#சூர்தாஸ்#பக்தி
நந்தவனத்தில் ஒருநாள் ராதையும் கிருஷ்ணரும் பேசிக்கொண்டு இருந்தனர். ராதை பேசிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீ கிருஷ்ணரின் தலை மட்டும் ஏதோ பாட்டை கேட்டு ரசித்த வண்ணம் அசைந்தவாரே இருந்தது. நான் பேசுவது உங்கள் காதுகளில் விழுகிறதா இல்லையா? அப்படி என்னத்தைத் தான்
ரசிக்கிறீர்களோ என்று கோபித்தாள் ராதை. என்ன அருமையான பாடல்,
சூர்தாஸரின் பாடல்! அவர் எப்போதும் என்னை விடுபட முடியாதவாறு பாடலின் மூலம் கட்டிப்போடுகிறார் என்றார். எப்போது பார்த்தாலும் சூர்தாஸ் சூர்தாஸ் என சொல்லியபடி இருக்கின்றீர்களே! அவரை போய் பார்த்துவிட்டு வருகிரேன் என கிளம்பினாள்
ராதை. நீ அவரை பார்க்க நீ போக வேண்டாம் என தடுத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். ஸ்ரீகிருஷ்ணரின் பேச்சை கேளாமல் ராதை சூர்தாஸரை பார்க்க ஓடினார். சூர்தாஸ் பாடிக் கொண்டு இருந்த கோவிலுக்கு வந்தாள் ராதை. பிறவிக் குருடரான சூர்தாஸரின் அருகில் அவள் போய் நின்றாள். அவளது கொலுசில் இருந்து தெய்வீக சப்தம்
வந்ததை உணர்ந்த சூர்தாஸ் கையை நீட்டி அவள் கொலுசைப் பிடித்துக் கொண்டார். விடாப்பிடியாக பிடித்தவர் கொலுசை கழட்டி எடுத்த படி இருந்தவரிடம் ராதை, கிருஷ்ணனை சேர்ந்தவள் நான்,
ராதை எனது பெயர் என்றார். சூர்தாஸ் உனக்கு இந்த கொலுசு வேண்டும் என்றால் ஸ்ரீகிருஷ்ணனை இங்கே வரச்சொல் என்றார். ராதை
கிருஷ்ணரை அழைத்தார்.
ஸ்ரீ கிருஷ்ணர் அங்கே வந்து
பார்வையற்ற சூர்தாஸருக்கு பார்வை அளித்து, தனது திவ்ய தரிசனத்தை காட்டினார். சூர்தாஸரே உங்களுக்கு என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள் என்றார். சூர்தாஸரோ ராதையிடம் கொலுசை கொடுத்தபடி, கிருஷ்ணா
எனது கண்களை குருடாக ஆக்குங்கள் என்றார். திகைத்து
நின்ற ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து, தங்களை கண்ட கண்களால்
இனி யாரையும் எதையும் பார்க்க விரும்பவில்லை, ஆகையால் கிருஷ்ணா எனது கண்களை குருடாக்குங்கள் என்றார். மீண்டும் சூர்தாஸர் குருடரானார். கண்ணனும் ராதையும் திரும்பும்போது, ராதை வாய் ஓயாமல் சூர்தாஸ் பற்றியே கிருஷ்ணரிடம் பேசிக் கொண்டு
இருந்தாள். இதற்குத் தான் நான் அப்பொழுதே சொன்னேன் ராதா, சூர்தாசைப் போய்ப் பார்க்காதே என்று, புரிகிறதா என்றார் கண்ணன்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
We can plan to visit one #temple a day or one temple a week if we are in Chennai. Distance from Vani Mahal T.Nagar is given in minutes & mentioned if over 500 Years Old
15 Minutes or Under
1. Agasthyar Temple (75 years old), T. Nagar
2. Shiva Vishnu Temple (1935), T. Nagar.
3. Raghavendra Swamy Temple (1987), T. Nagar, 8 mins
4. Iyappan Temple (1974), Mahalingapuram, 10 mins
5. Agatheeswarar Temple (over 500 years old) Nungambakkam, 10 mins
6. Angala Parameswari Temple (1978), West Mambalam, 10 mins
7. Kasi Viswanathar Temple (400 years old),
West Mambalam, 12 mins
8. Karaneeswarar Temple (12th century CE) Saidapet, 14 mins
9. Parthasarathy Perumal Temple (6th century CE) Triplicane, 15 mins
16 Minutes to Half-an-Hour
10. Balasubramanya Swamy Temple (500 years old) Teynampet,
When Maha Periyava does special Puja to Kamakshi Amman the screen will be closed and held by an attendant. People have asked have you peaked inside to see what is happening and he will always reply that it is forbidden and he will never go against the sastras. On that particular
Day just after two minutes of holding the screen, his hands became heavy and his body was burning with fever and he was unable to continue holding the screen. As it may so happen that day the puja too took longer than the usual 5 minutes. So the attendant unable to continue
Holding the screen turned inside to tell Maha Periyava that He should do the Harathi as he is not able to hold the screen any longer. What he saw as he turned in was sakshath Ambal Herself and Maha Periyava offering flowers at Her holy feet. He was speechless. Maha Periyava
#திருமங்கையாழ்வார் அவரின் திருவவதார நன்னாள் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம். அன்று ஒரு பௌர்ணமி நன்னாள். அந்த நன்னாளில் ஆழ்வார் அரங்கன் சந்நிதியில் நின்று கொண்டு இருக்கிறார். #ஸ்ரீவைஷ்ணவ பக்தகோடிகள் எழுந்தருள அப்போதுதான் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடந்து
அவர்கள் குளிர்ந்திருந்த நேரம். தன் திருநட்சத்திரமான அந்நன்னாளில் நம்பெருமாளுக்கு ஏதேனும் பெரிய அளவில் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்தது ஆழ்வாருக்கு. நாராயணன் அருள் பரிபூர்ணமாகக் கிடைத்தவர் அன்றோ அவர். அதன் மூலம் அயர்வற மதிநலம் படைத்தவர்! கண்கள் மூடி பகவானையே மனதில்
நினைத்து அவர் சந்நிதியில் நின்று கொண்டிருக்கையில் எம்பெருமானைப் புகழ்ந்து அவரிடம் இருந்து பாசுர வரிகள் மடை திறந்த வெள்ளமென கொட்டின. அன்று அந்த பகவத் சந்நிதியில் ஒரு புது பிரபந்தம் உருவாயிற்று. அந்த பாசுர வரிகள் தான் பின்னர் #திருநெடுந்தாண்டகம் என்ற பெயரில் நாலாயிரத்தில் ஒரு
#முத்துமாலையம்மன் #குரங்கணி தூத்துக்கு மாவட்டம் ஏரல் அருகே உள்ளது குரங்கணி கிராமம். இங்கு கோயில் கொண்டு அருள்கிறாள் முத்துமாலையம்மன். சீதாதேவியின் ஆபரணமே இந்த அம்மன் என்று சொல்லப்படுகிறது. ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதாதேவி, தனது முத்துமாலையை ராமபிரான் கண்டு வரவேண்டும், தான்
கடத்தி செல்லப்படும் வழிப்பாதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை எடுத்துப் போட்டார். அதோடு தன் ஆத்ம சக்தியையும் சேர்த்தே போட்டார். இலங்கைக்கு ராவணனால் கவர்ந்து செல்லப்பட்டு நந்தவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தது சீதாதேவியின் மாயைதான்
என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே, சீதாதேவிதான் இந்த முத்துமாலையம்மன் என்றும் நம்பப்படுகிறது. ராமபிரானோடு கானகத்தில் இருந்த சீதாதேவியை, ராவணன் புஷ்பக விமானத்தில் வான் வழியாக இலங்கைக்குக் கொண்டு சென்றான். செல்லும் வழியில் சீதாதேவி, ராமபிரானுக்கு அடையாளம் தெரியவேண்டி, தன் ஆபரணங்களை
#நற்சிந்தனை#ஆன்மீகம்
பிரார்த்தனையை எப்போதும் ரகசியமாக வைக்க வேண்டும். வேண்டுதல் இறைவனுக்கு மட்டுமே தெரிந்தால் போதும். 1. எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் பின்பற்றும் ஆன்மீக முறைகளை வெளிக்காட்ட கூடாது. பொதுவாக ஒருவர் தான் செய்யும் யோக முறைகளையோ மந்திர ஜபங்களையோ வெளிப்படுத்தும்
போதே அவற்றின் பலன்கள் குறைந்து விடுகின்றன. ஒருவர் அதை வெளிபடுத்த காரணம் தன்னை பெருமை படுத்திக் கொள்ளவோ அல்லது தன் முறைகளை பெருமை படுத்தவோ ஆகும். இவ்வாறு செய்யும் போது ஒருவரின் ஆணவம் அதிகமாகிறது. அவர் கடைபிடிக்கும் முறை பற்றி தேவையில்லாத சர்ச்சைகள் உருவாகும். ஆன்மீகத்தில் உயர்வு
நிலை என்பது ஒன்றும் இல்லாமல் இருப்பது தான். அதாவது மனத்தில் எந்த ஒரு எண்ணமோ சலனமோ இல்லாமல் இருப்பது. மிகவும் சாதாரண மனிதன் எவனோ அவனே மிகவும் அசாதாரண மனிதனும் ஆவான். 2. பலவருடங்கள் பல யோகங்கள் செய்தும் எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை, இதற்கு காரணம் என்ன?
ஒருவன் ஒரு முறையை கடை
போற்றுதலைப் போலவே ஆகும். முருகனின் படையாம் வேலாயுதத்துக்கும் அருணகிரிநாதர் துதிகள் பாடியிருக்கிறார். அந்த இரண்டினுள் வேல்வகுப்பை எடுத்துக்கொண்டு அதன் 16 அடிகளை முன்னும் பின்னுமாகவும், திரும்பத் திரும்பவும் அழகுறத் தொகுத்து அதன் பாராயண பலனை பன்மடங்காக்கி வேல்மாறல் என்ற பெயரில்
1923ம் ஆண்டில், மந்திர நூலாக மக்களுக்குத் தொகுத்தளித்தார், வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள். சாக்த வழிபாட்டில் உள்ள பல்லவ ப்ரயோக முறையின்படி, 16 x 4 = 64 அடிகளிலும், ‘திருத்தணியில் உதித்தருளும்… வேலே’ எனும் வேல்வகுப்பின் 16வது அடியை ஓதுமாறு செய்தும், தொடக்கத்திலும்