#மகாபெரியவா #தெய்வத்தின்_குரல்
“ஸமீப காலமாக நம் ஆசாரங்களைப் பற்றி இதற்கு முந்திய தலைமுறைக்கு இருந்ததைவிடக் கொஞ்சம் கௌரவ புத்தி உண்டாயிருப்பதைப் பார்க்கிறேன். முன்னே இங்கிலீஷ் படித்தவர்களென்றால் நம் ஆசாரம் அவ்வளவுமே பேத்தல் என்று நினைப்பவர்களாயிருந்தார்கள். ஆனால் நான் கொஞ்ச நாளாக
ஒரு வேடிக்கை பார்க்கிறேன் – ஸயன்ஸும் ஸ்பிரிசுவாலிடியும் [ஆத்மிகமும்] ஒன்றுக்கொன்று விரோதமானதுபோல் தோன்றினாலும் ஸயனஸ் அபிவிருத்தியாகிக் கொண்டு வருவதாலேயே, புதிசு புதிசாக டிஸ்கவரி செய்யும்போது, “இதென்னடா ஆச்சர்யமாயிருக்கிறது! நாம் ரொம்பவும் அறிவிலே பின் தள்ளி நின்றவர்கள் என்று
நினைத்த ஆதிகால இந்தியர்கள் இந்த விஞ்ஞான உண்மைகளை, நமக்கு இருக்கிற லாபரட்டரியும் இன்ஸ்ட்ருமென்டுகளும் இல்லாமலே எப்படியோ கண்டுபிடித்து அவர்களுடைய சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதாகத் தெரிகிறதே!” என்று அதிசயப்படுகிறார்கள். கொஞ்சநாள் முந்தி [பத்திரிகைகளில்] பார்த்திருப்பீர்கள்.
ரஷ்யாக்காரன் கம்யூனிஸ்ட், நிரீச்வரவாதி. ஆனால் இங்கே நாம், “இதென்ன ஹோமம் என்று சொல்லிக்கொண்டு வீட்டையெல்லாம் புகையாக்கிக் கொண்டு, கண்ணும் கரிக்கக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது?” என்றால், ரஷ்யா தேச ஸயன்டிஸ்ட்கள் வறட்டிப் புகையினால் அடாமிக் ரேடியேஷன் [அணுச் சிதைவின் கதிரியக்கம்]
உள்படப் பலவித பொல்யூஷன்களைப் போக்கிக்கொண்டு விடலாமென்று சொல்லி, நம்முடைய ஹோமத்தைப் புகழ்ந்திருக்கிறார்கள். இதேபோல ஹோமத்தில் போடப்படும் பலவிதமான ஸமித்துக்களின் புகை பரவுவதும் க்ருமி நாசினியாக (antiseptic) உதவுகிறது என்று முன்னே டாக்டர்கள் சொன்னதுண்டு. தர்ப்பை, துளஸி, வில்வம்
என்றிப்படி நம் சாஸ்திர காரியம், பூஜை இவற்றில் பிரயோஜனம் ஆகின்றவற்றுக்கெல்லாம் வைத்ய ரீதியிலோ, மற்ற ஸயன்ஸ்களின் ரீதியிலோ sound basis [அழுத்தமான அடிப்படை] இருக்கிறது எனகிறார்கள். க்ரஹண காலத்தில் எல்லாவற்றிலும் தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டுமென்றால் முன்னே பரிஹாஸம் செய்தார்கள்.
“ஸுரியனைப் பாம்பு தின்கிறதாம். அதன் நாக்கை அறுப்பதற்கு தர்ப்பை போட்டிருக்கிறார்களாம்!” என்று கேலி பண்ணினார்கள். ஆனால் இப்போதோ க்ரஹண காலத்தில் அட்மாஸ்ஃபியரிலும், அதற்கும் மேலே இருக்கிற ஸ்ஃபியர்களிலும் அநேக contamination (அசுத்தம்), radiation ஆகியன உண்டாவதாகவும், கர்ப்பத்தில்
இருக்கிற சிசுவைக் கூட அது பாதிப்பதாகவும், அதனால் ‘க்ரஹணத் தீட்டு’ என்று அந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருக்கணும் என்று வைத்ததில் ரொம்ப அர்த்தமிருப்பதாகவும், இந்த பாதிப்பை counteract பண்ணும் [எதிர்த்துப் போக்கும்] சக்தி தர்ப்பைக்கு இருக்கிறதென்றும் எழுதுகிறார்கள். எல்லாருக்கும்
எல்லா ஸயன்ஸையும் சொல்லிக் கொடுத்துவிட்டால் ஒவ்வொருத்தனும் ‘ஆடம் பாம்(ப்)’ பண்ணி வைத்துக் கொள்வதில்தான் முடியும் என்றுதான், கெடுதல் வராமலிருப்பதற்கு நாம் பண்ணவேண்டியதை மட்டும் சொல்லி, அதன் காரணத்தை, “ராஹுப் பாம்பு ஸுர்யனை முழுங்கிற்று” என்பது போலக் கதா ரூபமாகப் பாமர ஜனங்களுக்குச்
சொன்னார்கள் என்று ஒரு கட்சி. இதைக்கூட நான் முழுக்க ஸரி என்று சொல்லமாட்டேன். எல்லாருக்கும் விஞ்ஞான மர்மம் தெரிந்துவிட்டால் அனர்த்தமாகும் என்று நினைத்தது வாஸ்தவம். ஆனால் அதற்காகத்தான் விஞ்ஞான உண்மைகளுக்குப் பதில் கதைகளை இட்டுக்கட்டிச் சொன்னார்களென்பது ஸரியில்லை. இம்மாதிரிக்
கதைகளும் நிஜம் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பகவானின் லீலையில், நமக்கு ஸாத்யமாகத் தோன்றாத என்னென்னவெல்லாம் நடக்குமோ? நமக்கு எப்படித் தெரியும்?
தங்களுடைய லிமிடெட் ஸர்க்கிளைத் தாண்டி நாலெட்ஜ் (அறிவு) வெளியே பரவக் கூடாதென்ற [சுயநலக் கும்பலின் கொள்கை] தான் நம் பூர்விகர்கள்
இம்மாதிரி ஸயன்ஸ் உண்மைகளைக் கூறாமல், கதையிலே போர்த்தி மூடி வைத்ததற்குக் காரணம் என்றும் சிலர் குற்றம் சொல்கிறார்கள். இது ரொம்பத் தப்பாகும். மனஸ் கட்டுப் படாதவர்களுக்கு அறிவை மட்டும் கொடுப்பது அனர்த்தத்தில்தான் முடியும். பெரும்பாலான ஜனங்கள் மனஸ் கட்டுப்படாதவர்களாகத்தான்
இருப்பார்கள். ஸயன்ஸ் ஸகல ஜனங்களுக்கும் பரவி முன்னேறிக் கொண்டேயிருக்கும்போது, அந்த முன்னேற்றத்துக்கு எதிர் ratio-வில் (விகிதாசாரத்தில்) லோகத்திலே தர்மம் பின்னே போய்க் கொண்டே இருப்பதை நாம் பிரத்யக்ஷமாகப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்? இதை அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே போஜன்
‘ஸமராங்கண ஸூத்ர’த்தில் சொல்லியிருக்கிறார். அதிலே ஏரோப்ளேனைப் பற்றிக்கூட ‘வ்யோமயானம்’ என்று சொல்லி, ஆனாலும் அதன் theory-ஐ மாத்திரம் கொஞ்சம் கொடுத்துவிட்டு, “இதைச் செய்யும் procedure-ஐ இங்கே விஸ்தாரம் பண்ணாததால் அது தெரியாதாக்கும் என்று நினைக்க வேண்டாம். நன்றாகத் தெரியும். ஆனாலும்
புஸ்தகத்தில் எல்லாருக்கும் தெரியும்படியாக எழுதி வைத்து விட்டால், அதனால் லோகத்துக்கு நன்மையைவிடக் கெடுதியே ஜாஸ்தி உண்டாகும் என்றுதான் இங்கே சொல்லவில்லை” என்று காரணம் காட்டியிருக்கிறார். அவர் சொன்னதிலுள்ள உண்மையை நாம் கண்கூடாகப் பார்த்து விட்டோம்! ரண பூமியில் மட்டும் யுத்தம்
என்றில்லாமல் நாடு நகரமெல்லாம் குண்டு போட்டு World War நடந்ததற்குக் காரணம் விமானப் படையெடுப்புத் தானே? ஹ்ருதயம் சுத்தியாவதற்கு முந்தி புத்திமட்டும் விருத்தியானால் அனர்த்தந்தான் என்பதை ஸமயாசாரங்கள் எடுபட்டுப்போய் ஸயன்ஸ் மட்டும் அபிவிருத்தியாதிக் கொண்டிருக்கிற இக்காலத்தில் நன்றாகப்
பார்க்கிறோம். இதனால்தான் சுத்தர்களான நல்ல கல்ச்சருள்ளவர்களுக்கென்று மாத்திரம் நம் பூர்விகர்கள் அநேக விஷயங்களை வைத்துவிட்டனர். ஸமீப காலமாக நம் சாஸ்திர விஷயங்களில் பல ஸயன்ஸுக்கு ஒத்து வருகின்றனவென்று கண்டு கொண்டதில் படிப்பாளிகள் கொஞ்சம் அதனிடம் கௌரவ புத்தி காட்டத் தொடங்கி
இருக்கிறார்களென்று சொன்னேன். ஸயன்ஸ் கொஞ்சம் விருத்தியாயிருந்தபோது கேலி செய்தார்கள். இப்போது அதிக வளர்ச்சி அடைந்தபின் சில அம்சங்களைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னம் ஸயன்ஸ் விருத்தியாக ஆக இன்னம் பல சாஸ்தீரிய ஸமாசாரங்களுக்கும் scientific basis இருப்பதாகக் கண்டுபிடிப்பார்கள்
-காஞ்சி மகா பெரியவா

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 15
#choose_your_teacher_wisely
There lived a woodcutter named Mari who was a big devotee of Sri Krishna. He will go to the temple first thing in the morning and then go to the forest to cut wood. One day he saw a fox which had lost its front feet. It was just lying under a tree. Image
The wood cutter became curious. How will this fox hunt and eat when it has no legs he wondered. His query was soon answered. A tiger appeared there with its hunted prey, ate to its heart content and went away leaving the rest. The fox moved slowly and came to the prey and ate Image
till it was full. The wood cutter got an idea observing this! He thought when God could provide food for this animal with no effort on its part why wouldn’t He provide all my requirements, especially being a devotee of Him. So he decided to not work from the next day onwards. He
Read 7 tweets
Oct 15
#சனாதனதர்மம் ராமர் காட்டில் இருக்கும் போது ஓர் ஆற்றங்கரையில் துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர். ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை எடுத்துக் Image
கொண்டு அமர்ந்தார். சரி இவர் வேள்வி தான் ஏதோ ஆரம்பிக்கப் போகிறார் என்று எண்ணி, ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான். துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து, கோதுமை மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச்
சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம், இரண்டு குரங்குகள் அவர் எதிரே வந்து அமர்ந்து அந்த ரொட்டிகளை எப்படி Image
Read 9 tweets
Oct 15
#மகாபெரியவா
முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார் மெட்ராஸ்ல அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டினவர். ஸ்ரீவைஷ்ணவர். பெரியவா மேலே அஸாத்ய பக்தி. அவர் டைரில எழுதி வெச்சு இருக்கார். அவர் இருக்கறச்சே நடந்த விஷயம். அவர் காலத்துக்கு அப்புறம், அவர் நெருங்கிய நண்பர் ஒருவர், அவரோட டைரி ஜெராக்ஸ் பண்ணிண்டு Image
வந்து கொடுத்தார். அதுல ஒரு நிகழ்ச்சி. ஆச்சிரியமா இருந்தது. வித்வத் ஸதஸ் நடந்தது. பெரிய பெரிய வித்வான்கள் பண்டிதாள் எல்லாம் வந்திருக்கா. அதிலே ஆந்திரால இருந்தும் நிறைய பேர். அதிலே ராஜமுந்திரில இருந்து ஒரு வித்வான் வந்திருக்கார். அந்த வித்வானுக்கு கால் கிடையாது. அவர் சம்சாரம்
அழைச்சிண்டு வந்திருக்கா. அவரை கூடைல தூக்கி தலைல வெச்சி, கூட்டிண்டு வந்திருக்கா. இது எக்ஷிபிஷன் மாதிரி எல்லோருக்கும். நளாயினின்னு கதை எல்லாம் வேணா கேக்கலாம். இந்த காலத்திலேயும் இருக்கும் போல இருக்கே. வித்வத் சதஸ்ல இவா தான் அட்ராக்ஷன்.
பெரியவாளுக்கும் ஆச்சிரியமா இருந்தது. கார்த்தால
Read 11 tweets
Oct 15
#புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.
ஆண்டு Image
முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் #விஷ்ணு_சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையை தரும். அந்த வகையில் இன்று 15.10.2022 புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை ஆகும். விரதம் இருப்பவர்கள் வீட்டை சுத்தம் செய்து
வீட்டிலிருக்கும் பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி, துளசி இலை சேர்த்த தீர்த்தத்தை ஒரு செம்பில் ஊற்றி படத்தின் முன் வைத்து வணங்க வேண்டும். அதை சிறிதளவு அருந்தி விரதத்தை துவங்க வேண்டும். பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதத்தை முடிக்கலாம். விஷ்ணு
Read 6 tweets
Oct 14
#MahaPeriyava #VishnuSahasranamam
Karur Pandit R.S.Rama Sarma was an Ayurvedic Doctor. He was the one who started the legendary Sakthi Vilas Vaidyasala. He was the doctor for K.B.Sundarambal, Deerar Sathyamurthy, Namakkal Kavingar and many other notable people. Namakkal Kavingar Image
had once gifted him a beautiful painting of Lord Subrahmanya for saving his life. Rama Sarma was an ardent devotee of Maha Periyava. Once Maha Periyava sent word for him from Kanchipuram saying He has have fever. Rama Sarma came to Kanchipuram with his medicine kit. Maha Periyava
smiled at his medical kit and said, “I asked only you to come. I did not ask for your medication.”
Rama Sarma was perplexed. He said “I came with my medical kit because I was told you were having fever.”
Maha Periyava said, “if a body exists, so does ailments. In fact fever comes
Read 9 tweets
Oct 14
#சத்சங்கம் நம் இந்து மதத்தில் சத்சங்கத்தின் முக்கியத்துவம் அளவிட முடியாதது. சத் சங்கம் என்றால் நல்லவர்களுடனான சேர்க்கை, அதனால் விளையும் நற்பலன்கள். ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது சத்சங்கம். #விஸ்வாமித்திரர் ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தார். அந்த யாகத்தின் முடிவில், இருப்பதையெல்லாம் Image
தானம் கொடுத்து விடவேண்டும் என்பது முறை. அதை அனுசரித்து விஸ்வாமித்திரர், தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதை அறிந்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கொடுக்கும் தானத்தைத் தானும் பெறுவதற்காக வந்தார். வசிஷ்டரின் வருகையை அறிந்த விஸ்வாமித்திரர், மனம் மகிழ்ந்து
வசிஷ்டருக்குத் தானம் கொடுத்தார். தானம் பெற்ற வசிஷ்டரும் விஸ்வாமித்திரர் செய்ததைப் போலவே தானும் ஒரு யாகம் செய்ய தீர்மானித்தார். யாகத்தின் முடிவில் தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் செய்யத் தொடங்கினார் வசிஷ்டர். தகவல் அறிந்த விஸ்வாமித்திரர், நாமும் போய் அதைப்பெற வேண்டும் என்று
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(