பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டுத் தமிழில், 'தமிழறிவன்'
👇🏼🧵👇🏼
ஏன் 'தமழறவன' என்று இருக்குன்னா அன்று திராவிட மொழிக்குடும்ப எழுத்துமுறை ஒன்றே!
👉🏼 மெய்யெழுத்திற்குப் புள்ளிவைப்பது, நெடிலுக்கு துணைக்கால் வந்தது, அச்சு வந்த காலம் கொடுத்த 'நிறுத்தற்குறிகளை'(Punctuations) ஏற்றது;
1/ஃ
👉🏼கிரந்தமேற்றப்பட்டத் தமிழ், க்ருத எழுத்து முறையேற்ற கன்னடம், மலையாளம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, தெலுங்கு, கோண்டி, கூயி, கூலி, கோலாபி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டோ, குரூக், மால்தோ, பிராகூய் என திராவிட மொழிக் குடும்பமாக தமிழ் பிளவுபட்டது என தமிழ்
2/ஃ
ஈராயிரமாண்டுகளாய் பல்வேறு மாறுதலுக்குள்ளானதற்கு மூலக்காரணம் பார்ப்பனியத்தின் ஆரியமேற்றல்!
இவற்றனைத்தையும் பேசாம தமிழில் இல்லாத Phonetics-களுக்கு தமிழில் வழிவர பரிந்துரைத்த பெரியாரின் தமிழ்க்காதலை புரியாது ஜெயமோகன்களின் குரலாய் சேறிறைக்கும் மொழி அடிப்படைவாத லும்பர்களுக்கு,
3/ஃ
ஏன் இன்னும் தமிழால் இன்றைய நவீன உலகில் பொதுப் பதங்களாக உள்ள சொற்களை(அறிவியல், தொழில்நுட்ப, சட்டஅமைப்புச் சொற்கள்) சரிவர எழுத்துப்பெயர்க்கக்கூட(Transliterate) முடிவதில்லை என்பது புரியப் போவதில்லை.
எ.கா:
ஃபோன் = Phone ?!
4/ஃ
குறைந்தது இன்று நாம் தட்டச்சும் விசைப்பலகையுள் 35 characters - இற்குள் தமிழ் எளிமைப்படுத்தப்பட்டு எண்மப் பரிணாமத்திற்கேற்ற எளிய வடிவில் இருப்பதற்குக் காரணம் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் என்பதையேனும் அறிக!
5/ஃ
ஆங்கிலம் பொதுமொழியானதற்கு முதன்மைக் காரணம் அதன் பொது ஓட்டத்துடனான இணைவாக்கம்(adaption)
தொழிற்புரட்சியை சரியாக அறுவடை செய்ததால் அவரது சொற்வளத்தின் தாக்கமோ பிற உலக மொழிகளிலும் நிறைந்தது, Computer போல; நாமோ நாம் கண்டுபிடித்த கட்டுமரத்தை Catamaran என்று அவர் பயன்படுவதை எண்ணி,
6/ஃ
வெற்றுப் பெருமிதப்பட்டுக் கொண்டு மட்டுமே இருக்கிறோம். வரலாற்றிலோ நம் மொழியிலும் மனுதர்மத்தை ஏற்றியிருக்கும் பார்ப்பனியத்தின் இந்து பேரினவாதத்தைப் புரியாது வார்த்தைகளைச் சொற்களாகப் பயன்படுத்தி வருகிறோம்.
7/ஃ
தமிழ் செல்லவேண்டிய தளங்கள் இன்னும் நிறைய உளது! இன்னமும் தமிழைப் பண்படுத்த நிறைய உளது! மொழியடிப்படைவாத அரசியலுக்காக தமிழைப் புனிதப்படுத்தி, அதன் இருப்பை அழிக்கத் துணை போகாதீர்!!
மத அடிப்படையிலான பேரினவாத அரசியலைப் புரிந்துகொள்ள பாலஸ்தீனத்தின் வரலாற்றுடன் யூதர்களின் வரலாற்றையும் அறிவது தேவையாகிறது.
1/
விவிலியத்தின் (#Bible) பழைய ஏற்பாட்டை புனிதநூலாக ஏற்கும் யூதர்கள், புதிய ஏற்பாட்டை ஏற்கும் கிறித்தவர்கள் நம்பும் 'இயேசுவே தேவதூதன்' என்பதை ஏற்காதோர். யூதர்கள் இயேசுவை இறைதூதராய் ஏற்கமறுத்த காலத்திலிருந்தே மத உரசல்கள் மத்திய கிழக்காசியப் பகுதிகளில் நடந்து வந்துள்ளன.
2/
எளிமையாகச் சொல்லப்போனால் இந்துமதத்தில் மனுநீதியை ஏற்போர், ஏற்காதோர் என்பது போன்றே தான் யூதரும் கிறித்தவரும். மனுநீதி பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் உயர்ந்தோரென்ற கருத்தை வலியுறுத்தவதைப் போன்றே யூதமதம் யூதர்களை கடவுளின் நேரடி பிள்ளைகளாக, உயர்ந்தோராகப் போற்றிக்கொள்கிறது.
சமத்துவத்தை விரும்பும் அனைவருக்குமான தலைவரை ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு மட்டுமான தலைவராக ஆக்கவே இந்துத்துவம் திட்டமிட்டு டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதியை இடித்தது.
1/
மாட்டு மூத்திரம் குடித்தால் புற்றுநோய் வராது, கொரானாவே ஓடிவிடும் என்றெல்லாம் சிந்திக்கும் கூட்டத்துக்கு எப்படி அம்பேத்கரின் சிந்தனை வெளியை முடக்கிட திட்டமிடும் அளவுக்கான கட்டமைப்பும் கோட்பாடும் வந்தது?
2/
கடந்த நூற்றாண்டில் எழுந்த இந்துத்துவம் எனும் அடிப்படைவாத வலதுசாரிக் கோட்பாட்டுக்கு தந்தையாக பார்க்கப்படும் சாவர்க்கர், ஆங்கிலேயரின் காலை நக்கி சிறைவாசத்திலிருந்து தப்பித்தது மட்டுமல்ல, இந்த கோட்பாட்டையே சியோனிசத்திடமிருந்து தான் ஆட்டையப் போட்டார்.