காசி க்ஷேத்திரத்தின் சிவாலயங்களில் சிவபெருமானின் தலைமை காவலர் காலபைரவர்.
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கில், பைரவநாத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது, காலபைரவரின் திருக்கோயில்.
இவரின் மேனியில் செந்தூரம் பூசி, அதற்கு மேல் பட்டு சரிகை வஸ்திரம் அணிவித்திருப்பதுடன், முகக் கவசமும் அணிவித்துள்ளனர்.
காசியில் யம பயம் கிடையாது. காலபைரவரின் சந்நிதியில், `கால பைரவ அஷ்டகம்’ படிக்கப்படுவதால் பக்தர்களை நெருங்குவதற்கு காலதேவன் அஞ்சுவான் என்பது நம்பிக்கை.
காசி காலபைரவர் ஆலயத்தில் வழங்கப்படும் மந்திரிக்கப்பட்ட காப்புக் கயிறு மிகுந்த சக்தி வாய்ந்தது.
இந்த கயிறைக் கட்டிக்கொள்வதால் பயம், பகைகள் விலகி நன்மை நடக்கும்.
காசிக்குச் சென்று பைரவரை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.
மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியன்று இவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இத்தலத்தைப் போன்றே வைஷ்ணவிதேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், அங்குள்ள பைரவரை தரிசித்தால் தான், அந்த யாத்திரையும் தரிசனமும் பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
அஷ்ட பைரவ யாத்திரை!
காசியில் அஷ்ட பைரவர்கள் முறையே எட்டு இடங்களில் சந்நதி கொண்டிருக்கிறார்கள்.
காசியிலுள்ள அனுமன் காட்டில் - அஜிதாங்க பைரவரும்,
துர்காமந்திரில் - சண்ட பைரவரும்,
விருத்தகாளேசுவரர் ஆலயத்தில் - ருரு பைரவரும்,
லாட்டு பைரவர் கோயிலில் - கபால பைரவரும்,
தேவார கிராமத்தில் - உன்மத்த பைரவரும்,
திரிலோசன கஞ்ச் எனும் இடத்தில் - சம்ஹாகார பைரவரும்,
காமாச்சாவில் - குரோத பைரவரும்,
காசிபுராவில் - பீஷ்ண பைரவரும் எழுந்தருளியுள்ளனர்.
இந்த சந்நதிகளுக்குச் சென்று வழிபடுவதை `அஷ்ட பைரவ யாத்திரை’ என்கிறார்கள்.
இங்கு கார்த்திகை மாத தேய்ப் பிறை, வளர்ப்பிறை அஷ்டமி தினங்கள் விசேஷ தினங்களாகும் .
சிவபூஜை கற்பக மரம் போன்று விரும்பிய அனைத்தையும் தரவல்லது ஆகும்.
சிவபூசை செய்வது அனைத்து தானங்கள், தருமங்கள், தவங்கள் செய்த பலனையும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனையும் அனைத்து வேள்விகளையும் செய்த பலனையும் ஒருங்கே தருவதாகும்.
சிவபூசை செய்தவன் வாழ்வின் நிறைவில் சிவகணநாதராகித் தெய்வ விமானத்தில் ஏறி எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து மகிழ்ந்து பின்பு இறைவன் திருவடியில் இரண்டற கலப்பான்.
திருமுதுகுன்றத்தில் சிவலிங்கத்திற்கு ஒரு கை நீரால் திருமஞ்சனம் செய்து ஒரு மலரைச் சாத்தினால்
திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), மகாமேரு, வாரணாசி எனப்படும் காசி, பிரயாகை, கேகைநதிக்கரை, இமயமலை முதலிய மலைகள் முதலியவற்றில் நெடுங்காலம் தவஞ்செய்து தானதருமங்கள் செய்ததற்கு ஒப்பாகும்.
விருத்தகிரியில் ஒருநாள் சிவபூசை செய்தால் அனைத்து விரதங்களை நோற்றப் பலனும்
ஈரோடு மாநகரின் இதயமாக விளங்கும் மணிக்கூண்டு பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.
திருத்தொண்டீச்சு வரம் என்று புராண காலத்தில் வழங்கப்பட்ட இவ்வாலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந் துள்ள ஊர் ஆதலின் ஈரோடு (ஈரோடை) என அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.
கொங்கு நாட்டில் பல்வேறு சிறப்புடைய சிவாலயங்களும் பாடல் பெற்ற ஸ்தலங்கள் இருந்தபோதும் தேவ சாபத்தால் பிறந்த தேதி முதல் இரட்டையர் பெண்கள் செய்த அதிசயமும் நெசவு தொழிலாளியின் பக்தி சிறப்பை உலகுக்கு உணர்த்த இறைவன் நடத்திய திருவிளையாடல் இத்தலத்திற்கே உடைய சிறப்பாக தல வரலாறு கூறுகிறது
ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர்.
இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது.
அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப் படும் புனித நீராடலை கடை முழுக்கு என்று கூறுவார்கள்.
ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.
மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.
மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும்
காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும்.
பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடு துறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு