*பிதுர் தோஷத்தை நீக்கும் பசுபதீஸ்வரர் ஆலய பஞ்ச பைரவர்*!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆவூர் திருத்தலம்.
இங்கு பசுபதீஸ்வரர் எனும் சிவாலயம் இருக்கிறது.
இங்கு சிவபெருமான் பசுபதீஸ்வரர் என்ற திருநாமத்துடனும் அம்பாள் பங்கஜவல்லி என்று திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள்.
ஆவூர் பெயர் காரணம்:
வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனும் என்ற வானிலக பசு பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலம் ஆகும்.
எனவேதான் இத்தலம் ஆவூர் என்றானது.
‘ஆ’ என்பது பசுவை குறிக்கும்.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் பஞ்ச பைரவ மூர்த்திகள் இங்கு ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்.
இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும்.
பஞ்சபைரவ வழிபாடு என்பது பிதுர் தோஷ நிவர்த்திக்கு சிறந்ததொரு வழிபாடு ஆகும்.
பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் பிதுர் தோஷம் மட்டுமின்றி இந்த பைரவைர வழிபட்டால் கடன் சுமை தீரும்.
இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையும் வாய்ப்புகளும் அமையாமல் இருக்கும்.
அவர்கள் இந்த பஞ்ச பைரவரை வழிபட்டால் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிட்டும்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில்.
இது சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்டது.
இந்த ஆலயத்தில் தசாவதார தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர், இனிப்பு சுவையுடன் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், பாவங்கள் விலகும் என்கிறார்கள்.
குளத்தின் அருகில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதனை ‘தசாவதார கிருஷ்ணர்’ என்கிறார்கள். இந்த ஒரே சிலையில், திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இன்று ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் ரம்பா திரிதியை !
ரம்பா, கௌரிதேவியை வழிபட்டு வரம் பெற்ற நன்னாளே ரம்பாதிரிதியை.
இந்த நாளில் விரதமிருந்து வழிபடும் பெண்கள் அனைவருக்கும் பேரழகும் செல்வமும் பெருகும் என்று வரம் அருளினாள் அம்பிகை.
சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் திரிதியை ‘அட்சய திரிதியை’. ஆனால், பெண்களுக்கு அதே ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் விரதமே ‘ரம்பாதிரிதியை.’
இந்தத் திரிதியையன்று தான் கௌரி தேவியாகிய காத்யாயனியை வழிபட்டு, ரம்பா, தான் இழந்த பேரழகையும் செல்வத்தையும் திரும்பப் பெற்றாள்.
கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள் ரம்பா திருதியை கொண்டாடப்படுகிறது.
தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின் பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனியை வழிபட்ட நன்னாள் இது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.