#முத்துமாலையம்மன்
#குரங்கணி தூத்துக்கு மாவட்டம் ஏரல் அருகே உள்ளது குரங்கணி கிராமம். இங்கு கோயில் கொண்டு அருள்கிறாள் முத்துமாலையம்மன். சீதாதேவியின் ஆபரணமே இந்த அம்மன் என்று சொல்லப்படுகிறது. ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதாதேவி, தனது முத்துமாலையை ராமபிரான் கண்டு வரவேண்டும், தான்
கடத்தி செல்லப்படும் வழிப்பாதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை எடுத்துப் போட்டார். அதோடு தன் ஆத்ம சக்தியையும் சேர்த்தே போட்டார். இலங்கைக்கு ராவணனால் கவர்ந்து செல்லப்பட்டு நந்தவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தது சீதாதேவியின் மாயைதான்
என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே, சீதாதேவிதான் இந்த முத்துமாலையம்மன் என்றும் நம்பப்படுகிறது. ராமபிரானோடு கானகத்தில் இருந்த சீதாதேவியை, ராவணன் புஷ்பக விமானத்தில் வான் வழியாக இலங்கைக்குக் கொண்டு சென்றான். செல்லும் வழியில் சீதாதேவி, ராமபிரானுக்கு அடையாளம் தெரியவேண்டி, தன் ஆபரணங்களை
வானில் இருந்து கீழே போடுகிறாள். சீதாதேவியின் முத்துமாலை தாமிரபரணிக் கரையில் விழுந்தது. அந்த மாலை ஜோதி பிழம்பாய் மாறி, கோடிச் சூரியனாய் பிரகாசித்தது.
சில காலங்களுக்குப்பிறகு அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர் கண்ணில் அந்த முத்துமாலை பட்டது. அதை எடுத்த அவர், வீட்டிற்குக் கொண்டு
செல்ல நினைத்தார். ஆனால், சற்று யோசித்த அவர் விஷயம் வெளியே தெரிந்தால், அரண்மனை காவலர்கள் அதனைப் பறித்துச் சென்று விடுவார்கள். அதோடு கண்டெடுத்த உடனே ஏன் தரவில்லை என்று தண்டனையும் கொடுத்துவிடுவார்கள் என்று எண்ணி, அந்த முத்துமாலையை ஒரு மண் தாழிக்குள் வைத்து மூடி, அதைக் குழித் தோண்டி
மறைத்து வைத்தார். பின்பொரு சமயம், பெய்த மழையின் காரணமாக வெள்ளம் கரைபுரண்டோட, மண்ணில் உருண்டோடி மேலே வந்தது மண்தாழி. அதை லிங்கம் என்பவரும், அவரது தம்பிகளும் கண்டனர். அது ஏதோ மந்திரித்து வைத்த தாழி போல் தெரிகிறது என்று பயந்த அவர்கள், அதைத் தொடாமல் வீட்டுக்குச் சென்றனர். அன்று இரவு
அவர்கள், கனவில் அம்பாள் தோன்றி, அந்த தாழியில் முத்துமாலை இருக்கிறது. அதை யாரும் அபகரித்து விடக்கூடாது. ஆகவே, அந்த தாழியை கொண்டு வந்து அதன்மேல் எனக்கு பீடம் அமைத்து, கோயில் கட்டி வழிபட்டு வந்தால், நீங்கள் கேட்டதை தந்து, உங்கள் வாழ்வை வளமாக்குவேன் என்றாள். விழித்தெழுந்த சகோதரர்கள்,
தம் ஒவ்வொருவருக்கும் தோன்றிய ஒரே கனவைப் பற்றி பேசிக் கொண்டனர். பின்னர் கனவுப்படி செயல்பட சென்றனர். தாழியைக் கண்ட இடத்தில் அது இல்லை. திகைப்புற்றனர். சற்று தூரத்தில் தாமிரபரணி கரையோரம் ஓரிடத்தில் குரங்கு ஒன்று தாழி புதைந்து இருந்த இடத்தை உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது.
அதனருகே சென்ற லிங்கமும் அவரது தம்பிமார்களும், ஆஞ்சநேயா என அழைத்து இருகரம் கூப்பி வணங்கி தாழியைக் காட்டு என்றனர். சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, குரங்கு தன் கரங்களால் மண்ணைக் கிளறி விட்டு அங்கிருந்து அகன்றது. அந்த இடத்தில், லிங்கம் பார்த்த போது தாழி தென்பட்டது. அதனை எடுத்த அவர்கள்,
தாமிரபரணி கரையில் முத்துமாலை இருந்த தாழி கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் தாழியை குழி தோண்டிப் புதைத்து, அதன் மேல் மண்பீடம் கட்டி முத்துமாலைக்காக அம்மன் வந்ததால், முத்துமாலை அம்மன் என்றே நாமம் இட்டு வணங்கி வந்தனர். குரங்கு வந்து காட்டியதால் இது சீதாதேவியின் அம்சம்தான் என்று எண்ணினர்
லிங்கம் மற்றும் அவரது தம்பிமார்கள் வழி வந்த இரண்டாவது தலைமுறையினர் மண்ணால் அம்மனுக்கு உருவம் (ஓட்டுருவம்) கொடுத்து வழிபட்டு வந்தனர். கோயில் எடுத்துக் கட்டப்பட்டது. இதையடுத்து நவாப் ஆட்சி செய்த காலத்தில், தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக
இருப்பதாக, அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதிகாரி, கோவிலுக்கு குதிரையில் வந்தார். அவ்வூரை சேர்ந்த நான்கு சகோதரர்கள் தடுத்தனர். அப்போது, அந்த அதிகாரி இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன், அது பதில் சத்தம் தருமா என கேட்க, அதற்கு
அவர்கள் நிச்சயம் தரும் என்றனர்.
உடனே, முத்துமாலை அம்மன் முத்துமாலை அம்மன் என 3 முறை கூப்பிட்டார் அந்த ஆங்கிலேய அதிகாரி. என்ன? என்ற சத்தம் இடிபோன்ற ஒலி கோயில் கருவறையில் இருந்து கேட்டது. சத்தத்தை கேட்ட உடன் அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். குதிரைகளும் மயங்கி
விழுந்தன. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன், ‘தாயே மன்னித்து விடு’ என்று கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வேண்டி நின்றனர். உடனே, அம்மன் அருள் வந்து ஆடும் நபர், அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும், அதிகாரிக்கும் குதிரைகளுக்கும் சுய உணர்வு வந்தது. இந்த சம்பவத்தின் நினைவாக கோயில்
இடிக்காமல் காக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் இரண்டு மண் குதிரைகள் செய்து வைக்க அதிகாரி தனது பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோயிலில் பெரிய சுவாமி சந்நதியில் காணலாம். 1957-ல் அம்மனுக்கு மண்டபம், கோபுரம் மற்றும் கோட்டை மதிலுடன் கோயில் கட்டினார்கள். மகா
கும்பாபிஷேகமும் நடந்தது. அப்போது, ஓட்டுருவத்தில் இருந்த அம்மன் சிற்பம் அகற்றப்பட்டு, கல்லால் ஆன அம்மன் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பிறகு, தினசரி அம்மனுக்கு இரு வேளை பூஜைகள் சிறப்பாக நடக்கிறது. கோயிலில் தாமிரபரணி ஆற்றங்கரையை நோக்கியும், ஒரு வாசல் இருக்கிறது. அம்மனுக்கு
இடதுபுறம் நாராயணர், ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
சீதா தேவியே முத்துமாலையம்மன் வடிவில் இங்கு அருள்பாலிக்கிறாள் என்று கூறுகின்றனர். ராவணனை ராமபிரான் வெல்வதற்குத் துணையாக நின்றது மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கடையம் வழியாக அணிஅணியாக வந்த வானரப் படைகள். குரங்குகள் இங்கு
அணிவகுத்ததால், குரங்கணி என்றானது. முத்துமாலை அம்மன் கோயிலுக்கு வந்து அன்னையின் திருமுகம் பார்த்து மனமுருகி வேண்டினால், பாவ விமோசனம் கிடைக்கும். இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், ஆனி மாதம் நடைபெறும் பெருந்திருவிழாவே முதன்மையானது ஆகும். அப்போது முத்துமாலை அம்மனுக்கு
தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்பட்டு, அன்று முத்துமாலை அம்மன் திருவீதி உலா வருவாள். அந்த அழகை காணக்கண்கோடி வேண்டும். ஆனி பெருந்திருவிழாவை ஒட்டி பக்கத்து கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டு வண்டிகளில் குடும்ப சகிதம் அம்மன் கோவிலுக்கு வந்து பொங்கலிட்டு வழிபாடு
செய்வர். அன்று பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தியும் வழிபாடு நடத்துவர்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து
உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். திருநெல்வேலி–திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் இக்கோவிலை அடையலாம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 20
#மார்கழி_ஸ்பெஷல் #திருப்பாவையில்_திவ்ய_தேசங்கள்
1. மார்கழித் திங்கள் - நாராயணனே நமக்கே பறை தருவான் - பரமபதம்.

2. வையத்து - பாற்கடலில் பையத் துயின்ற - க்ஷீராப்தி.

3. ஓங்கி - ஓங்கி உலகளந்த உத்தமன் - திருக்கோவலூர்.

4. ஆழிமழை - பாழியம் தோளுடை பத்மநாபன் - திரு அனந்தபுரம் . Image
5. மாயனை - வடமதுரை மைந்தன் - மதுரா .

6. புள்ளும் - வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து - திருவண் வண்டூர்.

7. கீச்சு கீச்சு - கேசவனைப் பாடவும் - திருவாய்ப்பாடி.

8. கீழ்வானம் - தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் - வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.

9. தூமணி மாடம் - குன்றின்மேல் விளக்கு -
திருக் கடிகை.

10. நோற்று சுவர்க்கம் - நாற்றத் துழாய்முடி நாராயணன் - திருக்காட்கரை.

11 கற்றுக் கறவை - முகில் வண்ணன் பேர் பாட - காளமேகப் பெருமாள் திருமோகூர்.

12. கனைத்திளம் - தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திரு சித்திர கூட்டம்.

13. புள்ளின்வாய் - பள்ளிக்
Read 8 tweets
Dec 20
#MahaPeriyava
A large crowd in a long queue had gathered to have darshan of Maha Periyava. Slightly tilting His head, Periyava glanced at the waiting people and saw a twenty year old youth in the queue. Looking intently at the youth, Periyava called His
(Painting by @keshav61) Image
assistant Ramu, another youth, who came near Him and stood, his hand covering his mouth.
"Ramu, you see the person standing as the fifteenth in the queue? A short boy with a slightly blackish complexion. You need to buy a shirt and pant piece that will suit his size", Periyava
ordered. "Get the cash from the office, and buy good quality cloth from the Mudaliar textile shop near the Matham."
Ramu was surprised and confused at this sudden command from the Sage. He knew that he couldn't ask the reason, so started to proceed on his task.
"Ramu, come
Read 25 tweets
Dec 19
#மார்கழி_ஸ்பெஷல் #ஶ்ரீஆண்டாள்_நாச்சியார் #திருப்பாவை

1.துயிலெழும் போது ஹரிஹரி என்று சொல்லி எழுந்திருக்கவேண்டும் ('உத்திஷ்ட சிந்தய
ஹரிம்').
2. குளிக்கும் போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும் ('வ்ரஜன்
சிந்தய கேசவம்').
3. உண்ணும் போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ண Image
வேண்டும்
('புஞ்சன்சிந்தய கோவிந்தம்').
4.தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும் ('ஸ்வபன்சிந்தய
மாதவம்')
இந்த நான்கு செயல்களை செய்யும் போது இந்த நாமாகளை சொல்வதால் அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். முந்தைய காலத்தில் மக்கள் இதை தவறாமல் செய்து வந்தனர்
என்பதை விளக்குவதை
போல் ஆண்டாள் நாச்சியாரின் கோதையின் கீதை (திருப்பாவை பாசுரங்கள்) திகழ்கிறது.

1. துயில் எழும் போது ஹரிஹரி என்பது புள்ளும் சிலம்பின காண் என்கிற பாசுரத்தில்
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ (பாசுரம் 6) என்கிறார்.
Read 8 tweets
Dec 19
#MahaPeriyava
Tiruppavai-Tiruvembavai
From "Acharya's Call"- invaluable speeches given by His Holiness Sri Sri Sri Chandrasekharendra Saraswathi Mahaswamiji
December 3, 1957

“Visitors to Cambodia can see even today dilapidated temples dedicated to Siva, Vishnu or Ambikai, Image
mostly to Siva, in the forests of that country. They bear testimony to the fact that our civilization and culture had penetrated those parts of South-East Asia more than a thousand years ago. What is more, valuable Sanskrit inscriptions on stone, about 800 in number, have been
recovered by French archaeologists from the walls of those temples in ruins. From the point of view of diction and substance, these inscriptions are even superior to those found in India. Various trading communities from India travelled in their own ships to these parts of the
Read 19 tweets
Dec 18
We can plan to visit one #temple a day or one temple a week if we are in Chennai. Distance from Vani Mahal T.Nagar is given in minutes & mentioned if over 500 Years Old

15 Minutes or Under

1. Agasthyar Temple (75 years old), T. Nagar

2. Shiva Vishnu Temple (1935), T. Nagar.
3. Raghavendra Swamy Temple (1987), T. Nagar, 8 mins

4. Iyappan Temple (1974), Mahalingapuram, 10 mins

5. Agatheeswarar Temple (over 500 years old) Nungambakkam, 10 mins

6. Angala Parameswari Temple (1978), West Mambalam, 10 mins

7. Kasi Viswanathar Temple (400 years old),
West Mambalam, 12 mins

8. Karaneeswarar Temple (12th century CE) Saidapet, 14 mins

9. Parthasarathy Perumal Temple (6th century CE) Triplicane, 15 mins

16 Minutes to Half-an-Hour

10. Balasubramanya Swamy Temple (500 years old) Teynampet,

11. Thiruvateeswarar Temple (May be
Read 16 tweets
Dec 18
When Maha Periyava does special Puja to Kamakshi Amman the screen will be closed and held by an attendant. People have asked have you peaked inside to see what is happening and he will always reply that it is forbidden and he will never go against the sastras. On that particular
Day just after two minutes of holding the screen, his hands became heavy and his body was burning with fever and he was unable to continue holding the screen. As it may so happen that day the puja too took longer than the usual 5 minutes. So the attendant unable to continue
Holding the screen turned inside to tell Maha Periyava that He should do the Harathi as he is not able to hold the screen any longer. What he saw as he turned in was sakshath Ambal Herself and Maha Periyava offering flowers at Her holy feet. He was speechless. Maha Periyava
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(