திருப்பதி மலையில் வாழும்
ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார் ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலையான் என்று பெயர் வர காரணம் தெரியுமா?
ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளது.
ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஒரு அர்த்தம் உள்ளது.
ஏழு மலைகளை கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின்றனர்.
அந்த ஏழு மலைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
ஒன்றாம் மலை :
வேம்" என்றால் பாவம், 'கட" என்றால் 'நாசமடைதல்". பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு 'வேங்கட மலை" என்று பெயர்.
இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
இரண்டாம் மலை :
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார்.
அவதாரத்திற்காக வந்த ஆதிசேஷன் பெயரால் 'சேஷமலை" என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாம் மலை :
வேதங்கள் அனைத்தும் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன.
எனவே இது 'வேத மலை" என்று அழைக்கப்படுகிறது.
நான்காம் மலை :
சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார்.
அதனால் இந்த மலை 'கருட மலை" எனப் பெயர் பெற்றது.
ஐந்தாம் மலை :
விருஷபன் என்ற அசுரன், சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றதால் இம்மலைக்கு 'விருஷப மலை" எனப் பெயர் வந்தது.
ஆறாம் மலை :
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள்.
அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள்.
இவளது பெயரில் ஏற்பட்ட மலை 'அஞ்சன மலை" எனப்படுகிறது.
ஏழாம் மலை :
ஆதிசேஷனுக்கும்,
வாயு பகவானுக்குமிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.
இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து அனுஷ்டிக்கப்படும் நோன்பாகும்.
இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும்.
உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.
இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும்.ஆகவே புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுஷ்டிக்கப்படும் விரதம் சாரதா நவராத்திரி நோன்பாகும்.
*தைமாதம் சூரியனின் தேர் பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் அன்றைய நாளுக்கு "ரதசப்தமி" என்று பெயர்.*
*அன்று சூரியனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டும்*
*ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கும், சக்கரமும் உண்டு. அதனால் வைஷ் ணவர்கள் சூரியனை "சூரியநாராயணன்" என்று போற்றுகின்றனர்.*
*சூரியன், ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார்.*
*வசந்த காலத்தில் தங்க நிறத்திலும், வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறத்திலும், மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும், கார்காலத்தில் கருமை நிறத்திலும், முன்பனிக் காலத்தில், தாமரை நிறத்திலும், பின்பனிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் விளங்குவதாக வேதங் கள் கூறுகின்றன.*
திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.
காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.
முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.
பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.
பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.
அந்நேரத்தில் ""கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.