இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் ஜாம்நகரில் உள்ள #துவாரகை #நாகநாத் என்ற #நாகேஸ்வரம்
#நாகேஸ்வரர் #நாகேஸ்வரி திருக்கோயில்
மூலவர்: நாகேஸ்வரர் (நாகநாதர்)
அம்மன்: நாகேஸ்வரி
தீர்த்தம்: பீம தீர்த்தம், கோடி தீர்த்தம், நாக தீர்த்தம்
புராண பெயர்: தாருகாவனம்
லிங்க வடிவங்களில் ஜோதிர் லிங்கம் என்பவை சிறப்பு வாய்ந்தவை. இந்தியா முழுவதும் 12 ஜோதிர் லிங்க திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான், தன்னை ஜோதி லிங்க வடிவில் வெளிப் படுத்தியதாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் திருவாதிரை நாள் ஜோதிர்
லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது.
சிவ புராணத்தில் கூறிருப்பது படி, சுப்பிரியா என்னும் சிவ பக்தையை, தாருகா என்ற அசுரன் பிடித்துச் சென்றான். அவளை, தாருகாவனம் என்ற இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தான். பாம்புகளின் நகரமாக விளங்கிய அந்த
இடத்திற்கு, தாருகாசுரன் தான் மன்னனாக இருந்தான். சிறையில் அடைக்கப்பட்டிருந்த சப்பிரியா, சிவபெருமானை நினைத்து அவரது மந்திரங்களை உச்சரித்தாள். மேலும் அங்கிருந்தவர்களையும் சிவனின் மந்திரங்களை உச்சரித்து வணங்கும்படி செய்தாள். இதையடுத்து அங்கு தோன்றிய சிவபெருமான், தாருகா அசுரனைக்
கொன்று, அங்கிருந்த கைதிகள் அனைவரையும் விடுவித்தார். அவரே இந்த ஆலயத்தில் ஜோதிர் லிங்கமாக இருப்பதாக பக்தர்களின் நம்பிக்கை.
தாருகா அசுரன் இறக்கும் முன்பாக, இந்த இடம் தன் பெயரில் வழங்கப்பட வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான். அதன்படி நாகர்களின் அரசனாக விளங்கிய அவனது
பெயராலேயே #நாகநாத் என்று இந்த இடம் வழங்கப் படுகிறது. ஆலயமும் நாகநாதர் கோவில் என்று பெயர் பெற்றுள்ளது. இது மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களில் இதுவே மிக தொன்மை ஆனது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இன்னொரு புராண கூற்றுப்படி, தாருகாவனம் என்று
அழைக்கப்பட்ட இந்த இடத்தில் பல ரிஷிகள் தங்களின் மனைவியுடன் வாழ்ந்து வந்தனர். அந்த ரிஷிகள் அனைவரும், இறைவனைப் பற்றிய சிந்தனை இல்லாமல், இந்த உலகமே தங்களால் தான் இயங்குகிறது என்று நினைத்துக் கொண்டனர். அவர்களின் கர்வத்தை அடக்க நினைத்த சிவ பெருமான், பிட்சாடன மூர்த்தியாக, தாருகா
வனத்திற்கு வந்தார். அவரது அழகில் மயங்கிய ரிஷிகளின் மனைவிகள், தங்களின் சுய நினைவை இழந்து, சிவபெருமானின் பின்னால் சென்றனர். இதைக் கண்ட ரிஷிகள் கோபம் கொண்டு, சிவபெருமானை கொல்ல முயன்றனர். உடனே சிவபெருமான் அங்கிருந்து ஒரு பாம்பு புற்றுக்குள் சென்று மறைந்தார்.
ரிஷிகள் புற்றுக்குள்
பார்த்தபோது, அங்கு ஜோதிர் லிங்கமாக இறைவன் காட்சி கொடுத்தார். தங்களது தவறை உணர்ந்த ரிஷிகள், இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர். லிங்கமாக இருந்த சிவபெருமானுக்கு, நாகப்பாம்பு ஒன்று குடைப் பிடித்தது. இதனால் அவருக்கு நாகநாதர் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப் படுகிறது. நான்கு பக்கமும் உயர்ந்த
மதில் சுவர்கள் கொண்டு, விசாலமாக அமைந்திருக்கிறது இந்த ஆலயம். நாமதேவர் என்னும் சிவபக்தர், ஊர் மக்களால் விரட்டப்பட்டு ஊரின் தென் திசையில் சென்று இறைவனைக் குறித்துப் பாடினார். நாமதேவரின் பாடல் களைக் கேட்கும் பொருட்டு மூலவர் தென்திசை நோக்கித் திரும்பினார் என்று சொல்லப் படுகிறது. எனவே
மூலவர் கருவறை தென்திசை நோக்கியும், கோபுரம் கிழக்கு திசை நோக்கியும் உள்ளன. சிறந்த சிற்ப வேலை களுடன் கூடிய நீண்ட, கூம்பு வடிவ கோபுரம் இந்த கோவிலில் காணப் படுகிறது. மேலும் ஆலயத்திற்கு வெளியே மிகவும் உயரமான, யோக நிலையில் இருக்கும் சிவனின் சிலை ஒன்றும் உள்ளது. இந்த ஆலயத்தில்
சிவராத்திரி மிகவும் சிறப்பாக நடைபெறும். அப்போது இங்கு அதிகமான அளவில் பக்தர்கள் கூடுவார்கள்.
குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகைக்கு அருகில் 17 கிமீ தொலைவில் நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. ரெயிலில் துவாரகைக்கு வந்து, அங்கிருந்து கார் அல்லது பஸ் மூலம் நாகநாத் செல்லலாம்.
ஓம் நமசிவாய🙏
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Nov 30
#MahaPeriyava
Almost everyone is familiar with the name Sri Ki.Va.Jagannathan, a very eminent Tamil scholar, poet and author. Once when MahaSwamigal was camping in Mylapore, Sri https://t.co/wHfXISFUpw.Ja’s daughter-in-law, Tripurasundari went there for darshan Image
She stood in the long queue along with other devotees waiting to see the Mahan and finally reached the place where He was sitting. She was introduced to Sri Maha Periyava. She kept the fruits, flowers and other offerings which she brought for the Mahan in a bamboo tray in front
of Him and prostrated. Raising His right hand, the Mahan blessed Tripurasundari and asked “Where are you staying in Madras?”
“Here in Mylapore Periyava” replied Tripurasundari.
“Do you have the habit of going to temples?”
“Yes Periyava. Especially, I always enjoy going to
Read 9 tweets
Nov 30
#Words_that_have_come_true
1. A day will come when Congress leaders will wear their Janeu outside of their coat and shirt and vote in the elections - Veer Savarkar in 1959.

2. One day BJP will rule the whole country - Atal Behari Vajpayee in the Parliament in 1999.
3. I will definitely free India from the Congress - Narendra Modi in 2010

4. I am leaving the Congress party today. But I vow that I will build an establishment against the philosophies of Congress which will push back the party. Even if it takes a 100 years, does not matter
to get rid of 800 years of slavery. But this establishment will unite India and create a United Akanda Bharat - Keshav Boliram Headgewer, Founder of RSS in 1922 in Nagpur.

5. One day the dead Hindu religion will wake up and say proudly ‘I am a Hindu’. At that time Even the US
Read 11 tweets
Nov 30
#திருக்கூடலூர்_வையங்காத்தபெருமாள் #ஜெகத்ரட்சகன்
மூலவர்: #வையங்காத்தபெருமாள் (#ஜெகத்ரட்சகன்) #உய்யவந்தார் என்னும் திருநாமம் நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். திருக்கூடலூர் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது. மதுரையை தென் ImageImage
திருக்கூடலூர் என்றும் இதனை வட திருக்கூடலூர் என்றும் கூறுவர். அதே போல் ஆடுதுறை என்னும் பெயரும் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் அமைந்துள்ளது. சிறிய கிராமம் #ஆடுதுறை. இங்கு பெருமாளை எழுந்தருளச் செய்தமையால் “ஆடுதுறைப் பெருமாள் கோயில்” என்றே Image
வழங்கப்படுகிறது. திருமால் #வராஹ அவதாரமெடுத்துப் பூமியை (இவ்விடத்தில்) பிளந்து உள்புகுந்து #ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து அவ்விடத்துத் தம் தேவியைத்தாங்கி காட்சி தந்தார் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கையின் பாடலும் சான்று காட்டும். பூமாதேவியை காக்கும் பொருட்டு வராஹ
Read 13 tweets
Nov 30
#கோடிலிங்க_தரிசனம்
கர்நாடகாவின் சிறப்புமிக்க இடம் ஹம்பி. இது வட கர்நாடகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம். விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் அதன் தலைநகராக விளங்கிய விஜயநகரத்தின் இடிபாடுகளுக்குள் இருக்கிறது, தற்போதைய ஹம்பி. இந்த ஊர், விஜயநகர பேரரசு காலத்திற்கும் முற்பட்டது. தற்போது Image
ஹம்பி, ஒரு முக்கியமான புராதன விஷயங்கள் அடங்கிய இடமாக உள்ளது. பல வியப்பூட்டும் அம்சங்களை தன்னகத்தே கொண்ட விருப்பாட்சா கோவில், பழம்பெரும் நகரத்தின் நினைவுச் சின்னங்களைத் தாங்கி இந்த ஊர் நிற்கிறது. அதன் ஒரு பகுதிதான் சிவலிங்கங்கள். ஹம்பியில் உள்ள துங்கபத்ரா நதிக்கு அருகில் பாறைகளில் Image
கோடி லிங்கங்கள் ஆங்காங்கே செதுக்கப் பட்டுள்ளன. கோடி லிங்கங்கள் இருப்பதால், இந்த நதிக்கு 'கோடி லிங்க சக்கர தீர்த்தம்' என்றும் பெயர். ராமாயண காலத்தில் துங்கபத்ரா நதி, 'பம்பா' என்றும், மகாபாரத காலத்தில் 'துங்கேனா நதி' என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இதே போல கம்போடியாவிலும் ஓரிடத்தில் Image
Read 4 tweets
Nov 30
#நற்சிந்தனை
காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒருவன், ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான். இவனை காப்பாற்ற ஆளில்லை. “யாராவது என்னை தூக்கி விடுங்கள், காப்பாற்றுங்கள்" என்று கூவி கதறினான். இவனை காப்பாற்ற ஒருவர் வந்தார். "அடடா! கீழே விழுந்து விட்டாயா! கவலைப்படாதே நான் உன்னை Image
காப்பாற்றுகிறேன்" என்றார். முடிச்சுகள் உள்ள கயிறை போட்டு, "இதோ இந்த கயிற்றில் உள்ள முடிச்சை பிடித்து இடுப்பில் கட்டிக்கொள். நான் உன்னை தூக்கி விடுகிறேன்" என்றார்.
இவனோ கயிறை பிடித்து கொள்ள மறுத்தான்.
"ஏனப்பா! நான் தான் கயிறை போட்டு இருக்கிறேனே. இங்கு என்னை தவிர ஆள் கிடையாது. இந்த
கயிறை பிடித்துக் கொள். நீ விழுந்து கிடக்கிறாய். நான் உன்னை காப்பாற்ற வேண்டியவன். நம்பிக்கையுடன் கயிறை பிடித்துக்கொள்" என்றார் வந்தவர்.
"அது சரி. நான் இந்த கயிறை பிடித்து கொண்டு ஏறும் போது பாதியில் அறுந்து விட்டால்?" என்றான் விழுந்தவன்.
"கவலையே படாதே! இது அறுகவே அறுகாத கயிர்.
Read 19 tweets
Nov 30
#MahaPeriyava Ghatam Maestro Vikku Vinayakram being an ardent devotee of Paramacharya, he attributes all his success to His bountiful blessings. “I have felt His divine presence on more than one occasion,” he says. Once Vinayakram had gone on a tour to Athens to perform at a Image
concert along with L. Shankar and Zakir Hussain. Somehow the Ghatam (a circular pot beaten with the hands as a percussion instrument in South Indian music) he took broke a few days before the scheduled date of performance. Vinayakram was in tears and called his wife in Chennai Image
and told her that he wanted to return as there was no point of staying in Athens. His wife asked him to wait for one day and in the meantime went to Kanchi Mutt and explained the situation to Sri Maha Periyava. Periyava did not react to her narrative and kept quiet. She was in
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(