#மகாபெரியவா#குலதெய்வ_வழிபாடு
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் இருப்பது வழக்கம். குல தெய்வத்தை வணங்கினால், நம் துன்பங்கள் விலகி, சுபிட்சம் ஏற்படும். நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குல தெய்வம். தந்தை பாட்டன், பூட்டன் வழியில் வணங்கி வந்த தெய்வம் குல தெய்வம்.
தந்தை பாட்டன் வழியில் கோத்திரங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவர்களின் சந்ததி ஒரே கோத்திரத்தில் இருக்கும். தாய் வழி என்பது வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்து, தந்தை வழி கோத்திரத்தில் மாறுவர். இதை ரிஷி வழி பாதை எனவும் கூறுவதுண்டு ஒருவருக்கு குணங்கள் மாறி இருக்கலாம், ஜாதகம், பிறந்த
தேதி மாறி இருக்கலாம். ஆனால் அவர்களின் ரிஷி வழி பாதை என்று பார்த்தால் அவர்களின் குலதெய்வம் ஒன்றாகத் தான் இருக்கும். இதன் காரணமாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், பெயர் வைத்தல், காது குத்துதல், மொட்டை அடித்தல், திருமணத்திற்கு பிந்தைய வழிபாடு என எல்லாவற்றையும் குல தெய்வம் கோயிலில்
தான் செய்து வருவது வழக்கமாக இன்றும் பெரும்பாலானோர் பின்பற்றி வருகின்றனர், பின்பற்ற வேண்டும். நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த, வணங்கி வந்த குல தெய்வத்தைக் கும்பிடும் போது, அவர்கள் வரிசையில் நின்று வணங்கிய அந்த இடத்தில் நின்று நாம் வணங்கும் போது, குல தெய்வத்தின் அருள் கிடைப்பதோடு,
முன்னோர்கள் பித்ருக்களாக வந்து ஆசி வழங்குவர். முன்னோர்களின் கூற்று “நாளும், கோளும் கைவிட்டாலும் கூட, நம் குலதெய்வம் நம்மைக் கைவிடாது” என்பதாகும். குலதெய்வத்தை முறைப்படி வணங்கினால், நாம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அவர் நம் கூடவே இருந்து நம்மை காப்பார்.
ஒரு முறை ஒரு
ஊருக்கு மகா பெரியவா சென்ற போது, துன்பத்தில் வாடும் ஒருவர் வந்து அவரை சந்தித்தார். மகா பெரியவா பார்த்ததுமே ஒருவரின் மனக்குறையைத் தெரிந்து கொள்ளக் கூடியவர் என்பதால் அவரின் பிரச்சினைகளை அறிந்து கொண்டார். பெரியவரிடம் என் துன்பத்தைத் தீர்க்க வழி சொல்ல வேண்டும் என கேட்டார். அதற்கு
பெரியவா, நீ குல தெய்வ வழிபாடு செய்து வருகிறாய் இல்லையா என கேட்டார். இல்லை என கூறிய அவரிடம், முதலில் நீ உன் குல தெய்வத்துக்கு வழிபாடு நடத்தி விட்டு வா என்றார். ஆனால் அவரோ ஐயா எங்கள் முன்னோர்கள் பர்மாவில் வசித்து வந்தனர். மூன்று தலைமுறைகளாக தான் நாங்கள் இங்கு வசிக்கிறோம். அதனால்
எங்கள் முன்னோர்கள் எந்த குல சாமியை வணங்கினார்கள் என தெரியாது என்றார். நீ உன் குல தெய்வம் யார் என தேடு, அவர் உனக்கு புலப்படுவார் என்றார் மகா பெரியவர். மகா பெரியவரிடம் ஆசி வாங்கி சென்ற அவர், அவரின் பாட்டனுக்கு நெருங்கிய சிலரிடம் கேட்க, ஒருவழியாக புதர் மண்டி கிடந்த இடத்தில் சுத்தம்
செய்து பார்த்து, பேச்சாயி அம்மன் என்ற அவரின் குல தெய்வத்தை கண்டு பிடித்தார். அதை மகா பெரியவரிடம் வந்து சொன்னார். இப்போது என் துன்பத்தை தீருங்கள் என்றார். நீ தினமும் குல தெய்வத்திற்கு பூ பொட்டு வைத்து, விளக்கேற்றி வழிபாடு செய்துவா என்றார் மஹாபெரியவா. அப்படி செய்தால் மட்டும் எப்படி
என் துன்பம் அகலும் என கேட்டார் மகா பெரியவரை சேவிக்க வந்தவர். அதற்கு நடமாடும் தெய்வம் ஆகிய மகாபெரியவர் நீ ஒரு வருடம் பூஜை செய்து விட்டு என்னை வந்து பார் என்றார். ஒரு வருடம் கழித்து அந்த நபர் தட்டு நிறையப் பழங்கள், பூ, பணம் வைத்து தன் துன்பத்தை, குல தெய்வ வழிபாடு நடத்தச் சொல்லி
போக்கியதற்காக இதை சமர்ப்பிக்கிறேன் என மகா பெரியவரை வந்து வணங்கினார். குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒரு கலசத்தில் தண்ணீர் வைத்து அதில் சந்தனம், குங்குமம் சிறிது கலந்து அதை குலதெய்வமாக ஏற்று, பூ வைத்து வணங்க வேண்டும். அல்லது ஒரு சிகப்பு துணி விரித்து, அதன் மேல்
குத்துவிளக்கு ஏற்றி, அதை கூட நாம் குல தெய்வமாக நாம் வழிபடலாம்.
நாம் குலதெய்வத்தை தேட முயன்றால் அவர் நமக்கு புலப்படுவார் என பலமுறை மகா பெரியவா சொல்லி இருக்கிறார். குல தெய்வம் தெரிந்தவர்கள் அடிக்கடி சென்று வணங்குவது நல்லது. அப்படி இல்லையெனில் ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்று, குல
தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து புது துணி சாத்தி, பொங்கலிட்டு வழிபட்டு வருவது சிறந்தது. சிலரின் வீட்டில் பணம், பொருள் என எல்லாம் இருந்தும் நிம்மதி இருக்காது. இது குல தெய்வ வழிபாடு செய்யததால் ஏற்படும் குறை என கூறுவார்கள். அவர்கள் குல தெய்வத்தை வணங்கினால் பிரச்சனைகள் தீரும்.
நாம்
தேடினால் நம் குல தெய்வம் கிடைப்பார். அது வரையில், வீட்டில் கலசத்தில் தண்ணீர் வைத்தோ, விளக்கேற்றியோ அதை குல தெய்வமாக வணங்கி வாருங்கள். குல தெய்வத்தின் அருளை பெற்றிடுங்கள்.
நம் குல தெய்வத்தை வணங்குவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ததிபாண்டனின்_மோக்ஷம்
ததிபாண்டன் இடையரில் தயிர்க் கடையன். படிப்பறிவு எல்லாம் கிடையாது. மிகவும் எளியவன். ஆனால் அன்பே உருவானவன். மாட்டை அடிக்கக் கூட மாட்டான். ததிபாண்டன் ஒருமுறை ஒருவரின் இறந்த வீட்டுக்கு சென்று வந்த பிறகு யோசித்தான், நாமும் இறந்தால் இவ்வுலகம் விட்டு சென்று
விடுவோமா? உயிர் போனால் போகிறது. ஆனால் கண்ணன் இல்லாமல் இருக்க முடியாதே என்று கண்ணீர் மல்காத குறையாக நினைத்து கொண்டு இருந்தான்.
அந்த நேரம் ஒரு ரிஷியை எதேச்சையாக பார்த்தான். அவரின் கால்களில் விழுந்தான்.
"சாமி என்னை ஆசீர்வதியுங்கள்"
"ஆசிர்வதித்தேன். சொல் மகனே, உனக்கு என்ன வேண்டும்"
"எனக்கு ஒரே ஒரு ஆசைதான் சுவாமி"
"கேள் மகனே"
"எப்போதும் கண்ணனுடன் இருக்கனும். நான் இறந்த பிறகும் அவனிடம் எப்பவும் இருக்கனும்"
"அட மோக்ஷத்தை இவ்வளவு எளிதாக கேட்டு விட்டாயே"
"அப்படினா"
"மோக்ஷம் என்றால்...இறைவன்.. திருவடி.. சரணடைதல்.. கருணை" என்று வேதாந்த தத்துவங்களை விளக்கி கொண்டே
#ஆதிசங்கரர்#ஶ்ரீநரசிம்ஹர் மண்டனமிஸ்ரர் என்னும் பண்டிதரை வாதில் வெல்வதற்காக அவரது ஊரான மகிஷ்மதிக்குச் சென்றார் ஆதிசங்கரர். பல நாட்கள் கடும் வாதம் செய்து மண்டனமிஸ்ரரை வீழ்த்தித் தன் சிஷ்யர் ஆக்கினார். ஆனால் மண்டனமிஸ்ரரின் மனைவியான உபயபாரதி, “ஸ்வாமி! நீங்கள் பெற்றது பாதி வெற்றி
தான்! நான் என் கணவரில் பாதி. என்னையும் நீங்கள் வாதம் செய்து வென்றால் தான் உங்கள் வெற்றி முழுமை அடையும். என்னுடன் வாதிட நீங்கள் தயாரா?” என்று ஆதிசங்கரரைப் பார்த்துக் கேட்டாள்.
“தயார்!” என்றார் சங்கரர். உபயபாரதியுடன் பல நாட்கள் சங்கரர் வாதம் செய்தார். திடீரென ஒருநாள் காம
சாஸ்திரத்திலிருந்து அவள் கேள்வி தொடுத்தாள். எட்டு வயதிலேயே துறவியான சங்கரருக்குக் காம சாஸ்திரம் பற்றி எதுவுமே தெரியாது. பதில் தெரியாமல் திகைத்தார்.
“என்னிடம் போய் இந்தக் கேள்வி கேட்கிறீர்களே இது தகுமா?” என்று கேட்டார். “கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் நீங்கள் தோற்றதாகத் தான்
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
On one occasion, I went along with my doctor friend to a town in Maharashtra to have darshan of Maha Periyava. We found that His Holiness had left
the town three days earlier and was camping in the outskirts of the town near a small river in a mango grove. When we reached the camp, all facilities for the visiting devotees had been made in the grove. The officials of the Mutt told me a very interesting anecdote of how His
Holiness came to stay there.
Maha Periyava was staying in the centre of the town and performing pooja everyday, one elderly gentleman used to come and stand at the boundary of the crowd, watch the pooja and go away without coming near His Holiness. Maha Periyava noted this and
#ஶ்ரீராகவேந்திரஸ்வாமி
1992 - 93 மந்த்ராலயத்தில் நடந்த உண்மை சம்பவம்
தாய், தந்தை, மகள் மூவருமே ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்தர்கள். குருவை வணங்குவதில் பணக்காரராக இருந்தாலும் வறுமையில் வாழ்ந்து வந்தனர். பெண் நல்ல அழகானவள் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவள். பெண் பருவ வயது வந்ததும்
தீவிரமாய் வரன் பார்க்க தொடங்கினர். நல்ல வரன் குருவின் அருளால் இனிதாய் அமைந்தது. பிள்ளை வீட்டாரும் வரதட்சினை எதுவும் வேண்டாமென்றும் உங்களுக்கு எங்கு விருப்பமோ அங்கு திருமணத்தை நடத்துங்கள் என கூறி விட்டனர். எல்லாம் குருராயர் அருள்தான் என நினைத்திருந்த சமயத்தில் அவர்களின் அடுத்த
வார்த்தை பெரிய பாறையையே தலையில் தூக்கி வைத்ததை போல உணர்ந்தனர். திருமணத்திற்கு வருபவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும். அவர்கள் வயிராற உணவு அருந்த வேண்டும் என தெரிவித்தனர். இவர்களும் சரி என்ற உடன் தேதி குறிக்கப் பட்டது. தந்தைக்கோ தன்னுடைய வறுமையிலும் பெண்ணை சிறப்பாக கரையேற்ற வேண்டும்
#ஷோலிங்கர்_யோகநரசிம்மர்#கார்த்திகை_ஸ்பெஷல்
நரசிம்மரை குலதெய்வமாகக் கொண்டவர்களும் சரி, இஷ்ட தெய்வமாக கொண்டவர்களும் சரி சோளிங்கரில் வீற்றிருக்கும் யோக நரஸிம்மரை தரிசிக்காமல் இருக்கமாட்டார்கள். 1305 படிகள் ஏறி யோக கோலத்தில் வீற்றிருக்கும் யோகநரசிம்மரை தரிசனம் செய்ய கொடுத்து வைத்து
இருக்க வேண்டும். அதுவும் கார்த்திகை மாதத்தில் அங்கு சென்று நரசிம்மரை தரிசனம் செய்தால் ஒரு வித தைரியம் மனதிற்குள் உண்டாவதை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் 11 மாத காலம் யோகத்தில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் கண்களை திறந்து பார்ப்பதாக ஐதீகம். அதனால் தான்
கார்த்திகை மாதம் என்றாலே சோளிங்கர் ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும். படிகளில் ஏறி (குரங்குகளின் தொல்லை நிறைய) துவஜஸ்தம்பத்தை தரிசித்து உள்ளே சென்றால் முதலில் தரிசிக்க இருப்பது தாயார் அமிர்தவல்லியை. பத்மாசன கோலத்தில் வீற்றிருக்கும் தாயாரை காண கண் கோடி வேண்டும். பிரிய மனமில்லாமல்
#ஸ்ரீகங்கைவராக_நதீஸ்வரர்
வாழ்வில் ஒருமுறையேனும் காசிக்கு செல்ல வேண்டும் என்பதே பலரின் அவா. கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். காசிக்கு நிகரான, ஏன் காசியை விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் தமிழகத்திலும் உள்ளது.
புதுச்சேரி
அருகில் வில்லியனுர் என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்து உள்ளது #ஸ்ரீகங்கைவராக_நதீஸ்வரர் ஆலயம். காசியில் உள்ள கோவில் எப்படி கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதே போல ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது. வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி
பாய்வதால், சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு நிகராக போற்றப்படுகிறது. இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு. இந்த கோவில் சங்கராபரணி நதிகரியல் இருந்தாலும் இங்குள்ள இறைவன் கங்கைவராக நதீஸ்வரர் என்று அழைக்கப்படுவதில் இருந்தே, நாம் சங்கராபரணி நதியானது