#கூட்டிக்கழிச்சு_பார்த்தால்_கணக்கு_சரியா_வரும்
ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள் செல்வாவும் சிவாவும் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவர் ரமேஷ் என்பவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்
அதற்கென்ன, தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். செல்வா, என்னிடம் 5 ரொட்டிகள் இருக்கிறது என்றார். சிவாவோ என்னிடம் 3 ரொட்டிகள் இருக்கிறது என்றவர், ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாகப்
பிரித்துக்கொள்ள முடியும் என்றார். மூன்றாம் நபர் ரமேஷ் இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் 3 துண்டுகள் போடுங்கள். இப்பொழுது 24 துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று
அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள். பொழுது விடிந்தது. மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்த ரமேஷ் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி 8 தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லி
விட்டு விடை பெற்றார். மூன்று ரொட்டிகளை கொடுத்த சிவா அந்த காசுகளை சமமாகப் பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக் கொள்ளலாம் என்றார். செல்வாவோ இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார் செல்வா.
மூன்று ரொட்டிகள் கொடுத்த சிவா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார். சுமுகமான முடிவு
எட்டாததால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் ஸ்ரீமந் நாராயணன் காட்சி அளித்து சொன்ன தீர்ப்பும் அதற்கு அவர்
அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான். 3 ரொட்டிகளை கொடுத்த சிவாவுக்கு 1 காசும் 5 ரொட்டி கொடுத்த செல்வாவுக்கு 7 காசுகளும் கொடுத்தார். ஒரு காசு வழங்கப்பட்ட சிவா மன்னா இது அநியாயம். அவரே எனக்கு 3 காசுகள் கொடுத்தார்.
அரசர் சொன்னார், நீ கொடுத்தது 9 துண்டுகள். அதிலும் 8 துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது 15 துண்டுகள்.
அவனுக்கு 8 துண்டுகள் தான் கிடைத்தது. ஆக நீ தருமம் செய்தது 1 துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார். ஆம் ஸ்ரீமந் நாராயணனின் கணக்கு எப்பொழுதுமே மிகவும் துல்லியமாக
இருக்கும். இழந்ததை எல்லாம் தருவது அல்ல ஸ்ரீமந் நாராயணன் கணக்கு. எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு என்பது அவன் கணக்கு! ஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தர்ம கணக்கு, நீதி கணக்கு.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஊட்டத்தூர்_சிவபெருமான்_கோவில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் அதன் உருவாக்கத்திற்காக உலக பிரசித்தி பெற்றது. ஆனால் தமிழ்நாட்டிலேயே இன்னொரு நடராஜர் கோவில் நம்ப முடியாத அதிசயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கு தெரியாது. நடராஜரின் உருவமே பிரபஞ்ச தத்துவத்தை விளக்குவதாகும்.
பல இடங்களில் இந்த நடராஜர் சிலை ஐம்பொன்னால் கல்லாலும் செய்யப் பட்டிருக்கும் ஆனால் இங்குள்ள நடராஜர் சிலை செயற்கையாக செய்யப்பட்டதல்ல. பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை உளி கொண்டு செதுக்கப் பட்டதல்ல.
சித்தர்களின் நவலிங்க பூஜையால் சித்தர்கள் வழிபாட்டிற்கு பின் தானாகவே உருவாகிய அற்புதமான சிலை ஆகும். இந்த சிலை உருவான பாறை பஞ்சநத பாறை என்று கூறுகிறார்கள். இது மிகவும் அபூர்வமான பாறையாகும் 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநாத பாறையாக இருக்கும். இந்த கோவிலில்
#கும்பம்_தேங்காய்_வழிபாடு
எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், யாகம் செய்யும்போதும் கலச பூஜை முக்கியத்துவம் பெறுகிறது. நவராத்திரி போன்ற பண்டிகைகளிலும் வீட்டில் பலர் கலசம் வைத்து வழிபடுகின்றனர். இதன் தாத்பரியத்தைத் தெரிந்து கொள்வோம். மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர். நீர் இன்றி
அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை செய்கிறோம். கலசம் மூலமாக இறைவனை உருவகப் படுத்துகிறோம். ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில் ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைத் திரவியங்களைப்
போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய் வைத்து பூஜிக்கிறோம். கலசம் வைக்க பித்தளை அல்லது தாமிரச் சொம்பினை பயன்படுத்துகிறோம். காரணம் இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி கொண்டவை. இயற்பியலில் கடத்திகள் என்று என்பதுசொல்வார்கள். ஆங்கிலத்தில் Conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்
#நவராத்திரி#அரிய_தகவல்கள் 1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 2. நவராத்திரி விழா பற்றி தேவி மாகாத்மயத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
3.நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். 4. விஜயதசமி தினத்தன்று
பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும். 5. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. நவராத்திரி விரதத்தை கடை
பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. 6. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரம். 7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று
#MahaPeriyava During Sri Maha Periyava’s camp at Andhra Pradesh, a Pooja was arranged for Goddess Kamakshi Amman and all arrangements were made for the Pooja. Ambal Kamakshi was dressed in a divine and soulful manner by the Sreekaryam people. When Sri Maha Periyava was about to
start the Pooja, He noticed that the saree of Kamakshi Amman was torn at the knee. But Sri Maha Periyava decided to go ahead with the Pooja without changing the saree. The Pooja was in excellent progress and a lot of devotees were assembled for the Pooja. Unexpectedly, a lady
beggar with her saree torn at many places came running and asked for a saree and food. Everyone in the crowd was about to prevent that lady from nearing Sri Maha Periyava. Maha Periyava instructed the people not to stop her but allow her to come near Maha Periyava.
Karuna Sagaran
சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு #பிரம்மோத்சவம் என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தலும், அவற்றுள்
முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நவராத்திரி தான். ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. சக்தியைப் பங்குனி/சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி. மாசி மாதம் ஷியாமளா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஆறு விதத்தில் கடன்பட்டுள்ளோம்.
முதலாவதாக, தேவர்களுக்குக் கடன் பட்டுள்ளோம். நாம் சுவாசிக்கக் காற்று, பார்க்க வெளிச்சம், பருக நீர் என நம் எல்லாத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர்.
இரண்டாவதாக, நாம் ரிஷிகளுக்குக் கடன்
பட்டுள்ளோம். வியாஸதேவர், பராசரர், நாரதர் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், மனு சம்ஹிதை, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கியுள்ளனர்.
மூன்றாவதாக, இதர உயிர்வாழ் இனங்களுக்குக் கடன்பட்டுள்ளோம். பசுவிடமிருந்து பால் அருந்துவதால், பசுவிற்கு கடன்பட்டுள்ளோம்.
விவசாயத்திற்கு எருதின் சேவையை ஏற்கிறோம். அதைப் போன்று மற்ற விலங்குகளிடமிருந்து பல சேவைகளை ஏற்கிறோம்.
நான்காவதாக பித்ருக்களுக்குக் கடன் பட்டுள்ளோம். நாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் மூதாதையர்களின் ஆசியால் பிறப்பெடுத்த காரணத்தினால் அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம்.
ஐந்தாவதாக குடும்ப