பிறை அணிந்த பெருமானுக்குத் தமது ஊரில் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார்.
ஆலயம் அமைப்பதற்கான செல்வத்தை அவரால் திரட்ட முடியவில்லை.
பூசலார் மனம் புண்பட்டு நைந்தார்.
செய்வதறியாது சித்தம் கலங்கி ஏங்கினார் நாயனார்.
புறத்தே தான் புற்றிடங்கொண்ட பெருமானுக்குக் கோயில் எழுப்ப இயலவில்லை,
அகத்திலேயாவது அண்ணலாருக்கு, என் மனதிற்கு ஏற்ப பெரிய கோயில் வேண்டுமானாலும் கட்டலாம் அல்லவா ?
என்று தமக்குள் தீர்மானித்தார்.
அதற்குத் தேவையான நிதி, கருங்கல், மரம், சுண்ணாம்பு முதலிய கருவி, கரணங்களை எல்லாம் மனதிலே சேர்த்துக் கொண்டார்.
ஒரு நல்ல நாள் பார்த்து, தனி இடத்தில் அமர்ந்து ஐம்புலங்களையும் அடக்கி ஆகம முறைப்படி மனத்திலே கோயில் கட்டத் தொடங்கினார்.
இரவு பகலாக கோயில் அமைப்பதையே சிந்தையாகக் கொண்டு இறைவன் கோயிலை அகத்தே இருத்தி கர்ப்பகிருகம், தூபி, அர்த்த மண்டபம் , மகா மண்டபம் , யாக மண்டபம் , அலங்கார மண்டபம், திருமதில்கள், திருக்குளம், திருக்கிணறு, ராஜ கோபுரம் முதலிய அனைத்தும் பொலிவோடு உருவாக்கினார்.
நாயனாருக்குப் புறத்தே கோயில் எழுப்ப எத்தனை நாளாகுமோ, அத்தனை நாளானது அகத்தே கோயில் எழுப்ப .
எல்லாம் முடிந்த பின் கும்பாபிஷேக நாளை நிச்சயித்தார் .
கும்பாபிஷேகத்திற்கு வேண்டிய தர்ப்பை , சமித்து , நெய் ,சிருக்கு ,சிரவம் முதலிய அனைத்தும் ஆயத்தம் செய்தார்.
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காடவர்கோன் என்ற பல்லவ மன்னன் ஈசனுக்கு கற்கோயில் ஒன்று கட்டினான்.
நாயனார் மானசீகமாகக் கும்பாபிஷேகம் நடத்த இருந்த அதே நன்னாளில் காஞ்சியில் கும்பாபிஷேகத்துக்குரிய நாள் குறித்து அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தான் மன்னன்.
கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் இரவு எம்பெருமான் மன்னனின் கனவிலே எழுந்தருளி அன்பா ! திருநின்றவூரில் குடியிருக்கும் நம்முடைய அன்பனாகிய பூசலார் தமது உள்ளக் கோயிலில் கட்டி முடித்துள்ள கோயிலுக்கு நாளை கும்பாபிஷேகம்.
அந்த ஆலயத்துள் நாளை நாம் எழுந்தருள சித்தம் கொண்டுள்ளோம்.
ஆதலால் நீ வேறு ஒரு நாளில் கும்பாபிஷேகத்தை வைத்துக்கொள்வாயாக என்று மொழிந்து மறைந்தருளினார்.
பூசலாரின் அன்பை இவ்வாறு அரசனுக்கு இறைவர் அறிவித்தார் .
பல்லவர் கோமான் கண் விழித்தெழுந்து கனவை நினைத்து வியந்தான்.
திருநின்றவூர் சென்று அச்சிவனடியாரைச் சந்தித்து அவரது திருக்கோயிலையும் தரிசித்து வர ஆவல் கொண்டான் மன்னன் .
திருநின்றவூரை அடைந்த அரசன், பூசலார் அமைத்துள்ள திருக்கோயில் எங்குள்ளது? என்று பலரைக் கேட்டான்.
ஊர் முழுதும் தேடியும் எவருக்கும் தெரியவில்லை.
இறுதியில் மன்னன் அவ்வூர் அந்தணர்களை வரவழைத்துப் பூசலாரைப் பற்றி வினவ, அவர்கள் மூலம் பூசலார் இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டான் மன்னன்.
பூசலார் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்ட மன்னன்.
பூசலாரைக் கண்டு அவரது அடிகளைத் தொழுது எழுந்தான்.
அண்ணலே! எம்பெருமான் என் கனவிலே தோன்றி நீங்கள், அவருக்காக எட்டு திக்கும் வாழ்த்த, திருக்கோயில் அமைத்துள்ளதாகவும் ,
இன்று நீங்கள், அத்திருக்கோயிலில் ஐயனை எழுந்தருள்விக்க நன்னாள் கொண்டுள்ளதாகவும், அதனால் நான் காஞ்சியில் கட்டி முடித்த திருக்கோயில் கும்பாபிஷேகத்தை வேறு நாள் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டு அருளினார்.
அடியேன், தேவரீர் கட்டி முடித்துள்ள திருக்கோயிலைத் தரிசித்து வழிபட பெருமகிழ்ச்சி கொண்டு வந்துள்ளேன் , அத்திருக்கோயில் எங்குளது? என்று பணிவோடு வணங்கினான் மன்னன்.
மன்னன் மொழிந்ததைக் கேட்டு பூசலார் பெரும் வியப்பில் மூழ்கினார்.
அவர் உள்ளம் மருண்டார் . மன்னனிடம் காடவர் கோமானே அடியேனையும், ஒரு பொருளாகக் கொண்டு இறைவன் இங்ஙனம் திருவாய் மலர்ந்து அருளினாரோ ? இவ்வூரில் அரனார்க்கு ஆலயம் அமைக்க அரும்பாடு பட்டேன்.
பொருள் இல்லா நான், புறத்தே தான் ஆண்டவனுக்குக் கோயில் கட்ட முடிய வில்லை ,
அகத்திலாவது கட்டுவோம் என்ற எண்ணத்தில்,
வேறு வழியின்றி எனது உள்ளத்திலே கோயில் கட்டி , இன்று அவரை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டையும் செய்து கும்பாபிஷேகம் புரிகிறேன் என்றார்.
அடியார் மொழிந்தது கேட்ட மன்னன் மருண்டான்.
உள்ளக் கோயிலின் பெருமையையும் அதில் குடியேறப் போகும் இறைவனின் அருள் நிலையையும் எண்ணிப் பார்த்தான்.
ஈசனை சிந்தையில் இருத்தி, அன்பினால் எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக பொன்னும், பொருளும் கொண்டு கட்டிய கோயில் இணையாகாது என்பதை உணர்ந்தான்.
மன்னன் நினைவில் பலவாறு எண்ணி நைந்தான்.
திருமுடிபட பூசலார் நாயனார் திருவடிகளில் வீழ்ந்து அவரைப் போற்றிப் புகழ்ந்தான்.
பின் மன்னன் தன் பரிவாரங்களுடன் காஞ்சிக்குத் திரும்பினான்.
பிறையணிந்த பெருமானார் பூசலார் எண்ணியபடியே குறித்த காலத்தில் அவரது உள்ளக் கோயிலில் எழுந்தருளினார்.
பூசலார் நாயனாரும் சிவபெருமானை உள்ளத்திலே நிறுவிப் பூசனை புரியத் தொடங்கினார்.
அன்று முதல் தினந்தோறும் ஆறு காலமும் ஆகமநெறி வழுவாமல் உள்ளக் கோயில் முக்கண் பெருமானை வழிபட்டு வந்த நாயனார் முடிவில் அம்பலவாணருடைய அடிமலர் சார்ந்து ஆராவமுத இன்பம் எய்தினார்.
ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான்.
அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 🍂🛐🍂
அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர்.
இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது.
இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.
சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.
இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம்.
*மனிதனின் வாழ்க்கைத் தேவை, அருளோடு வரும் பொருள்வளம் கொடுப்பவளான திருமகள் அஷ்டலக்ஷ்மிகளாக வணங்கப்படுகிறாள்* .
சைவசமயமும், சாக்தசமயமும்
அம்பிகைக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பிக்கிறதோ அதே அளவு *ஸ்ரீவைஷ்ணவமும் தாயாருக்கு சிறப்பிடம் கொடுக்கிறது* சைவத்தில் நவசக்தியாக வழிபடப்படும் தேவி, *ஸ்ரீ வைஷ்ணவத்தில்*
*கூனம்பட்டி கல்யாண புரி ஆதீனம் ஸ்ரீமாணிக்கவாசக மூலாம்னாய பீடப்ரஸ்தான ஸ்ரீ மாணிக்கவாசகர் சுவாமிகள் திருமடத்தின் 57வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ இராஜ சரவண மாணிக்க வாசக சுவாமிகளின்* உளப்பாங்கின் வண்ணம்,
*திருநெல்வேலி மேலச்செவல் ஸ்ரீ சௌந்தர்ய நாயகி அம்பாள் சமேத ஶ்ரீ ஆதித்தவர்னேஸ்வரர்* சிவாலயத்தில்,
*சிவோபதேச ஞான சிவ தீட்சை விழா.*
நிகழும் *மங்களகரமான கார்த்திகை மாதம் 26ம் நாள் நான்காவது சோமவாரம் 12-12-2022. திங்கட்கிழமை.*
திருநெல்வேலி அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள *மேலச்செவல் ஸ்ரீ சௌந்தர்ய நாயகி அம்பாள் சமேத ஶ்ரீ ஆதித்தவர்னேஸ்வரர் சிவாலயத்தில்,*
*சிவோபதேச ஞான சிவ தீட்சை விழா* நடைபெறும்.
சமயம் விஷேடம் சிவபூஜை நிர்வாண தீட்சை ஆச்சார்ய அபிஷேகம் பெற விரும்பும் அடியார்கள்
தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவே உள்ளதான திருமுனைப்பாடி என்னும்
நடுநாட்டிலே, திருப்பெண்ணாகடம் என்னும் திருப்பதியிலே, வேளாளர் குலத்திலே,
சிவபெருமானிடத்தும்
சிவனடியாரிடத்தும் அன்புமிக்குடையவராய், அச்சுத- களப்பாளர் என்னும் திருப்பெயருடையவராய்
ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அவர் கல்விச் செல்வத்தினாலும் பொருட்செல்வத்தினாலும் சிறந்து விளங்கியும்,
மகப்பேறு இல்லாத குறையுடையவராய் இருந்தார்.
அவர் ஒருநாள் திருத்துறையூருக்குப் போய் தம் குல குருவாகிய சகல ஆகமப் பண்டிதர் என்னும் சிறப்புப் பெயர் உடைய சதாசிவம் சிவாசாரியாரிடம்
சென்று தமக்கு மகப்பேறு இல்லாத குறையைத் தெரிவித்தார்.
அது கேட்ட சிவாசாரியார்,
தம் வழிபடு கடவுளை வழிபாடு செய்து அதன் முடிவில் தேவாரத் திருமுறையை