12.7.61 தளிக்கோட்டை வள்ளுவர் படிப்பக ஆண்டுவிழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து..
🧵👇🏽
"நான்தான் குறள் மாநாடு கூட்டியவன்; குறளைப்பற்றி மக்களுக்கு உணர்ச்சி ஊட்டியவன்; தமிழில் உள்ள ஒத்துக்கொள்ளத்தக்க இலக்கியங்களில் சிறந்தது வள்ளுவர் குறள் என்று எடுத்துக்காட்டி வருபவன்.
1/
வள்ளுவரின் குறளில் 'கடவுள் வாழ்த்து' என்ற ஒன்றை வலிய வரவழைத்து எழுதப்பட்டு உள்ளது. மக்களை வாழ்த்தக் கூட்டப்படும் கூட்டங்களில்கூட கடவுளை வாழ்த்துவது என்று முட்டாள்தனமாக கடவுளை வாழ்த்துவதுபோல் மக்களுக்காக நூல் செய்தவர்,
2/
மக்களைப் பற்றி வாழ்த்தாமல் எப்படி கடவுளை வாழ்த்தியிருக்க முடியும்? அவரது குறளில் கடவுளின் தத்துவத்தைப்பற்றி கூறாமல், வாலறிவன், எண்குணத்தான், தனக்குவமை இல்லாதான், வேண்டுதல் வேண்டாமை இல்லாதான் இப்படி பலபடக்கூறினாலும்,
3/
இதில் கடவுளைப் பற்றி இன்னது கூறியுள்ளது என்று சொல்லக்கூடியது ஒன்றும் இல்லை. 10 குறள்களிலும் மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தன்மைகளையே எடுத்துக்காட்டியுள்ளார்.
மனிதன் படித்ததனாலேயே அறிவாளி ஆகமாட்டான். அறிவின் வழிச்செல்லவேண்டும் என்கின்றார்.
4/
'மலர்மிசை யேகினான்' என்கின்றார். பூவின்மீது நடக்கின்ற மனிதன் எப்படி மலர் கசங்காமல் நிதானமாக நடப்பதுபோல மனிதன் வாழ்வில் நிதானமாகவும், மெதுவாகவும் நடப்பாரேயானால் அவன் இவ்வுலகத்தில் நீண்டநாள் வாழ்வான் என்கின்றார். இப்படிப்பட்டவனுக்குத்தான் நீண்டநாள் என்று போட்டு உள்ளார்.
5/
தோழர்களே! மனிதன் மானம் அழிந்த பிறகு வாழக்கூடாது என்று கூறியுள்ளார்.
இது தனி மனிதனுக்கு, மற்றொரு இடத்தில் பொதுத் தொண்டு செய்பவன் மான - அவமானத்தை பற்றி கவலைப்படக் கூடாது என்று கூறியுள்ளார்.
6/
"குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருத கெடும்"
மக்களுக்குத் தொண்டு செய்ய காலம் நேரம் பார்க்கக் கூடாது. சோம்பேறியாக மான அவமானத்தைப் பற்றிக் கவலைப்படுவோமேயானால் பொதுத்தொண்டே கெடும் என்கின்றார்.
7/
கொஞ்சம் காலத்துக்கு முன்பு கண்ணீர்த்துளிகள் செருப்பால் அடித்துக்கொண்டார்களே, இதனால் என்ன அவமானம்? பொதுத் தொண்டுக்கு வந்தவர்கள் அவமானம் நேர்ந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
8/
நான் எனது பொது வாழ்வில் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களும், கல்லடியும், சாணி அடியும், மலம், அழுகிய கோழிமுட்டை அடியும் பெற்று உள்ளேன். இதை எல்லாம் நமக்கு அவமானமாயிற்றே என்று எண்ணி இருப்பேனேயானால், எனது பொதுத்தொண்டு என்ன ஆகிஇருக்கும்? வீட்டில் உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான்.
9/
பொதுத் தொண்டுக்கு வந்தவன் தமது உடல் இடும்பைக்கே அதாவது கஷ்டத்துக்கே கொள்களம் என்று எண்ணிக் கொண்டு காரியமாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
10/
மனிதன் சோற்றுக்கு இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பதற்குக் கடவுள் காரணம் அல்ல. அப்படி இருக்குமானால் உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போட வேண்டும் என்ற கருத்தில்
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுகஇவ்வு லகியற்றி யான்"
என்று கூறியுள்ளார்.
11/
இப்படி எத்தனையோ அறிவு சம்பந்தமான கருத்துகளை எல்லாம் எடுத்துக் கூறி இருக்கின்றார் என்றாலும் குரல் முழுவதும் தேவையானது தான் என்று கூற முடியாது.
12/
சாதாரணமாக காமத்துப்பால் என்ற பகுதியை புலவர்கள் பலபடப் பாராட்டுவார்கள். இதைக் கண்டு தான் அவன் அவன் கொஞ்சவேண்டும் என்பது அல்ல. அவன் அவனுக்குத் தெரியும். இதுபற்றி காலம் சென்ற மாணிக்க நாயக்கனாருக்கும், எனக்கும் வாதம் எழுவது உண்டு.
13/
தோழர்களே! நமது கல்வி அறிவபற்றி எந்த மூவேந்தரோ, பல்லவனோ, நாயக்கனோ, மராட்டியனோ, மற்றெவனோ பாடுபட்டதில்லை. இந்த மூவேந்தர்கள் வெங்காயம் என்பவன்களில் எவன் பாடுபட்டான்? இவன்கள் எல்லாம் மூணே முக்கால் புலவன்களை மட்டும் ஆதரிப்பதோடு நின்றுகொண்டான்களே ஒழிய, மக்களுக்கு என்ன செய்தான்?
14/
நமது ராஜாக்கள் எல்லாம் கோயில், குளம் கட்டியும், பார்ப்பானுக்கு மான்யங்கள் விட்டும், மனுநீதி தவறாத குணசீலன் என்று பார்ப்பானிடம் வாழ்த்துப்பெற பாடுபட்டான்களே ஒழிய, மனித தர்மப்படி நடந்த அரசனே இல்லையே!
15/
இவன்கள் பள்ளிக்கூடம் வைத்திருந்தாலும் அத்தனையும் பார்ப்பானுக்கே சமஸ்கிருத கல்வியளிக்க தான் வைத்தான். பார்ப்பானுக்கு சோறு போட்டு படிப்புச் சொல்லிக் கொடுக்கச் செய்திருக்கின்றான்.
16/
மதுரை நாயக்க மன்னர்களில் தலைசிறந்தவன் என்று கூறப்படும் திருமலை நாயக்கன் ஆட்சியில், 10,000 பார்ப்பனப் பசங்கள் படிக்கும்படியாக சமஸ்கிருதப்பள்ளி ஏற்படுத்தி இருந்து இருக்கின்றார். அத்தனை பசங்களுக்கும் ஓசிச் சோறும், தங்க இடமும் வசதி செய்து கொடுத்து இருக்கின்றான்!
17/
இந்த மடையன் நம்மவர் படிக்க ஒரு பள்ளிக்கூடம் ஏற்படுத்தவே இல்லை இதுபோலத்தான் மற்ற அரசர்களும் ஆகும். இன்று காமராசர் ஆட்சியில் தான் கல்விக்கு வகை ஏற்பட்டு உள்ளது."
இத்துணைக்கண்டத்திற்கு முதன்முதலில் படையெடுத்த காக்கேசிய இனக்குழுவைச் சேர்ந்தோர் கிரேக்கர்.
அவர்தம் மொழியில் ச்(sigma) கொண்டு சொல் தொடங்க இலக்கணம் இடம் தராததால் ஸிந்து ஆற்றங்கரைக்கு தென்னகம் வாழ்ந்தோரை இண்டி மக்கள்(Indie people) என்றனர்.
அந்த Indigenous மக்களைத் தேடி வந்த காக்காசியரே அமெரிக்கத் தொல்குடியினருடன் தொடர்பிற்கு வழிகண்டுபிடித்த கொலம்பசும், பிற்காலத்தில் அம்மக்களை செவ்விந்தியர் என்றழைக்கக் காரணமான இந்தியத் தொல்குடியிருடன் நேரடியாகத் தொடர்பேற்படுத்த வழிக் கண்டெடுத்த வாஸ்கோடகாமாவும்.
👇🏽
ஆக, இந்து எனும் இத்துணைக்கண்டத் தொல்குடியினருக்கான பொதுச்சொல்லை ஆங்கிலேயர் காலனிய காலத்தில் நிர்வாக வசதிக்கென, மக்கட்தொகை கணக்கெடுப்பிற்காக காகிதத்தில் கொண்டுவந்தனர். அது நிலைபெறக் காரணம் அன்று நிலைபெற்றிருந்த மனுதர்மம் அன்றைய நிர்வாகக் கட்டமைப்புள் வைத்திருந்த EWS கோட்டாவே!
சென்னை நகரப்பேருந்தொன்றில், வாங்கிய பயணச்சீட்டிற்கான தொகை போக மீதி சில்லறைக்கு 10 ரூபாய் நாணயத்தை தந்த நடத்துநரிடம் முரண்டு பிடிக்கிறார் பயணி ஒருவர்.
"10 ரூவாய்க்கே சளிச்சுக்கிட்டா எப்புடிணே? 100 ரூவாய்கு கூட சில்ற வந்துடுச்சு. இனிமே காந்தி இருக்க ரூவாய பாக்குறதே அரிதுண்ணே"
1/
தமது பணிச் சிக்கலைப் புரிந்துகொண்ட ஒருவரைக் கண்டதும் நடத்துநர் புலம்பித் தள்ளத் துவங்குகிறார்.
"இந்த சில்லறயாலயே சில சமயம் வாரத்துக்கு 200-300 ரூவா வர வுட்டுடரன் தம்பி. நாங்க என்ன செய்வோம்?"
2/
"சரிதாண்ணே, மக்கள் மட்டும் என்ன பண்ண முடியும்? நீங்கதான் டிப்போல சொல்லி டிஜிட்டல் பண்ணச் சொல்லுங்களேன்?! எல்லாமே upi ஆனதுக்கப்பறமும் சில்லற எண்ணுற வேலய ஏதுக்கு தூக்கி சுமக்கணும்?"
"நாங்க எப்படிப்பா சொல்றது? நீங்கதான் மக்கள் தான் சொல்லனும்"
3/
பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டுத் தமிழில், 'தமிழறிவன்'
👇🏼🧵👇🏼
ஏன் 'தமழறவன' என்று இருக்குன்னா அன்று திராவிட மொழிக்குடும்ப எழுத்துமுறை ஒன்றே!
👉🏼 மெய்யெழுத்திற்குப் புள்ளிவைப்பது, நெடிலுக்கு துணைக்கால் வந்தது, அச்சு வந்த காலம் கொடுத்த 'நிறுத்தற்குறிகளை'(Punctuations) ஏற்றது;
1/ஃ
👉🏼கிரந்தமேற்றப்பட்டத் தமிழ், க்ருத எழுத்து முறையேற்ற கன்னடம், மலையாளம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, தெலுங்கு, கோண்டி, கூயி, கூலி, கோலாபி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டோ, குரூக், மால்தோ, பிராகூய் என திராவிட மொழிக் குடும்பமாக தமிழ் பிளவுபட்டது என தமிழ்
2/ஃ
ஈராயிரமாண்டுகளாய் பல்வேறு மாறுதலுக்குள்ளானதற்கு மூலக்காரணம் பார்ப்பனியத்தின் ஆரியமேற்றல்!
இவற்றனைத்தையும் பேசாம தமிழில் இல்லாத Phonetics-களுக்கு தமிழில் வழிவர பரிந்துரைத்த பெரியாரின் தமிழ்க்காதலை புரியாது ஜெயமோகன்களின் குரலாய் சேறிறைக்கும் மொழி அடிப்படைவாத லும்பர்களுக்கு,
மத அடிப்படையிலான பேரினவாத அரசியலைப் புரிந்துகொள்ள பாலஸ்தீனத்தின் வரலாற்றுடன் யூதர்களின் வரலாற்றையும் அறிவது தேவையாகிறது.
1/
விவிலியத்தின் (#Bible) பழைய ஏற்பாட்டை புனிதநூலாக ஏற்கும் யூதர்கள், புதிய ஏற்பாட்டை ஏற்கும் கிறித்தவர்கள் நம்பும் 'இயேசுவே தேவதூதன்' என்பதை ஏற்காதோர். யூதர்கள் இயேசுவை இறைதூதராய் ஏற்கமறுத்த காலத்திலிருந்தே மத உரசல்கள் மத்திய கிழக்காசியப் பகுதிகளில் நடந்து வந்துள்ளன.
2/
எளிமையாகச் சொல்லப்போனால் இந்துமதத்தில் மனுநீதியை ஏற்போர், ஏற்காதோர் என்பது போன்றே தான் யூதரும் கிறித்தவரும். மனுநீதி பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் உயர்ந்தோரென்ற கருத்தை வலியுறுத்தவதைப் போன்றே யூதமதம் யூதர்களை கடவுளின் நேரடி பிள்ளைகளாக, உயர்ந்தோராகப் போற்றிக்கொள்கிறது.
சமத்துவத்தை விரும்பும் அனைவருக்குமான தலைவரை ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு மட்டுமான தலைவராக ஆக்கவே இந்துத்துவம் திட்டமிட்டு டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதியை இடித்தது.
1/
மாட்டு மூத்திரம் குடித்தால் புற்றுநோய் வராது, கொரானாவே ஓடிவிடும் என்றெல்லாம் சிந்திக்கும் கூட்டத்துக்கு எப்படி அம்பேத்கரின் சிந்தனை வெளியை முடக்கிட திட்டமிடும் அளவுக்கான கட்டமைப்பும் கோட்பாடும் வந்தது?
2/
கடந்த நூற்றாண்டில் எழுந்த இந்துத்துவம் எனும் அடிப்படைவாத வலதுசாரிக் கோட்பாட்டுக்கு தந்தையாக பார்க்கப்படும் சாவர்க்கர், ஆங்கிலேயரின் காலை நக்கி சிறைவாசத்திலிருந்து தப்பித்தது மட்டுமல்ல, இந்த கோட்பாட்டையே சியோனிசத்திடமிருந்து தான் ஆட்டையப் போட்டார்.