ஸ்ரீ ரங்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுந்த ஏகாதசி பெருவிழா தொடங்குகிறது.
இவ்வருட வைகுண்ட ஏகாதசி திருநாள் முன்னிட்டு இன்று (22-12-2022) வியாழக்கிழமை திருநெடுந்தாண்டகம் எனப்படும் அரையர் சேவையோடு திருஅத்யாயன திருநாள் தொடக்கம்.
இராமானுசரின் விருப்பப்படி ஸ்ரீ பராசர பட்டர் மேல்கோட்டையில் வாழ்ந்து வந்த மாதவாச்சாரியை இந்த திருநெடுந்தாண்டகம் வியாக்கியானத்தை கொண்டு வாதப் போரில் வென்று தன்னுடைய சீடராகி ஆக்கினார்.
இந்த மாதவாச்சாரியாரே பின்னர் நஞ்சீயர் என்று அழைக்கப்பட்ட பராசரபட்டரின் சீடர்.
பராசரபட்டர் பெரிய பெருமாளின் வளர்ப்பு மகன். இந்த நிகழ்ச்சியைக் கேட்ட பெரிய பெருமாள், பராசரபட்டர் இந்த வியாக்கியானம் சொல்லி கேட்க ஆசைப்பட்டார்.
அதனால் திருநெடுந்தாண்டகத்துடன் திருஅத்யயன உற்சவம் தொடங்குகிறது.
இராமாநுசர் காலத்தில்தான் தமிழுக்கு திருக்கோயில்களில் பெரிய தொரு ஏற்றம் அளிக்கப்பட்டது.
முத்தமிழ் விழாவாக அரையர்கள் கையில் தாளத்தோடும், இசையோடும் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை,
பெருமாள் திருமுன்பு இசைத்து தமிழுக்கு ஏற்றம் அளிக்கும் பகல்பத்து, இராப்பத்து விழாவை திருநெடுந்தாண்டக தினத்தன்று தொடங்கி வைக்கின்றனர்.
கர்ப்பகிருகத்திற்கு முன்னர் அரையர்கள் கொண்டாட்டங்கள் சொல்லி திருநெடுந்தாண்டகம் முதல் பாசுரம் “மின்னுருவாய்” பல தடவை இசைப்பர்
பின்னர் சந்தன மண்டபத்தில் முதல் பாசுரத்தை (மின்னுருவாய்) இசையுடன் அபிநயம் செய்வார்கள்.
ஹனுமனின் அருளைப் பெற துளசிதாசர் வட மொழியில் அருளிய ஹனுமன் சாலீசா எனும் திருமந்திரத்தை
ஹனுமன் ஜெயந்தி இன்றைய தினம் சொல்லி நம் துன்பங்களை வெல்வோம்.
இந்த ஹனுமன் சாலீஸா மந்திரத்தை பாராயணம் செய்யும் முன் உடலை தூய்மை படுத்திக்கொண்டு, தூய ஆடையை உடுத்தி மாருதியை மனதார நினைத்துக் கொண்டு தியானிக்க வேண்டும்.
ஸ்ரீ அமுதவல்லி அம்பாள் ஸமேத ஸ்ரீ பாரிஜாதவனேஸ்வர சுவாமி திருக்கோவில் - திருக்களர்.
மாலை : ஸ்ரீ ஷண்முகப் பெருமானுக்கு அபிஷேகம்.
*உபதேச காட்சி* தொடர்ந்து திருவீதியுலா.
ஆண்டுக்கொருமுறை மார்கழி வளர்பிறைசஷ்டி சதயநட்சத்திரம் கூடிய நன்னாளில் நடைபெறும் உபதேச விழாவில் அன்பர்கள் கலந்துகொண்டு #பஞ்சாட்சரம் ஜெபித்து திருவருளும் குருவருளும் பெற அன்புடன் அழைக்கிறோம். 🙏
இத்தலத்தில் தான் ஷண்முகப் பெருமான் குருமூர்த்தமாக எழுந்தருளி