#நாமசங்கீர்த்தனம் #நாம_மகிமை காசியில் வாழ்ந்து வந்த பெரும் செல்வந்தரான குமரன் எனும் வியாபாரி ஒருவர், குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டார். மன வருத்தம் அடைந்த அவர், மனைவி, மக்கள், ஏராளமான செல்வம் எல்லாம் இருந்தும், ஆரோக்கியம் இல்லாவிட்டால் என்ன பலன் என்று புலம்பினார். ஒரு நாள் மனைவி,
மக்கள், சுற்றத்தார் என, அனைவரையும் அழைத்து, 'இனிமேல் உயிருடன் இருக்க விரும்பவில்லை. என்னால் உங்களுக்கும் தொல்லை. என்னை அழைத்து போய் கங்கையில் போட்டு விடுங்கள்' என்றார். முதலில் மறுத்த உறவினரும், மற்றவர்களும், வேறு வழியின்றி, செல்வந்தரின் வற்புறுத்தலுக்கு இணங்கினர். செல்வந்தர்
குமரனை துாக்கிப்போய், அவர் தலையிலும், கால்களிலும் காலி பானைகளை கட்டி, கங்கையில் மிதக்கவிடத் தயாராகினர்.
அந்த நேரத்தில், #கபீர்தாசரின் சீடரான #பத்மநாபர், அங்கு வந்து விவரம் அறிந்தார். “என்ன அக்கிரமம் இது! புல்- பூண்டு என, பல பிறவிகள் எடுத்த பின்பே, அரிதான இந்த மனிதப் பிறவி
கிடைக்கிறது. அப்படிக் கிடைத்த இந்தப் பிறவியை, தற்கொலை செய்வதில் ஈடுபடுத்தலாமா?” என அறிவுரை கூறினார்.
“ஐயா பரிகாரங்கள் பலவும் செய்து விட்டேன். பலன் ஏதும் இல்லை. அதனால் தான் இந்த முடிவு” என்றார், செல்வந்தர். “நடந்ததை விடுங்கள். இப்போது நீங்கள், 'ராம ராம ராம' என்று மூன்று முறை
சொல்லுங்கள். பகவான் அருளால் உங்கள் நோய் குணமாகும். ஆத்மார்த்தமாக, 'ராம ராமா நீ தான் இந்த கொடிய நோயைத் தீர்த்து, பழையபடி மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்' என்ற எண்ணத்தோடு சொல்லுங்கள்” என்றார் பத்மநாபர்.
அதன்படியே செல்வந்தரும், சுற்றி இருந்தவர்களும் சொல்ல, அவரின் நோய் நீங்கியது.
பத்மநாபரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார் செல்வந்தர்.
'அனைத்தும் ஸ்ரீ ராமன் செயல்.' என்றபடியே அங்கிருந்து போய் விட்டார் பத்மநாபர். தகவல் அறிந்து, பத்மநாபரை அழைத்து, “சீடனே வியாதி நீங்க, 'ராம' நாமத்தை, ஆத்மார்த்தமாக ஒருமுறை சொன்னாலே போதுமே. நீ மூன்று முறை ஏன் சொல்லச் சொன்னாய்”
எனக் கேட்டார், கபீர்தாசர். “குருநாதா தங்கள் திருவடிகளைப் பணியாத அச்செல்வந்தரின் குறை தீர ஒரு முறை, அவருடைய நோயும், பிறவியும் தீர ஒரு முறை, சுற்றியிருந்த மக்கள் நல்வழியில் நடக்க ஒரு முறை என்பதற்காகவே மூன்று முறை 'ராம' நாமா சொல்லச் சொன்னேன்” என்றார் பத்மநாபர். தம் சீடனை
வாழ்த்தினார், கபீர்தாசர். இப்போதுள்ள நிலையில், தெய்வத்தைத் தவிர வேறு துணையே இல்லை. அவரவர் இஷ்ட தெய்வ நாமாவை, ஆத்மார்த்தமாகச் சொல்வோம். துயர் தீர்க்க வேண்டுவோம். படுத்தும் நோய் பறந்து போய் விடும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 23
#FoodForThought Never compare one’s self with others. X takes 30 minutes to walk a distance of 2kms. Y takes 15 minutes to cross the same distance. Who is fitter? Of course the answer will be Y. But then you say X walked in a rugged unpaved road and Y walked in a paved jogger’s Image
pathway we will change our answer and say X is better! If we say X is 25years and Y is 50years old, X is 65 kgm and Y is 120 kgm our assessment will keep changing. This is the same with our lives. Each is dealt with a certain set of cards with which each one has to play. Without Image
the knowledge of who has what capacity and what problems we start comparing our lives with others. Each one’s opportunity will be different. The solution to each one’s problem will also be different. Let us focus on being the best we possibly can be within our means and Image
Read 4 tweets
Oct 23
#மகாபெரியவா மகா பெரியவா காஞ்சி மடத்தில் அருளொளி துலங்க அமர்ந்திருந்தார். அப்போது ஓர் அடியவர் பெரியவாளிடம் உரிமையோடு கேட்டார். "சுவாமி வெளிநாட்டைச் சேர்ந்தவரான #பால்பிரண்டனுக்கு அவர் தங்கியிருந்த உணவகத்தில் நள்ளிரவில் காற்று வெளியில் தோன்றி நீங்கள் காட்சி கொடுத்தீர்களாமே! அது Image
பெரியவாளின் நிஜமான தோற்றம் தான், என் மனப் பிரமையல்ல என்று அவர் தன் புத்தகத்தில் அந்த சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார். அப்படியானால் இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா?”
இந்தக் கேள்விக்குப் பெரியவா என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எல்லாரும் ஆவலோடு
காத்திருந்தனர். அந்த பதில் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன், அந்தக் கேள்வியின் பின்னணியைத் தெரிந்து கொள்வோம். கே.எஸ். வெங்கடரமணி ஓர் எழுத்தாளர். ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியவர். முருகன் அல்லது உழவன், கந்தன் ஒரு தேச பக்தன் போன்ற நாவல்களால் தமிழ் இலக்கியத்தை
Read 21 tweets
Oct 22
#Dhanteras2022 Dhanteras (Dhan represents riches, and Teras denotes the 13th day), also called Dhanvantri Trayodashi and Dhanatrayodashi. Dhanteras marks the beginning of the five-day festival of Deepavali. Today people buy utensils, jewelry, vehicles, and home appliances, since ImageImage
it is considered auspicious to buy metals on Dhanteras. Goddess Lakshmi is worshipped today for happiness, prosperity and wealth. The house is cleaned and decorated for Her arrival and Puja is done in the evening. Kubera is also worshipped today. On this day, traders worship Image
their books of account and pray for business success to Kubera the god of wealth. This day is also dedicated to lord of medicine Sri Dhanvantri. Today is the day when Mahalaksmi and Dhanvantri came out of the milky ocean. Another deity who is worshipped today is Lord Yamaraj. Image
Read 8 tweets
Oct 22
சிவபெருமானுடைய திருவுருவங்கள் போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என்ற 3 வகைப்படும். இந்த மூன்று வடிவங்களுள் யோக வடிவம் தாங்கியவர் #தக்ஷிணாமூர்த்தி
தக்ஷிணாமூர்த்தி, சதாசிவ மூர்த்தியின் 5 திருமுகங்களில் ஒன்றான் அகோர முகத்திலிருந்து தோன்றியவர். தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எல்லோரும்
ஜபம் செய்யலாம். எந்தவித நிர்பந்தங்களும் இல்லாத மந்திரங்கள் சிலவற்றில் தலையாய மந்திரம் இந்த தக்ஷிணாமூர்த்தி மந்திரம்.
#மூலமந்திரம்
ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா

#தியானம்
ஸஹஸ்ர தள பங்கஜே சகல சீத ரஸ்மிப்ரபம்|
வராபய கராம்புஜம் விமல கந்த
புஷ்பாம்பரம்|
ப்ரஸன்ன வதனே க்ஷணம் ஸகல தேவதா ரூபிணம்
ஸ்மரேத் சிரஸி ஹம்ஸகம் ததவிதான பூர்வம் குரும்.

#துதி
குரு ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹா
குரு ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.

#காயத்ரீ
ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு: ப்ரசோதயாத்|
Read 4 tweets
Oct 22
#MahaPeriyava
Once when Periyava was camping at a place called Puchamalaikkupam, the shed where the Mutt's elephant was kept caught fire and the elephant broke its chain and ran away. Next day morning the employees of the Mutt noticed that the shed where the elephant was kept had
burned down fully and the elephant was missing. Later it was found that the elephant was near a tank some five miles away and the mahout went there to fetch the elephant, but the elephant refused to accompany him despite his best efforts. Then Periyava went there and the elephant
slowly got up from the tank and came near Periyava and saluted Him. There were a few burns on the body of the elephant. Periyava patted the elephant with His own hand and ordered proper treatment for burns to be completed. Like all human devotees, the Mutt elephant also had
Read 5 tweets
Oct 21
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரம்ம தேவர் ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் கூறிகிறார், பகவானே! கோகுல வாசிகள் அனைவரும் உன் பரம பக்தர்கள். அவர்களின் நீண்ட கால ஆசையான, உன்னுடன் கூடி விளையாடுவது, உன் லீலைகளில் பங்கேற்பது, உன் திவ்ய பார்வையில் மேலும் தூய்மை அடைவது, உன் தாயாக மகிழ்வது, ஆகியவைகளை
நிறைவேற்றவே நீங்கள் இந்த திவ்ய அவதாரம் எடுத்து ஆயர்பாடி சிறுவர்கள், கோபியர்கள், பசுகள் கன்றுகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறீர்கள்! குழந்தையாக கோபியர்களை அணைத்து அவர்களை எல்லையில்லா மகிழ்ச்சியை அனுபவிக்க வைக்கிறீர்கள். இந்த அனுபவத்தை பெற தேவலோக அதிர்ஷ்ட தேவதைகள் தவமாய் தவமிருந்தும்
அவர்களுக்கே கிடைப்பது அரிய விஷயமாகும். எனவே கோபியர்களின் பாக்கியத்தை அளவிடவே முடியாது. உன் திருவடிகளை விரஜபூமியான பிருந்தாவன கோகுலத்தில் பதிய வைத்து ஒரு புனித ஷேத்திரம் ஆக்கியுள்ளீர். இங்கு ஜென்மம் கிடைப்பது அரிய வாய்ப்பாகும்! எனவே பரந்தமா! எனக்கு மறுபிறவி இருந்தால் நான் இந்த
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(