இன்று #குசேலர்_தினம் 21.12.2022
குருவாயூரப்பன் கோயிலில் மார்கழி மாதம் முதல் புதன் கிழமையை குசேலர் தினமாக கொண்டாடுகின்றனர். கிருஷ்ணன் குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாளாதலால் அன்று பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம்.
கண்ணனின் தரிசனத்தால் குசேலருக்குக் கிடைத்த ஐஸ்வர்யம், செல்வச் செழிப்பு தங்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டு, படிக்கணக்கில் இறைவனுக்கு அவல் காணிக்கை செலுத்துகின்றனர். ஸ்ரீ குருவயூரப்பனக்கு அவலும் அவல் பாயசமும் நைவேத்யம் செய்யப் படுகிறது. கிருஷ்ணரும், குசேலரும் சிறு
வயதில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். கிருஷ்ணர் கோகுலத்தைப் பிரிந்து துவாரகாபுரி மன்னன் ஆனார். குசேலர் பரம ஏழையாக தன் ஊரிலேயே வாழ்ந்து வந்தார். "குசேலம்" என்றால் கிழிந்து நைந்து போன துணியைக் குறிக்கும். ஏழ்மையின் காரணமாக அத்தகைய ஆடையை அணிந்திருந்த படியால், #சுதாமா என்ற அவரது
இயற்பெயர் மறைந்து குசேலர் என்ற பெயராலேயே அழைக்கப்படலானார்.
திருமணமாகி அவருக்கு 27 குழந்தை கள் பிறந்ததால் சாப்பாட்டுக்கே அல்லாடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு நாள் அவர் கிராமத்தில் எல்லாரும் கிருஷ்ணரின் வள்ளல் தன்மை பற்றி புகழ்ந்து பேசினார்கள். தன்னை நாடி வரும் அனை வருக்கும்
பொன்னும், பொருளுமாக வாரி, வாரி கிருஷ்ணர் கொடுப்பதாக கூறினார்கள். உடனே குசேலரிடம், அவரது மனைவி சுசீலா, நம் குடும்பத்தில் வறுமை தாண்டவம் ஆடுகிறது. நீங்கள் துவாரகாபுரி சென்று உங்கள் நண்பர் கிருஷ்ணரை பார்த்து வாருங்கள் என்றாள். முதலில் தயங்கிய குசேலர் பிறகு குழந்தைகளுக்காக ஒத்துக்
கொண்டார். வெறுங்கையுடன் போகக் கூடாது என்று, பல வீடுகளில் அவல் யாசகம் எடுத்து, அதை ஒரு கந்தல் துணியில் மனைவி முடிந்து கொடுக்க, அதை எடுத்து கொண்டு துவாரகைக்குப் புறப்பட்டார். குசேலர் வந்துள்ள தகவல் அறிந்ததும் கிருஷ்ணர் வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றார் குசேலரை அழைத்துச் சென்று தன்
சிம்மாசனத்தில் அமர வைத்தார். பிறகு குசேலர் கால்களை மஞ்சள் நீரால் கழுவி உபசரித்து பல்சுவை உணவு கொடுத்தார். குசேலருக்கு இது கூச்சமாக இருந்தது. செல்வ செழிப்பில் மிதந்த கிருஷ்ணருக்கு கொண்டு வந்த அவலை எப்படி கொடுப்பது என்று வெட்கப்பட்டார். இதை உணர்ந்த கிருஷ்ணர், குசேலர் மறைத்த அவல்
பொட்டலத்தைப் பிடுங்கி, ஆகா எனக்குப் பிடித்த அவல் கொண்டு வந்து இருக்கிறாயா என்று ஆனந்தத்துடன் சாப்பிட ஆரம்பித்தார். கிருஷ்ணர் தன் வாயில் ஒரு பிடி அவல் போட்டுக் கொண்டதும் "அட்சயம்'' என்று உச்சரித்தார். மறு வினாடி கிராமத்தில் குசேலர் வீட்டில் வசதிகள் பெருகின. குசேலரின்
குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் கிடைத்தன. கிருஷ்ணரின் ஆசியால் குசேலரின் குடிசை வீடு, மாளிகையாக மாறியது. இந்த குசேலரின் கதையை ஸ்ரீமத் பாகவதம் 10-ஆவது ஸ்காந்தம் விரிவாகக் கூறுகிறது. குசேலர் தினமான மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று நம் வீடுகளிலும் குருவாயூரப்பன் படம் அல்லது
கிருஷ்ணர் படம் வைத்துப் பூஜித்து, வெல்லம் கலந்த அவல் நிவேதிக்கலாம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
Sri Maha Periyava was camping in Satara in Maharashtra. There were a lot of people waiting to have darshan of the Mahan. There was a devotee, who was proficient in playing the veena. On hearing about Paramacharya’s visit to Satara, he too came to visit HH. He had a
desire to play the veena in front of Maha Periyava. After some time, the veena player managed to have darshan of Maha Periyava. Upon having darshan, he requested Paramacharya if he could play a small piece on his veena. Maha Periyava gave him permission and he started to play the
veena. It is a well-known fact that Paramacharya was adept in all arts and fine-arts. The veena player’s performance was great and everyone in the crowd liked it very much. There was a brief silence following this and then Maha Periyava picked up the veena and played a small
#ஹனுமத்_ஜயந்தி_ஸ்பெஷல்
பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக் கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் #ஆஞ்சநேயர். ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து வடகிழக்கில் சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது
அனுமன் பிறந்த #அஞ்சனை_கிராமம். ஊரைச் சுற்றி கட்வா நதி ஓடுகிறது. இதை அஞ்சனை ஆறு என்றே அழைக்கின்றனர். இங்கே உள்ள குகைக்குள் மடியில் குழந்தை அனுமனுடன் திகழும் அஞ்சனா தேவியின் புராதனச் சிலை உள்ளது. இதை 'பிராசீன் மூர்த்தி' என்கின்றனர். ஐந்து படிகளைக் கடந்து சற்று உயரே சென்றால்
அனுமனுடன் திகழும் அஞ்சனையின் புதிய பளிங்குச் சிலையையும், சற்று இடப்புறத்தில் இடதுகையில் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் #பஜ்ரங்பலியின் சிறிய விக்ரகமும், வலது கோடியில் அஞ்சனாதேவியின் புராதன விக்ரகமும் உள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலம், சிந்து வாடாவில், சாம்வலி என்ற இடத்தில்
#நற்சிந்தனை விஷ்ணு நாமத்தை சதா கீர்த்தனம் செய்வதால், கோடிக் கணக்கான தீர்த்த யாத்திரை ஸ்தலங்களை விஜயம் செய்த பலனைப் பெறலாம் என கூறுகிறது #வாமனபுராணம். கோடிக்கணக்கான புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்வதால் பெறாத பலனை ஹரி நாம கீர்த்தனையால் பெறலாம் என கூறுகிறார் ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு
ஓர் உடை பழையதாகும் போது, அதை அகற்றி விட்டு வேறொன்றை அணிகிறோம். அது போல் ஆத்மா தனது ஆசைகளின் அடிப்படையில் உடையை மாற்றிக் கொள்கிறது. தெய்வீகத் துகளான ஆத்மா, நீர்வாழ்வனவற்றிலிருந்து தொடங்கி, மரம், செடிகளாகவும், பின்னர் பூச்சிகள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என்ற உடல்களினுள் இடம்
பெயர்கிறது. அதன்பின் மனித வாழ்விற்கு இடம் பெயர்கிறது. இங்கிருந்து நாம் மீண்டும் பரிணாமச் சுழற்சிக்கு கீழே இறங்கலாம் அல்லது தெய்வீக வாழ்விற்கு உயரலாம். எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. மனிதப் பிறவியின் சிறப்பு அதன் வளர்ச்சி பெற்ற உணர்வாகும். ஆகவே, பூனைகளையும்
Those who want to know about #MahaPeriyava can please read this detailed post. It gives a glimpse into how He became the head of Sankara Mutt and His life after that.
His Holiness Jagadguru Pujya Sri Chandrasekharendra Saraswathi Swamigal or the Sage of Kanchi was the 68th
Madathipathi of the Kanchi Kamakoti Peetam. He is one of the greatest saints that history has ever witnessed. He is usually referred to as “The Walking God” "Visible God of Kaliyuga" "Incarnation of God" "Embodiment of Love, Peace and Compassion” “Confluence of Dharma" "Destroyer
of all Evils" and “Essence of Knowledge".
Swaminathan (Purvashram name of His Holiness) was born on 20 May 1894, under Anuradha star into a Kannadiga Smartha Hoysala Karnataka family in Viluppuram, South Arcot District, Tamil Nadu. He was the second son of Subramaniya Shastrigal
#சபரிமலை_செல்லும் #ஐயப்ப_பக்தர்கள்_கவனத்திற்கு
மறைந்த பிரபல திரைப்பட நடிகர் எம்.என்.நம்பியார் 1942 முதல் சபரிமலை யாத்திரை சென்றவர். குருசாமி. அவர் வாவர் சமாதி பற்றி கூறியது:
"வாவர் சமாதியில் ஐயப்ப பகதர்கள்
வழிபட வேண்டும் எனபது அபத்தமானது #அது_தீட்டானது. வாவர்ங்கிற இஸ்லாமியர்
எப்படி ஐயப்பனுக்கு நண்பராக இருந்திருக்க முடியும்? மேலும் அந்த மாதிரி பெயரை வேற யாராவது கேள்விப் பட்டிருக்கோமா? இதை எல்லாம் யோசிச்சு பார்க்கணும். அது மட்டுமல்ல 41- நாட்கள் விரதமிருந்து மாலை போட்டுக்கிட்டு இருமுடி கட்டிக்கிட்டு இஷ்டப்பட்டு சுவாமியை பார்க்கப் போற நேரத்துல வாவர்
சமாதியை பார்க்கறது நல்லதுதானா இதையாவது யோசிக்க வேண்டாமா? நானோ என் கூட வாரவங்களோ போக மாட்டோம். அது சமாதிதான். நல்ல விஷயத்துக்கு, புனித விஷயத்துக்கு போகும் போது இப்படி சமாதியை பார்த்துவிட்டு போறது சரியில்லை என்று தான்
நான் சொல்லுவேன்." #பந்தள_ராஜா குடும்பத்தின் வாரீசுகளில் ஒரு
ஸ்ரீராம நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஹனுமான் கண்டிப்பாக இருப்பார். எங்கு ஸ்ரீமத் ராமாயணம் உபந்யாசம் நடந்தாலும் அங்கு ஒரு சிறு பலகையோ அல்லது ஒரு ஆசனமோ வைப்பார்கள். காரணம் அந்த ஆசனத்தில் சூஷ்ம ரூபத்தில் ஸ்ரீராம தூத ஹனுமன் அமர்ந்து அழகாக ரசித்து
கேட்பார். கைலாயத்தில் பார்வதியும் சிவனும் உரையாடிக் கொண்டு இருந்தனர். தேவீ! காக்கும் கடவுளான ஸ்ரீமஹா விஷ்ணு ஒவ்வொரு யுகத்திலும் என்னை மறக்காமல் பூஜிக்கிறார். அதுவும் அவருடைய ஸ்ரீபரசுராம அவதாரத்தில் என்னுடைய ஆத்மார்த்தமான பக்தனாக என்னையே பூஜித்து என் நாமாவை இடைவிடாது கூறி வந்தார்.
அவர் இப்படி என்னை பூஜிக்க அவசியமே இல்லை என்றாலும் என் மீது வைத்திருந்த அபரிமிதமான பிரியத்தால் தான் இதை செய்கிறார்.
அதற்கு கைமாறாக த்ரேதா யுகத்தில் ஒரு குரங்கு வடிவத்தில் ஸ்ரீமஹா விஷ்ணுவின் பக்தனாக ஒரு சேவகனாக அவதரித்து அவரின் ஆசியை பெறப் போகிறேன் என்றார். அதற்கு அம்பிகை பிரபு