ஈசனும் ‘ஏ, கௌரி, சாந்தம் கொள்’ என்று கேட்டுக் கொண்டார்.
அமைதியடைந்த தேவி நெல்லிப் பள்ளம் என்று அழைக்கப்பட்ட வல்லத்தில் அமர்ந்தாள்.
சீற்றம் குறைந்து கருணை கொண்டாள். அண்டி வந்தவர்களுக்கு வேண்டியதை அள்ளிக் கொடுத்தாள்.
அசுரன் கேட்டுக் கொண்டபடி அவன் பெயராலேயே அவ்வூருக்கு தஞ்சாவூர் என பெயரிட்டார்கள். அம்மன், ஏகெளரியம்மன் என்றே அழைக்கப்படுகிறாள்.
தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில், தஞ்சாவூருக்கு அடுத்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லம்.
இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஏகெளரியம்மன் கோயில்.
இங்கே சந்நிதியில், உக்கிரமாகவும் அதேசமயம் சாந்தசொரூபினியாகவும் வீற்றிருக்கிறாள் கெளரியம்மன்.
இந்த அம்மன் எட்டு திருக்கரங்களுடன் பத்ம பீடத்தில் காட்சியளிக்கிறாள்.
காவல் தெய்வமாகவும்,எல்லை தெய்வமாகவும் திகழும் இந்த அம்மனை வணங்கினால் தைரியம் கிட்டும் என்பது ஐதீகம்.
அந்தக் காலத்தில், போருக்குப் புறப்படுவதற்கு முன்பு ஆயுதங்களை இவளின் திருவடியில் வைத்து பூஜைகள் போடப்பட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம் என்கிறார்கள்.
தீராத கடன் பிரச்சினை, தீராத நோய், தீராத பகை என்று கலங்கித் தவித்து மருகியவர்கள்,
கெளரியம்மனிடம் மனதார வேண்டிக் கொண்டால், விரைவில் கடன் பிரச்சினை தீரும், தீராத நோயும் குணமாகும், பகை அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
வேண்டுதல் நிறைவேறியவர்கள், அம்மனுக்கு எருமைக்கன்று வழங்கி, தங்கள் பிரார்த்தனையை, நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.
*குலதெய்வ கோபம் தணிய 200 வருடத்திற்கு முன்புள்ள பரிகாரம் :*
குலதெய்வ கோபம் தணிய 200 வருடங்களுக்கு முன்பு செய்யபட்டு வந்த பரிகாரம் ஒன்று உள்ளது.
அதன் விபரம் :
*தேவையான பொருட்கள்*
எழுமிச்சை , தாமரைநூல், சாதா திரி, வேப்ப எண்ணெய்..
வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு மாலை 6.45க்கு மேல் (அது சூரியன் முழுமையாக அஸ்தமனம் அடையும் நேரம்)சென்று எழுமிச்சை பழத்தை தரையில் வைத்து உருட்டிவிட்டு,
அதன் தலைப்பகுதியில் சிறிதாக துளையிட்டு உள்ளிருக்கும் சாறு விதைகளை நீக்கிவிடவேண்டும்.
பின்பு வேப்ப எண்ணையை அதில் நிரப்ப வேண்டும் .
பின்பு சாதா திரியையும் தாமரைநூலையும் இணைத்து அந்த கனியின் உள்ளே செலுத்தி தீபம் ஏற்றி இரு கைகளிலும் வைத்துக் கொண்டு அம்மனிடம் குலதெய்வ கோபம் நீங்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்..
சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?
சிவபுராணத்தின் பெருமைகள் :
1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.
3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.