#சேலம்_அழகிரிநாதர்_கோவில், #கோட்டைப்பெருமாள்_கோவில்

சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிரிநாதர் கோயில். இது வரலாற்று சிறப்பு மிக்க வைணவத் தலங்களில் ஒன்று. சிறப்பு பெற்ற கோயில்கள் அனைத்தும் ஆகம விதிகளின் படி, கரைபுரண்டு ஓடும் ஆறுகளின்
தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும், அதற்கு ஏற்ப கோட்டை அழகிரிநாதர் கோயில் அமைந்துள்ளது. பண்டைக் காலத்தில் திருமாலின் அவதாரமான அழகிரிநாதர் கோயிலுக்கு முன்பு, திருமணிமுத்தாறு கரைபுரண்டு ஓடியது. பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், இதன் சிற்பக் கலைக்காக பெரிதும் அறியப்
படுகிறது, இக்கோயில், அழகிரி பெருமாள் மற்றும் மாரியம்மனுக்காக கட்டப்பட்ட கோயில்கள் சூழ அமைந்துள்ளது. திருமணி முத்தாற்றில் நீராடி திருமாலை தினம் துதித்தால் துயரங்கள் அனைத்தும் தூரவிலகி ஓடும் என்பது ஐதீகம். அதியர்கள் காலத்தில் சமஸ்கிருத மொழி கொங்கு மண்டலத்தில் கோலோச்சியது.
சௌந்திரராஜன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு அழகுராஜன் என்று தமிழில் பொருள். மலைசூழ் நகரமான சேலத்தில் அருள்பாலித்த இறைவன் சௌந்திரராஜன் தான், பிற்காலத்தில் தமிழாக்கத்தில் அழகிரிநாதர் என்று அழைக்கப்பட்டார். அழகிரிநாதருக்கு பின்புறத்தில் சுந்தரவல்லி தாயார் சன்னதி உள்ளது, கோயிலின் தென்
மேற்கு மூலையில் சோழர்களை வீழ்த்திய மதுரை மன்னர் சுந்தரபாண்டியன் வெற்றி குறித்த கல்வெட்டு உள்ளது. அதியர், சேர, சோழ, பாண்டியர் காலங்களில் கோயில் சீரமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது, இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் வரலாற்று காலத்தில் இருந்து, உருவத்தில் மூன்றாவது இடம் வகிக்கிறார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் முதலாவதாகவும், இரண்டாவதாக கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயரும், மூன்றாவதாக சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில் ஆஞ்சநேயரும் ஆகும். இக்கோயிலில் மூலவர் அழகிரி நாதர், பக்கத்தில் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி உள்ளனர். இதைதவிர மூலவரை சுற்றி
சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர், வேணுகோபாலசுவாமி சன்னதிகள் உள்ளன. வைகாசி மாதத்தில் இங்கு நடக்கும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. தேரோட்டத்தின் போது சேலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வார்கள்.
ஐப்பசியில் பவித்ர உற்சவமும், மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவும், பங்குனி மாதத்தில் ஸ்ரீராமநவமி உற்சவமும் இங்கு களைகட்டும். இதைதவிர புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலும் மூலவர் அழகிரி நாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கின்றனர்.
பக்தர்கள் லட்டு உள்பட பல வகையான பிரசாதங்களை வழங்கி வருகின்றனர். இதைதவிர முக்கிய திருவிழா நாட்களில் உற்சவர் சுந்தரராஜர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கோட்டை அழகிரிநாதர் தலத்தில் தான் ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இங்குள்ள
அழகிரிநாதர் திருமண கோலத்தில் காட்சியளிப்பதால் திருமணமாகாத ஆண், பெண் கோட்டை அழகிரிநாதரை மனமுருகி வேண்டிக் கொண்டால் திருமண தடை விலகும். குழந்தை பேறு, நோய், நொடி இல்லாமல் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம் என்பது நம்பிக்கை. பல்வேறு திருவிழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப் படுகின்றன.
அவைகளில் முக்கியமானது, வைகுண்ட ஏகாதசி. அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வதற்கு அலை மோதுவர். பிரமோத்ஸவம், நவராத்திரி, பவித்ரோத்ஸவம, புரட்டாசி மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது
ஶ்ரீல்லிப்புத்தூரிலிருந்து, பிரத்யேகமாக தொடுக்கப்பட்ட பூமாலை தருவிக்கப்பட்டு, ஆண்டாள் அம்மைக்கு சூட்டப்படுகிறது. இவ்விழாக்காலங்களில், சேலம் நகருக்கு அருகில் உள்ள ஊர்களிலிருந்து பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். சேலத்தில் உள்ள வைணவ கோயில்களுக்கு எல்லாம் தலைமையாக
கருதப்படுவது கோட்டை அழகிரிநாதர் கோயில். இக்கோயிலை சுற்றி செவ்வாய்பேட்டையில் பாண்டு ரங்கநாதர் கோயில், பிரசன்னா வெங்கட்ரமணா சுவாமி கோயில், ஆனந்தா இறக்கத்தில் லட்சுமிநாராயண சுவாமி கோயில், பட்டைகோயிலில் வரதராஜ பெருமாள் சுவாமி கோயில், சின்னதிருப்பதியில் வரதராஜபெருமாள் கோயில்,
கடைவீதியில் வேணுகோபாலசுவாமி கோயில், சிங்கமெத்தையில் சௌந்திரராஜ பெருமாள் கோயில், நாமமலையில் சீனிவாச பெருமாள் கோயில், உடையாப்பட்டியில் சென்றாய பெருமாள் கோயில் என்று திரும்பிய திசையெல்லாம் கோயில்கள் இருப்பது வேறு இங்கும் இல்லாத சிறப்பு.
ஒரு யாத்திரை சென்று அனைவரையும் தரிசித்து ஆசி
பெறுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Nov 26
#MahaPeriyava
Sri Shankaranarayanan, a staunch devotee of Maha Periyava, got affected by a strange high fever, which affected him once every 10 to 15 days continuously. He tried all sorts of medicines and advice from various doctors. Nonetheless, his hopes and untiring efforts to Image
cure the fever failed. The man came to a conclusion that the treatment given by doctors could no longer be a remedy and there was only one last resort, none other than the Guru. He visited the SriMatham and had darshan. Periyava asked, "Ippa than varaya"(Are you coming only now?)
“Yes Periyava”
"Have you heard about Jwarahareswara temple in Kanchi? Have you been there before?
“No Periyava”
"Today is a Sunday in Karthigai masam (Nov-Dec). Come, we shall see Jwarahareswara and Surya Bhagavan" said Periyava and walked down. Shankaranarayanan followed
Read 8 tweets
Nov 25
#Nava_vidha_bhakti #9formsof_bhakti

Shravanam Kirtanam Vishnoh Smaranam Paadasevanam
Archanam Vandanam Daasyam Sakhyam Aatmanivedanam

The above sloka is told by Prahalada, one of the greatest devotee for whose protection Lord Vishnu came in Narasimha Avatar. As per the above Image
sloka from Bhagavatam there 9 types of Bhakti marga.
Understanding the concept of navavidha bhakti, we can choose one or more from them and by practicing them we can move closer to God.
1. #Shravanam – Hearing the names and glories of the Lord.
Shravanam generally means hearing
about Leelas or the greatness of God with great interest. The easy way for Shravanam is Satsang. A perfect example of shravana Bhakthi is #Parikshit (Abimanyu’s son & Grandson of Pandavas). He by listening to Shrimad Bhagavatam narrated by Shukamaharshi attained sadgati. Image
Read 14 tweets
Nov 25
#மணி
இறைவனுக்கு அடிக்கும் மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று பொருள்.

கணகணவென்று அடித்தால்
தூபம், தீபம் ஆகிறது என்று பொருள்.

இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் Image
நடக்கிறது.

மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.

மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம். மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் Image
தட்டை எடுக்க வேண்டும். பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும். இடது கையால் மணியை எடுக்கவே கூடாது. கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் துவனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட புரக்ருதிகளை ஓட்டுகிறது. பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக Image
Read 4 tweets
Nov 25
#நற்சிந்தனை
பக்தியிலே 9 விதமான பக்தி பற்றி பேசுகிறான் பிரஹலாதன். "நீ படித்ததில் உத்தமமான விஷயம் எது?" என்று ஹிரண்யகசிபு கேட்டதற்கு அவன் மடியிலேயே உட்கார்ந்து கொண்டு சொன்னான் பிரஹலாதன்.

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதசேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சக்யம்
ஆத்மநிவேதனம் Image
இதி பும்ஸார்பிதா விஷ்ணௌ பக்திஸ்சே நவ லக்ஷணா
( ஶ்ரீமத் பாகவதம் ஸப்தம ஸ்கந்தம்)

1. இறைவனின் பெருமைகளைக் காதால் இடை விடாமல் கேட்பது #சிரவணம்
சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து, தாபங்கள் தீர்ந்தான் பாகவதம் கேட்டு!

2. இறைவனின் பெருமைகளை வாயால் இடை விடாமல் பாடுவது #கீர்த்தனம்
சடகோகர் பாடிய பாடலால்
சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லோரும் மகாவிஷ்ணு முதல் கொண்டு. அதே போல சொல்வதில் சுகப்ரம்மம் மாதிரி சொன்னவர்கள் இல்லை.

3. நாவால் சப்தமாக இறை நாமத்தை
மனனம் செய்வது #ஸ்மரணம்
எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தபோதும் பக்த பிரஹலாதன் மறக்கவில்லை ஹரியை.

4. குறையாத
Read 7 tweets
Nov 25
சென்னை அரண்மனைக்காரத் தெருவில் அமைந்துள்ளது #ஸ்ரீகச்சாரீஸ்வரர் ஆலயம். காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகச்சபேஸ்வரர் கோவிலைப் போலவே இக்கோயிலும் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மத்தாக மந்த்ர மலை இருக்க, அது கடலில் அழுந்தவே, ஸ்ரீ மகாவிஷ்ணு ஆமை Image
உருவெடுத்து இறைவனைப் பூஜித்ததால் இறைவனின் நாமம் கச்சபேஸ்வரர் ஆயிற்று. இந்த வரலாறு கோவிலுள் பல ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.
1700ம் ஆண்டில் சென்னையில் வாழ்ந்து வந்த தளவாய் செட்டியார் சிறந்த சிவ பக்தர். கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த அவர், தினமும் காஞ்சி சென்று Image
கச்சபேசுவரரை தரிசித்து வருவதை தனது வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள் காஞ்சிக்குச் சென்றபோது வெள்ளப் பெருக்கால் இறைவனையும் வழிபட முடியாது, சரியான நேரத்திற்குப் பணிக்கும் செல்லமுடியாது போனது. மிகவும் மனம் வருந்திய அவர் கனவில் இறைவன் தோன்றி சென்னையிலேயே ஆலயம் அமைத்து வழிபடப் Image
Read 13 tweets
Nov 25
#MahaPeriyava who is the omnipotent Parameswara Himself, was camping in Sri Kanchi Matham, Kumbakonam. The Vyasa Puja was being held there with all glory. The ChandraMouleeswara Puja being over, all the devotees were in a hurry to get Maha Periyava's darshan, who was distributing Image
the abhisheka tIrtham (holy water of ablution) with His holy hands. A devotee's turn came in the line formed by them to receive the prasadam. Giving him the prasadam, the Mahan looked at him, raising His head. He told the devotee, "You come early tomorrow for the Veda parayanam
(recitation)."
As ordered by the Mahan the devotee came up early the next morning and participated in the occasion of Veda parayanam. When the parayanam was going on, Maha Periyava made a surprise visit, which was unusual. He noticed that the devotee who got his anugraha the
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(