#ஶ்ரீவைஷ்ணவம் #திருப்பாணாழ்வார் #அமலனாதிபிரான்
கார்த்திகை, ரோஹிணீ - 08.12.2022
திருப்பாணாழ்வார் திருநக்ஷத்திரம்
கார்த்திகை ரோஹிணீ - நீளாதேவி அவதரித்த உறந்தை என்னும் உறையூரில் திருமாலின் ஶ்ரீவஸ்தம் என்னும் மறுவின் அம்சமாய் அவதரித்த திருப்பாணாழ்வார் திருநக்ஷத்ரம்! பிறப்பால் பாணராக
இருந்தாலும், இவரது பண் மற்றும் பக்தி பெருக்கால் இவரை ஆட்கொண்டான் அரங்கன். தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் தன்னுடைய கால் ஷேத்ரமண்ணில் படக் கூடாது என்பதில் வைராக்யமாக இருந்த பாணர், தினமும் காவிரிக் கரையினில் நின்று கையில் யாழுடன் அரங்கனை சேவித்து மெய்மறந்து பாடிக் கொண்டு இருப்பார்.
ஒரு நாள் அரங்கனின் திருமஞ்சனத்திற்காக நீர் கொண்டு செல்ல பொற்குடத்துடன் காவிரிக்கு வந்த பட்டர் லோகசாரங்கர், வழியை மறைத்து தன்னிலை மறந்து பாடிக்கொண்டிருந்த பாணரை விலகும்படி சொல்ல, அது அவர் செவியில் ஏறவில்லை. கோபமுற்ற லோகசாரங்கர் ஒரு கல்லெடுத்து வீச, அது பாணரின் நெற்றியில் பட்டு,
ரத்தம் வந்தது. உடன் உணர்வு வந்து பதறிய பாணர் அங்கிருந்து அகன்றார்! நீரை முகந்து கொண்டு சந்நிதிக்கு திரும்பிய லோகசாரங்கர், அரங்கனின் நெற்றியில் செந்நீர் பெருகி வருவதைக் கண்டு மனம் பதைத்தார், ஏதும் செய்யவியலாமல் விதிர் விதிர்த்தார்.
“பல காலமாக நம்மைப் பாடி வருகிற பாணன் புறம்பே
நிற்கப் பார்த்திருக்கலாமோ?" என்ற பெருமான், "எம் அன்பனை, இழிகுலத்தோன் என எண்ணாது உம் தோளில் ஏற்றி எம்முன் கொணர்க” என்றான்! மனம் வருந்திய லோகசாரங்கர் அரங்கனின் ஆக்ஞையை நிறைவேற்றி, காவிரிக் கரையிலிருந்து சன்னதி அடைந்த பாணன், வையமளந்தாணை கண்ணாரப் பருகி அவன் திருமுடி முதல் திருவடி வரை
ஒவ்வொரு அவயமாக கண்டு, குளிர்ந்து, மனமுருகிப் பாடிய பத்து பாசுரங்களே அமலனாதிபிரான் என்ற பிரபந்தம். ஒவ்வோர் அவயமாக கண்டு பாடியபோது பரவஸித்து மகிழ்ந்த அரங்கன், பத்தாம் பாசுரத்தைக் கேட்டு திடுக்கிட்டான்!
நான் பிறவியெடுத்ததன் பலன் முடிந்தது. இனி என் கண்களுக்கு வேலையில்லை என்று
தீர்மானமாக சொல்ல, தீர்த்தன் திடுக்கிட்டான். இதற்காகவா லோகசாரங்கரை சுமந்து வரச்சொன்னோம்? இனி எனக்கு கண்களே தேவையில்லை என்று சொன்னவனை அந்தகனாய் வெளியே அனுப்பவா? அது எனக்குத் தகுமா?
பக்கத்தில் இருந்து பாணருக்காய் பரிந்துரைத்த பிராட்டிக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்த அரங்கன்,
அவனை தன்னருகே அழைத்து #திருப்பாணாழ்வாராக்கி கொண்டார்.
"கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன்-என்னுள்ளம் கவர்ந்தானை; அண்டர்கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்டகண்கள்,
மற்றொன்றினைக் காணாவே!"
-அமலனாதிபிரான் (10)

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 10
#திருவண்ணாமலை
திருவண்ணாமலை மலை ஒரு பிரம்மாண்டத்தின் உச்சம். பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. சுமார் பல மில்லியன் கோடி வருடம் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். Carbon datingம் இதை உறுதி செய்கிறது. மலையே சிவபெருமானின் அம்சம். Image
அதாவது பல சிவலிங்கங்களை உள்ளடக்கியது. அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 அதி சக்தி வாய்ந்த சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சித்த புருஷர்கள் சொல்கின்றனர். இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டு Image
இருக்கிறோம். ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகிறது. இதனால் மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் Image
Read 14 tweets
Dec 10
#தொட்டமளூர்_நவநீதகிருஷ்ணன்

வியாசராஜர், புரந்தரதாசர், ராகவேந்திரர் போன்ற மகான்கள் வழிபட்ட தலம் கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தொட்டமளூர் அப்ரமேயப் பெருமாள் கோயில். ஆயர்பாடியில் கண்ணன் சிறுகுழந்தை வடிவில் தவழும் அதே திருக்கோலத்தில் இங்கே தவழ்கிறான் கண்ணன். நான்காம் Image
நூற்றாண்டில் ராஜேந்திர சிம்ம சோழன் எனும் மன்னன் இந்தக் கோவிலைக் கட்டி உள்ளார். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுகளும் இங்கு காணப் படுகின்றன. கிழக்குப் பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், மூலவர் தரிசனத்தைக் காணலாம். இங்கு மூலவராக மூன்றடி உயரத்தில் சாளக்கிராமக் ImageImage
கல்லில் வடிவமைக்கப்பட்ட ராமஅப்ரமேயர் எழுந்தருளி உள்ளார். இந்தப் பெருமாளை ராமர் வழிபாடு செய்துள்ளதால் ‘ராம அப்ரமேயர்’ என்று பெயர். ‘அப்ரமேயன்' என்ற சொல்லுக்கு ‘எல்லையில்லாதவன்' என்று பொருள். இந்த ஊருக்கு வேறு சில பெயர்களும் உள்ளது
தக்ஷிண அயோத்தியை, சதுர் வேத மங்களபுரம், ராஜேந்திர Image
Read 19 tweets
Dec 9
#MahaPeriyava
This industry was a partnership business. Lot of money had been pumped in and when it became sick, one of the two partners stayed out of the day to day running of the factory. The other struggled to continue the business and somehow managed to pay the workers and Image
keep the wheels moving. But, at a certain point, it became a court case. The man who was managing the show hired a lawyer. The lawyer and he were both devotees of Sri Maha Periyava. The lawyer suggested that they go to Kanchi and take Periyava's blessings. But the client said he
did not wish to disturb Sri Maha Periyava for such a petty materialistic thing. The lawyer was surprised and impressed and said, “Alright, I will conduct the case. We will take His blessing only to guide us.” The client reluctantly agreed and the next morning they drove down to
Read 8 tweets
Dec 9
#பழனி_தண்டாயுதபாணி_திருக்கோயில்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சிறு குன்றின் மேல் தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இக்கோவில் முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். புராண காலங்களில் திருஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும் அழைக்கப்பட்டது Image
முருகனின் விக்ரகம் நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப் பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப் பொருட்கள் சேர்ந்தது. இவை ஒன்று சேர்ந்து மருந்தாக அமைகிறது. இந்த நவபாஷாண விக்ரகம் மீன்களை போன்று செதில்களை கொண்டு உயிர்ப்புடன் இருந்து வியர்ப்பது ஓர் Image
அதிசயம். வெப்பத்தை தணிக்க கொடுமுடி தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவில் விக்ரகத்தின் மீது முழுவதுமாக சந்தனக்காப்பு சத்தப்பட்டு காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப் படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. Image
Read 19 tweets
Dec 9
#மகாபெரியவா
பெரியவர் மகாராஷ்டிரத்தில் பயணம், பூனாவில் முகாம். அங்கு வாழ்ந்து வந்த ஒரு அன்பர் இப்போதைக்கு அவர் வம்பர் ஏன் என்றால் அவர் ஆபிசாரம் எனப்படும் வேலைகள் செய்து மக்களுக்கு மருந்து வைப்பது மந்திரம் வைப்பது பில்லி சூனியம் என்று பணம் பண்ணுபவர். யாரிடமும் நல்ல பெயர் இல்லாதவர்.
பெரியவர் அங்கு வந்திருப்பது தெரிந்து சொல்லத்தகாத வார்த்தைகள் சொல்லி 'நான் பெரியவனா இல்ல அவர் பெரியவரான்னு பார்த்து விடுகிறேன். என் சித்து மற்றும் வசியம் முன் அவர் என்ன செய்ய முடியும்? இன்று அவரை என் வசியத்தால் கட்டிப்போடுகிறேன் என்றெல்லாம் கொக்கரித்தார். அவர் குடும்பத்தார்
மற்றும் பலர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அன்று பெரியவர் பூஜையைப் பார்க்க ஆயிரக் கணக்கானோர் கூடியிருந்தனர். இந்த வம்பரும் சென்று கடைசியில் கடைசியாய் இருந்து கொண்டு கையில் மையை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்தார். அங்கே பெரியவரோ பூசையில் ஒன்றி விட்டார். பூசை முடிந்தது திருநீர்
Read 8 tweets
Dec 9
#MahaPeriyava
An elderly man who had fractured his leg recently was seated wearily outside Sri Matham. When Sri Maha Periyava passed by the main door, he looked out and noticed him. A devotee who had come for darshan stood near Periyava.
"Will you do me a favour?" Maha Periyava
asked the devotee. The devotee was thrilled from head to foot that Periyava should say such a thing to him.
"As commanded!" his voice reflected his feelings.
"Get ‘eight annas' worth of betal leaves and grated areca nut. Give it to that elderly man seated near the door step."
The devotee went to a small shop nearby and got the betel leaves and areca nut. He held it out to the old man with the words, "Please take this, Grandpa!"
The old man's delight knew no bounds. He would not have been so happy had he given even half a kingdom. His grin betrayed the
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(