🏳️‍🌈 🏳️‍⚧️ அறவாழி mAJaveli 2.0 Profile picture
A Dravidian Non-Spritualist | All Meat Eater | 🏳️‍🌈 Demisexual Intersex (Him/Them) | Trichotillomaniac | Primary ID @thamizharivanAJ blocked by the NeoNazists
Oct 7, 2022 18 tweets 3 min read
12.7.61 தளிக்கோட்டை வள்ளுவர் படிப்பக ஆண்டுவிழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து..

🧵👇🏽

"நான்தான் குறள் மாநாடு கூட்டியவன்; குறளைப்பற்றி மக்களுக்கு உணர்ச்சி ஊட்டியவன்; தமிழில் உள்ள ஒத்துக்கொள்ளத்தக்க இலக்கியங்களில் சிறந்தது வள்ளுவர் குறள் என்று எடுத்துக்காட்டி வருபவன்.

1/ ImageImage வள்ளுவரின் குறளில் 'கடவுள் வாழ்த்து' என்ற ஒன்றை வலிய வரவழைத்து எழுதப்பட்டு உள்ளது. மக்களை வாழ்த்தக் கூட்டப்படும் கூட்டங்களில்கூட கடவுளை வாழ்த்துவது என்று முட்டாள்தனமாக கடவுளை வாழ்த்துவதுபோல் மக்களுக்காக நூல் செய்தவர்,

2/
Oct 6, 2022 5 tweets 3 min read
இத்துணைக்கண்டத்திற்கு முதன்முதலில் படையெடுத்த காக்கேசிய இனக்குழுவைச் சேர்ந்தோர் கிரேக்கர்.
அவர்தம் மொழியில் ச்(sigma) கொண்டு சொல் தொடங்க இலக்கணம் இடம் தராததால் ஸிந்து ஆற்றங்கரைக்கு தென்னகம் வாழ்ந்தோரை இண்டி மக்கள்(Indie people) என்றனர்.

#TamilsAreNotHindus 🧵👇🏽 அந்த Indigenous மக்களைத் தேடி வந்த காக்காசியரே அமெரிக்கத் தொல்குடியினருடன் தொடர்பிற்கு வழிகண்டுபிடித்த கொலம்பசும், பிற்காலத்தில் அம்மக்களை செவ்விந்தியர் என்றழைக்கக் காரணமான இந்தியத் தொல்குடியிருடன் நேரடியாகத் தொடர்பேற்படுத்த வழிக் கண்டெடுத்த வாஸ்கோடகாமாவும்.

👇🏽
Oct 5, 2022 4 tweets 1 min read
சென்னை நகரப்பேருந்தொன்றில், வாங்கிய பயணச்சீட்டிற்கான தொகை போக மீதி சில்லறைக்கு 10 ரூபாய் நாணயத்தை தந்த நடத்துநரிடம் முரண்டு பிடிக்கிறார் பயணி ஒருவர்.

"10 ரூவாய்க்கே சளிச்சுக்கிட்டா எப்புடிணே? 100 ரூவாய்கு கூட சில்ற வந்துடுச்சு. இனிமே காந்தி இருக்க ரூவாய பாக்குறதே அரிதுண்ணே"

1/
தமது பணிச் சிக்கலைப் புரிந்துகொண்ட ஒருவரைக் கண்டதும் நடத்துநர் புலம்பித் தள்ளத் துவங்குகிறார்.

"இந்த சில்லறயாலயே சில சமயம் வாரத்துக்கு 200-300 ரூவா வர வுட்டுடரன் தம்பி. நாங்க என்ன செய்வோம்?"

2/
Sep 24, 2022 8 tweets 2 min read
பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டுத் தமிழில், 'தமிழறிவன்'

👇🏼🧵👇🏼

ஏன் 'தமழறவன' என்று இருக்குன்னா அன்று திராவிட மொழிக்குடும்ப எழுத்துமுறை ஒன்றே!
👉🏼 மெய்யெழுத்திற்குப் புள்ளிவைப்பது, நெடிலுக்கு துணைக்கால் வந்தது, அச்சு வந்த காலம் கொடுத்த 'நிறுத்தற்குறிகளை'(Punctuations) ஏற்றது;

1/ஃ 👉🏼கிரந்தமேற்றப்பட்டத் தமிழ், க்ருத எழுத்து முறையேற்ற கன்னடம், மலையாளம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, தெலுங்கு, கோண்டி, கூயி, கூலி, கோலாபி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டோ, குரூக், மால்தோ, பிராகூய் என திராவிட மொழிக் குடும்பமாக தமிழ் பிளவுபட்டது என தமிழ்

2/ஃ
Sep 24, 2022 31 tweets 11 min read
#Judaism #Palestine

யூதப் பேரினவாதமும் பாலத்தீன தொல்குடியும் - 🧵👇🏽

மத அடிப்படையிலான பேரினவாத அரசியலைப் புரிந்துகொள்ள பாலஸ்தீனத்தின் வரலாற்றுடன் யூதர்களின் வரலாற்றையும் அறிவது தேவையாகிறது.

1/ விவிலியத்தின் (#Bible) பழைய ஏற்பாட்டை புனிதநூலாக ஏற்கும் யூதர்கள், புதிய ஏற்பாட்டை ஏற்கும் கிறித்தவர்கள் நம்பும் 'இயேசுவே தேவதூதன்' என்பதை ஏற்காதோர். யூதர்கள் இயேசுவை இறைதூதராய் ஏற்கமறுத்த காலத்திலிருந்தே மத உரசல்கள் மத்திய கிழக்காசியப் பகுதிகளில் நடந்து வந்துள்ளன.

2/
Sep 23, 2022 14 tweets 5 min read
#BabriMasjid #🧵- சமத்துவத் தந்தை புரட்சியாளர் #அண்ணல்_அம்பேத்கர் நினைவு நாள் - @thamizharivanAJ மீள்பதிவு.

சமத்துவத்தை விரும்பும் அனைவருக்குமான தலைவரை ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு மட்டுமான தலைவராக ஆக்கவே இந்துத்துவம் திட்டமிட்டு டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதியை இடித்தது.

1/ Image மாட்டு மூத்திரம் குடித்தால் புற்றுநோய் வராது, கொரானாவே ஓடிவிடும் என்றெல்லாம் சிந்திக்கும் கூட்டத்துக்கு எப்படி அம்பேத்கரின் சிந்தனை வெளியை முடக்கிட திட்டமிடும் அளவுக்கான கட்டமைப்பும் கோட்பாடும் வந்தது?

2/ Image