#சிற்பியின்_பெயரில்_ஓர்_ஆலயம்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல்லில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பாலம்பேட் கிராமத்தில் #ராமப்பா_கோயில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள கல்வெட்டுகளின்படி, காகதீய மன்னர் கணபதி தேவாவின் தளபதி ரெச்சர்ல ருத்ராவினால் பொ.ஆ. 1213-இல் கட்டப்பட்டது. எந்த ஒரு
ஆலயக் கட்டுமானமும், பிரதான தெய்வத்தின் பெயரைக் கொண்டே அழைக்கப் படுவது வழக்கம். அநேகமாக, உலகில் சிற்பியின் பெயர் தாங்கி, படைப்பாளிக்கு உயரிய கௌரவம் அளித்த ஆலயம் இதுவாகவே இருக்க முடியும். ஹொய்சாள நாட்டை சேர்ந்த ராமப்பா என்ற சிற்பியின் தலைமையில் திட்டமிடப்பட்டு, 14 வருடங்களில்
கட்டப்பட்ட இந்த சிவாலயம் (இராமலிங்கேஸ்வரர்), கடவுளின் பெயர் கொண்டு அழைக்கப்படாமல், சிற்பியின் பெயர் சூட்டப்பட்டு ராமப்பா ஆலயம் என்றழைக்கப் படுவதால் சிறப்பிடம் பெறுகிறது. 13-ஆம் நூற்றாண்டில் காகதீய பேரரசுக்கு பயணம் மேற்கொண்ட இத்தாலிய வணிகரும், பயணியுமான மார்கோ போலோ (Marco Polo),
இக்கோயிலைப் பற்றி “கோயில்களின் விண்மீன் மண்டலத்தில், இக்கோயில் ஒரு பிரகாசமான நட்சத்திரம்” என்று தனது பயணக் குறிப்புகளில் புகழ்ந்துள்ளார். 6 அடி உயர நட்சத்திர வடிவ மேடையில், ஹொய்சாள பாணியில் கம்பீரமாக நிற்கும் இந்தக் கோயில், நுணுக்கமாக வடிவமைக்கப் பட்ட தூண்கள், புராண நிகழ்வுகளை
விவரிக்கும் அற்புதமான சிற்பங்கள், பேரழகு மதனிகா சிற்பங்கள் ஆகியவற்றால் செழுமைப் படுத்தப் பட்டுள்ளது. சிவப்பு மணற்கல் கொண்டு சுவர் கட்டுமானம் செய்யப் பட்ட இக்கோவிலில் பயன்படுத்தப் பட்ட கற்கள் மிகவும் லேசானவை. அவை நீரில் மிதக்கும் தன்மை கொண்டவை. அதனால் மரத்தில் செய்யப்படுவது போல
நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள், சிற்பங்கள் போன்றவை மட்டும் கறுப்புநிற பஸால்ட் (black basalt) கற்களால் செதுக்கப்பட்டு நுணுக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. #மதனிகா_சிற்பங்கள்
இவ்வாலயத்தில் காகதீய கலையின் தலை சிறந்த படைப்புகளான மதனிகா சிற்பங்களின் பேரழகு காண்போரின் கண்களுக்கு
விருந்து. மெல்லிய உடல்களும், நளின விரல்களும் கொண்ட உடல் அமைப்புடன், காதல், கூச்சம், காமம், சிந்தனை, கோபம், வலி என பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகபாவனைகளுடன் மதனிகா சிற்பங்கள் ராமப்பா கோயிலின் வெளிப்புறச் சுவர் தூண்களில் செம்மையாகச் செதுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு மதனிகாவும்
வெவ்வேறு முகபாவனைகள், மெல்லிய உடல் அமைப்பு, தலை அலங்காரங்கள், காதணிகள், ஆபரணங்கள், நகைகள், நிற்கும் பாங்கு, உடைகள் போன்றவற்றுடன் தனித்துவமாக, வேறுபாடுகளுடன் செதுக்கப்பட்டு உள்ளன. பிரதிபலிக்கும் வண்ணம் பளபளப்பு ஏற்றப்பட்ட கற்களில், இன்றைய நவீனத்துவத்துடன் போட்டி போடும் வகையில்
கூடுதல் உயரம் கொண்ட காலணிகள்
(high heel) அணிந்த மதனிகா சிற்பம் உலகப்புகழ் பெற்றது. இன்று எம்பிராய்டரி செய்த பூக்கள் போன்ற அலங்காரக் குட்டைப் பாவாடை (mini skirt) அணிந்து கையில் வில்லுடன் வேட்டைக்குச் செல்லும் பெண்ணின் சிற்பமும் குறிப்பிடத்தக்கது. தன் காலில் இருந்த முள்ளை அகற்றும்
போது ஏற்படும் வலியை முகத்தில் வெளிப்படுத்தும் சிற்பம் சிற்பியின் சீரிய திறனுக்கு சிறந்த எடுத்துக் காட்டு. மேலும் பாம்புடன் நாகினி, நடனம், அழகுபடுத்துதல், இசைக்கருவி வாசிப்பது என்ற பல்வேறு தோற்றங்களில் மதனிகா சிற்பங்கள் தூண்களை அலங்கரிக்கின்றன. ஹைதராபாத் நிஜாம்களின் அரண்மனைகளை
அலங்கரிக்க சில மதனிகா சிலைகள் அகற்றப்பட்டன. பின்னர், அவை அங்கிருந்து மீட்டெடுக்கப்பட்டு தற்போது மீண்டும் பொருத்தப்
பட்டுள்ளன. நிறவேறுபாடு மற்றும் சிமென்ட் வேலைகள் மற்றவற்றிலல் இருந்து அந்த சிற்பங்களை வேறுபடுத்தி அடையாளம் காண உதவுகின்றன. யுனெஸ்கோ இக்கோவிலை உலகப் பாரம்பரிய கோவிலாக
அறிவித்துள்ளது. இக்கோவிலில் குடி கொண்டிருப்பவர் ராமலிங்கேஸ்வரர். நம் கோவில்கள் வழிபாட்டுத் தலமாக இருப்பதோடு அவை கலை கலாசாரத்தின் களஞ்சியமாக உள்ளன. கோவில்களை பேணி பாதுகாப்போம். நம் பண்பாட்டினை தொடர்ந்து கடைபிடிப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-05-04-2017 குமுதம் லைஃப் ஒரு பகுதி.
ஸ்ரீமடம் பாலு சபரிமலையை விட்டு இறங்கி எர்ணாகுளம் வந்து ஒரு வக்கீலின் வீட்டில் வந்து தங்கினார் .அங்கேயே உணவருந்தினார். வக்கீலின் தாயார் இவருக்கு ஆசி வழங்கிய பின்னர்,
"டேய் நீ ராமய்யர் மாமாவைப் பார்க்காமல் போகாதே. மகா பெரியவா கிட்டேயிருந்து வந்திருக்கேன்னு சொன்னா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்" என்று வற்புறுத்திச் சொல்லவே ஸ்ரீமடம் பாலு அதற்கு சம்மதித்தார். ராமய்யருக்கு வயது 90 இருக்கும். இவர்(பாலு) காஞ்சி மடத்தில் இருந்து வந்திருப்பதாகவும்,
ஸ்ரீமகா பெரியவாளிடம் கைங்கர்யம் செய்பவர் என்று தெரிந்ததும் அந்த முதியவர் இவர் காலில் திடீரென்று விழுந்து நமஸ்கரித்தார். ஸ்ரீமடத்து பாலுக்கு உடலும் உள்ளமும் பதறியது. இவ்வளவு வயதானவர் நம் காலில் விழுவதா? அபசாரம் அல்லவா என்று பதறினார்.
"நான் ரொம்பச் சின்னவன்.எனக்குப் போய் நமஸ்காரம்
#பர்வதமலை திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இம்மலை. மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும்
சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. இம்மலைமீது சிவன் தனது பாதம் வைத்ததாக வரலாறு. இம்மலை மீதுள்ள மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் கி.பி. 3-ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாகக்
கல்வெட்டுகள் உள்ளன. இம்மலைக்குச் செல்வோர் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத் தொடங்குவர். மலை ஏறும் வழி ஓரளவிற்கே வசதியான வழியாக அமைந்துள்ளது. பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியில் இருந்து வரும்
#MahaPeriyava
Author: N. Ramaswamy, Secunderabad
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol. 3 (in Tamil)
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
I had been waiting for two hours for the darshan but couldn't have it. Since waiting any longer
would affect my office work (I had come to the nearby junction to do the inspection), with a kumbidu (joining palms in reverence) from a distance, I went to attend to my work. Two hours later, an assistant from SriMatham came to the railway station and told me that Sri Maha
Periyava had asked him to bring me.
"Tell me exactly what Periyava told you."
"Go and look in the Satara station. That Ramaswamy would be doing the inspection there. Ask him to come", he said.
I finished my work in a hurry and went for the darshan. I wanted to seek His pardon but
#டாகோர்_கோவில் துவாரகைக்கு அருகில் டாகோர் என்ற கிராமம் உள்ளது. அங்கு #போடணா என்பவர் வாழ்ந்து வந்தார். எப்போதும் துவாரகையில் உள்ள
ஸ்ரீ கிருஷ்ணனையே எண்ணித் துதித்து, அவரைக் காண மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருப்பார். அதனால் அவரை அனைவரும் #துவாரகா_ராமதாசர் என்று கூப்பிட்டனர்.
தினந்தோறும் உஞ்சவிருத்தி எடுத்து வந்து மனைவியிடம் கொடுப்பார். அவள் அதை சமைத்து, இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு பிறகு சாப்பிடுவார்கள். ஒவ்வொரு ஏகாதசிக்கும் விரதமிருந்து, இறைவனைப் பாடி மறுநாள் துவாதசியன்று முடிந்த அளவு ஏழைகளுக்கும் உணவளித்து, பின் உண்பார்கள். அதேபோல் ஒவ்வொரு ஆடி
மாதம் ஏகாதசியன்று, டாகோரிலிருந்து பாத யாத்திரையாக துவாரகை சென்று, துவாரகாநாதனைத் தொழுது, மறுநாள் துவாதசியன்று தரிசித்துத் திரும்புவார். இவ்வாறு காலம் சென்றது. அவரது வயதான காலத்தில் தள்ளாமையால், முன் போல துவாரகைக்குச் செல்ல கஷ்டமாக இருந்தாலும், விடாமல் விரதத்தைப் பின்பற்றினார். ஓர
#சனாதன_தர்மம்
சனாதன தர்மம் என்பது முக்கியமாக நமது உயிருக்கும் உள்ளத்திற்கும் தொடர்புடைய நியதிகள் (இயற்கை சட்டங்கள், ஒழுக்கங்கள்) என்னவென்று புரிந்து கொண்டு அதனுடைய அடிப்படைத் தன்மையை அறிந்து கொண்டு, நாம் பிறவி பயனை அடைய வேண்டும் என்பதாகும். அடிப்படையை உணர்ந்து கொண்டால் தான் இந்த
வளர்ச்சி சாத்தியமாகும். இந்த அடிப்படை தன்மையை தான் #சனாதன_தர்மம் என்கிறோம்.
உண்ணும் உணவு தானியங்களில் *'நவதானியங்கள்'* என்று ஒன்பது வகையாக நிர்மாணித்து, அந்த தானியங்களுக்கு அதிபதியாக *'நவக்கிரகங்கள்'* என்று ஒன்பது கிரகங்களையும் அமைத்தனர் நம் முன்னோர்கள். நவதானியங்களை 9 என்ற
அவர்கள், திசைகளை எட்டாக பிரித்தனர்.
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு
இசையை ஏழாக கொடுத்தனர்.
ச ரி க ம ப த நி
இசையை ஏழாக கொடுத்த அவர்கள் சுவையை ஆறாக பிரித்தனர்.
இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு
உவர்ப்பு
துவர்ப்பு