M.SivaRajan Profile picture
Nov 5 15 tweets 4 min read
*#மகாநந்தி_திருக்கோயில்!*

ஆந்திரப்பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில், நந்தியாலுக்கு அருகிலுள்ள புண்ணிய க்ஷேத்திரம் மகாநந்தி.

சிவபெருமான் மகா நந்தீஸ்வரராக அருள்புரியும் இவ்வூர், தலம்-தீர்த்தம்-மூர்த்தி ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்றது.
நந்த வம்சத்தைச் சேர்ந்த  உத்தங்க போஜன் என்பவரின் மகன் இந்தப் பகுதியை அரசாண்ட காலம்.

அப்போது இப்பகுதிக்கு அருகில் உள்ள கோபவரம் (முன்பு கோபிடவரம் என்று அழைக்கப்பட்டது) என்ற கிராமத்தில் இடையர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
தினமும் மேய்ச்சலுக்கு அவர் அழைத்துச் செல்லும் மாடுகளில் ஒன்று மட்டும், தினமும் மடியில் பால் சுரக்காது இருப்பதைக் கவனித்தார்.

அதற்கான காரணத்தை அறிய விரும்பியவர், ஒருநாள் அந்தப் பசுவைப் பின் தொடர்ந்தார். அந்தப் பசு புதர் மண்டிய இடத்துக்குச் சென்று அங்கிருந்த
புற்றின் மீது பாலைச் சொரிந்தது.

புற்றுக்குள் இருந்து சிறுவன் ஒருவன் தலையை நீட்டி பாலை அருந்தினான்.

இந்த அதிசயத்தை மன்னனின் கவனத்துக்குக் கொண்டுசென்றார் இடையர்.

மறுநாள் மன்னரும் இடையருடன் பசுவைப் பின்தொடர்ந்தார்.

குறிப்பிட்ட இடம் வந்ததும் காட்சியைத் தெளிவாகக் காண விரும்பி
பசுவை இன்னும் அருகில் நெருங்க முயற்சித்தார் மன்னர்.

அதனால் பசு மிரண்டு ஓட, அதன் குளம்படிகள் புற்றின் மீது பதிந்தன.

வெளியே தலை நீட்டிய சிறுவனோ மறைந்து போனான்!

எல்லாவற்றையும் கண்ட மன்னர் சிலிர்த்துப்போனார். அன்று இரவே அவர் கனவில் தோன்றிய ஈசன்,
‘நாமே சிறுவன் உருவில் வந்து பாலருந்தினோம்.

அங்கேயே எமக்கு ஒரு கோயில் கட்டுக’ என்று அருள்புரிந்ததுடன், அந்தப் பகுதியைக் கங்கை செழிப்பாக்குவாள் என்றும், அந்த இடத்தைச் சுற்றிலும் (சுமார் 80 கி.மீ சுற்றளவில்) நவநந்திகளில், தான் வியாபித்திருப்பதாகவும்  திருவாக்கு தந்தார்.
மறுநாள் புற்று இருந்த இடத்துக்குச் சென்றார் மன்னர். அங்கே  புற்றானது பெரியலிங்க உருவாக மாறியிருந்தது.

அதைக் கண்டு மெய்சிலிர்த்த மன்னர், அந்த இடத்தில் கோயில் எழுப்பி, திருக்குளங்களையும் வெட்டினார்.

அவற்றுக்கு முறையே விஷ்ணு குண்டம்' மற்றும் பிரம்ம குண்டம்' என்று பெயர் சூட்டினார்.
வருடம் முழுவதும் நீர் நிறைந்திருக்கும் இந்த நீர்நிலைகளால் சுமார் 2000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறதாம்.

இந்தத் தலத்துக்கு மன்னர் சூட்டிய பெயர் மகாநந்தி.

மகாநந்தியில் உள்ள லிங்கம் சுயம்புவாகும்.

தரைமட்டத்துக்கும் கீழாக ஒரு தொட்டி போன்ற அமைப்பில் காட்சி தரும்
இந்த லிங்க மூர்த்திக்கு, பக்தர்களே அபிஷேகம் செய்யலாம் என்பது விசேஷம்.

இந்த லிங்கத் திருமேனியில் பசுவின் குளம்படிகளை இன்றைக்கும் காணலாம்.

இந்த லிங்க மூர்த்தத்தின் அடிப்பகுதியில் சுரக்கும் தீர்த்தமே இத்தலத்தின் குளங்களில் நிரம்புவதாக நம்பிக்கை!
அம்பாளின் திருநாமம் காமேஸ்வரி தேவி.

அம்பாளின் விக்கிரகம் அந்நியர்களால் சேதப்படுத்தப்பட்டதாகவும், பிற்காலத்தில் கறுப்பு பளிங்குக் கல்லால் ஆன புதிய சிலை பக்தர்களால் ஸ்தாபிக்கப்பட்ட தாகவும் சொல்கிறார்கள்.

ஸ்வாமி சந்நிதிக்கு தெற்கில் அமைந்துள்ளது அம்பாளின் சந்நிதி.
இந்தப் பகுதியையும் சேர்த்து நந்தாவரம், நந்தியால், நந்திகோட்டுர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்த நந்தர்கள், கி.மு. 303-ல் சந்திர குப்த மௌரியரால் அகற்றப்பட்டார்கள் என்கிறது சரித்திரம்.

இந்தத் திருக்கோயிலில் மூலஸ்தானத்துக்கு வடகிழக்கில் அருள்மிகு கோதண்டராமரின் சந்நிதி உள்ளது.
அவருடன் சீதா, லட்சுமணன் மற்றும் அனுமனையும் தரிசிக்கலாம்.

மேலும், வீர பக்த அனுமனுக்கும் நவகிரகங்களுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

இந்தத் தலத்தைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் அவசியம் நவ நந்திகளைத் தரிசித்து வர வேண்டும்.
அவை: பிரதம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, கருட நந்தி, ருத்ர நந்தி, மகா நந்தி, சூரிய நந்தி, விஷ்ணு நந்தி மற்றும் சோம நந்தி.

இவற்றில் மூன்று மகா நந்திகள் ஆலயத்தின் வளாகத்திலும், மற்றவை ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்திருக்கின்றன.
புண்ணிய யாத்திரையாக ஆந்திர மாநிலம் செல்லும் அன்பர்கள், புராண - புராதனச் சிறப்புகளுடன் திகழும் மகாநந்தி திருத் தலத்துக்கும் சென்று, நந்தீஸ்வரரின் பேரருளைப் பெற்று வாருங்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 6
#சித்தர்கள்_ஜீவ_சமாதி

சித்தர்களின் ஜீவ சமாதியின் சிறப்பு என்ன?

ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள்.

ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்...

சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். Image
அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள்.

ஒவ்வொருவரும் பிறக்கும் போது தூய்மையான அத்மாவாக தான் பிறக்கிறோம்.
ஆனால் வளரும் போது, காலம் செல்ல, உலகம் என்னும் மாயையில் சிக்கி பல பாவங்களை செய்கிறோம், ஒவ்வொரு நாளும் பாவத்தின் கணக்கை கூட்டி ஆத்மாவனத்தை அசுத்தம் செய்கிறோம்.
Read 12 tweets
Nov 6
*64 வகை அபிஷேகம் நடைபெறும் கால பைரவர் ஆலயம்!!!*

இந்தியாவில் அமைந்துள்ள 2 கால பைரவர் கோவிலில் இரண்டாவதாக உள்ள கோவில் தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற தட்சணகாசி கால பைரவர் கோவில் சிறப்பு பற்றி காண்போம்.. Image
இந்தியாவில் இரண்டு இடங்களில் உள்ளது கால பைரவர் கோவில்.

காசியில் அமைந்துள்ள தட்சண கால பைரவர் கோவில் முதல் இடத்தில் உள்ளது.

அடுத்ததாக தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தட்சணகாசி கால பைரவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

ஆதியும் அந்தமும் இவரே என்று மக்களால் போற்றப்படுகிறது.

மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர்.

இந்த  64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்  ஆவார்.
Read 10 tweets
Nov 6
*#வேலாக_மாறிய_பூக்கள்...*_

ஒரு நகர்ப்பகுதியை நல்லியக்கோடன் என்னும் மன்னன் நல்லாட்சி செய்து வந்தான்.

தனது ஆட்சியில் சிறு பிசகு ஏற்பட்டால் கூட, மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற கவலை அவனுக்கு இருந்தது.
எனவே, அவன் அதிகாரிகளை அனுசரித்து வேலை வாங்கினான்.

மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

யார் கண் பட்டதோ தெரியவில்லை!

நல்லியக்கோடன் மீது எதிரிகள் படையெடுத்தனர். எதிரிப்படைகள் இணைந்து வரும் தகவல் நல்லியக்கோடனுக்கு ஒற்றர்கள் மூலம் தெரிய வந்தது.
பலநாட்டு படைகளின் முன், தன் படையின் எண்ணிக்கை குறைவு என்பதால், நல்லியக்கோடன் முருகப்பெருமானை சரணடைந்தான்.

அப்போது அசரீரி ஒலித்தது.

நல்லியக்கோடா!

ஒரு குளத்தில் தாமரைப் பூக்களை பறி.

அவற்றை எதிரிப்படைகளின் மீது ஏவு.

மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது.
Read 6 tweets
Nov 6
#புஷ்ப_அர்ச்சனை

அர்ச்சனைக்கு உகந்த பூக்களும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :*

அல்லிப்பூ செல்வம் பெருகும்

பூவரசம்பூ உடல் நலம் பெருகும்

வாடமல்லி மரணபயம் நீங்கும்

மல்லிகை குடும்ப அமைதி
செம்பருத்தி ஆன்ம பலம்

காசாம்பூ நன்மைகள்

அரளிப்பூ கடன்கள் நீங்கும்

அலரிப்பூ இன்பமான வாழ்க்கை

செம்பருத்தி ஆன்ம பலம்

ஆவாரம் பூ நினைவாற்றல் பெருகும்

கொடிரோஜா குடும்ப ஒற்றுமை
ரோஜா பூ நினைத்தது நடக்கும்

மருக்கொழுந்து குலதெய்வம் அருள்

சம்பங்கி இடமாற்றம் கிடைக்கும்

செம்பருத்தி பூ நோயற்ற வாழ்வு

நந்தியாவட்டை குழந்தை குறை நீங்கும்

சங்குப்பூ (வெள்ளை) சிவப்பூஜைக்கு சிறந்தது
Read 5 tweets
Nov 5
#மஹா_பிரதோஷ_சிறப்பு

#சிவ_அஷ்டோத்ரம்

01. ஓம் சிவாய நமஹ

02. ஓம் மஹேச்வராய நமஹ

03. ஓம் சம்பவே நமஹ

04. ஓம் பினாகிநே நமஹ

05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ

07. ஓம் விரூபாக்ஷாய நமஹ

08. ஓம் கபர்தினே நமஹ

09. ஓம் நீலலோஹிதாய நமஹ

10. ஓம் சங்கராய நமஹ
11. ஓம் சூலபாணயே நமஹ

12. ஓம் கட்வாங்கிநே நமஹ

13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ

14. ஓம் சிபி விஷ்டாய நமஹ

15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ

17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ

18. ஓம் பவாய நமஹ

19. ஓம் சர்வாய நமஹ

20. ஓம் திரிலோகேசாய நமஹ
21. ஓம் சிதிகண்டாய நமஹ

22. ஓம் சிவாப்ரியாய நமஹ

23. ஓம் உக்ராய நமஹ

24. ஓம் கபாலிநே நமஹ

25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ

27. ஓம் கங்காதராய நமஹ

28. ஓம் லலாடாக்ஷõய நமஹ

29. ஓம் காலகாளாய நமஹ

30. ஓம் க்ருபாநிதயே நமஹ
Read 12 tweets
Nov 5
#நாகலிங்கப்_பூ

#நாகலிங்கப்_பூ_பூஜை

*சிவனுக்கு நாகலிங்கப்பூ பூஜை பலன்கள்*

"நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதிஅற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும்.

பூவுலகின் மகத்தான நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது, நாம் பெற்ற புன்னியம் தான்.
தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்.

நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.
பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.

நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(