#பக்தி ரமாபாய் என்ற ஒரு பக்தை பண்டரிபுரம் கோவிலின் அருகில் வசித்து வந்தார். அவர் தினமும் மோரில் கோதுமை மாவைக் கரைத்து ஒரு உணவு தயாரித்து விட்டலன் கோவிலில் சென்று அவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு வருவார். வெகு காலமாக தினமும் இவ்வாறு விட்டலனுக்கு உணவு படைத்துவந்தார். ஒருநாள் அவருக்கு
உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டு இருந்ததால் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. இன்று கோவிலுக்குப் போக முடியாது என்ற எண்ணம் அவர் மனத்தைப் பிசைந்தது. அவரால் அதைத் தாங்கவே முடியவில்லை, உடல் உபாதையை மீறி பெற்ற அன்னையைப் போல் வருந்திப் புலம்பத் துவங்கினார். விட்டலா! இன்று என்னால் உனக்கு
உணவு கொண்டு வர முடியவில்லையே, இந்நேரத்திற்கு உனக்குப் பசிக்குமே! நான் இப்படிக் கிடக்கிறேனே! நீ எப்படிப் பசி தாங்குவாய்? என்றெல்லாம் பலவாறு புலம்பி அழுதார். மீண்டும் மீண்டும் எழ முயற்சி செய்த போதும் உடல் ஒத்துழைக்கவில்லை. கண்ணீருடன் படுக்கையில் கிடந்தவரை அப்படியே விட்டுவிட விட்டலன
என்ன கல்லா? கோவிலிருந்து ஓடோடி வந்துவிட்டான் அவரைப் பார்க்க. பாட்டி ரமாபாய் வருத்தப் படாதே. உன்னால் வர முடியாவிட்டால் என்ன? நான் வரமாட்டேனா? அழாதே என்ற பாண்டுரங்கனின் குரல் ரமாபாயின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது. கண்ணைத் திறந்து பார்த்தால் எதிரில் வரி வரியாக அசையும் பீதாம்பரம்,
காதுகளில் மகர குண்டலம் பளபளக்க, நெற்றி நிறைய சந்தன திலகம், கழுத்தில் கௌஸ்துபணி ஒளிவீச, கால்களில் நூபுரம் ஒலிக்க, ஸாக்ஷாத் பகவானான விட்டலன் கோடி சூரியன்கள் ஒன்றாக ஒளி வீசுமாப் போல் நின்றான். இறைவனைக் கண்டதும் நோய் பறந்தது, துள்ளி எழுந்தாள் ரமாபாய். விட்டலா என்ற நாமத்தைத் தவிர
வேறென்ன பேசுவாள்? அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே பாண்டுரங்கன் நேரமாயிற்று ரமாபாய்! என் தரிசனத்திற்காக மக்கள் பெரிய வரிசையில் காத்திருக்கிறார்கள். நீ சீக்கிரம் உணவைக் கொடு! சாப்பிட்டுப் போகவேண்டும் என்று பெற்ற பிள்ளை கேட்பதுபோல் கேட்டார் பாண்டுரங்கன். ஓடோடிச் சென்று உணவைத்
தயாரித்துக் கொடுத்தார் ரமாபாய். அதை வாங்கி உண்டு விட்டு, வீட்டிற்கு வந்த விட்டலன் அங்கேயே அப்படியே விக்ரகமாக நின்று விட்டார். ஒரு ஆச்சரியம் என்ன என்றால், பாண்டுரங்கன் கோயிலில் இருக்கும் விக்ரகம் இங்கு வந்துவிட்டதோ என்னும்படியாக ஒரு சிறிய வித்யாசம்கூட இன்றி அதே போல் இருக்கும்
விக்ரகம். ரமாபாயின் வீடு இப்போது #தாக்பீட்_மந்திர் என்றழைக்கப்படுகிறது. தாக் என்றால் மோர். பீட் என்றால் கோதுமை மாவு. ரமாபாய் இவ்விரண்டையும் பயன் படுத்தி உணவு தயாரித்துக் கொடுத்ததால் அவ்விடத்தின் பெயர் அப்படியே அமைந்தது. விட்டலன் உணவு உண்ட பாத்திரம் இங்குள்ளது. அந்தப் பாத்திரத்தில
இறைவனின் வலது கரம் இன்னும் பதிந்திருக்கிறது. நாம் தொட்டு வணங்கலாம். தாக்பீட் மந்திர் விட்டலனின் கோவிலின் பின்புறம் உள்ள கடைத் தெருவில், சிவாஜி சிலையை நோக்கிச் செல்லும் பாதையில், இடதுபுறம் இரண்டாவது தெருவில் உள்ளது.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 15
#தூயபக்தி #ஶ்ரீராமானுஜர் #அரங்கன் #சலவைத்_தொழிலாளி #ஶ்ரீவைஷ்ணவம் #விசிஷ்டாத்வைதம்
உண்மையான பக்தர்கள் மற்றவர்களை பற்றித்தான் கவலைப்படுவார்கள். தம்மைப் பற்றி நினைப்பதில்லை. அதை குருவிடம் விட்டு விடுவார்கள். ஒரு சமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி தாம் செய்த Image
உபன்யாசத்தில் கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த துணிகளைக் கேட்ட போது, அவன் தர மறுத்ததாகக் கூறினார். அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
அதற்காக ரங்கநாதரின் துணிகளை இனி நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். “அப்படியே செய்” எனக் கூறினார் ராமானுஜர். அந்த சலவை தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, ராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும்
Read 7 tweets
Dec 15
#MahaPeriyava
When Sri Periyaval was camping at Orirukkai, a foreigner came to India. He wanted a ticket from Delhi to Mumbai. He was not able to get it. So he took the flight to Madras. When he came out of Meenambakkam he wondered where to go. He asked the taxi driver, "Is there Image
any self-realized leader here?"
The taxi driver replied, "The Shankaracharya Swami of Kanchipuram is here."
"Take me to Kanchipuram at once," said the man and soon reached there. Sri Periyaval was then staying in a thatched shed at Orirukkai. He was resting after taking his
bhiksha. The foreigner was very eager to see Sri Periyaval. We told him, "Please wait for sometime. Swami is taking rest."
After a while Periyaval got up, did achamana and applied vibuthi on His person, He asked us "Has he come?"
A devotee, Nagalakshmi and some other ladies were
Read 11 tweets
Dec 13
#மகாபெரியவா கட்டுரை எஸ்.ரமணி அண்ணா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு, 4 பெண்கள், 2 ஆண் குழந்தைகள். இள வயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால் மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள் செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாக Image
செல்வார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது. பரம்பரையாக வந்த வீட்டில் வசித்ததால் வீட்டு வாடகை பிரச்னை இல்லை. கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பில் இருந்து வந்த வருமானம் ஒரு நாளில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு வழி செய்தது. மகா பெரியவாளை
நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார் ராமஸ்வாமி. முகத்தில் சோகம் அப்பியிருந்தது. "பெரிய பெண்ணுக்கு 22வயதாகிறது. அடுத்தவளுக்கு 20. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணினால் செலவு குறையும். அது ஒத்து வரலே, மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது. பணம் தேவைப்
Read 18 tweets
Dec 13
திரு @sujathadesikan அவர்கள் குறிப்பிட்டு இருப்பது போல் இன்னொரு எளிமையானவர், கிருஷ்ண சேவையில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு மிகப்பெரிய தொண்டினை ஶ்ரீ கிருஷ்ண பகவானுக்கும் ஶ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு செய்து வருகிறார். அவர் பெயர் திரு வெண்மணி குமார். இவருக்குக் கண்ணன் மேல்
அளவில்லா அன்பு. இவரின் அன்பு ஆழ்வார்களின் அன்புக்கு இணையானது. இவருடைய நோக்கமே சமூக சமயப் பணி தான். இவரின் இருப்பிடம் கோடம்பாக்கம் ஹை ரோடில் சட்டிப் பானைகள் விற்பனை செய்யும் இடத்திற்கு வெகு அருகில் கக்கன் காலனியில் உள்ளது. அங்குள்ள குழந்தைகளின் முன்னேற்றம் தான் இவரின் முதல்
இலக்காக இருந்தது. தன் முயற்சியாலும், தமிழின் மேலும் கண்ணனின் மேலும் உள்ள அதீத ஈடுப்பாட்டினால் முதலில் திருப்பாவை பயின்று பின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் கற்றுக் கொண்டார். பகவத் கீதை முதல் பாகவதம் வரை குரு முகமாக பயின்று பல மணி நேரம் உபன்யாசம் செய்யும் அளவு ஞானம் பெற்றார். பின்
Read 17 tweets
Dec 13
There was a non believer who just witnessed a nama sangeertanam with no respect. A gnani saw this, called him and gave Rama mantra upadesha and said chant Rama nama at least once and never sell the punya palan of this nama at any time. He did chant Ram nama once and eventually
when he died he went to yamaloka and all the good he had done was this one chanting of Rama nama. Yama asked him how much this nama is worth to him. He immediately remembered the sage telling him never to sell it. He said he cannot put a value on it and Yama was not sure how to
value this, so he said let us go to Indra to find the value. This atma said I will come only in a palanquin which is also carried by you. Yama agreed, thinking this Rama nama must be so powerful for him to demand this from him. Indra could not value, so went to Brahma, Indra
Read 5 tweets
Dec 13
#ராமநாம_மகிமை
வீதியில் ராம நாம சங்கீர்த்தனம் செய்தபடி பஜனை கோஷ்டி ஒன்று சென்றது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, அவனை அழைத்து ராம நாமத்தை உபதேசித்த ஒரு ஞானி, இதை ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார் என்றார். அவனும் அப்படியே செய்தான். காலகிரமத்தில்
இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய் யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார். ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது.
அதனால், அதற்கு விலை கூற மறுத்து, ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள் என்றான். திகைத்த யமதர்ம ராஜா ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும் வா இந்திரனிடம் போகலாம் என்றார். 'நான் வருவது
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(