'நாங்க அடி வாங்காத இடமே இல்லை!' எனும் கைப்புள்ள வசனத்தை நினைவூட்டும் வகையில் அடிவாங்கும் தினங்களில் குறிப்பிடத் தகுந்த ஒன்று ’சர்வதேச ஆண்கள் தினம்’.
மனப்பூர்வமான வாழ்த்துகளைவிட அடித்துத் துவைக்கப்படும் மீம்களே அதிகம் தென்படுகின்றன.
1/7
குறிப்பாக தன் படத்திற்கு தானே மாலையிடும் கன்னிராசி கவுண்டமணி காட்சியும்.
இந்த தினத்திற்கான காரணம் மற்றும் நோக்கம் என்னவாக இருக்குமெனத் தேடிப்பார்த்ததில், நோக்கங்கள் நிமித்தம் உரக்கப் பேசப் படவேண்டிய தினம் என்றே தோன்றுகிறது.
2/7
ஆண்கள் தினத்திற்கான ஆறு தூண்கள் எனும் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் நோக்கங்கள்:
1. திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தவிர்த்து நேர்மையாக, ஒழுக்கமாக அன்றாடம் உழைத்து வாழும் ஆண்களை முன்மாதிரியாக (Role model) அடையாளப்படுத்துவது.
3/7
2. சமூகம், இனம், குடும்பம், திருமணம், குழந்தைகள் நலம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் ஆண்களின் நேர்மறையான பங்களிப்பைக் கொண்டாடுதல்.
3. சமூக நிலை, உணர்வு நிலை, உடற் செயல்பாடு, ஆன்மீகம் ஆகியவற்றின் வாயிலாக ஆண்களின் உடல் மற்றும் மன நலத்திற்கு கவனம் கொடுத்தல்.
4/7
4. சமூக சேவை, சமூக அணுகுமுறை மற்றும் எதிர்பார்ப்புகள், சட்டம் ஆகியற்றில் ஆண்களுக்கு எதிராக இருக்கும் பாகுபாட்டை அடையாளப்படுத்துதல்.
5. பாலின சமத்துவம் மற்றும் பாலின உறவுகளை மேம்படுத்துதல்.
5/7
6. ஒவ்வொருவரும் பாதுகாப்பான வளர்ச்சியுடன் தம் முழுத்திறனை அடையும் வகையிலான பாதுகாப்பான, சிறந்த உலகத்தைக் கட்டமைத்தல்.
இவை தவிர்த்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு Theme எடுத்துக்கொள்ளப்படுகின்றது. 1992ல் துவங்கப்பட்ட ஆண்கள் தினம் இந்தியாவில் 2007ம் ஆண்டு முதல் பின்பற்றப்படுகின்றது.
6/7
இந்தியா உட்பட 57 நாடுகளில் இந்த தினம் அடையாளப்படுத்தப்படுகிறது. கொண்டாடப்படுகின்றது எனும் சொல்லைத் தவிர்க்கிறேன்.
கொண்டாட்டத்தைவிட அடையாளப்படுத்துவதும், உரையாடுவதும்தான் அதன் நோக்கத்தை நோக்கி நம்மைப் பயணிக்க வைக்கும்.
- ஈரோடு கதிர்
#Thread
இரண்டாவது அலை குறித்தெல்லாம் நம்மிடம் எந்த விழிப்புணர்வும் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி(!) குறித்து இருந்த ஒருவித இறுமாப்பால், விழிப்புணர்வு தேவை எனும் நிலையில்கூட நாம் அப்போது இருந்திருக்கவில்லை.
1/9
மூன்றாவது அலை குறித்து சமகால இடைவெளியில் சுகாதாரத் துறை அவ்வப்போது எச்சரிக்கை செய்தாலும், தற்போது நிலவும் எண்ணிக்கை, அவங்க அப்படித்தான் சொல்வாங்க, ”நாம நம்ம வேலையப் பாப்போம், வந்தா பாத்துக்கலாம்” எனும் மனநிலையையே வளர்த்துள்ளது.
2/9
உலக நாடுகளின் நிலவரங்கள் மூன்றாம் அலை தவிர்க்க முடியவே முடியாது என்பதை உணர்த்துகின்றது. ஒருவேளை வராமல் இருந்தால் நல்லதுதான். அதேசமயம் மூன்றாவது அலை வந்தால் இரண்டாம் அலைபோல் உயிரிழப்பு இருக்காது என நம்புகிறேன்.
3/9
பத்து ஆண்டுகளாகத்தான் மலையாளத் திரைப்படங்களுடனான பழக்கம். இந்தக் காலகட்டத்தில் மிகச் சாதாரணமாகப் பார்த்த சுராஜ் வெஞ்சரமூடு, சௌபின் சாஹிர் அடைந்திருக்கும் இடம் கற்பனைக்கு எட்டாதது. அவர்கள் குறித்து கடந்த ஆண்டு எழுதிய கட்டுரை maaruthal.blogspot.com/2020/04/blog-p…
நாற்பது ஆண்டு கால அனுபவம் கொண்ட, ஆனால் சமீப காலங்களில் மிக அரிதாக பயன்படுத்தப்பட்டு வந்த மம்முக்காயா 'குருதி’ திரைப்படத்திலும், இந்தரன்ஸ் ‘ஹோம்’ திரைப்படத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளார்கள்.
உண்மையில் குருதி சுமதி பார்த்திரத்திற்கு, நிமிஷா சஜயனைத்தான் யாரும் முன் மொழிவார்கள். தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாக ஐஷ்வர்யா ராஜேஷ்தான் அத்தனைக்கும் பொருந்துவார் என நம்புவதுபோல். மிக ஆச்சரியமாக ஸ்ரீண்டா-வை சுமதியாக்கியிருந்தது, அத்தனை பொருத்தம். அவரும் நிரூபித்திருக்கிறார்.
ஈரோட்டில் எந்தவொரு இலக்கியக் கூட்டம் என்றாலும் 1990 களில், ஓடிப்போய் அமர்ந்துகொள்வது வழக்கம். அவற்றில் ஒன்றுமே புரியாதென்பது வேறு விசயம். பெரும்பாலும் கம்பராமாயணம் திருக்குறள் தாண்டியெல்லாம் பேச மாட்டார்களே. 1/7
அப்படியானதொரு கூட்டத்தில்தான் வெள்ளைவெளேர் உருவம், திடமாத்திரமான உடல், வெள்ளை முடி என்று இவரைப் பார்த்தேன். ‘இவர் எதுக்கு இங்கே!’ எனும் ஆச்சரியத்தில் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது அவர் தமிழில் பேசியது. சற்றே மழலை கலந்த தொணியில் உரை நடைத் தமிழ். 2/7
நமக்கு வெள்ளைக்காரர்கள் என்றாலே ஆங்கிலேயர்கள் என்றிருந்த நினைப்பில், இவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர், அங்கு பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவிக்கிறார் என்றார்கள். அவரிடம் கை குலுக்கி சில சொற்கள் தமிழில் பேசியதை எல்லோரிடமும் சொல்லி மகிழ்வதுண்டு. 3/7
கிராமங்களில் பெரு, சிறு, குறு விவசாயி என யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம் எப்போதும் ஓர் அறியாமை நிரம்பிய வீம்பு இருப்பதுண்டு. தம் நிலங்களில் விற்பனை செய்வதற்கான பயிர் வகைகள் மட்டுமே விளைவிக்க வேண்டும் எனும் வீம்புதான் அது.
1/n
பயன்பாட்டில் இருக்கும் நிலம் முற்றிலும், தாம் காலம் காலமாகச் செய்து வரும் முறையில், அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப, நீர் வசதிக்கேற்ப விவசாயம் செய்து விடும் பழக்கம் தவறில்லை. பெரும்பாலான விதைப்பு என்பது காலங்காலமான பழக்கம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே நிகழ்கின்றது.
2/n
மொத்தத்தில் எதையாவது விதைக்க வேண்டும், பாங்கு பார்க்கவேண்டும், விளைந்ததை அறுவடை செய்து, என்ன விலைக்குப் போகின்றதோ அப்படியே விற்றுவிடவேண்டும். உதாரணத்திற்கு சில தருணங்களில் வெங்காயம் கிலோ 100 ரூபாயைக் கடந்து பறக்கும். அதே நாட்களில் தக்காளி ஓரிரு ரூபாய்க்கு விற்பனையாகும்.
3/n
மொபைல் ஃபோனில் தமிழ் வானொலி எனும் செயலியில் நாட்டுப்புறப்பாட்டு எனும் சேனல் இருக்கின்றது. அவ்வப்போது கேட்பதுண்டு. சில ரசனையாக இருக்கும், பல கத்தல்களாக இருக்கும்.
இன்று கேட்ட பாடல்கள், கொஞ்சம் கோக்குமாக்காதான் இருந்தது. அதென்னனு தெரிஞ்சுக்கனும்னா நீங்களும் கேட்டுப் பாருங்க
1/4
பாடல்கள் வரிசையில் முக்கியமானதொரு பாட்டு வந்தது
அதன் வரிகள் ஏறத்தாழ...
“அத்த மக உன்ன
கண்ணாலம் பண்ண ஆசப்பட்டேன்
சித்தப்பனுக்கு வாக்கப்பட்டு
சின்னாத்தாள ஆகிட்டியே”... எனத் தொடர்ந்தது.
அடப்பாவமே இப்படியெல்லாமா சிக்கல் வரும். அதை இப்படியுமா பாட்டாகப் பாடி வைப்பார்கள் 2/4
எனும் ஆச்சரியம் வந்தது. பாட்டில் சொல்லப்பட்ட அந்த சம்பவம் பரிதாபத்துக்குரியதுதான்.
யார் இப்படி நொந்து போய் எழுதியிருப்பார்கள் என மாய்ந்து மாய்ந்து யோசித்து கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தேன். 3/4
சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் 5 கிமீ தொலைவிற்குள் சாலையோர பேக்கரிகளில் ஆறு பேருந்துகளைப் பார்த்தேன். அத்தனையும் அழுக்கடைந்த தனியார் சொகுசு பேருந்துகள். பேருந்தின் வெளியே பனியனும், ட்ரவுசருமாக நாட்கணக்கில் பயணத்ததில் அழுக்கடைந்த வட மாநிலத்தினர். 1/7
மார்ச் ஏப்ரல் மாதங்களில் ரயில்களிலும் பேருந்துகளிலும், கால்நடையாகவும் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய தொழிலாளிகள் போன வேகத்தில், தாம் தொடர்பில் இருந்த நிறுவன முதலாளிகளை, மேலாளர்களை அழைத்திருக்கின்றார்கள். 2/7
“இங்கே சோத்துக்கே வழியில்ல, எப்படியாச்சும் என்னைத் திருப்பி கூப்பிட்டுக்குங்க. பஸ் அனுப்புங்க, பஸ்ல வர்ற காசு கழியும்வரை சம்பளம் இல்லாம சோறு மட்டும் போடுங்க” என்று அழைப்பதாக நண்பர் சொன்னார். இது ஆட்களுக்கும்-நிறுவனங்களுக்கும் தகுந்த மாதிரி பல விதங்களில் அமையலாம்.
3/7