#திருமலைக்கேணி_கோயில்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள சுப்ரமணியசுவாமி கோயில் ஆகும். திண்டுக்கலிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயில் கரந்தமலை தொடரில் மலை உச்சியில் அழகிய வனந்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கு மயில்களும், வானரங்களும்
அதிகமாக காணப்படுகின்றன. இத்தலத்தில் வற்றாத நீர் சுனை உள்ளது. இதன் பெயர் காரணமாகவே இத்தலம் 'திருமலைக்கேணி' என்று அழைக்கப்படுகிது. இக்க்கோயிலில் உள்ள நீர் ஓர் இடத்தில் வெந்நீராகவும், வேறு இடத்தில் சாதாரணமாகவும் மற்றொரு இடத்தில் மிக குளிர்ந்த நிலையிலும் இருப்பது வியப்பு. இங்கு
மௌனகுரு சுவாமிகள் என்ற சித்தர் பல காலங்களுக்கு முன்னர் இங்கு ஜீவசமாதி அடைந்துள்ளார். அவருக்கு தனிக்கோயில் உள்ளது. இங்கு
மூலவா்: சுப்பிரமணியா்
உற்சவா்: தண்டாயுதா்
தீா்த்தம்: வள்ளி, தெய்வானை தீா்த்தம்
புராண பெயா்: மலைக்கிணறு
ஊா்: திருமலைக்கேணி
மாவட்டம்:திண்டுக்கல்
இப்பகுதியை ஆண்ட
பாண்டிய மன்னன், முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினாா். ஒருசமயம் அவா் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தாா். இங்கிருந்த சுனையில் நீா் பருகியவா், சற்று நேரம் ஓய்வெடுத்தாா். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன் தீா்த்தத்திற்கு அருகிலேயே கோயில் எழுப்பும்படி கூறினாா். அதன்படி, மன்னா்
இங்கு கோயில் எழுப்பினாா். மலையில் அடா் வனத்துக்கு மத்தியில் அமைந்த கோயிலில் காலப்போக்கில் மூலவா் விக்ரகம் பின்னமானது. கோயிலும் சேதமடைந்ததால், முருகன் கோயில் ஒரு குடிசையில் இருந்தது. முறையான பூஜைகளும் நின்று போனது. #கிருபானந்த_வாரியாா் 1979ல் இங்கு வந்து கோயிலை மீண்டும் புனரமைக்க
பணியைத் துவக்கினாா். பிரதான மூலவா் பின்னமாகியிருந்ததால் வேறொரு விக்ரகம் செய்யப்பட்டது.
ஆனால், பழையதை அகற்ற முடியவில்லை. எனவே, அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதற்கு மேலே புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகனை பிரதிஷ்டை செய்தனா். இவ்வாறு கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என
இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீா்த்தம், கீழ் அடுக்கிலுள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
மூலஸ்தானத்தில் முருகன், பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்தபடி காட்சி
தருகிறாா். இவருக்கு ராஜ அலங்காரம் மட்டுமே செய்கிறாா்கள். இந்த கோலத்தில் முருகனை தரிசித்தால், தலைமைப் பொறுப்புள்ள பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. உடன் வள்ளி தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீா்த்தங்கள் உள்ளன. இந்த தீா்த்தங்களின் வடிவில் முருகனின்
தேவியா்கள் அருள்கிறார்கள். வள்ளி தீா்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது.
குன்றில் அமைந்திருக்கும் மலைக் கோயில்களில், சுவாமியைத் தரிசிக்க படியேறித்தான் செல்ல வேண்டும். ஆனால், இக்கோயில் படி இறங்கிச் சென்று தரிசனம் செய்யும்விதமாக அமைக்கப் பட்டுள்ளது. பக்தா்கள் இக்கோயிலை, #கீழ்பழனி
என்றும் அழைக்கிறாா்கள். கந்த சஷ்டி விழா 7 நாள்கள் நடக்கும். ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
பதவி உயா்வு, தலைமைப் பண்பு வளர இங்கு முருகனிடம் வேண்டிக் கொள்கிறாா்கள். திருமணத்தடை உள்ளவா்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவா்கள்
தெய்வானை தீா்த்தத்தில் நீராடி சுவாமியை வேண்டிக்கொள்கின்றனா்.
சுப்பிரமணியரை வேண்டி பிராா்த்தனை நிறைவேறியவா்கள் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்தும், விபூதி மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்தும் நோ்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனா். சித்ரா பெளா்ணமி, வைகாசி விசாகம், ஆடி, தை கிருத்திகை,
கந்தசஷ்டி, திருக்காா்த்திகை, தைப்பூசம் ஆகியவை இங்கு கொண்டாடப் படும் முக்கிய பண்டிகைகள்.
கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 முதல் 1 மணி வரை, மதியம் 2 முதல் மாலை 6 மணி வரை
முகவரி: சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருமலைக்கேணி - 624 306. செங்குறிச்சி அஞ்சல், திண்டுக்கல் மாவட்டம்.
சரவணபவாய நமஹ
ஓம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 13
#மகாபெரியவா கட்டுரை எஸ்.ரமணி அண்ணா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு, 4 பெண்கள், 2 ஆண் குழந்தைகள். இள வயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால் மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள் செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாக Image
செல்வார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது. பரம்பரையாக வந்த வீட்டில் வசித்ததால் வீட்டு வாடகை பிரச்னை இல்லை. கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பில் இருந்து வந்த வருமானம் ஒரு நாளில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு வழி செய்தது. மகா பெரியவாளை
நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார் ராமஸ்வாமி. முகத்தில் சோகம் அப்பியிருந்தது. "பெரிய பெண்ணுக்கு 22வயதாகிறது. அடுத்தவளுக்கு 20. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணினால் செலவு குறையும். அது ஒத்து வரலே, மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது. பணம் தேவைப்
Read 18 tweets
Dec 13
திரு @sujathadesikan அவர்கள் குறிப்பிட்டு இருப்பது போல் இன்னொரு எளிமையானவர், கிருஷ்ண சேவையில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு மிகப்பெரிய தொண்டினை ஶ்ரீ கிருஷ்ண பகவானுக்கும் ஶ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு செய்து வருகிறார். அவர் பெயர் திரு வெண்மணி குமார். இவருக்குக் கண்ணன் மேல்
அளவில்லா அன்பு. இவரின் அன்பு ஆழ்வார்களின் அன்புக்கு இணையானது. இவருடைய நோக்கமே சமூக சமயப் பணி தான். இவரின் இருப்பிடம் கோடம்பாக்கம் ஹை ரோடில் சட்டிப் பானைகள் விற்பனை செய்யும் இடத்திற்கு வெகு அருகில் கக்கன் காலனியில் உள்ளது. அங்குள்ள குழந்தைகளின் முன்னேற்றம் தான் இவரின் முதல்
இலக்காக இருந்தது. தன் முயற்சியாலும், தமிழின் மேலும் கண்ணனின் மேலும் உள்ள அதீத ஈடுப்பாட்டினால் முதலில் திருப்பாவை பயின்று பின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் கற்றுக் கொண்டார். பகவத் கீதை முதல் பாகவதம் வரை குரு முகமாக பயின்று பல மணி நேரம் உபன்யாசம் செய்யும் அளவு ஞானம் பெற்றார். பின்
Read 17 tweets
Dec 13
There was a non believer who just witnessed a nama sangeertanam with no respect. A gnani saw this, called him and gave Rama mantra upadesha and said chant Rama nama at least once and never sell the punya palan of this nama at any time. He did chant Ram nama once and eventually
when he died he went to yamaloka and all the good he had done was this one chanting of Rama nama. Yama asked him how much this nama is worth to him. He immediately remembered the sage telling him never to sell it. He said he cannot put a value on it and Yama was not sure how to
value this, so he said let us go to Indra to find the value. This atma said I will come only in a palanquin which is also carried by you. Yama agreed, thinking this Rama nama must be so powerful for him to demand this from him. Indra could not value, so went to Brahma, Indra
Read 5 tweets
Dec 13
#பக்தி ரமாபாய் என்ற ஒரு பக்தை பண்டரிபுரம் கோவிலின் அருகில் வசித்து வந்தார். அவர் தினமும் மோரில் கோதுமை மாவைக் கரைத்து ஒரு உணவு தயாரித்து விட்டலன் கோவிலில் சென்று அவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு வருவார். வெகு காலமாக தினமும் இவ்வாறு விட்டலனுக்கு உணவு படைத்துவந்தார். ஒருநாள் அவருக்கு Image
உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டு இருந்ததால் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. இன்று கோவிலுக்குப் போக முடியாது என்ற எண்ணம் அவர் மனத்தைப் பிசைந்தது. அவரால் அதைத் தாங்கவே முடியவில்லை, உடல் உபாதையை மீறி பெற்ற அன்னையைப் போல் வருந்திப் புலம்பத் துவங்கினார். விட்டலா! இன்று என்னால் உனக்கு
உணவு கொண்டு வர முடியவில்லையே, இந்நேரத்திற்கு உனக்குப் பசிக்குமே! நான் இப்படிக் கிடக்கிறேனே! நீ எப்படிப் பசி தாங்குவாய்? என்றெல்லாம் பலவாறு புலம்பி அழுதார். மீண்டும் மீண்டும் எழ முயற்சி செய்த போதும் உடல் ஒத்துழைக்கவில்லை. கண்ணீருடன் படுக்கையில் கிடந்தவரை அப்படியே விட்டுவிட விட்டலன
Read 9 tweets
Dec 13
#ராமநாம_மகிமை
வீதியில் ராம நாம சங்கீர்த்தனம் செய்தபடி பஜனை கோஷ்டி ஒன்று சென்றது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, அவனை அழைத்து ராம நாமத்தை உபதேசித்த ஒரு ஞானி, இதை ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார் என்றார். அவனும் அப்படியே செய்தான். காலகிரமத்தில் Image
இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய் யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார். ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது.
அதனால், அதற்கு விலை கூற மறுத்து, ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள் என்றான். திகைத்த யமதர்ம ராஜா ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும் வா இந்திரனிடம் போகலாம் என்றார். 'நான் வருவது
Read 9 tweets
Dec 12
#மகாபெரியவா
தொகுப்பாளர்- டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீமடம் எசையனூரில் முகாம் இட்டிருந்தது. வந்திருந்த எல்லா பக்தர்களுக்கும் காலையில் இருந்தே தரிசனம் கொடுத்துக் கொண்டும், சில பேர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டும் இருந்தார்கள் பெரியவர்.
பிற்பகல் மணி
இரண்டு ஆகிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலில், காலையில் உட்கார்ந்த இடத்தில் இருந்து ஓர் அடி கூட நகர்ந்து விடாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தார்கள். அப்போது அந்தக் கிராமத்தில் இருந்து சிப்பாய், வெங்கடேசன் என்று இரண்டு பேர் வந்தனர். தினமும் தரிசனத்துக்கு வந்து பெரியவாளுக்கு அறிமுகம்
ஆனவர்கள். இருவரும் நேரே பெரியவாளிடம் போனார்கள்.
"இதப்பாரு..இப்ப மணி என்ன தெரியுமா? பன்னண்டுக்கு மேலே ஆச்சு. பொழுது விடிஞ்சதிலேர்ந்து ஒரு வாய் தண்ணி கூடக் குடிக்காம உட்கார்ந்திருக்கியே? ஏன் பட்டினி கிடக்கே? போய் சாப்பிடு" என்றார்கள்.
மெய்ப்பணியாளர்கள் திகைத்துப் போய் விட்டனர்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(