதிசயம். 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த செருப்புகளை அரங்கனின் திருப்பாதத்தில் இருந்து கழற்றுவார்கள். அவை பயன்படுத்தப் பட்டவை போல தேய்மானம் கொண்டு
இருக்கும் என்பதும் அதிசயம். பெருமாள் முற்காலத்தில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களுடன் பேசுவதும் கட்டளை இடுவதும் நாம் கேள்விப் பட்ட விக்ஷயம். தற்பொழுது கலிகாலத்தில் இவைகள் நடக்குமா என்ற ஐயம் இருப்போர்க்கு கலியுகத்தில் அரங்கன் பாமரர்கள் கனவில் தோன்றி அருள்பாலிக்கும் அற்புத சம்பவம்
#MahaPeriyava
A devotee from Madras was travelling in the Bombay Mail train during his pilgrimage to have a darshan of Sri Raghavendra Brindavan at Mantralaya. He was sleepy. When the train stopped at a station, he thought it was his destination and got down hurriedly. He had a
look at the name board of the station only after the train left the station. It was Gundakkal!
“Ada Devuda! I have got down here”
SriMatham devotee Joshi and his friends, who arrived on the same train, came across the devotee, who was standing confused. Maha Periyava was staying
in Hagari at that time. Joshi and his friends were proceeding to have his darshan then.
“I got down here sleepily,” said the Mantralaya man.
“It is not drowsiness. You have alighted here only in a clear state! Come, let us go to Hagari and have darshan of Periyava,” said Joshi.
#திருவரங்கம்#பிள்ளைலோகாச்சாரியார் அவர் உறங்க ஆரம்பித்த சில மணித் துளிகளில் திடீரென அறைக்கதவு தட்டப்பட்டது. அறைக் கதவைத் திறக்க, அவருடைய சீடர் விளாஞ்சோலை தாசர் நின்றிருந்தார். மன்னிக்க வேணும் ஸ்வாமி தங்களைக் காண ஒரு வயோதிகர் வந்திருக்கிறார். நானும் பலமுறை சொல்லிப் பார்த்து
விட்டேன் இந்த நேரத்தில் வேண்டாம் என்று, அவர் இப்பொழுதே பார்க்கவேண்டும் ஒன்று அடம்பிடிக்கிறார். பிள்ளைலோகாச்சாரியார் மடத்தின் வாயிலை நோக்கி நடந்தவர், அப்படியே மேசிலிர்த்து நின்றார்! நரைத்த தாடி மீசையுடன் மடத்தின் நுழைவாயிற் படியில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தார் அந்தப் பெரியவர்!
பார்வையில் தீட்சிண்யம்!
வாரும் பிள்ளைலோகாச்சாரியார். நீர் பதவியேற்றதற்கு வாழ்த்துச் சொல்ல வந்தேன். சிம்ம கர்ஜனையாக ஒலித்தது அவர் குரல்!
நீர் யாரென்று அடியேன் அறியாலாமா ?
பிள்ளை நீ என்றால் நான் உனது தந்தை ஸ்தானம் என்று வைத்துக்கொள்ளேன்! எத்தனையோ ஆசான்கள் உனக்கு முன்பாக இருந்து
#மகாபெரியவா
ஒரு சமயம் மகா பெரியவா, காஞ்சி மடத்தில் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்து கொண்டு இருந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த பூஜை நடக்கும். நடுவில் எதற்காகவும் நிறுத்த மாட்டார். ஆராதனை செய்யும்போது பேசவும் மாட்டார். அவர் பூஜை செய்வதை தரிசிக்க வந்த கூட்டம் அன்று மிக அதிகம்.
வழக்கமான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவா. பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்தில் ஒரு பாட்டி தன் பேத்தியுடன் தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தார். பெரியவா பூஜை பண்ணுவதை பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில் அந்தப் பாட்டி தன் பேத்தியிடம் ஏதோ சொல்வதும், அந்தக்
குழந்தை, "ஊஹூம் முடியாது இப்பவே” என்று சொல்லி அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. குழந்தை வீட்டுக்குப் போக அடம் பிடித்து, பாட்டி சமாதானப் படுத்துவதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தை, "அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப்