#வள்ளிமலை_சச்சிதானந்த_ஸ்வாமிகள் என்று ஒரு மகான் இருந்தார். இன்று நாம் எல்லோரும், உலகம் முழுக்க #திருப்புகழ் படிக்கிறோம் என்றால் அது அந்த வள்ளிமலை ஸ்வாமிகள் அளித்த அருட்கொடை என்றே கூறலாம். அவர் ஓர் வள்ளல். அவர் திருப்புகழை விடாமல் அவர் காலம் முழுவதும் எல்லா இடங்களிலும் கானம்
செய்ததால் தான் நாம் இன்று இவ்வளவு பேர் திருப்புகழை படிக்கிறோம். அவருக்கு ஆரம்பத்தில் அர்த்தநாரி என்ற பெயர். சின்ன வயதில் வறுமையினால் படிக்க முடியவில்லை. அவர் தன் மாமாவுடன் சமையல் வேலை செய்ய மைசூர் அரண்மனை போய்விட்டார்.
நல்ல புத்திமான். அதனாலே, நல்ல சமையல் செய்ய வந்தது.
கெட்டிக்காரராய் இருந்தார். எல்லோரிடமும் நல்ல பேர் வாங்கினார். ரொம்ப புஷ்டியாக பயில்வானாய் இருந்தார். அதனால் மல்யுத்தம் போடும் அளவிற்கு நல்ல சக்திமானாகவும் இருந்தார்.
புத்திமானாகவும் சக்திமானாகவும் இருந்தவருக்கு பக்திமானாக ஆகும் வேளை வந்தது. திடீரென்று நாற்பது வயதில், மனைவி
காலமாகி விடுகிறார். ஒரு பெண் குழந்தையும் காலமாகி விடுகிறது. இந்த கஷ்டங்களுக்கு மேலே அவருக்கு வயிற்றிலே ஒரு கடுமையான வலி வந்து விட்டது. என்னென்னவோ ராஜ வைத்தியங்கள் செய்தும் சரியாகவில்லை. அப்போ ஒரு பெரியவர் அவரிடம், “நீ பழனி மலைக்கு போ! முருகப் பெருமானுக்கு சேவை செய்! அவருக்கு
அபிஷேகம் செய்த பாலை சாப்பிடு உனக்கு உடம்பு சரியாகும்” என்கிறார். சரி என்று இவரும் பழனி மலைக்கு வந்தார். அந்த காலத்தில் இப்போது இருப்பது போன்ற வசதிகள் கிடையாது. எது வேண்டும் என்றாலும் கீழே இருந்து காவடி கட்டி கொண்டு போக வேண்டும். அபிஷேகத்திற்கு தண்ணீர் ஆனாலும் சரி,
பஞ்சாமிர்ததுக்கு பழமானாலும் சரி, சந்தனமானாலும், விபூதி, எது வேண்டுமென்றாலும் கீழே இருந்துதான் போக வேண்டும். இப்படி இவற்றை எல்லாம் காவடி கட்டி எடுத்து வருவது போன்ற எல்லா சேவைகளையையும் இவர் செய்கிறார். பகவானுக்கு அபிஷேகம் செய்த அந்த பாலை சாப்பிட்டு அவருக்கு வயிற்று வலி குணம் ஆகிறது
முருகபக்தி ஏற்படுகிறது. அந்த கால கட்டத்தில், பழனி கோயிலில் ஒரு நடனமங்கை நாட்டியம் ஆடுகிறாள்.
“சிங்கார ரூப மயில் வாகன நமோ நம…
கந்தா குமார சிவா தேசிகா நமோ நம…”
என்று வரிகளை கேட்டவுடன் இவருக்கு அந்த வரிகள் ரொம்ப பிடித்து விட்டது. இது என்ன? யாருடைய பாட்டு என்று கேட்கிறார். இது
அருணகிரிநாதர் செய்த திருப்புகழ் என்று சொன்னவுடனே, அந்த பாட்டை எனக்கு எழுதிக் கொடுங்கள் என்று எழுதி வாங்கிக் கொள்கிறார். அவருக்கோ எழுத படிக்க தெரியாது. அதனால், வருகிறவர்களிடம், இதைப் படியேன்! இதைப் படியேன்! என்று படிக்கச் சொல்லிக் கேட்டுக் கேட்டு அந்த திருப்புகழை மனப்பாடம் செய்து
கொள்கிறார். அதற்ககுப் பிறகு, நாலாவது படிக்கிற ஒரு பள்ளிக் கூட பையனிடம் சிலேட்டு பல்பம் வைத்துக் கொண்டு ‘அ, ஆ, இ, ஈ, கற்றுக் கொண்டு, சென்னையில் திரு.வ.தா.சுப்ரமணிய பிள்ளை என்பவர் முதல் முதலில் திருப்புகழ் புத்தகம் போட்டிருந்தார். அதை வரவழைத்து, நிறைய திருப்புகழ் பாடல்களை கற்றுக்
கொண்டு, அந்த திருப்புகழை ரொம்ப பிரியமாக ஓதிக் கொண்டிருந்தார்.
நடுவிலே இவர் சிருங்கேரி நரசிம்ம பாரதி ஸ்வாமிகளிடம், ‘எனக்கு ஸன்யாசம் கொடுங்கள்’ என்று பிரார்த்தனை செய்த போது அவர், ‘உனக்கு வானப்ரஸ்தாஸ்ரமம் கொடுக்கிறேன்’ என கொடுத்தார்.
இரண்டாவது மனைவியும் காலமான பின் இவர் திருப்புகழை
ஓதிக்கொண்டு வட நாட்டுக்கு யாத்திரையாய் போகிறார். அங்கே ஒரு பெரியவர், இவருக்கு #சச்சிதானந்தா என்று தீக்ஷா நாமத்துடன் சன்யாசம் அளித்தார். அப்படியெல்லாம் சுற்றினாலும், எனக்கு பூரணத்வம் ஏற்படவில்லையே என்ற ஒரு தாபத்திலேயே இருந்தார். அப்போ அவர் கனவிலே பழனி மலை முருகன் தரிசனமளித்து,
‘நீ, திருவண்ணாமலைக்கு போ!’ என்று கூறினார். அங்கே திருவண்ணமலையிலே ஸ்ரீ ரமண பகவானை பார்த்தவுடனே, பழனியாண்டியே கோவணத்தோடு வந்திருப்பதாக ஏற்றுக் கொண்டு, ரமணருக்கு சேவை செய்து வந்தார்.
இப்படி இருக்கும் போது, ஒரு நாள் ஸ்கந்தாஸ்ரமத்தில், மலைமேலே இருக்கும் போது, “நீ, கீழே போ, எழுந்து
ஓடு! ஓடு!” என்று ஸ்ரீ ரமணர் சொன்னார். இவருக்கு, என்னடா, போகச் சொல்லுகிறாரே என்று ஒரே தாபமாக இருக்கிறது. ஆனாலும் குரு வார்த்தையைக் கேட்டு, அதன்படி மலை இறங்கி செல்கிறார். அந்தப் பணிவு இருக்கிறதா என்று பரீக்ஷை செய்துதான், மஹான்கள் அனுக்ரஹம் செய்வார்கள். உடனே இவர் இறங்கி வருகிறார்.
அப்போது எதிரில் #ஸ்ரீசேஷாத்ரிஸ்வாமிகள் வந்து தரிசனம் கொடுத்தார். சேஷாத்ரி ஸ்வாமிகள், இந்த பரிபக்குவமான ஆத்மா, இந்த அர்த்தநாரி, சச்சிதானந்த ஸ்வாமிகள் வருகிறார் என்றவுடன், எதிரில் பார்த்து, “உனக்கு மந்திரம் திருபுகழ்தானே!”, என்று கேட்கிறார். சச்சிதானந்த ஸ்வாமிகளுக்கு ரொம்ப
ஆச்சர்யம், ரொம்ப ஆனந்தம். “ஆமாம் ஸ்வாமி!” என்கிறார். ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் அவரை கட்டிக் கொண்டு அன்பு பாராட்டி,
“ஆத்மா த்வம் கிரிஜா மதி: சஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோப போக ரசனா: நித்ரா சமாதி ஸ்திதி: |
ஸஞ்சார: பதயோ: பிரதக்ஷிண விதி: ஸ்தோத்ராணி சர்வா கிரா:
யத்யத் கர்ம
கரோமி தத் தத் அகிலம் சம்போ தவாராதனம் ||
ஆதி சங்கர பகவத்பாதாள் சிவமானஸ பூஜா ஸ்தோத்ரம் என்று ஒரு ஸ்தோத்ரம் செய்திருக்கிறார். அதில் வருகிற ஒரு ஸ்லோகம் இது. இதை கூறி, இதன் பொருளையும் -
எனக்குள் உறையும் ஆத்மா நீதான். என்னுடைய புத்தி தான் அம்பாள். என் உடலில் இருக்கக் கூடிய பிராணன்கள்
எல்லாம் உன்னுடன் இருக்கும் கணபதி, முருகன் ஆகிய தெய்வங்கள். என்னுடைய சரீரமே நீ வசிக்கும் க்ருஹம். என்னுடைய பஞ்ச புலன்களைக் கொண்டு எந்த எந்த போகங்கள் எல்லாம் அனுபவிக்கிறேனோ, அதுவே உனக்கு பூஜை. என்னால் ஸமாதி நிலையில் எல்லாம் உன்னை த்யானம் செய்யத் தெரியவில்லை. நான் தூங்குவதே அந்த
ஸமாதி என்று வைத்துகொள். என் கால்களை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் சுற்றுகிறேன். அந்த சஞ்சாரமே உனக்கு செய்யும் பிரதிக்ஷிணமாக வைத்துக் கொள். நான் பேசும் பேச்செல்லாமே உனக்கு ஸ்தோத்ரம். நான் என்னென்ன காரியங்கள் செய்கிறேனோ, ஹே பரமேஸ்வரா! அதெல்லமே உனக்கு செய்யும் ஆராதனமாக ஏற்றுக்கொள்.
என்ற ஸ்லோகத்தை சொல்லி, அதனுடைய கருத்ததைச் சொல்லி, “இது போன்ற அத்வைத கருத்துக்கள் திருப்புகழில் இருக்கா?” என்று கேட்கிறார். அதற்கு சச்சிதானந்த ஸ்வாமிகள் திருப்புகழில் இருந்து,
“எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவ னாதீதம் …… அருள்வாயே” என்ற பாடலை சொல்கிறார்.
அதாவது இந்த உடம்பில் ‘எனது! யான்!’ என்ற எண்ணம் வேறாகி, ‘எல்லோரும் எல்லாமும் இந்த உள்ளே இருக்கிற வஸ்துவான ஆத்மாதான்!’, என்ற இதய பாவனைக்கு மீறிய அந்த நிலையை அருள்வாய்” இது ‘பாவனா அதீதம்’, அதாவது மனசால் புரிந்துக் கொள்ளகூடிய நிலை இல்லை அது. அந்த நிலையை அருள வேண்டும் என்று
அருணகிரிநாதர் பிரார்த்தனை செய்கிறார். அதைக் கேட்டதும் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், “இது போன்ற உயர்ந்த வேதாந்த கருத்துக்கள் எல்லாம், திருப்புகழில் இருக்கு. திருப்புகழ் ஒரு மஹா மந்திரம். அதுவே உனக்கு போதும். நீ வள்ளிமலையில் போய் தபஸ் பண்ணு. நான் வரேன்,” என்று அனுக்ரகம் செய்தார். அதைக்
கேட்ட சச்சிதானந்த ஸ்வாமிகள் வள்ளிமலைக்குச் சென்றார்.
வள்ளிமலையில் ஒரு குகை உள்ளது. அதை தன் கையாலேயே பெரிது பண்ணி, அங்கேயே 12 வருடங்கள் திருப்புகழையே ஓதி, தபஸ் பண்ணி சித்தி அடைந்தார். அங்கே ஒரு ஆஸ்ரமம் கட்டி இருந்தார். பிறகு சென்னைக்கு எல்லாம் வந்து, முருகப் பெருமானின் 12 கையிலும்
இருக்கும் ஆயுதங்களின் பெயரால் 12 திருப்புகழ் சபைகள் நிறுவி, எல்லோரும் திருப்புகழை பாடும் படிச் செய்தார். அவர் அனுக்ராகத்தினால் தான் இன்று தமிழ்நாட்டில் என்று இல்லாமல், உலகம் முழுக்க திருப்புகழ் என்ற அமுதத்தை அனைவரும் பருகுகிறார்கள். திருப்புகழ் பாராயண தவநெறி திருமுறை வள்ளிமலை
ஸ்வாமிகள் தந்த அருட்கொடைதான். அதனால்தான் வள்ளிமலை வள்ளல் என்று கூறக் காரணமாயிற்று. அப்படி வள்ளிமலைக்கு இவர் சென்று சித்தி பெற்று நமக்கு திருப்புகழை தருவதற்கு, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளும், ஸ்ரீ ரமண பகவானும் காரணம்.
வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
1.துயிலெழும் போது ஹரிஹரி என்று சொல்லி எழுந்திருக்கவேண்டும் ('உத்திஷ்ட சிந்தய
ஹரிம்'). 2. குளிக்கும் போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும் ('வ்ரஜன்
சிந்தய கேசவம்'). 3. உண்ணும் போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ண
வேண்டும்
('புஞ்சன்சிந்தய கோவிந்தம்').
4.தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும் ('ஸ்வபன்சிந்தய
மாதவம்')
இந்த நான்கு செயல்களை செய்யும் போது இந்த நாமாகளை சொல்வதால் அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். முந்தைய காலத்தில் மக்கள் இதை தவறாமல் செய்து வந்தனர்
என்பதை விளக்குவதை
போல் ஆண்டாள் நாச்சியாரின் கோதையின் கீதை (திருப்பாவை பாசுரங்கள்) திகழ்கிறது.
1. துயில் எழும் போது ஹரிஹரி என்பது புள்ளும் சிலம்பின காண் என்கிற பாசுரத்தில்
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ (பாசுரம் 6) என்கிறார்.
#MahaPeriyava
Tiruppavai-Tiruvembavai
From "Acharya's Call"- invaluable speeches given by His Holiness Sri Sri Sri Chandrasekharendra Saraswathi Mahaswamiji
December 3, 1957
“Visitors to Cambodia can see even today dilapidated temples dedicated to Siva, Vishnu or Ambikai,
mostly to Siva, in the forests of that country. They bear testimony to the fact that our civilization and culture had penetrated those parts of South-East Asia more than a thousand years ago. What is more, valuable Sanskrit inscriptions on stone, about 800 in number, have been
recovered by French archaeologists from the walls of those temples in ruins. From the point of view of diction and substance, these inscriptions are even superior to those found in India. Various trading communities from India travelled in their own ships to these parts of the
We can plan to visit one #temple a day or one temple a week if we are in Chennai. Distance from Vani Mahal T.Nagar is given in minutes & mentioned if over 500 Years Old
15 Minutes or Under
1. Agasthyar Temple (75 years old), T. Nagar
2. Shiva Vishnu Temple (1935), T. Nagar.
3. Raghavendra Swamy Temple (1987), T. Nagar, 8 mins
4. Iyappan Temple (1974), Mahalingapuram, 10 mins
5. Agatheeswarar Temple (over 500 years old) Nungambakkam, 10 mins
6. Angala Parameswari Temple (1978), West Mambalam, 10 mins
7. Kasi Viswanathar Temple (400 years old),
West Mambalam, 12 mins
8. Karaneeswarar Temple (12th century CE) Saidapet, 14 mins
9. Parthasarathy Perumal Temple (6th century CE) Triplicane, 15 mins
16 Minutes to Half-an-Hour
10. Balasubramanya Swamy Temple (500 years old) Teynampet,
When Maha Periyava does special Puja to Kamakshi Amman the screen will be closed and held by an attendant. People have asked have you peaked inside to see what is happening and he will always reply that it is forbidden and he will never go against the sastras. On that particular
Day just after two minutes of holding the screen, his hands became heavy and his body was burning with fever and he was unable to continue holding the screen. As it may so happen that day the puja too took longer than the usual 5 minutes. So the attendant unable to continue
Holding the screen turned inside to tell Maha Periyava that He should do the Harathi as he is not able to hold the screen any longer. What he saw as he turned in was sakshath Ambal Herself and Maha Periyava offering flowers at Her holy feet. He was speechless. Maha Periyava
#திருமங்கையாழ்வார் அவரின் திருவவதார நன்னாள் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம். அன்று ஒரு பௌர்ணமி நன்னாள். அந்த நன்னாளில் ஆழ்வார் அரங்கன் சந்நிதியில் நின்று கொண்டு இருக்கிறார். #ஸ்ரீவைஷ்ணவ பக்தகோடிகள் எழுந்தருள அப்போதுதான் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடந்து
அவர்கள் குளிர்ந்திருந்த நேரம். தன் திருநட்சத்திரமான அந்நன்னாளில் நம்பெருமாளுக்கு ஏதேனும் பெரிய அளவில் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்தது ஆழ்வாருக்கு. நாராயணன் அருள் பரிபூர்ணமாகக் கிடைத்தவர் அன்றோ அவர். அதன் மூலம் அயர்வற மதிநலம் படைத்தவர்! கண்கள் மூடி பகவானையே மனதில்
நினைத்து அவர் சந்நிதியில் நின்று கொண்டிருக்கையில் எம்பெருமானைப் புகழ்ந்து அவரிடம் இருந்து பாசுர வரிகள் மடை திறந்த வெள்ளமென கொட்டின. அன்று அந்த பகவத் சந்நிதியில் ஒரு புது பிரபந்தம் உருவாயிற்று. அந்த பாசுர வரிகள் தான் பின்னர் #திருநெடுந்தாண்டகம் என்ற பெயரில் நாலாயிரத்தில் ஒரு
#முத்துமாலையம்மன் #குரங்கணி தூத்துக்கு மாவட்டம் ஏரல் அருகே உள்ளது குரங்கணி கிராமம். இங்கு கோயில் கொண்டு அருள்கிறாள் முத்துமாலையம்மன். சீதாதேவியின் ஆபரணமே இந்த அம்மன் என்று சொல்லப்படுகிறது. ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதாதேவி, தனது முத்துமாலையை ராமபிரான் கண்டு வரவேண்டும், தான்
கடத்தி செல்லப்படும் வழிப்பாதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை எடுத்துப் போட்டார். அதோடு தன் ஆத்ம சக்தியையும் சேர்த்தே போட்டார். இலங்கைக்கு ராவணனால் கவர்ந்து செல்லப்பட்டு நந்தவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தது சீதாதேவியின் மாயைதான்
என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே, சீதாதேவிதான் இந்த முத்துமாலையம்மன் என்றும் நம்பப்படுகிறது. ராமபிரானோடு கானகத்தில் இருந்த சீதாதேவியை, ராவணன் புஷ்பக விமானத்தில் வான் வழியாக இலங்கைக்குக் கொண்டு சென்றான். செல்லும் வழியில் சீதாதேவி, ராமபிரானுக்கு அடையாளம் தெரியவேண்டி, தன் ஆபரணங்களை