#தீட்சிதர் 'தீட்சிதர்கள், நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்வதையே தொண்டாகக் கருதி வாழ்ந்து வருபவர்கள். எப்போதும் மனத்தில் ஈசனையும், மடியில் விபூதிப் பையையும் வைத்திருப்பவர்கள். அர்ப்பணிப்பு மனோபாவத்தில், சிவனாரிடம் முழுவதுமாகச் சரணடைந்தவர்கள்' என்று பெரியபுராணத்தில், தில்லைவாழ்
அந்தணர் சருக்கம் எனும் பகுதியில், தீட்சிதர்களைப் போற்றி விவரித்துள்ளார் சேக்கிழார் பெருமான். ‘தில்லை மூவாயிரம்’ என்றொரு வாசகம் மிகப் புராதனமானது. அதாவது, தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் மூவாயிரம் பேரைக் குறிப்பிடும் வாசகம் அது. தை மாதத்தில், வியாழக்கிழமையும் பூச
நட்சத்திரமும் கூடிய நன்னாளில், ஆனந்த நடனக் காட்சியை வியாக்ரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும், தேவர் பெருமக்களுக்கும் காட்டி அருளினார் ஆனந்தக் கூத்தன். அந்த வேளையில், திருக்கயிலாயத்தில் இருந்து சிவனாருடன் மூவாயிரம் வேத விற்பன்னர்களும் வந்தார்கள். அவர்களுக்கு குருவாக இருந்து நடராஜ
பெருமானே வேதங்களைத் தந்தருளினாராம். ஈசனிடமே தீட்சை பெற்றவர்கள் எனும் பெருமைக்கு உரியவர்கள் ஆனதால், அந்த மூவாயிரம் பேரும் தீட்சிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டின் வேத சைவ பிராமண சமூகமாகும். அவர்கள் முக்கியமாக சிதம்பரம் நகரத்தின் நடராஜர் கோயிலை மையமாகக் கொண்டவர்கள்.
தீட்சிதர்கள் குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வார்கள். வெளியே பெண் எடுப்பதில்லை. வெளியூருக்கும் செல்வதில்லை. ஸ்ரீவத்ஸ, கௌண்டின்ய, ரிஷிக்யான்யர், விஸ்வாமித்திர கோத்திரம் என்ற நாலு கோத்திரங்கள் தீட்சிதர்களுள் உண்டு. இந்த நான்கு கோத்திரங்களுக்குள் தான் பெண் எடுத்து, பெண்
கொடுத்து (அவரவர் கோத்திரத்தைத் தவிர, மற்ற கோத்திரங்களில்) மணம் செய்கின்றனர். தீட்சிதர் குடும்பத்தில் பிறந்த ஆண் குழந்தை, உபநயனம் முடிந்து, திருமணமாகி, மாங்கல்யதாரணம் வைபவம் நடந்து முடிந்த அந்த நிமிடத்தில் இருந்து அவர் தீட்சிதர் எனும் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். எத்தனையோ
சிவாச்சார்யர்களுக்கும் பட்டாச்சார்யர்களுக்கும், குருக்கள்களுக்கும் கிடைக்காத ஒரு பெருமை, தில்லை வாழ் தீட்சிதர்களுக்குக் கிடைத்திருக்கிறது. தஞ்சைப் பெரியகோயிலில், கோபுரத்தின் உட்பகுதிகளில் நிறைய ஓவியங்கள் உள்ளன. அதில், பொன்னம்பலத்தானை ராஜராஜசோழன் வணங்குவது போலவும், அருகில்
தில்லைவாழ் அந்தணர்கள் நிற்பது போலவும் ஓர் ஓவியம் உள்ளது. சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்த தஞ்சை பெரிய கோயிலில் தீட்சிதர்களின் ஓவியங்களும் இருக்கின்றன என்றால், அவர்களின் பாரம்பரியத்தை தெரிந்து கொள்ளலாம். அவர்கள் முதலில் சோழ அரசாங்கத்தில் சடங்கு செய்பவர்களாக இருந்தனர். சோழ மன்னர்
காலத்தில், அவர்களுக்குத் தில்லைவாழ் அந்தணர்களே முடிசூட்டுவது மரபு. அப்படி ஒரு பெருமையை சோழ மன்னர்கள், தீட்சிதர்களுக்குத் தந்திருந்தார்கள். சோழர்களின் பின்னடைவுக்குப் பிறகு, களப்பிரர்கள் இங்கே ஆட்சி செய்தார்கள். அச்சுதக் களப்பிர மன்னன் என்பவன், தில்லையம்பதிக்கு வந்தான். கோயிலுக்கு
வந்தவன், ‘எனக்கும் முடிசூட்டுங்கள்’ என்றான். ஆனால், தீட்சிதர்கள் மறுத்துவிட்டார்கள். ‘சிவமே கதியென்று இருந்த சோழ மன்னர்களைத் தவிர, வேறு எவருக்கும் முடிசூட்டி மரியாதை செய்ய மாட்டோம்’ என்று உறுதியாக இருந்தார்கள். ‘உயிரை விடத் தயாரா?’ என்று அவர்களை அச்சுறுத்தினான். அதில் ஏராளமான
தீட்சிதர்கள் சேர தேசமான கேரளத்தை நோக்கி ஓடி, அங்கே சிவபூஜையில் ஈடுபட்டார்கள். பிறகு, மன்னனின் கனவில் வந்த சிவனார், அவன் சிரசில் தனது திருவடியை வைத்தார். அகம் குளிர்ந்த மன்னன், தன் தவறை உணர்ந்து, தீட்சிதர்களை மீண்டும் சிதம்பரத்துக்கு அழைத்து வந்து, மன்னிப்புக் கேட்டான். அதையடுத்து
அந்நியர்களின் படைகள் உள்ளே நுழைந்து, பல கோயில்களை இடித்தன. இறை விக்கிரகங்களைச் சிதைத்தன. அப்போது தில்லை நடராஜப் பெருமானின் விக்கிரகத்தைக் காப்பாற்றுவதற்காக அதைத் திருவாரூர், குடுமியான்மலை, மதுரை எனப் பல ஊர்களுக்கு மறைவாக, பத்திரமாக எடுத்துச் சென்றார்கள் தீட்சிதர்கள். இப்படிக்
கட்டிக் காபந்து செய்ததில், முத்தைய தீட்சிதர் என்பவருக்குப் பெரும் பங்கு உண்டு. இந்தத் தகவல்களை திருவாரூர் கோயிலில் உள்ள மராட்டியர்களின் செப்பேட்டில் பார்க்கலாம் என்கிறார் குடவாயில் பாலசுப்ரமண்யம் அவர்கள். வேதமே முக்கியம் எனக் கொண்டு பதஞ்சலிமுனிவர் அருளிச் சென்ற பூஜா சூத்திரத்தின்
படிதான் இந்தக் கோயிலில் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இங்குள்ள தீட்சிதர்களில் தலைவர், தொண்டர் என்றெல்லாம் இல்லை. ஒன்பது பேர் கொண்ட குழுவை வருடந்தோறும் அமைத்து, அந்தக் குழுவினரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை பிரித்து வழங்கப்படுகிறது. அவர்கள்
சிதம்பரம் நடராஜர் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாகவும் பணி ஆற்றுகிறார்கள். ஒவ்வொரு தீக்ஷிதரும் சிதம்பரம் நடராஜர் கோயிலின் அறங்காவலர் ஆகவும் அர்ச்சகர் ஆகவும் உரிமை பெறுகிறார். கேரளாவின் நம்பூதிரி பிராமணர்களைப் போலவே இவர்களும் தலைக்கு முன்னால் முன்குடுமி போட்டுக் கொள்கின்றனர்.
#சிவாச்சாரியார் என்போர் சிவாலயத்தில் பூசை செய்யவும், சிவாலயத்தின் பிரதிஷ்டை செய்யவும், சிவாலய விழாக்களை செய்யவும் தகுதியுடையோர் ஆவார்கள். இவர்கள் சிவாகம முறைப்படி இதனை செய்கிறார்கள். இவர்கள் ஆன்மார்த்தம், பரார்த்தம் எனும் இரு வகை பூசை முறைகளை செய்பவர்களாகும். இதை எல்லாம் அவர்கள்
வேத பாடசாலையில் சேர்ந்து பயின்று இருப்பார்கள். இவர்களை சிவப் பிராமணர், சிவபுத்திரர், கர்ம சித்தாந்தக் குரவர் என்றும் அழைக்கிறார்கள். கௌசிகர், காசியபர், பாரத்துவாஜர், அத்திரி, கௌதமர் என ஐந்து முனிவர்களின் வழி வந்தோர் இந்த சிவாச்சாரியார்கள்.
#குருக்கள் #பட்டாச்சார்யர்கள் பொதுவாக
ஒவ்வொரு கிராமத்தில் உள்ள சிவாலயத்திற்கு ஒரு குருக்களும், பெருமாள் ஆலயத்திற்கு ஒரு பட்டாச்சாரியாரும் இருப்பார்கள். தற்போது பெரிய நகரங்களிலும் கோவிலில் அர்ச்சனை செய்து, கோவில் உத்சவங்களை நடத்தி, கோவிலை பராமரிப்பவர்கள் இவர்களே. இவர்கள் அந்தந்த கோவில்களில் பல தலைமுறை தலைமுறையாக பூஜை
செய்து வந்தவர்களே. அவர்களுக்கும் அந்தந்த கோவிலுக்கும் ஒரு நெருக்கமான பந்தம் இருக்கும். சம்பளம் மிகக் குறைவாகவே இருந்தாலும், இறை நம்பிக்கையால் இவர்கள் கோவில் கைங்கர்யங்களை சுணக்கம் இல்லாமல் செய்து வருகிறார்கள். அந்த ஆலய சிவபிரானை/பெருமாளை/பட்டாச்சார்யா பல தலைமுறை தலைமுறையாக பூஜை
செய்து வந்த அந்த குருக்கள் வம்சத்திற்க்கு அந்த கோயில் இறைவன் பாட்டனாராகவே உணரப்படுவார். முஸ்லீம் படையெடுப்பின் பொழுதும், ஆங்கிலேய ஆட்சி அராஜகத்தின் பொழுதும், பஞ்சத்தின் போதும், வறுமையின் போதும், மக்கள் கோவிலுக்கே போகாத காலங்ளிலும், தனது வறுமையிலும் பாழடைந்த அந்த கோவிலில் ஓரு
தீபமாவது ஏற்றி, கை சாதமாவது படைத்து, புல் பூண்டு முள்ளுக்கு நடுவிலே முடிந்தளவு சுத்தம் செய்து அந்த கோவிலை பராமரித்து பாதுகாத்தவர்கள் இந்த குருக்கள் குடும்பமும் பட்டாச்சார்யார் குடும்பங்களும் தான்.
#அர்ச்சகர் அர்ச்சகாஸ்ச்ச ஹரி ஸக்ஷ¡த்" என்கிறது வேதம். உலக தர்மத்தை காப்பதில் மிக
முக்கிய பங்காற்றிவருபவர்கள் தான் அர்ச்சகர்கள். தன் உடல், பொருள், ஆவி, இன்பம் எல்லாவற்றையுமே இறைவனுக்காக தியாகம் செய்து உலகம் தழைக்க இறைவனிடம் இடைவிடாது தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு இறைச்சேவை செய்பவர்கள் அர்ச்சகர்கள். இவர்கள் இறைவன் ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும்போதே பகவான்
ஸ்ரீவிஷ்ணுவால் தோற்றுவிக்கப் பட்டவர்கள். இறைவனின் ஹ்ருதயத்திலிருந்து இவர்கள் தோன்றியதால் இவர்களுக்கு ஸ்ரீவைகாநஸர்கள் என்று பெயர். அதன்படி அன்றிலிருந்து இன்று வரை இடையறாது பகவானுக்கு தொடர்ந்து பூஜித்து வருபவர்கள்தான் இந்த அர்ச்சகர்கள். இவர்களின் பூலோக பிறப்பு, இந்தியாவின் வடக்கே
#நைமிசாரண்யம் என்கிற அற்புத புனித வனமாகும். இங்குதான் அர்ச்சகர்கள் முதல் முதலில் இறைவனால், இந்த புண்ய பூமியில் தோற்றுவிக்கப்பட்டார்.பிறகுதான் மற்ற ஜீவராசிகளை இறைவன் படைக்கலானார். என்பது வேதவழி வரலாறு. இப்படிப்பட்ட மிகப்புனிதமான இறைவனின் ப்ரதி அவதாரமாக திகழும் ஸ்ரீவைகாநஸ
அர்ச்சகர்கள் இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ள (திருமலா திருப்பதி தேவஸ்தானத்தையும் சேர்த்து) பல ஸ்ரீ சிவா மற்றும் விஷ்ணு ஆலயங்களில் அர்ச்சகர்களாக சேவையாற்றி வருகிறார்கள்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 23
சிலர் தமிழிலும் கேட்பதால், தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் இந்தப் பதிவு. #சைவம் #சிவச்சின்னங்கள்

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு #அன்னாபிஷேகம் நடக்கும் காலம் ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் ImageImageImageImage
#தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
#திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் #திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் #பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன்
மீது பாடியவர் #திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் #திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது #துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது #கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்
Read 11 tweets
Sep 23
#உழவாரப்_பணியின்_பலன்
ஓர் ஊரில், வட்டிக்கு பணம் கொடுத்தும், அநியாய வட்டி வசூலித்தும், வட்டி தராதவர்களை அவமானப் படுத்தியும் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். இதனால், அவன் பலரின் சாபத்திற்கு ஆளானான். ஆனாலும் அவனுக்கு அவன் செல்வத்தின் காரணமாக மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. Image
இந்நிலையில் கர்ப்பம் தரித்திருந்த மேகநாதன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் தருணம் வந்தது.
மனைவிக்குப் பிரசவ வலி வந்த செய்தியைக் கேட்டு, கடையிலிருந்து வீடு நோக்கி சென்றான் மேகநாதன். செல்லும் வழியில் சிவாலயம் ஒன்று குடமுழுக்கிற்காக திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிலர் கோவிலை பெருக்கி Image
சுத்தம் செய்தனர். சிலர் தோரணம் கட்டினர். சிலர் விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏணியில் நின்றபடி மதில் சுவற்றுக்கு ஒரு ஏழை தொழிலாளி வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவரது சுண்ணாம்பு மட்டை கீழே விழுந்து விட, அவ்வழியாக சென்ற செல்வந்தரைப் பார்த்து, ஐயா தர்மப்பிரபு, தயவு Image
Read 9 tweets
Sep 23
#திருவரங்கம் #தேயும்_பாதணிகள் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள, பெருமாள் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் தேய்மானத்திற்கு பின் ஸ்ரீரங்கம் #திருக்கொட்டாரம் எனும் இடத்தில் தூணில் மாட்டி வைக்கப் பட்டிருப்பதை அங்கு சென்றவர்கள் கண்டிருக்கலாம். இந்த காலணிகளைச் செய்யவென்றே காலம் காலமாக Image
தனித் தொண்டர்கள் இருக்கிறார்கள். இரண்டு செருப்பையும் இரண்டு ஊர்களில் தனித்தனியாக செய்வார்கள். இரண்டுமே ஒன்று போலவே இருக்கும் என்பது அதிசயம். 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த செருப்புகளை அரங்கனின் திருப்பாதத்தில் இருந்து கழற்றுவார்கள். அவை பயன்படுத்தப் பட்டவை போல தேய்மானம் கொண்டு Image
இருக்கும் என்பதும் அதிசயம். பெருமாள் முற்காலத்தில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களுடன் பேசுவதும் கட்டளை இடுவதும் நாம் கேள்விப் பட்ட விக்ஷயம். தற்பொழுது கலிகாலத்தில் இவைகள் நடக்குமா என்ற ஐயம் இருப்போர்க்கு கலியுகத்தில் அரங்கன் பாமரர்கள் கனவில் தோன்றி அருள்பாலிக்கும் அற்புத சம்பவம்
Read 11 tweets
Sep 23
#MahaPeriyava
A devotee from Madras was travelling in the Bombay Mail train during his pilgrimage to have a darshan of Sri Raghavendra Brindavan at Mantralaya. He was sleepy. When the train stopped at a station, he thought it was his destination and got down hurriedly. He had a Image
look at the name board of the station only after the train left the station. It was Gundakkal!
“Ada Devuda! I have got down here”
SriMatham devotee Joshi and his friends, who arrived on the same train, came across the devotee, who was standing confused. Maha Periyava was staying
in Hagari at that time. Joshi and his friends were proceeding to have his darshan then.
“I got down here sleepily,” said the Mantralaya man.
“It is not drowsiness. You have alighted here only in a clear state! Come, let us go to Hagari and have darshan of Periyava,” said Joshi.
Read 9 tweets
Sep 23
#திருவரங்கம் #பிள்ளைலோகாச்சாரியார் அவர் உறங்க ஆரம்பித்த சில மணித் துளிகளில் திடீரென அறைக்கதவு தட்டப்பட்டது. அறைக் கதவைத் திறக்க, அவருடைய சீடர் விளாஞ்சோலை தாசர் நின்றிருந்தார். மன்னிக்க வேணும் ஸ்வாமி தங்களைக் காண ஒரு வயோதிகர் வந்திருக்கிறார். நானும் பலமுறை சொல்லிப் பார்த்து Image
விட்டேன் இந்த நேரத்தில் வேண்டாம் என்று, அவர் இப்பொழுதே பார்க்கவேண்டும் ஒன்று அடம்பிடிக்கிறார். பிள்ளைலோகாச்சாரியார் மடத்தின் வாயிலை நோக்கி நடந்தவர், அப்படியே மேசிலிர்த்து நின்றார்! நரைத்த தாடி மீசையுடன் மடத்தின் நுழைவாயிற் படியில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தார் அந்தப் பெரியவர்! Image
பார்வையில் தீட்சிண்யம்!
வாரும் பிள்ளைலோகாச்சாரியார். நீர் பதவியேற்றதற்கு வாழ்த்துச் சொல்ல வந்தேன். சிம்ம கர்ஜனையாக ஒலித்தது அவர் குரல்!
நீர் யாரென்று அடியேன் அறியாலாமா ?
பிள்ளை நீ என்றால் நான் உனது தந்தை ஸ்தானம் என்று வைத்துக்கொள்ளேன்! எத்தனையோ ஆசான்கள் உனக்கு முன்பாக இருந்து
Read 21 tweets
Sep 23
#மகாபெரியவா
ஒரு சமயம் மகா பெரியவா, காஞ்சி மடத்தில் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்து கொண்டு இருந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த பூஜை நடக்கும். நடுவில் எதற்காகவும் நிறுத்த மாட்டார். ஆராதனை செய்யும்போது பேசவும் மாட்டார். அவர் பூஜை செய்வதை தரிசிக்க வந்த கூட்டம் அன்று மிக அதிகம். Image
வழக்கமான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவா. பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்தில் ஒரு பாட்டி தன் பேத்தியுடன் தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தார். பெரியவா பூஜை பண்ணுவதை பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில் அந்தப் பாட்டி தன் பேத்தியிடம் ஏதோ சொல்வதும், அந்தக்
குழந்தை, "ஊஹூம் முடியாது இப்பவே” என்று சொல்லி அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. குழந்தை வீட்டுக்குப் போக அடம் பிடித்து, பாட்டி சமாதானப் படுத்துவதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தை, "அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப்
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(