#திருவண்ணாமலை
திருவண்ணாமலை மலை ஒரு பிரம்மாண்டத்தின் உச்சம். பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. சுமார் பல மில்லியன் கோடி வருடம் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். Carbon datingம் இதை உறுதி செய்கிறது. மலையே சிவபெருமானின் அம்சம்.
அதாவது பல சிவலிங்கங்களை உள்ளடக்கியது. அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 அதி சக்தி வாய்ந்த சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சித்த புருஷர்கள் சொல்கின்றனர். இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டு
இருக்கிறோம். ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகிறது. இதனால் மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம்
வந்து, ஈசனை வணங்கி வழி படுகிறார்கள் என்பது ஐதீகம்!மலையின் மகாத்மியம் மலையளவு உள்ளது. திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம், நம்மைப் போன்ற பக்தர்களுக்கான திருத்தலம் தான். ஆனால் அது சித்தர்களின் பூமி.
புனித பூமி. எத்தனையோ சித்தர்கள், இங்கு வந்து தவம் செய்துள்ளனர். இன்றும் செய்து
கொண்டிருக்கின்றனர். இங்கேயே தங்கி, ஜீவ சமாதியாகி சூட்சம ரூபமாக இன்னும் தவத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இது சித்தர்கள் பூமியாக இருக்க காரணம் உள்ளது. நம் மன அதிர்வுகளை புத்தி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வராமல் எத்தகைய சித்துக்களையும் செய்ய இயலாது. இயல்பாகவே புவியியல்
அமைப்பிலேயே
எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய அதிர்வுகளை கொண்டு திருவண்ணாமலையானது அமைந்துள்ளது. நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். இந்நிலையில் மனம் நம்
கட்டுப்பாட்டில் இருக்காது. நம் ஓய்வெடுக்கும் போது, ஆழ்ந்த தூக்கத்தின் போது, உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர். முயற்சி செய்தால் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது
எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.
அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள். நம் எண்ணங்களை நம் இயக்கங்களை எளிதாக நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதற்காகவே உலகெங்கிலும் உள்ள சித்தர்கள் இங்கே தேடி
வருகின்றனர். திருவண்ணாமலை இயல்பாகவே தீட்டா அதிர்வுகளை கொண்டுள்ளது. இதனால் தவ நிலையில்
உள்ள சித்தர்களின் உடலில் இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். இதற்காகவே இங்கே சித்தர்கள் சமாதி அடைந்து இருக்கிறார்கள். சித்தர்களின் பூமியாக திருவண்ணாமலை விளங்கும் மர்மம் இதுதான். இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பர்.
சித்தர்களுக்கு
எல்லாம் தலயாயச் சித்தர் ஆதி சித்தர் சிவபெருமான்தான். தலைவர் இருக்கும் இடத்தில்தானே தொண்டர்களும் குடியிருப்பார்கள்?.
அதனால் தான் திருவண்ணாமலையில் சிவ பெருமானுக்கு உறுதுணையாக காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும், அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் இன்றும்
அரூபமாக நடமாடி கொண்டு இருக்கிறார்கள்.
அத்திரி மகரிஷி,
மச்ச முனிவர்,
கோரக்கர்,
துர்வாசர்,
சட்டை முனிவர்,
அகத்தியர்,
போகர்,
புசுண்டர்,
உரோமா மச்சித்தர்,
யூகி முனிவர்,
சுந்தரானந்தர்,
அழகனந்தா,
பிரம்ம முனி,
காலங்கி நாதர்,
நந்தி தேவர்,
தன்வந்திரி,
குரு ராஜரிஷி,
என இருநூற்றுக்கும் அதிகமான சித்தர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் அவற்றில் சுமார் 25க்கும் அதிகமான சித்தர்கள் இங்கு ஜீவசமாதி ஆனதாகவும் அகத்தியர் தான் இயற்றிய அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் எடுத்துரைத்துள்ளார்.
இப்படிப்பட்ட ஸ்தலத்துக்கு செல்வது நாம் செய்த
புண்ணியம். பெளர்ணமி அன்று அண்ணாமலையாரை காண்பது நம் பிறவி பிணியை போக்கும்.
Sorry for the mistake. It is not Carbon dating*
Geologists do not use carbon-based radiometric dating to determine the age of rocks. Radiometric dating has been carried out since 1905 invented by Ernest Rutherford as a method by which one might determine the age of the Earth.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஸ்ரீமடம் எசையனூரில் முகாம் இட்டிருந்தது. வந்திருந்த எல்லா பக்தர்களுக்கும் காலையில் இருந்தே தரிசனம் கொடுத்துக் கொண்டும், சில பேர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டும் இருந்தார்கள் பெரியவர்.
பிற்பகல் மணி
இரண்டு ஆகிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலில், காலையில் உட்கார்ந்த இடத்தில் இருந்து ஓர் அடி கூட நகர்ந்து விடாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தார்கள். அப்போது அந்தக் கிராமத்தில் இருந்து சிப்பாய், வெங்கடேசன் என்று இரண்டு பேர் வந்தனர். தினமும் தரிசனத்துக்கு வந்து பெரியவாளுக்கு அறிமுகம்
ஆனவர்கள். இருவரும் நேரே பெரியவாளிடம் போனார்கள்.
"இதப்பாரு..இப்ப மணி என்ன தெரியுமா? பன்னண்டுக்கு மேலே ஆச்சு. பொழுது விடிஞ்சதிலேர்ந்து ஒரு வாய் தண்ணி கூடக் குடிக்காம உட்கார்ந்திருக்கியே? ஏன் பட்டினி கிடக்கே? போய் சாப்பிடு" என்றார்கள்.
மெய்ப்பணியாளர்கள் திகைத்துப் போய் விட்டனர்.
துவம்சம் செய்ய ராவணனது பல சேனாதிபதிகள், மகன்களான இந்திரஜித் உட்பட பலர் மரணம் அடைந்தனர். ராவணன் மிகுந்த கவலையடைந்து இவர்களை எப்படி எதிர்கொள்வது என சிந்தித்த போது, பாதாள லோகத்தில் இருந்த அஹிமஹி ராவணர்களை நினைக்க உடனே மஹிராவணன் ராவணன் முன் தோன்றி, நண்பா ராவணா என்னை நினைத்து அழைத்தது
ஏனோ? உன் முகமும் கவலையில் உள்ளதே என வினவினான். ராவணன் சூர்ப்பனகை மானபங்கம் தொடங்கி தான் சீதாதேவியை சிறைப் பிடித்தது, ஜடாயு வதம், மாதா சீதாவின் பிடிவாதம், மற்றும் வானர ஹனுமன் வந்தது, இலங்கையை எரித்தது, இப்போது ஶ்ரீராமன் வானரப் படையுடன் போர் செய்ய வந்து அரக்கர் கூட்டத்தையும்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
இறையுணர்வை அடைய நாவின் முக்கியத்துவம் வைஷ்ணவ பரம்பரையில் ஒன்றான #கௌடீய_ஸம்பிரதாயத்தில் பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே சமயம் உயர்ந்த இலக்கான தூய கிருஷ்ண பக்தியை அடைவதற்கு இடையூறாக இருக்கும் இதர
விஷயங்களை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப் படுகிறது. கிருஷ்ண உணர்வின் முக்கிய செயல்களான திருநாம உச்சாடனம், கிருஷ்ண பிரசாதத்தை ஏற்று மதித்தல் ஆகிய சேவைகள் நாவினால் செய்யப்படுவதால்,
ஸேவோன் முகே ஹி ஜிஹ்வாதௌ, பக்தித் தொண்டு நாவிலிருந்தே ஆரம்பமாவதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ண
பக்தியை அடைவதற்கு நாவே முதல்படியாகத் திகழ்கிறது. மூவகை குணங்களும் உணவுகளும் ஸத்வம், ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களாலான பௌதிக உலகில் நாம் வாழ்கிறோம். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என இங்கு வாழும் அனைத்து ஜீவராசிகளும் இந்த முக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் வருகின்றனர். நாம் விரும்பி
#காஞ்சிபுரம்_பவள_வண்ணர்_கோவில்
ஸ்ரீ பவளவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ பவளவண்ணப் பெருமாள் திருக்கோவில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது. காஞ்சி புராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு பேசப்படுகிறது.
பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப் போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள். நொடிப் பொழுதில் அந்த அரக்கர் கூட்டத்தை அழித்து பெருமாள் ரத்தம் தோய நின்றார். இவ்வாறு ரத்தம் தோய பிரவாளேச வண்ணராக நின்றதால்
பிரவாளேசரானார் தூயதமிழில் பவள வண்ணமானார். இத்தலத்தின் இறைவன் பவள வண்ணர் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி பவள வல்லி என்ற பெயரில் தனிக்கோவில் கொண்டுள்ளார். இத்தலத் தீர்த்தம் சக்கர தீர்த்தம். விமானம் பிரவாள விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது. இறைவனின்
சிறுவயதில் கடவுள் மறுப்பு கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும்
பதில், “வயசானா உனக்கே புரியும். புரியும்போது கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.” இந்தப் பதில் இன்னும் குழப்பும். அப்பா பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு சொல்கிறார் என்று தோன்றும்.
“நீ ஏதோ டபாய்க்கிற” என்பேன்
“நீ சயன்ஸ் படிக்கிற, அதனால் இதை
எல்லாம் கேட்கிற. நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்” என்பார். அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும் போது நல்ல படிப்பு வர வேண்டும்,
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக் கொள்ளச் சொல்ல மாட்டார். அவர் வேண்டிக் கொள்ளச் சொல்லுவது, நிறைய அறிவு கொடு என்று வேண்டிக்கோ என்பார். இவை
#தீபம்_விளக்கு எதை விரும்புகிறோமோ அதற்குரிய எண்ணெயை, விளக்கில் பயன்படுத்தினால், விரும்பியதை அடையலாம். சகல விதமான செல்வங்களை சுகபோகங்களை விரும்புவோர் பசுநெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். குல தெய்வத்தை வழிபடும் போது வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் மூன்றையும் சமவிகிதத்தில்
கலந்து விளக்கில் ஊற்றி ஏற்றிட வேண்டும். கணவன்-மனைவியிடையே அன்பு நீடித்திருக்கவும் உறவினர்கள் நன்மை அடையவும் விளக்கெண்ணெய்யால் விளக்கேற்ற வேண்டும். தேங்காய் எண்ணெய்யால் விளக்கேற்றி, கணபதியை வழிபட்டால், அவருடைய அருளைப் பெறலாம். லட்சுமி கடாட்சம் பெற விரும்பும் பெண்கள், பசு நெய்யால்
விளக்கேற்றி வழிபடவேண்டும். மகாவிஷ்ணுவுக்கு உகந்தது நல்லெண்ணெய் தீபமே. எந்த தெய்வத்தை வழிபடுவதாயிருந்தாலும் நல்லெண்ணெய் ஏற்றது. கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலை, தொல்லைகளை, பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணெய்யின்