ரிவ்யூக்கு முன்னாடி இதுவரைக்கும் எக்கச்சக்க கேள்விகள் வந்தது. முதலில் அதற்கு பதில்களை சொல்லிட்டு ரிவ்யூ போகலாம்.
ஏன் இந்த சீரிஸ்க்கு இவ்வளவு பில்டப்?
Dark னு ஒரு சீரிஸ் இருக்கு. இதுவரை வெளிவந்த Sci-Fi சீரிஸகளில் ரொம்பவே தனித்துவமானது மற்றும் பார்ப்பவர்களை ரொம்பவே
யோசிக்க வைக்கும்.
Dark சீரிஸ் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.
அந்த சீரிஸை உருவாக்கியவர்களின் அடுத்த படைப்பு என்பதால் ரசிகர்களிடம் ரொம்பவே எதிர்ப்பார்ப்பு அதிகம்.
Bermuda Triangle பற்றிய கதையா ?
இல்லை. அது பற்றி எதுவும் இல்லை.
எந்த மொழி சீரிஸ்? இந்த சீரிஸ்க்கு தமிழ் டப் இருக்கா ?
ஜெர்மன் மொழியில் வந்து உள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி டப் ஆடியோ உள்ளது.
தமிழ் டப் இல்லை. இப்போதைக்கு தமிழ் டப் வர்ற மாதிரி தெரியல.
Dark சீரிஸ்க்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா ? அதை பார்த்தால் தான் இது புரியுமா ?
எந்த சம்பந்தமும் இல்லை. நேரடியாக இந்த சீரிஸ் பாக்கலாம்.
என்ன Genre?
இது Drama, History & Sci-Fi வகையில் வரும். லைட்டா ஹாரர் உண்டு.
இப்ப சீரிஸ் பத்தி பாக்கலாம்.
1899 வது வருஷம் Kerberos என்று ஒரு கப்பல் 1500 பயணிகளுடன் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா கெளம்புது.
இந்த கப்பல்ல பல நாடுகள் மற்றும் மொழிகள் பேசுற மக்கள் பயணம் செய்யுறாங்க. இதுல ஒரு குறிப்பிட்ட சில நபர்ளை சுற்றி நகர்கிறது இந்த தொடர்.
சாதாரணமாக போய்க்கொண்டு இருக்கிறது பயணம். இந்த சமயத்தில் 4 மாதங்களுக்கு முன்னாடி1 500 பயணிகளுடன் திடீரென மாயமான ஒரு
கப்பலில் இருந்து சிக்னல் வருகிறது.
கப்பல் கேப்டன் யாராவது உயிருடன் இருந்தால் காப்பாற்றலாம் என கப்பலை திருப்பி அந்த சிக்னல் வந்து திசையை நோக்கி திரும்புகிறார்.
அந்த கப்பலில் ஒருத்தர் கூட உயிருடன் இல்லாத நிலையில் ஒரே ஒரு சிறுவனை மட்டும் மீட்டு வருகிறார்கள்.
இந்த பையன் வந்த உடனே கப்பலில் பல அமானுஷ்யமான மற்றும் விசித்திரமான விஷயங்கள் நடக்கிறது.
ஏன் இப்படி நடக்குது ? யார் அந்த சிறுவன் ? அந்த கப்பலில் இருந்தவர்கள் எங்கே? 4 மாசமா அந்த கப்பல் எங்க இருந்தது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்ல முயற்சி செய்கிறது இந்த தொடர்.
முதல் மூன்று எபிசோட்கள் கப்பலில் இருப்பவர்களை போல நமக்கும் எதுவுமே புரியவில்லை.
ஒரு இடத்துல இருப்பானுக கட் பண்ணுனா வேற எடத்துல இருப்பானுக. திடீர்னு தூங்கி எந்திரிச்சு கண்ணை முழிச்சா சம்பந்தமே இல்லாமல் வேற எடத்துல இருப்பானுக.
ஆனா 4 வது எபிசோட்க்கு மேல கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் கனெக்ட் பண்ணுவாங்க. அருமையான கதை சொல்லும் விதம்.
அடுத்த அடுத்த எபிசோட்களில் ஒரளவு புரியுற மாதிரியும் இருக்கும் புரியாத மாதிரியும் இருக்கும் 😂
இதற்கு எல்லாம் கடைசி எபிசோடில் ஓரளவு தெளிவு படுத்தி பக்கா ட்விஸ்ட்டோட
எதிர்பாராத விதமான க்ளைமாக்ஸ் மற்றும் இரண்டாவது சீசனுக்கான லீட்.
டெக்னிக்கல்லா ரொம்பவே தரமான சீரிஸ், நடிப்பும் சூப்பர். இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்த்தி இருக்கலாம் என தோணும்.
ஆனால் இந்த தொடரை உருவாக்கியவர்கள் தனித்துவம் ஸ்லோ பர்னர் தான்.
எல்லாருக்கும் பிடிக்காது. நான் பார்த்தே தீருவேன் என்பவர்கள் 3 எபிசோட் தாண்டுனா பார்த்து முடிச்சுருலாம்.
டெலிகிராம் இணைப்பு வேண்டும் என்பவர்கள் DM (Direct Message ) செய்யவும். ஏற்கனவே நமது சேனலில உள்ளவர்கள் இந்த இணைப்புகளை சேனலில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு சைக்கோ 3 பெண்களை கடத்தி வந்து ரூம்ல அடிச்சு வைச்சு இருப்பான். எப்ப பார்த்தாலும் பீஸ்ட் வர போறான்டானு சொல்லிட்டே இருப்பேன். இந்த பெண்களில் ஒருத்தியாக Anya வருவார்.
தனது கணவன் மற்றும் குழந்தையை கொன்றவர்களை பழிவாங்க அடர்ந்த காட்டுக்குள் பயணம் செய்யும் பெண்ணின் கதையை சொல்லும் படம்.
Irish பெண்ணான Clare குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்க பட்டவர். கணவன் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
இவர் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்றால் அவளுடைய அதிகாரி விடுதலை லெட்டர் தர வேண்டும். ஆனால் அந்த கடிதத்தை கொடுக்காமல் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறான்
ஒரு நாள் இவளின் கணவன் இதை கேட்க போக கைகலப்பு ஆகி மூன்று வீரர்களும் சேர்ந்து கணவன் மற்றும் குழந்தையை கொன்றுவிட்டு இவளை கொடூரமாக கற்பழித்து விட்டு சென்று விடுகிறார்கள்.
வில்லன் குரூப் ஒரு முக்கிய வேலை காரணமாக அடர்ந்த காட்டுப் பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
ஏனென்றால் இந்த தொடரின் கான்செப்ட் அப்படி மற்றும் ஸ்பாய்லர் ஆகிவிடும்.
சுருக்கமாக சொல்வது என்றால் Parallel Universe கான்செப்ட் இந்த தொடரில் முக்கியமான ஒன்று.
வேறு உலகத்தில் இருந்து கொடூரமான மிருகம் ஒரு பாதையை உருவாக்கி நாம் வாழும் உலகத்திற்கு வந்தால் என்ன ஆகும் ?
இதனை தடுக்க ஸ்கூல் பசங்க + பொண்ணுங்க குரூப் முயற்சி பண்ணுது.
இன்னொரு முக்கியமான கேரக்டர் Eleven . இவங்க பயங்கரமான பவர் கொண்ட ஒரு பெண். இவரின் பவரை உபயோகித்து இன்னொரு உலகத்திற்கு வழியை உருவாக்கிட முடியும். இந்த சீசனில் இவளின் சக்தி காணாமல் போய்விடுகிறது.
FBI பரபரப்பா ஒரு சீரியல் கில்லரை தேடுறாங்க . ஒருத்தன் சரண்டர் ஆகி என் தம்பி தான் அந்த கில்லர்னு சொல்றான். எதன் அடிப்படையில் தம்பி தான் குற்றவாளி என்பதை
தன் சிறுவயது கதை மூலம் சொல்ல ஆரம்பிக்கிறான்.
ஃப்ளாஷ் பேக்கில் அம்மா இல்லாமல் அப்பாவால் பாசமாக வளர்க்கப்படும் சகோதரர்கள் (10 &8 வயது) . ஒரு நாள் அப்பா, கடவுள் என்கிட்ட வந்து பேசுனாரு கெட்ட சக்திகளை அழிக்க சொல்லி லிஸ்ட் கொடுத்தாருனு சொல்லி மனிதர்களை கொல்ல ஆரம்பிக்கிறார்.
இதற்கு இரண்டு மகன்களையும் உதவிக்கு வைத்து கொள்கிறார். அண்ணனுக்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாமல் தந்தைக்கு உதவியாக இருக்கிறான்.
இந்த மாதிரி இளம் வயதில் மனதளவில் பாதிக்கப் படுகிறார்கள் இரண்டு சிறுவர்களும்.
சுற்றுச்சூழலுக்கு கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு கெமிக்கல் கம்பெனிக்கு எதிராக ஒரு கார்ப்பரேட் வக்கீல் நடத்தும் ஒரு சட்டப் போராட்டம் பற்றிய படம் இது
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.
கெமிக்கல் கம்பெனிகளுக்காக வாதாடும் வக்கீல் தான் ஹீரோ (Rob) . ஒரு நாள் அவரது பாட்டி அனுப்பி வைத்தார்கள் என சொல்லி விவசாயி ஒருவர் வருகிறார். அவரது மாடுகள் தொடர்ந்து இறந்து வருவதாகவும் , மனிதர்களுக்கும் நிறைய பிரச்சினைகள் வருவதாகவும் இதற்கு காரணம் DuPont என்ற கெமிக்கல்
கம்பெனி தான் காரணம் என்கிறார்.
Rob தனக்கு தெரிந்த தொடர்புகளை வைத்து அந்த ஊரின் தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் ரிப்போர்ட் ரகளை வாங்கி பார்த்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை
ஆனால் அதற்கு அப்புறம் நடக்கும் ஒரு சம்பவத்தை தொடர்ந்து முழு மூச்சாக இந்த கேஸில் இறங்குகிறார்.