#மகாபெரியவா #எழுத்தாளர்_சுஜாதா “சங்கர மடத்தில் புதுப் பெரியவாள் பாதபூஜை செய்து கொண்டிருக்க, பரமாச்சாரியார் தரிசனத்துக்கு, முன் மண்டபத்தில் வெள்ளைக்காரிகள் காத்துக் கொண்டிருந்தனர். பூஜை முடிந்ததும் அவரைப் பார்க்கலாம் என்றால் ‘ஸ்பீக்கர் ரபிராய் வந்துட்டான்’. அவர் போன கார்களின்
புழுதி அடங்கினதும்தான் போது மக்களை அனுமதித்தார்கள். பரமாச்சாரியாள் அவர்களை நான் முன்பு மெகபூப் நகரில் தரிசித்திருக்கிறேன். இப்போது நூறு வயசுக்கருகில் அவர் தம் ஞானயாத்திரையின் இறுதியில் இருக்கிறார். ஈஸிசேரில் சாய்ந்திருக்க காதருகில் இரைந்து இன்னார் வந்திருக்கா என்று வந்தவர்களை
சுருக்கமாக அறிமுகப்படுத்தி, எப்போதாவது ஆசிர்வாதம் செய்கிறார். அத்தனை ஞானம் கண்டு, அத்தனை தூரம் நடந்து, அத்தனை போதித்து, அத்தனை எழுதி, அத்தனை தலைவர்களும், நீதிபதிகளும், ராஜாக்களும், ஆர்தர் கோஸ்டலர்களும் வந்து வந்து பார்த்துப் பேசி ஓய்ந்துபோன அந்த மனதில், இப்போது என்ன எண்ணங்கள்
ஓடும் என்று வியப்படைகிறேன். பட்டாபிராமன் என்னைப் பற்றிச் சொல்லி “இவர் சுஜாதான்னு கதை எழுதறவர். குவளகுடி சிங்கமையங்கார்னு சீரங்கத்துல வேத பாடசாலை ஸ்தாபிச்சவர். அவருடைய பேரன்” இதெல்லாம் காதில் சொனனபோது சலனமே இல்லை.
“ஒரு ஏழைப் பெண்ணுக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ண ஒத்தாசை செய்யறதா
சொல்லியிருக்கார்” என்று கேட்ட மாத்திரத்தில் இரண்டு கைகளையும் உயர்த்தி வாழ்த்தினார்.” - சுஜாதா

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 15
#choose_your_teacher_wisely
There lived a woodcutter named Mari who was a big devotee of Sri Krishna. He will go to the temple first thing in the morning and then go to the forest to cut wood. One day he saw a fox which had lost its front feet. It was just lying under a tree. Image
The wood cutter became curious. How will this fox hunt and eat when it has no legs he wondered. His query was soon answered. A tiger appeared there with its hunted prey, ate to its heart content and went away leaving the rest. The fox moved slowly and came to the prey and ate Image
till it was full. The wood cutter got an idea observing this! He thought when God could provide food for this animal with no effort on its part why wouldn’t He provide all my requirements, especially being a devotee of Him. So he decided to not work from the next day onwards. He
Read 7 tweets
Oct 15
#சனாதனதர்மம் ராமர் காட்டில் இருக்கும் போது ஓர் ஆற்றங்கரையில் துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர். ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை எடுத்துக் Image
கொண்டு அமர்ந்தார். சரி இவர் வேள்வி தான் ஏதோ ஆரம்பிக்கப் போகிறார் என்று எண்ணி, ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான். துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து, கோதுமை மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச்
சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம், இரண்டு குரங்குகள் அவர் எதிரே வந்து அமர்ந்து அந்த ரொட்டிகளை எப்படி Image
Read 9 tweets
Oct 15
#மகாபெரியவா
முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார் மெட்ராஸ்ல அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டினவர். ஸ்ரீவைஷ்ணவர். பெரியவா மேலே அஸாத்ய பக்தி. அவர் டைரில எழுதி வெச்சு இருக்கார். அவர் இருக்கறச்சே நடந்த விஷயம். அவர் காலத்துக்கு அப்புறம், அவர் நெருங்கிய நண்பர் ஒருவர், அவரோட டைரி ஜெராக்ஸ் பண்ணிண்டு Image
வந்து கொடுத்தார். அதுல ஒரு நிகழ்ச்சி. ஆச்சிரியமா இருந்தது. வித்வத் ஸதஸ் நடந்தது. பெரிய பெரிய வித்வான்கள் பண்டிதாள் எல்லாம் வந்திருக்கா. அதிலே ஆந்திரால இருந்தும் நிறைய பேர். அதிலே ராஜமுந்திரில இருந்து ஒரு வித்வான் வந்திருக்கார். அந்த வித்வானுக்கு கால் கிடையாது. அவர் சம்சாரம்
அழைச்சிண்டு வந்திருக்கா. அவரை கூடைல தூக்கி தலைல வெச்சி, கூட்டிண்டு வந்திருக்கா. இது எக்ஷிபிஷன் மாதிரி எல்லோருக்கும். நளாயினின்னு கதை எல்லாம் வேணா கேக்கலாம். இந்த காலத்திலேயும் இருக்கும் போல இருக்கே. வித்வத் சதஸ்ல இவா தான் அட்ராக்ஷன்.
பெரியவாளுக்கும் ஆச்சிரியமா இருந்தது. கார்த்தால
Read 11 tweets
Oct 15
#புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.
ஆண்டு Image
முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் #விஷ்ணு_சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையை தரும். அந்த வகையில் இன்று 15.10.2022 புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை ஆகும். விரதம் இருப்பவர்கள் வீட்டை சுத்தம் செய்து
வீட்டிலிருக்கும் பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி, துளசி இலை சேர்த்த தீர்த்தத்தை ஒரு செம்பில் ஊற்றி படத்தின் முன் வைத்து வணங்க வேண்டும். அதை சிறிதளவு அருந்தி விரதத்தை துவங்க வேண்டும். பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதத்தை முடிக்கலாம். விஷ்ணு
Read 6 tweets
Oct 14
#MahaPeriyava #VishnuSahasranamam
Karur Pandit R.S.Rama Sarma was an Ayurvedic Doctor. He was the one who started the legendary Sakthi Vilas Vaidyasala. He was the doctor for K.B.Sundarambal, Deerar Sathyamurthy, Namakkal Kavingar and many other notable people. Namakkal Kavingar Image
had once gifted him a beautiful painting of Lord Subrahmanya for saving his life. Rama Sarma was an ardent devotee of Maha Periyava. Once Maha Periyava sent word for him from Kanchipuram saying He has have fever. Rama Sarma came to Kanchipuram with his medicine kit. Maha Periyava
smiled at his medical kit and said, “I asked only you to come. I did not ask for your medication.”
Rama Sarma was perplexed. He said “I came with my medical kit because I was told you were having fever.”
Maha Periyava said, “if a body exists, so does ailments. In fact fever comes
Read 9 tweets
Oct 14
#சத்சங்கம் நம் இந்து மதத்தில் சத்சங்கத்தின் முக்கியத்துவம் அளவிட முடியாதது. சத் சங்கம் என்றால் நல்லவர்களுடனான சேர்க்கை, அதனால் விளையும் நற்பலன்கள். ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது சத்சங்கம். #விஸ்வாமித்திரர் ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தார். அந்த யாகத்தின் முடிவில், இருப்பதையெல்லாம் Image
தானம் கொடுத்து விடவேண்டும் என்பது முறை. அதை அனுசரித்து விஸ்வாமித்திரர், தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதை அறிந்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கொடுக்கும் தானத்தைத் தானும் பெறுவதற்காக வந்தார். வசிஷ்டரின் வருகையை அறிந்த விஸ்வாமித்திரர், மனம் மகிழ்ந்து
வசிஷ்டருக்குத் தானம் கொடுத்தார். தானம் பெற்ற வசிஷ்டரும் விஸ்வாமித்திரர் செய்ததைப் போலவே தானும் ஒரு யாகம் செய்ய தீர்மானித்தார். யாகத்தின் முடிவில் தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் செய்யத் தொடங்கினார் வசிஷ்டர். தகவல் அறிந்த விஸ்வாமித்திரர், நாமும் போய் அதைப்பெற வேண்டும் என்று
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(