பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.
பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.
அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள்.
பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.
பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன் மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள்.
ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள்.
மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.
ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள்.
முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.
எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வார்.
ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.
அன்று மாலை முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடவும்.
மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம்.
அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து பின்னர் மறுநாள் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்து பின்னர் பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.
நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.
இதனை உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் என்பார்கள். அதனால் உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நார்த்தம் பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு.
ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள்.
சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
முடிந்த வரை தினம் ஒருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யவேண்டும், அல்லது கேட்கவேண்டும்.
விரத நாட்களில் கெட்ட வார்த்தை பேசக்கூடாது, யாரிடமும் கோபமாக பேசக்கூடாது,
இரவு தரையில் தூங்கவேண்டும், கட்டில் மெத்தையில் உறங்கக் கூடாது.
காலணி அணிய கூடாது.
முடிந்த அளவுக்கு ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள்.
ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான்.
அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 🍂🛐🍂
அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர்.
இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது.
இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.
சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.
இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம்.
*மனிதனின் வாழ்க்கைத் தேவை, அருளோடு வரும் பொருள்வளம் கொடுப்பவளான திருமகள் அஷ்டலக்ஷ்மிகளாக வணங்கப்படுகிறாள்* .
சைவசமயமும், சாக்தசமயமும்
அம்பிகைக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பிக்கிறதோ அதே அளவு *ஸ்ரீவைஷ்ணவமும் தாயாருக்கு சிறப்பிடம் கொடுக்கிறது* சைவத்தில் நவசக்தியாக வழிபடப்படும் தேவி, *ஸ்ரீ வைஷ்ணவத்தில்*
*கூனம்பட்டி கல்யாண புரி ஆதீனம் ஸ்ரீமாணிக்கவாசக மூலாம்னாய பீடப்ரஸ்தான ஸ்ரீ மாணிக்கவாசகர் சுவாமிகள் திருமடத்தின் 57வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ இராஜ சரவண மாணிக்க வாசக சுவாமிகளின்* உளப்பாங்கின் வண்ணம்,
*திருநெல்வேலி மேலச்செவல் ஸ்ரீ சௌந்தர்ய நாயகி அம்பாள் சமேத ஶ்ரீ ஆதித்தவர்னேஸ்வரர்* சிவாலயத்தில்,
*சிவோபதேச ஞான சிவ தீட்சை விழா.*
நிகழும் *மங்களகரமான கார்த்திகை மாதம் 26ம் நாள் நான்காவது சோமவாரம் 12-12-2022. திங்கட்கிழமை.*
திருநெல்வேலி அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள *மேலச்செவல் ஸ்ரீ சௌந்தர்ய நாயகி அம்பாள் சமேத ஶ்ரீ ஆதித்தவர்னேஸ்வரர் சிவாலயத்தில்,*
*சிவோபதேச ஞான சிவ தீட்சை விழா* நடைபெறும்.
சமயம் விஷேடம் சிவபூஜை நிர்வாண தீட்சை ஆச்சார்ய அபிஷேகம் பெற விரும்பும் அடியார்கள்