மதுரகவி ஆழ்வார் பற்றி நமக்குத் தெரியும். #மதுரகவிஸ்வாமிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1846-ஆம் வருடம் தைப்பூரத்தன்று திருவரங்கம் வீரேஸ்வரத்தில் வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பமான அரங்கப் பிள்ளை- ரங்கநாயகி அம்மாள் தம்பதிக்குப் புதல்வனாக பிறந்தார் மதுரகவி சுவாமிகள். அரங்கன்
மீது அளவில்லா பிரியம் கொண்டு இருந்தார். 1855 ஆம் வருடம் வைகுண்ட ஏகாதசி காலத்தில், நம்பெருமாள் உலா வரும்போது, மலரால் அலங்கரிக்கப்பட்ட இறையின் அழகில் மனதை பறிகொடுத்து, திருமாலுக்கு திருமாலை கைங்கர்யம் செய்ய வேண்டும் என உறுதிபூண்டார். அதற்காக காவிரி கரையை ஒட்டி, வேங்கடாசல ராமானுஜ
தாசர் என்பவரின் திருநந்தவனத்தில் வசித்து வரும் திருநந்தவனக் குடிகள் என்று அழைக்கப்படுகிற ஏகாங்கிகளிடம் (ஏகாங்கி - கட்டை பிரம்மச்சாரியாக, திருமண வாழ்வில் ஈடுபடாமல், சிந்தையை அரங்கனிடமே வைத்து, தினமும் நந்தவனத்தில் பூப்பறிப்பது, பின் அதை மாலையாகத் தொடுப்பது. அவற்றைச் சேகரித்துக்
கொண்டு கோயிலில் சேர்ப்பது என வாழ்க்கை முறை கொண்ட இறைவனின் அடியவர்கள்) மாலைகளை தொடுக்கும் கலையை கற்றுக் கொண்டார். மதுரகவி சுவாமிகளுக்குப் 17 வயதில் அவரது பெற்றோர், பெண் பார்க்கத் தொடங்கிய போது தனக்குத் திருமணம் வேண்டாம் என்றும், ஒர் ஏகாங்கியாக அரங்கன் சேவையில் என்றென்றும் தான்
திளைத்திருக்கப் போவதாகவும் கூறி தன் திருமணத்திற்கு என்று பெற்றோர் சேர்த்து வைத்திருந்த தொகையான ₹200 யைப் பெற்றுக் கொண்டார். இந்தத் தொகைக்கு 10 பவுனில் கடலைக்காய் மணி வாங்கித் தாயாருக்கு சார்த்தி அழகுப் பார்த்தார் மதுரகவி. மீண்டும் பெற்றோரிடம் இருந்து தனக்கு வரவேண்டிய சொத்தினை
பெற்றுக் கொண்டு நந்தவனத்தில் விதம் விதமான பூச்செடிகளை வளர்த்தார். வைணவத்தில் பந்தம் பிடிப்போர், கட்டியம் கூறுவோர் போன்றோரை சாத்தாத வைணவர்கள் என்று அழைப்பர். அதாவது, உடலில் பூணூல் சாற்றாதவர்கள். இவர்கள் வசித்து வந்த திருவரங்க வீதி சாத்தாத (சாத்தார) வீதி என்றே அழைக்கப்பட்டு வந்தது.
பெருமாளுக்குப் பூமாலைகள் அனுப்பும் உரிமம் துவக்கத்தில் இவர்களிடம்தான் இருந்து வந்தது. பூச்சந்தை வைத்து இந்தத் தர்மப் பணிகளைச் செய்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் நொடித்துப் போக, இந்தக் கைங்கர்யம் நின்று போய்விடுவதாக இருந்த வேளையில், மதுரகவி சுவாமிகள் ₹5000 கொடுத்து,
அவர்களிடம் இருந்து இந்த உரிமையை எழுதி வாங்கிக் கொண்டார். ஸ்ரீவானமாமலை ஜீயரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு ஸ்ரீபிள்ளை லோகாச்சார்யா சன்னிதி சாமி ஐயங்காரிடம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற வைணவ நூல்களைக் கற்றறிந்தார். நந்தவனத்தை மேலும் விஸ்தரிக்கும் பொருட்டு வைணவ அன்பர்கள்
உதவியோடு சோழமாதேவி கிராமத்தில் சில நிலங்களை வாங்கினார். நந்தவனத்தை அடுத்து சில தோட்டங்களையும் வாங்கி, பூ கைங்கர்யத்தை விரிவுபடுத்தினார். பின்னப்பட்டு போயிருந்த திருவரங்க திருக்கோவிலின் பொன் கூரையை புதுப்பிக்க, 1891-ல் திருவரங்கம் கோயிலில் இருந்த அர்ச்சகர்கள், சுவாமியை அணுக,
முதலில் தனக்கு மாலை கைங்கர்யம் அன்றி வேறெதுவும் இல்லை என்று மறுத்துவிட்டார் மதுரகவி. அன்று இரவே மதுரகவியின் கனவில் தோன்றி அரங்கன் ஆணையிட மறுநாள் தன் குருநாதரான குவளைக்குடி சிங்கம் ஐயங்காரைச் சந்தித்து விமானத் திருப்பணியையும், அரங்கன் கனவில் வந்த விஷயம் பற்றியும் விவரித்தார்.
அரங்கன் திருவுளப்படியே திருப்பணியைத் துவக்கி, தன்னுடையதே முதல் உபயம் எனக் கூறி, ஒரு பித்தளைக் குடத்தில் பத்து ரூபாயைப் போட்டு துவங்கிவைத்தார் திரு குவளைக்குடி சிங்கம் ஐயங்கார். ஐந்தே வருடங்களில் தேசம் முழுக்க அலைந்து ₹80,000 திரட்டி, விமானத் திருப்பணிகள் நடந்து. 1903-ல் மிகப்
பெரிய குடமுழுக்கும் நடந்தேறியது. அந்தக் காலத்தில் ₹80,000 என்பது சாதாரணம் அல்ல! இதற்கு அடுத்த ஆண்டு 1904ல் குரோதி வருடம் ஐப்பசி மாதம் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின் ஏழாம் நாளன்று, நந்தவன குழாத்திற்கு வழங்கபட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்ட மதுரகவி சுவாமிகள் அன்றைய தினமே இரவு சுமார்
11 மணிக்கு ஆச்சார்யனின் திருவடியை அடைந்தார். திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அம்மா மண்டபத்துக்கு அருகில் சுவாமிகளின் திருவரசு (உடல் பள்ளிபடுத்திய இடம்) இன்றும் காணக்கிடைக்கிறது.
தமிழகத்திலேயே திருநந்தவனக்குடி ஒருவருக்காக அவர் அமைத்த நந்தவன
வளாகத்திலேயே எழுப்பப்பட்டுள்ள ஒரே சமாதித் திருக்கோயிலாக இது திகழ்கிறது. தனி ஒருவராய் ஐந்தே வருடங்களில் தேசம் முழுக்க அலைந்து எண்பதாயிரம் ரூபாய் திரட்டி, திருவரங்கக் கோயில் விமானத் திருப்பணிகள் நடத்தினார்.
திருவரங்க கோயிலுக்காக பிரமாண்டமாக காவிரிக் கரையை ஒட்டி அம்மா மண்டபத்துக்கு
அருகே திருநந்தவனம் அமைத்தார். வருடம் முழுவதும் திருவரங்கப் பெருமானுக்கும் தாயாருக்கும் சக்கரத்து ஆழ்வாருக்கும் தேவைப்படும் மாலைகள் மதுரகவி சுவாமியின் நந்தவனத்திலிருந்தே வருகின்றன. ஆழ்வார்களின் சேவைக்கு இணையாக இந்தத் தொண்டு கோவில் நிர்வாகத்தால் இன்று வரை மதிக்கப்பட்டு வருகிறது.
மதுரகவி சுவாமிகளால் மேற் கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவையும் திருவரங்கம் கோயிலில் நடந்து வருகிறது. பெருமாளுக்கு மதிய பிரசாதமாக (பெரிய அவசரம் என்பர்) வெள்ளைச் சாதம், ரசம், கீரை, ஊறுகாய் போன்றவை நிவேதனம் செய்யப்படும். இதில் ஊறுகாய்க்காக பெருமாளுக்குத் தினமும் பத்து எலுமிச்சம்பழங்களும்
தாயாருக்கு ஐந்து எலுமிச்சம் பழங்களும் நந்தவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நந்தவனத்தில் மலருகின்ற பூக்கள் அனைத்தும் ஸ்ரீரங்கம் அரங்கனுக்கே உரியவை. ஸ்ரீரங்கம் பெருமாளுக்குப் பூத்தொடுக்கும் இப்பணி ஏகாங்கிகள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர். அதனால், இவர்களுக்கு ஊதியம்
கிடையாது. தினமும் இரண்டு வேளை உணவு இவர்களுக்கு உண்டு. துளசி, விருட்சி, சம்பங்கி, மாசிப்பச்சை, நந்தியாவட்டை, துளசி, பட்டு ரோஜா, மனோரஞ்சிதம், மகிழம்பூ குருக்கத்தி, பாதிரி என்று எண்ணற்ற பூ வகைகள் நிறைந்த நந்தவனத்தில் தினமும் அதிகாலை வேளையில் சுமார் பத்து ஏகாங்கிகள், மாலை கட்டுதல்,
பூப்பறித்தல் என தினமும் சுமார் 16 மாலைகள். இரு வேளைகளில் மொத்தம் 32 மாலைகள் திருவரங்கம் செல்கின்றன. உற்சவ நாட்களான சித்திரை, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் நடக்கும் திருவிழாக் காலங்களில் (மொத்தம் 44 நட்கள்) அலங்கார மாலைகள் செல்லும். திருவரங்கம் கோயில் வெளியாண்டாள்
சன்னதிக்கு அருகில் மதுரகவி சுவாமிகளைப் பற்றிய வரலாறு. ஒரு கல்வெட்டாக, அவரது சேவையின் சாட்சியாக இன்றைக்கும் உள்ளது. திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அம்மா மண்டபத்துக்கருகில் காணப் படும் இந்தத் திருநந்தவனமும் சுவாமிகளின் திருவரசு திருச்சி மத்தியப்
பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ, சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஓம் நமோ நாராயணாய
ஸ்ரீமதுரகவி சுவாமிகள் திருவடி சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 #அறிவோம்_மகான்கள் தொண்டே ஒருவரை உயர்த்துகிறது. ஜாதி அல்ல என்பதை உணர்வோம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
26,000 கொலைக்கு ஒரு அப்ரூவர் கூட இல்லை! ஆவேசமான பொன்மாணிக்கவேல் ( ஐபிஸ் ஓய்வு )
இவரால் தான் கொஞ்சமாவது திருட்டுப் போன தெய்வ விக்ரகங்கள் கிடைத்துள்ளன. ஓரளாவது மக்களுக்கு விழிப்புணர்வு வந்தது. இவருக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியும் ஆதங்கமும் நமக்கு இல்லை #ponmanikavel#htt
தொடர்ச்சி
ஆன்மீக விஷயங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார் இவர்! கையெடுத்துக் கும்பிடணும்🙏🏻
#MahaPeriyava
It must have been 1957. Kanchi Maha Swamigal and Sri Jayendra Saraswathi Swamigal were camping in a house in Rameswaram Road, T. Nagar Chennai. I was living with my parents in the Northern end of the same street. My age then was 22. I was studying in a Secondary
Grade Teachers Training School.
Sometimes Maha Periyava used to pass through my house, either in the morning or in the evening. I have often seen Sri Swamigal cross my house on the street. My mother at those times would be waiting at the entrance with a camphor plate, after
having drawn a kolam in front of our house. It became her custom to show the lighted camphor before Sri Maha Periyava when he came in front of our house, and prostrate to him. The progressive thoughts in my mind, a sense of defiance, the nerve of youth, the lack of maturity to
#ஆழ்வார்_பாசுர_அமுதமொழி
ஸதாம் கதயே நமஹ என்பதை #நம்மாழ்வாரின் நிலை விளங்க வைக்கிறது.
திருக்குடந்தையில் கோமளவல்லித் தாயாரின் கேள்வனான சாரங்கபாணிப் பெருமாள் திருவடிகளிலே நம்மாழ்வார் சரணாகதி செய்தார். “திருமாலே! உன்னை விட்டால் எனக்கு வேறு புகல் இல்லை! நீயே அடியேனை இப்பிறவி பெரும்
துயரில் இருந்து காத்து முக்தி அளிக்க வேண்டும்” என்று திருமாலிடம் மன்றாடிய #நம்மாழ்வார்
“என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்!”
என்று பாடினார்.
“இறைவா! நானும் முக்திக்காக எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன். உன்னைத்
தவிர மற்றொருவர் காலிலும் நான் விழ மாட்டேன். உன்னைத் தவிர வேறு எந்த வழியில் முக்தி வந்தாலும் அந்த முக்தியே எனக்கு வேண்டாம்!” என்று இப்பாடலின் மூலமாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட சாரங்கபாணிப் பெருமாள், “ஆழ்வீர்! உங்களுக்கு முக்திதானே வேண்டும்? அது எப்படிக் கிடைத்தால் என்ன? உங்கள்
The sastras have ordained that Vaisvadevam or Bhuta Yagnam, puja and homam or Deva Yagnam, Anna danam or Manushya Yagnam and Tarpanam, Sraddham or Pitru Yagnam are to be performed by all. Apart from these, those who are well versed in the Vedas and have benefited from learning
them, should pass on this knowledge to others by teaching the Vedas. This is Bramha Yagnam or ‘Intellectual Sacrifice’. This is the principle laid down.. These five yagnas have been performed right from the time of the Rishis, down the generations. They were performed as per
the codes laid down, from the beginning till the time of our grandparents. In the normal course, these would have continued without break till the end of the world. However, our generation has the dubious distinction of having snapped this precious thread. We have not only
குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு அரபி கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க இந்த #நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தினந்தோறும் பகல் 1 மணி முதல் இரவு 10 மணி வரை கடல் உள்வாங்கி
கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. மகாபாரதப் போரில் பாண்டவர்கள் தனது பெரியப்பாவின் மகன்களான கௌரவர்களைக் கொன்று பாரதப் போரை வென்றனர். பின்னர் பகவான் கிருஷ்ணன் அறிவுரையின்படி பாவத்தைத் தீர்க்க இந்த சிவாலயத்திற்கு வந்து ஐந்து சிவ லிங்கங்களை நட்டு வழிபட்டார்கள்.
பின்னர் இவர்களின் பாவங்கள் அனைத்தையுமே இங்கு இருக்கும் சிவன் போக்கியதாக வரலாறு கூறுகிறது. இந்த ஆலயத்தின் கல் கொடிமரம், சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது, இதுவரை வீசிய புயல்களினால் சேதமடையாமல் உள்ளது. 2001 ம் ஆண்டு குஜராத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும், இந்த கொடி
#நற்சிந்தனை பெரும் பணக்காரரான பாஸ்கரன் எனும் வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன்
வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது. எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர்.