நீலம் இது ஒரு நிறம் மட்டுமல்ல இச்சமுதாயத்தில் அது ஆற்றிய தொண்டுகள் பல. ஆம், நீலம் என்றாலே நினைவிற்கு வருவது நம் நாட்டின் புரட்சியாளர் கற்பி புரட்சி செய் ஒன்று சேர் என்று கூறிய மாமேதை,
சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் என்றுறைத்த சீர்திருத்தவாதி.
(1)
நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மேதை , இதற்கெல்லாம் மேலாக "#ஜெய்_பீம்" என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர், அவர் தான் பாபா சாகேப் என்றழைக்கப்படும் Dr. B. R . அம்பேத்கர்.
(2)
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்,உயர் கல்வி பெற அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்,பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர், தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்து கலகம் செய்தவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்;
(3)
ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கியவர், அனைத்திற்கும் மேலாக சமூகநீதி காக்க போராடிய போராளி.
சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் தீவிரமாக எதிர்த்தவர். அதற்காக சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின்
(4)
கைகளில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடியவர்.
தீண்டாமையின் காரணம் சதுர்வர்ணத்தை போதித்த இந்துமதம் தான் என ஆதாரப் பூர்வமாக நிறுவியவர்.
தீண்டாமை ஒழிய இந்துமதம் ஒழிய வேண்டும் என்றவர். அதற்கான முதல் படியாக பல லட்சக்கணக்கான மக்களுடன் இந்துமதத்தை விட்டு வெளியேறியவர்.
(5)
இந்து மதத்தில் உள்ள பொய் புரட்டுகளை ஆராய்ந்து ஆதாரத்துடன் " Riddles in Hinduism" என ஒரு புத்தகமாகவவே வெளியிட்டவர். தன் ஒவ்வொரு செயலிலும் சமூக ஏற்ற தாழ்வை கற்பித்த சனாதனத்தை எதிர்த்தவர்.
(6)
இப்படி இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளில் அவர் கொண்ட கொள்கைகளை மனதில் ஏற்று சமூகநீதிக்காய் குரல் கொடுப்போம் என உறுதியேற்போம்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்துவாக சாகமாட்டேன் புத்தகத்திலிருந்து முக்கியமான பகுதியை இணைத்துள்ளேன்.
நன்றி🙏🏽
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பா. ரஞ்சித் அவர்களின் திரைப்படங்களில் பேசப்பட்ட சில புத்தகங்கள் குறித்த சில தகவல்கள்.
மெட்ராஸ் திரைப்படத்தில் "ஜி.கல்யாண ராவ்" அவர்கள் எழுதிய "தீண்டாத வசந்தம்" புத்தகத்தை காண்பித்திருப்பார்.
பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது அடையாளத்தையும்,
(1)
அங்கீகாரத்தையும் இந்த சமூகத்தில் பெறுவதற்கு எத்தனை போராட்டங்களை சந்திக்கிறார்கள் என்பதனை, நிலாத்திண்ணை வழியே எல்லண்ணா குடும்பத்தின் ஐந்து தலைமுறைகளின் வாழ்க்கையின் ஊடாக நமக்கு படம் பிடித்துக்காட்டும் உணர்வுப்பூர்வமான புத்தகம்.
(2)
கபாலி திரைப்படத்தில் "ஒய்.பி.சத்தியநாராயணா" அவர்களின் "My Father Baliah" எனும் புத்தகம் காண்பிக்கப்பட்டிருக்கும்.
தென்னிந்தியாவில் உள்ள ஒரு தலித் குடும்பத்தின் அசாதாரணக் கதை இது. நர்சியா தன் தந்தைக்கு ஒரு நிஜாம் அவர்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட நிலத்தை இழந்து,
உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய மற்ற ஜீவராசிகளுக்கு புல், பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சியே கிடையாது. ஆனால் அவையெல்லாம் மனிதர்களைப் போலவே தோன்றி வாழ்ந்து செயல்பட்டு அழிந்து மாய்ந்து போகின்றன.
(1)
இதில் எவ்வித மாறுதலும் காண முடிவதில்லை.
பிறவியில் இயற்கையாய் உள்ள பேதங்களின் சிறு மாறுதல்களின் அடிப்படையில் பேதங்களின் அடிப்படையிலும் பேதங்களைக் காண்பதற்கில்லை. ஜீவ நூல் - ஜீவ ஆராய்ச்சி வல்லுநர்கள் ஆதியில் அதாவது, உலகம் தோன்றிய காலத்தில் மனிதனும் மற்ற மிருக
(2)
ஜீவப்பிராணிகளும் ஒன்றுபோலவேதான் நடந்து வந்ததெனக் குறிப்பிட்டுள்ளனர்.
மனிதனுக்கு மற்ற ஜீவராசிகளைவிட அறிவுத் துறையில் சிறிது மாற்றம் இயற்கையில் இருந்துவருகிற காரணத்தால் மனிதனுக்கு ஆசைப்பெருக்கெடுத்து - வாழ்க்கையின் பெருங்கவலைக்கு ஆளாகி,
(3)
புராணக்கதைகள் முற்றிலும் கடவுள்கள் சார்ந்து எழுதப்பட்டுள்ளது, அவை புனிதமானது, அதை கொச்சை படுத்தக் கூடாது என பலர் சொல்லலாம். யாரும் மெனக்கெட்டு அவற்றை கொச்சைப் படுத்த வேண்டிய அவசியமில்லை, காரணம் அதில் எழுதப்பட்டுள்ள கதைகள் நாம் சிந்திப்பதை விட மிகவும் கொச்சையாகத் தான் உள்ளது.
(1)
அதற்கு ஒரு சிறு உதாரணம் இந்திரனின் கதை. இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் இருக்கிறது என்ற கதை பலருக்கும் தெரியும். ஆனால், அது கண்கள் அல்ல பெண்குறிகள் என எத்தனை பேருக்கு தெரியும்!?
கவுதம முனிவரால் இந்திரனுக்கு அளிக்கப்பட்ட சாபத்தின் பலன் தான்,
(2)
இந்திரனின் உடல் முழுக்க ஆயிரம் பெண் குறிகள் தோன்ற காரணம் என "சிவமகா புராணத்தில்" சொல்லப்பட்டுள்ளது.
சிவமகா புராணத்தில் சொல்லப்பட்டுள்ள இந்திரனின் சாபக்கதையை முழுமையாக கீழே உள்ள படத்தில் படித்துப்பாருங்கள். 👇🏽
முன்பு ஒரு காலத்தில் அக்னி தேவன் சப்தரிஷிகளின் மனைவியர் மீது மோகம் கொண்டான், அந்த மோகத்தால் அவர்களை எப்படி அனுபவிப்பது என்று மோக அக்னியால் மிகவும் வாடினான்.
(1)
இதை உணர்ந்து கொண்ட அவன் மனைவி சுவாஹா தேவி, தன் கற்பின் சக்தியால் அந்த முனி பத்தினிகளின் உருவங்களைப் போல் ஒவ்வொன்றாக தானே வடிவம் எடுத்து தன் கணவனை கட்டித்தழுவி அவனுக்கு ஆனந்தம் கொடுத்து வந்தாள்.
(2)
அவ்வாறு அவள் ஆறு ரிஷி பத்தினிகளின் உருவங்களையும் எடுத்தாள், ஆனால் அருந்ததியின் உருவத்தை மட்டும் அவளால் எடுக்க முடியவில்லை. அருந்ததியின் உருவம் தன்னால் எடுக்க முடியாததை நினைத்து சுவாஹா தேவி மிகவும் வியப்படைந்தாள்.
ஓணம் எனக் கேட்டவுடன் அனைவர் மனதிலும் அது தொடர்பாக நினைவுக்கு வரும் கதை "கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்;
(1)
அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு
(2)
அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார்" என்ற கதை தான்.
ஓணப் பண்டிகை என்பது ஆண்டுக்கு ஒரு முறை தங்களைக் காண வரும் மன்னன் மகாபலியை வரவேற்கும் ஒரு திருநாளாக கேரள மக்கள் கொண்டாடுகின்றனர் என நம்பப்படுகிறது. இங்கு, நாம் கவனிக்க வேண்டிய