#நற்சிந்தனை
நாட்டில் ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.
ஒருமுறை #அமைதி என்றால் என்ன என்பதை ஓவியமா வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம்
பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தனர். மன்னன் ஒவ்வொரு ஓவியமா பார்வையிட்டு வந்தான். ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி அமைதியை பிரதிபலித்து இருந்தனர். ஒரு ஓவியம் அழகான ஏரி, அழகிய மலையின் அடி வாரத்தில் இருப்பது போல, மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து.
மற்றொன்று பார்த்தவுடனே
பறிக்கத் தூண்டும் வகையில் மலர்கள் தற்றூபமாக வரைப்பட்டிருந்தது. இது போல பல. ஆனால் ஒரே ஒரு ஓவியத்தில் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பபட்டு இருந்தது. அதனுடன் இடியோட கூடிய மழையும். இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்த்த பொழுது நீர் வீழ்ச்சியின் கீழே
இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டி இருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளோட காணப்பட்டது.
“இந்த ஓவியத்தை வரைந்தது யார்” என்றவுடன் அந்த ஓவியர் வந்தார்.
மன்னர், “இந்த ஓவியம் பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை, கீழே
மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது” என்று கேட்டார். அதுற்கு ஓவியர் “மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல. இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்க விடாமல்
பார்த்துக் கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி. அப்படி பார்க்கும் போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!
“சபாஷ்! அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” என்று கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.
அனைத்து வசதிகளும்
அமையப் பெற்று எந்த வித பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல அது ஒரு வாழ்க்கையும் அல்ல. ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, நிச்சயம் ஒருநாள் விடியும் என்று விடா முயற்சியோட தினசரி உழைத்துக் கொண்டே இருப்பவர்களிடம் இருப்பது தான் அமைதி.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#கும்பம்_தேங்காய்_வழிபாடு
எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், யாகம் செய்யும்போதும் கலச பூஜை முக்கியத்துவம் பெறுகிறது. நவராத்திரி போன்ற பண்டிகைகளிலும் வீட்டில் பலர் கலசம் வைத்து வழிபடுகின்றனர். இதன் தாத்பரியத்தைத் தெரிந்து கொள்வோம். மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர். நீர் இன்றி
அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை செய்கிறோம். கலசம் மூலமாக இறைவனை உருவகப் படுத்துகிறோம். ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில் ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைத் திரவியங்களைப்
போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய் வைத்து பூஜிக்கிறோம். கலசம் வைக்க பித்தளை அல்லது தாமிரச் சொம்பினை பயன்படுத்துகிறோம். காரணம் இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி கொண்டவை. இயற்பியலில் கடத்திகள் என்று என்பதுசொல்வார்கள். ஆங்கிலத்தில் Conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்
#நவராத்திரி#அரிய_தகவல்கள் 1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 2. நவராத்திரி விழா பற்றி தேவி மாகாத்மயத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
3.நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். 4. விஜயதசமி தினத்தன்று
பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும். 5. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. நவராத்திரி விரதத்தை கடை
பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. 6. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரம். 7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று
#MahaPeriyava During Sri Maha Periyava’s camp at Andhra Pradesh, a Pooja was arranged for Goddess Kamakshi Amman and all arrangements were made for the Pooja. Ambal Kamakshi was dressed in a divine and soulful manner by the Sreekaryam people. When Sri Maha Periyava was about to
start the Pooja, He noticed that the saree of Kamakshi Amman was torn at the knee. But Sri Maha Periyava decided to go ahead with the Pooja without changing the saree. The Pooja was in excellent progress and a lot of devotees were assembled for the Pooja. Unexpectedly, a lady
beggar with her saree torn at many places came running and asked for a saree and food. Everyone in the crowd was about to prevent that lady from nearing Sri Maha Periyava. Maha Periyava instructed the people not to stop her but allow her to come near Maha Periyava.
Karuna Sagaran
சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு #பிரம்மோத்சவம் என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தலும், அவற்றுள்
முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நவராத்திரி தான். ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. சக்தியைப் பங்குனி/சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி. மாசி மாதம் ஷியாமளா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது
#கூட்டிக்கழிச்சு_பார்த்தால்_கணக்கு_சரியா_வரும்
ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள் செல்வாவும் சிவாவும் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவர் ரமேஷ் என்பவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்
அதற்கென்ன, தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். செல்வா, என்னிடம் 5 ரொட்டிகள் இருக்கிறது என்றார். சிவாவோ என்னிடம் 3 ரொட்டிகள் இருக்கிறது என்றவர், ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாகப்
பிரித்துக்கொள்ள முடியும் என்றார். மூன்றாம் நபர் ரமேஷ் இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் 3 துண்டுகள் போடுங்கள். இப்பொழுது 24 துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஆறு விதத்தில் கடன்பட்டுள்ளோம்.
முதலாவதாக, தேவர்களுக்குக் கடன் பட்டுள்ளோம். நாம் சுவாசிக்கக் காற்று, பார்க்க வெளிச்சம், பருக நீர் என நம் எல்லாத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர்.
இரண்டாவதாக, நாம் ரிஷிகளுக்குக் கடன்
பட்டுள்ளோம். வியாஸதேவர், பராசரர், நாரதர் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், மனு சம்ஹிதை, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கியுள்ளனர்.
மூன்றாவதாக, இதர உயிர்வாழ் இனங்களுக்குக் கடன்பட்டுள்ளோம். பசுவிடமிருந்து பால் அருந்துவதால், பசுவிற்கு கடன்பட்டுள்ளோம்.
விவசாயத்திற்கு எருதின் சேவையை ஏற்கிறோம். அதைப் போன்று மற்ற விலங்குகளிடமிருந்து பல சேவைகளை ஏற்கிறோம்.
நான்காவதாக பித்ருக்களுக்குக் கடன் பட்டுள்ளோம். நாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் மூதாதையர்களின் ஆசியால் பிறப்பெடுத்த காரணத்தினால் அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம்.
ஐந்தாவதாக குடும்ப