M.SivaRajan Profile picture
Nov 5 10 tweets 3 min read
#பிரதோஷ_வழிபாடு

சிவ தரிசனம் கோடி புண்ணியம்..

சனி மஹா பிரதோஷம்..

சிவனை வழிபட மறவாதீர்கள்..!!

தினமும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலமானது நித்ய பிரதோஷம் எனப்படும்.

மேலும் பல வகையான பிரதோஷங்கள் உள்ளன.
அவற்றில் சனிக்கிழமையன்று வருவது சனி பிரதோஷம் ஆகும்.

மற்ற பிரதோஷ வழிபாட்டு பலன்களை விட சனி பிரதோஷ வழிபாடு பல மடங்கு பலன்களை தரக்கூடியது.

பிரதோஷ நாள் என்றால் என்ன?

பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட உகந்த காலமாகும்
இந்த பிரதோஷ தினத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் பொழுது ஆலகாலம் எனும் விஷம் வெளிப்பட்டது.
அந்த விஷத்திற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் சென்று தங்களை காக்கும்படி வேண்டினார்கள்.

அவர்களை காப்பதற்காக சிவபெருமான் அந்த ஆலகாலம் எனும் விஷத்தினை உண்டார்.

விஷத்தை ஈசன் உண்பதை பார்த்த பார்வதி அது வயிற்றினை அடையாமல் இருக்க சிவபெருமானின் கழுத்தை இறுக பிடித்தார்.
இதனால் அந்த விஷமானது சிவபெருமானின் கழுத்திலேயே தங்கி கழுத்தை நீல நிறமாக மாற்றி விட்டது.

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.

எனவே, சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் சனி மஹாபிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
சனி மஹாபிரதோஷ வழிபாடு :

பிரதோஷத்தன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பை தரும்.

மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும் போது பல மடங்கு பலன்களை தரும்.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்.

சனிப்பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து
அபிஷேகம் செய்து நந்தியம்பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சிவனுக்கு உகந்த வில்வத்தின் மகிமை :

வில்வத்தைப் பறித்து ஆறு மாதம் வரை வைத்து பூஜை செய்யலாம்.

உலர்ந்த வில்வம் மற்றும் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூஜை செய்யலாம்.

அவ்வளவு புனிதமானது.
வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும், இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன.
ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும், துன்பங்களும் சூரியனை கண்ட பனி போல் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

#பிரதோஷ_வழிபாடு

#மஹா_பிரதோஷம்

#சைவசமயம்

#சிவவழிபாடு

#ஓம்நமசிவாய

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 6
#சித்தர்கள்_ஜீவ_சமாதி

சித்தர்களின் ஜீவ சமாதியின் சிறப்பு என்ன?

ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள்.

ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்...

சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். Image
அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள்.

ஒவ்வொருவரும் பிறக்கும் போது தூய்மையான அத்மாவாக தான் பிறக்கிறோம்.
ஆனால் வளரும் போது, காலம் செல்ல, உலகம் என்னும் மாயையில் சிக்கி பல பாவங்களை செய்கிறோம், ஒவ்வொரு நாளும் பாவத்தின் கணக்கை கூட்டி ஆத்மாவனத்தை அசுத்தம் செய்கிறோம்.
Read 12 tweets
Nov 6
*64 வகை அபிஷேகம் நடைபெறும் கால பைரவர் ஆலயம்!!!*

இந்தியாவில் அமைந்துள்ள 2 கால பைரவர் கோவிலில் இரண்டாவதாக உள்ள கோவில் தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற தட்சணகாசி கால பைரவர் கோவில் சிறப்பு பற்றி காண்போம்.. Image
இந்தியாவில் இரண்டு இடங்களில் உள்ளது கால பைரவர் கோவில்.

காசியில் அமைந்துள்ள தட்சண கால பைரவர் கோவில் முதல் இடத்தில் உள்ளது.

அடுத்ததாக தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தட்சணகாசி கால பைரவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

ஆதியும் அந்தமும் இவரே என்று மக்களால் போற்றப்படுகிறது.

மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர்.

இந்த  64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்  ஆவார்.
Read 10 tweets
Nov 6
*#வேலாக_மாறிய_பூக்கள்...*_

ஒரு நகர்ப்பகுதியை நல்லியக்கோடன் என்னும் மன்னன் நல்லாட்சி செய்து வந்தான்.

தனது ஆட்சியில் சிறு பிசகு ஏற்பட்டால் கூட, மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற கவலை அவனுக்கு இருந்தது.
எனவே, அவன் அதிகாரிகளை அனுசரித்து வேலை வாங்கினான்.

மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

யார் கண் பட்டதோ தெரியவில்லை!

நல்லியக்கோடன் மீது எதிரிகள் படையெடுத்தனர். எதிரிப்படைகள் இணைந்து வரும் தகவல் நல்லியக்கோடனுக்கு ஒற்றர்கள் மூலம் தெரிய வந்தது.
பலநாட்டு படைகளின் முன், தன் படையின் எண்ணிக்கை குறைவு என்பதால், நல்லியக்கோடன் முருகப்பெருமானை சரணடைந்தான்.

அப்போது அசரீரி ஒலித்தது.

நல்லியக்கோடா!

ஒரு குளத்தில் தாமரைப் பூக்களை பறி.

அவற்றை எதிரிப்படைகளின் மீது ஏவு.

மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது.
Read 6 tweets
Nov 6
#புஷ்ப_அர்ச்சனை

அர்ச்சனைக்கு உகந்த பூக்களும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :*

அல்லிப்பூ செல்வம் பெருகும்

பூவரசம்பூ உடல் நலம் பெருகும்

வாடமல்லி மரணபயம் நீங்கும்

மல்லிகை குடும்ப அமைதி
செம்பருத்தி ஆன்ம பலம்

காசாம்பூ நன்மைகள்

அரளிப்பூ கடன்கள் நீங்கும்

அலரிப்பூ இன்பமான வாழ்க்கை

செம்பருத்தி ஆன்ம பலம்

ஆவாரம் பூ நினைவாற்றல் பெருகும்

கொடிரோஜா குடும்ப ஒற்றுமை
ரோஜா பூ நினைத்தது நடக்கும்

மருக்கொழுந்து குலதெய்வம் அருள்

சம்பங்கி இடமாற்றம் கிடைக்கும்

செம்பருத்தி பூ நோயற்ற வாழ்வு

நந்தியாவட்டை குழந்தை குறை நீங்கும்

சங்குப்பூ (வெள்ளை) சிவப்பூஜைக்கு சிறந்தது
Read 5 tweets
Nov 5
#மஹா_பிரதோஷ_சிறப்பு

#சிவ_அஷ்டோத்ரம்

01. ஓம் சிவாய நமஹ

02. ஓம் மஹேச்வராய நமஹ

03. ஓம் சம்பவே நமஹ

04. ஓம் பினாகிநே நமஹ

05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ

07. ஓம் விரூபாக்ஷாய நமஹ

08. ஓம் கபர்தினே நமஹ

09. ஓம் நீலலோஹிதாய நமஹ

10. ஓம் சங்கராய நமஹ
11. ஓம் சூலபாணயே நமஹ

12. ஓம் கட்வாங்கிநே நமஹ

13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ

14. ஓம் சிபி விஷ்டாய நமஹ

15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ

17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ

18. ஓம் பவாய நமஹ

19. ஓம் சர்வாய நமஹ

20. ஓம் திரிலோகேசாய நமஹ
21. ஓம் சிதிகண்டாய நமஹ

22. ஓம் சிவாப்ரியாய நமஹ

23. ஓம் உக்ராய நமஹ

24. ஓம் கபாலிநே நமஹ

25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ

27. ஓம் கங்காதராய நமஹ

28. ஓம் லலாடாக்ஷõய நமஹ

29. ஓம் காலகாளாய நமஹ

30. ஓம் க்ருபாநிதயே நமஹ
Read 12 tweets
Nov 5
#நாகலிங்கப்_பூ

#நாகலிங்கப்_பூ_பூஜை

*சிவனுக்கு நாகலிங்கப்பூ பூஜை பலன்கள்*

"நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதிஅற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும்.

பூவுலகின் மகத்தான நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது, நாம் பெற்ற புன்னியம் தான்.
தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்.

நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.
பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.

நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(