M.SivaRajan Profile picture
Oct 9 21 tweets 4 min read
#சப்த_மங்கை_ஸ்தலங்கள்

மிக முக்கியமான பதிவு :

கும்பகோணம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ள சப்த மங்கை தலங்கள் :

‘சப்த மாதர்கள்’ தனித்தனியாக சிவபெருமானை வழிபட்ட 7 ஆலயங்கள், கும்பகோணம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது.

இந்த 7 ஆலயங்களும், ‘சப்த மங்கை தலங்கள்’ என்ற பெயரில் விளங்குகின்றன.
பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு பேரும், ‘சப்த மாதர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் எழுவரும் தனித்தனியாக சிவபெருமானை வழிபட்ட 7 ஆலயங்கள், கும்பகோணம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது.
இந்த 7 ஆலயங்களும், ‘சப்த மங்கை தலங்கள்’ என்ற பெயரில் விளங்குகின்றன.

ஒரு பெண் பிறந்தது முதல் இறக்கும் வரையில், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய 7 பருவங் களைக் கடந்து வருகிறாள்.
இந்தப் பருவங்களுக்கு இடையில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினைகளும், தொல்லைகளும் ஏராளம்.

பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் நீக்கும் தலங்களாக, இந்த ‘சப்த மங்கை தலங்கள்’ அமைந்திருக்கின்றன.
இந்த ஆலயங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்..

சக்கரமங்கை

சப்த மங்கை தலங்களில் முதல் தலமாக இருப்பது ‘சக்கரமங்கை’. இதனை ‘சக்கரப்பள்ளி’ என்றும் அழைப்பார்கள்.

பேச்சு வழக்கில் தற்போது இந்த ஊர் ‘ஐயம்பேட்டை’ என்று அழைக்கப்படுகிறது.
சப்த மாதர்களில் பிராம்ஹி வழிபட்ட தலம் இது. மூலவராக சக்கரவாகேஸ்வரர் அருள்கிறார். இத்தல அம்பிகையின் பெயர், தேவநாயகி.

பார்வதிதேவிக்கு, தன்னுடைய நெற்றிக்கண் தரிசனத்தை சிவபெருமான் காட்டிய தலம் இது.

ஆலயத்தின் தல விருட்சம் வில்வம்.
தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் ஐயம்பேட்டை உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு பகுதிதான் சக்கரப்பள்ளி ஆகும்.

அரியமங்கை

சப்த மாதர்களில் மகேஸ்வரி வழிபட்ட இந்தத் தலம், சப்த மங்கை தலங்களின் வரிசையில் இரண்டாவது ஆகும்.
இங்குள்ள இறைவன் ‘அரிமுக்தீஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘ஞானாம்பிகை’ என்றும் பெயர் பெற்றுள்ளனர். ‘அரி’ என்று அழைக்கப்படும் மகாவிஷ்ணு வணங்கிய தலம் என்பதால் இறைவனுக்கு இந்தப் பெயர் வந்தது.

இந்த ஆலயத்தில் பார்வதிக்கு, தன் ஜடாமுடியில் உள்ள கங்கையின் தரிசனத்தை சுவாமி காட்டியருளினார்.
தலவிருட்சமாக நெல்லி மரம் உள்ளது. தஞ்சாவூர் -கும்பகோணம் சாலையில் சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலடி என்ற இடத்தில் இறங்கி இந்த ஆலயத்திற்குச் செல்லலாம்.
சூலமங்கை

கவுமாரி எனப்படும் சூலமங்கை வழிபட்ட தலம் இது. சப்த மங்கை தலங்களில் மூன்றாவது ஆலயம்.

தற்போது இந்த ஊர் ‘சூலமங்கலம்’ என்று அழைக்கப்படுகிறது. இறைவன் பெயர், கிருத்திவாகேஸ்வரர். அம்பாளின் பெயர், அலங்காரவல்லி.

பார்வதிக்கு, சிவபெருமானின் சூல தரிசனம் கிடைத்த தலம் இதுவாகும்.
அம்பாள் இங்கு, மங்கை வடிவில் காட்சியளிக்கிறாள். ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம்.

இந்த ஆலயத்தில் சனி பகவான், தன் குருவான பைரவருடன் அருகில் நின்றபடி தரிசனம் தருகிறார்.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவிலும்,
ஐயம்பேட்டைக்கு மிக அருகாமையிலும் இந்த திருத்தலம் இருக்கிறது.

நந்திமங்கை

சப்த மாதர்களில் ஒருவரான வைஷ்ணவி வழிபட்ட தலம் இது.

சப்த மங்கை தலங்களில் 4-வதான இந்த ஆலயம் நல்லிச்சேரி என்ற இடத்தில் அமைந்திருக்கிறது.

நந்திதேவரால் சிவபெருமான் பூஜிக்கப்பட்ட தலமாகவும் இது இருக்கிறது.
திருவையாறில் பஞ்சாட்சர உபதேசம் பெற்ற நந்தி, இத்தலத்தில் சித்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது.

இறைவன்- ஜம்புநாத சுவாமி,

இறைவி- அகிலோண்டேஸ்வரி.

பார்வதி தேவி, இங்கு சிவபெருமானின் திருக்கழல் தரிசனத்தைப் பெற்றாள்.

நாவல் மரம் தல விருட்சமாக உள்ளது.
தஞ்சாவூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலை வில் நல்லிச்சேரி திருத்தலம் இருக்கிறது.

பசுமங்கை

பசுபதிகோவில் என்று அழைக்கப்படும் இந்த திருத்தலம், சப்த மங்கை தலங்களில் 5-வது ஆகும்.

சப்த மாதர்களில் வராகி வழிபட்ட ஆலயம் இது.
காமதேனு என்னும் பசு, இறைவனை நினைத்து வழிபட்டதால், இந்த ஊருக்கு ‘பசுபதிகோவில்’ என்ற பெயர் நிலைத்தது.

இறைவனின் திருநாமம் பசுபதீஸ்வரர் என்றானது.

அம்பாளின் பெயர், பால்வள நாயகி என்பதாகும்.

இந்த ஆலயம் மாடக்கோவில் அமைப்பைக் கொண்டது.
பார்வதிதேவிக்கு, தன்னுடைய உடுக்கை தரிசனத்தை ஈசன் அளித்த தலம் இது.

ஆலய தல விருட்சம், வில்வம்.

தஞ்சாவூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் பசுபதிகோவில் அமைந்துள்ளது.
தாழமங்கை

சப்த மாதர்களில் இந்திராணி வழிபட்ட தலம், தாழமங்கை. சப்த மங்கை தலங்களில் இது 6-வது திருத்தலமாகும்.

இறைவன்- சந்திரமவுலீஸ்வரர் என்றும், இறைவி – ராஜராஜேஸ்வரி என்றும் பெயர் பெற்றுள்ளனர்.
அகத்திய முனிவர், தாம் இயற்றிய அபூர்வமான நாமாவளிகளை இங்கு வைத்து பாடியதாக சொல்லப்படுகிறது.

பார்வதிதேவிக்கு, பிறை சந்திர தரிசனத்தை ஈசன் அளித்த தலம் இது.

இங்கு தாழை மரம் தல விருட்சமாக உள்ளது.
தாழமங்கை, தாயமங்கலம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் அழிந்துவிட்டதாகவும், தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் ஆலயம் மட்டும் எஞ்சியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
திருப்புள்ளமங்கை

சப்த மங்கை தலங்களில் 7-வது தலம். சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட ஆலயம்.

இத் தல இறைவன், ‘பிரம்மபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர், பசுபதீஸ்வரர்’ போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

இறைவியின் திருநாமம், சவுந்திரநாயகி என்பதாகும்.
பார்வதிதேவி, சிவபெருமானின் நாக தரிசனத்தை பெற்ற தலம் இது. ஆல் மரம் இங்கு தலவிருட்சமாக இருக்கிறது.

இந்த ஆலயமும் பசுபதிகோவில் பகுதியிலேயே அமைந்திருக்கிறது.

#சப்தமங்கைஸ்தலங்கள்

#சைவசமயம்

#சிவவழிபாடு

#ஓம்நமசிவாய

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 10
#நவக்கிரக_எளிய_பரிகாரங்கள்

நவக்கிரகங்களும் எளிய பரிகாரங்களும்

சூரிய பகவான்

பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடம் இருந்து பெற்று பித்ரு தேவதைகளின் மூலம் மறைந்த நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியபகவானாவார்.
தினமும் நீராடியவுடன் கிழக்கு திக்கை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் நீரில் நின்று சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு உகந்தது.
சந்திர பகவான் :

சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் உயர்கிறது.

சுக்கிலபட்சம் என்ற வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது.

கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையில் மனிதனின் அறிவுத் திறமை குறைகிறது.
Read 18 tweets
Oct 10
#திருஷ்டி_சுற்றும்_காரணம்

*திருஷ்டி சுற்றுவதன் காரணம் தெரியுமா?*

கண் பார்வை மூலமாகப் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுவதை கண்திருஷ்டி என்று கூறுவா்.

அதனால் தான் புதுமண தம்பதிகளுக்கும் , குழந்தைகளுக்கும், வெளியூரில் இருந்து திரும்பி வருபவர்களுக்கும் திருஷ்டி சுற்றுவது வழக்கம்.
இதற்கு காரணம் அவர்கள் மீது ஏதாவது கண் திருஷ்டி இருந்தால் அது விலக வேண்டும் என்பதே.

திருஷ்டி என்பது தமிழ் சொல் இல்லை அது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண்.

திருஷ்டி கழித்தலை தமிழர்கள் 'கண்ணேறு கழித்தல்' என்று தான் கூறுவார்கள்.
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். ப்பா..!! எத்தனை அழகு. அழகோ அழகுன்னு அனைவரும் கொஞ்சும் போது ஏற்படும் திருஷ்டிக்கு பரிகாரம் தான் 'கருப்பு திருஷ்டி' பொட்டு.

இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.

நெற்றியிலும், கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை நீக்கும்.
Read 12 tweets
Oct 10
#விரதம்

*விரதம் என்றால் எதுவும் சாப்பிடக் கூடாதா❓

இறைவனை நினைத்து நாள் முழுக்க அவன் நாமம் சொல்லி மனம் முழுக்க இறைவனை வியாபித்து இருக்கும் நிலையே விரதம். Image
முக்கிய விசேஷ நாட்களில் குறிப்பாக மாதங்களில் வரக்கூடிய சதுர்த்தி, பௌர்ணமி, அமாவாசை மற்றும் கிருத்திகை என பல முக்கிய நாட்களில் பலர் விரதம் மேற்கொள்வது வழக்கம்.

விரதம் இருப்பவர்கள் பொதுவாக எதையும் சாப்பிடுவது இல்லை.
உண்மையில் விரதம் இருப்பவர்கள் எதையும் சாப்பிடக் கூடாதா?.

விரதம் என்பதற்கு உண்மையான பொருள் தான் என்ன?

நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறிடவும், மன நிம்மதி கிடைத்திடவும், நம் வாழ்வில் எல்லா செல்வங்களும், பொருளாதார நிலை உயர்ந்திடவும் இறைவனை நினைத்து இருப்பது விரதம்.
Read 13 tweets
Oct 9
#திருமணத்தடை_நீங்க_வழிபாடு

திருமணத் தடை நீங்க வழிபட வேண்டிய சிவன் கோயில்!

ஈரோடு மாவட்டம் ஈரோடு என்ற ஊரில் உள்ள கோயில் மகிமாலீஸ்வரர் கோயில்.

இங்கு மகிமாலீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். மங்களாம்பிகை அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை சதய நட்சத்திரத்தில் இத்தலத்தில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அப்போது அப்பர் அடிகளுக்கு சிறப்பான முறையில் விழாக்களும், சுவாமி மகிமாலீஸ்வரருக்கும், அம்பாள் மங்களாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபமும் சிறப்பாக நடைபெறும்.
இந்தக் கோயிலின் விமானம் 35 அடி உயரத்தில் நிழல் சாயாமல் அப்படியே கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது, 63 நாயன்மார்கள் சிலையும், 16 வகை லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது கோயிலின் மற்றொரு சிறப்பு.

இந்தக் கோயிலுக்கு மிக அருகில் அப்பர் சுவாமிகள் மடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read 17 tweets
Oct 9
#கடன்_நிவர்த்தி_வழிபாடு

#கடன்_நிவர்த்தி_பரிகாரம்

கடன் பிரச்சினை தீர திங்கட்கிழமையில் திருச்சேறை கோயில் சென்று வணங்குங்கள்.

திங்கட்கிழமையன்று, திருச்சேறை கோயிலுக்குச் சென்று ருண விமோசனேஸ்வரரையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள்.
கடன் பிரச்சினையில் இருந்து மீளச்செய்து அருளுவார்

கும்பகோணம் அருகில் உள்ளது திருச்சேறை.

இந்தத் தலத்தில் உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீ ருண விமோசனேஸ்வரர்.

இந்தத் தலத்தின் இறைவனை மார்க்கண்டேயர் வழிபட்டு பிறவிப்பெருங்கடனைத் தீர்த்துக்கொண்டார்.
பதினாறாவது வயதில் மரணம் என்றிருந்த நிலையே மாறிப்போனது.

என்றும் பதினாறு என்று சாகாவரமே கிடைத்தது என்கிறது புராணம்.

அத்தகைய திருத்தலமான திருச்சேறைக்கு வந்து, ஸ்ரீ ருண விமோசனேஸ்வரரை, சார பரமேஸ்வரரை வணங்கி வழிபட்டாலும் கடன் தொல்லையில் இருந்து மீண்டுவரலாம் என்பது ஐதீகம்.
Read 6 tweets
Oct 9
#ஸ்ரீ_சிவ_தள_பூஜை

அனைத்து  துன்பங்களையும்  நீக்கும் எளிமையான  பஞ்ச ஸ்ரீ சிவ தளப் பூஜைகள்

நவராத்திரி போல, மாசி மாத மகாசிவராத்திரி போல, பெளர்ணமி இரவு கிரிவலம் போல, மாத சிவராத்திரி நாளில்
இரவில் வீட்டில் அல்லது ஆலயத்தில் சிவ பூஜைகளை (அர்ச்சனை, சிவகவசம், சிவபுராணம், தமிழ் மறைகளை ஓதுதல்) ஆற்றுதல் வேண்டும்.

வளர்பிறைப் பிரதோஷம், தேய்பிறைப் பிரதோஷம் இரண்டிலுமே, சுயம்புத் தலங்களில் பூஜித்து வருதல்,
தேய்பிறைப் பிரதோஷத்தை அடுத்து வருவதான மாத சிவராத்திரி நாளில் அருணாசல கிரிவலம் போன்று மலைத் தலங்களில் கிரிவலம் வருதல்  மிகவும் சிறப்புடையவை!

வாழ்வில் பலத்தத் துன்பங்களுடன் வாழ்வோர் இவ்வழிபாடுகளை மிக மிக எளிமையான வகையில்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(