#திருச்சிறுபுலியூர் #தலசயனப்பெருமாள் கோயில்,
நாகப்பட்டிணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ளது திருச்சிறுபுலியூர். தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் பெயர் ஸ்தலசயனப்பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள் Image
(அருள்மாகடல்)
உற்சவ தாயார் பெயர் தயாநாயகி. தீர்த்தக் குளம் - மானஸ புஷக்ரிணி. விமானம் - நந்தவர்த்தன விமானம். கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாசர், வியாக்கிரபாதர், கங்கையுடன் காட்சியளிக்கிறார். திருமங்கை ஆழ்வாரால் 10 பாசுரங்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட கோயில் ஆகும். Image
பகவான் ஸ்ரீநாராயணனை சயனத்தில் தான் தாங்குவதாக #ஆதிசேஷனும், அவரை எல்லா இடங்களுக்கும் தாமே சுமந்து செல்வதாக #கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே போட்டியும், பொறாமையும் வளர்ந்து பகையாக மாறியது. ஆதிசேஷன் இப்பகை விலக எண்ணம் கொண்டு தவம் இருந்தார். அத்தவத்திற்கு இரங்கி Image
பெருமான் ஆதிசேஷன் மடியில் சயனம் கொண்டு சிறுகுழந்தையாக பால சயனக் கோலத்தில் கோயில் கொண்டார். அதாவது பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷன் மீது பள்ளிக் கொண்டிருக்கும் கோலம். இத்தலத்தில் உயரத்தில் ஆதிசேஷனும், பூமிக்குக் கீழே கருடன் சந்நிதியும் அமைந்துள்ளது.
#ஸ்தலசயனம்_பாலவியாக்ரபுரம் என்று Image
இத்தலம் அழைக்கப்படுகிறது.
#வியாக்ரபாரதர் என்ற முனிவர் சிதம்பரத்தில் தவம் செய்து தனக்கு மோட்சம் கிடைக்க வேண்டினார். மோட்சம் கிடைக்க வல்லுநர் பெருமாளே என நடராஜர் கூற, அவ்வாறாயின் அதற்குரியத் தலத்தை காண்பிக்குமாறு முனிவர் வேண்டினார். நடராஜர், சிவலிங்க ரூபமாக வழி காட்ட அவரை விரைந்து
பின் தொடர தான் பெற்ற தவ வலிமையால் முனிவர் விரைந்து செல்லும் புலியின் கால்களால் இத்தலத்திற்கு வந்து முக்தி பெற்றார் என்றும் அதனால் சிறுபுலியூர் என அழைக்கப் படுவதாக சொல்வர். பெருமாளைக் கண்டு, அந்த பிரம்மாண்டமான தோற்றம் பார்த்து வியாக்ரபாரத முனிவர் பிரமிப்பு அடைந்தார். அந்தப்
பரம்பொருளை எப்படி முழுமையாகக் கண்களால் காணமுடியும்? எப்படிக் கரங்களால் தீண்டி இன்புற முடியும்? அவரது தர்ம சங்கடத்தைக் கண்ட பெருமாள் அவருக்கு அருள் வழங்கும் வண்ணம் தன்னை சுருக்கி கொண்டார். புலியாருக்காக சிறுவடிவு எடுத்து பெருமாள் மாறியதாலும் சிறுபுலியூர் என அழைக்கப்பட்டு
இருக்கலாம். இச்சிறு கோலத்திலும், தன் நாபிக்கமலத்தில் பிரம்மனைத் தாங்கியுள்ளார். திருவடிக்கு அருகே ஸ்ரீதேவியுடன், சிறுவடிவில் புலிக்கால் முனிவரும், கண்வ முனிவரும் காட்சி தருகிறார்கள். 108 திவ்விய தேசங்களில் பெருமாள் தெற்கு நோக்கிக் காட்சி தருவதாக அமைந்தத் தலங்கள் இரண்டு. முதல்
தலம் ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப்பெரிய வடிவத்தில் #அனந்தசயனத்தில் சேவை சாதிக்கிறார்
இரண்டாவது தலமான இங்கு
#பால_சயனத்தில் குழந்தை வடிவனாக சேவை செய்கிறார். பிரம்மாண்டமான பெருமாள், புலிக்கால் முனிவருக்காக தன்னை சுருக்கிக் கொண்டது திருமங்கையாழ்வாருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாம்.
அவரை சமாதானப்படுத்த, பெருமாள் அசரீரியாக, நீ பார்க்க விரும்பும் வடிவை #திருக்கண்ணமங்கை திருத்தலத்தில் காண்பாயாக என்று அருளினார். திருவனந்தபுரத்தில், தலையை இடது ஓரத்துக்கும் வலது ஓரத்துக்குமாக அசைத்து திருமாலை தரிசிக்க வேண்டிய நிலையில், #திருக்கண்ணமங்கலத்தில் தலையை கீழிருந்து மேலாக
கழுத்தை வளைத்து தரிசிக்க வேண்டியது அவசியம். இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடைபெறும் புகழ்ப்பெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து இராப்பத்து உற்சவம் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு விழாவினை முன்னிட்டு பகல்பத்து விழாவின் முதல் நாளையொட்டி ஸ்ரீ
கிருபாசமுத்திர பெருமாள் கிருஷ்னர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அடுத்த நாள் ஸ்ரீ கிருபாசமுத்திர பெருமாள் ஸ்ரீ ராமர் கோலத்திலும் மூன்றாம் நாள் ஸ்ரீ காளிங்க நர்தனத்திலும் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். நான்காம் நாள் காலையில் திருமங்கையாழ்வார் Image
திருவடி தொழுதலும், மாலை மோகினி திருக்கோலத்தில் கோவிலின் சிறப்பு வழிபாடும் நடைபெறும்.
முடிந்த போது சென்று தரிசிப்போம்.
ஓம் நமோ நாராயணாய நமஹ

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 27
#மகாபெரியவா வேதம் பயிலும் குழந்தைகளிடம் பெரியவாளின்
தாய்ப்பாசம் ஈடற்றது. பற்பல முறை தன்னிடம் வரும் செல்வந்தர்களான
பக்தர்களிடம், எனக்கு நீ ஒரு உதவி
செய்வாயோ? என்று மஹாபெரியவா கேட்பார்கள். அவர் கேட்கும் உதவி வேதபாடசாலைக் குழந்தைகளுக்கு தித்திப்பு, காரம் பக்ஷணங்களை பண்ணி நீயே போய் Image
கொடுத்துட்டு வா என்பது தான். பிறகு சில நாட்களில் கழித்து அந்தப் பாடசாலை குழந்தைகள் மஹா பெரியவாளை தரிசிக்க வந்தால் உடனே அவர்களிடம், அன்று பக்ஷணம் வந்ததா? சாப்பிட்டாயா?என்று அக்கறையோடு கேட்பார்கள்.
மாடு கூடத் திங்காத அழுகல் வாழைப் பழம் வேதபாடசாலைப் பையன்களுக்கு, என்று பழமொழி போல்
கூறப்பட்ட காலத்தில் பெரியவாளின் பெரிய புரட்சி, பாடசாலை குழந்தைகளுக்கு அவர் காட்டிய அலாதி பிரியமும், அவர்களுக்கு செய்து கொடுத்த சௌகர்யங்களும்.
மகா பெரியவா வேதபாடசாலை குழந்தைகளுக்கான வசதிகளை உருவாக்கி கொடுத்த விதமே மிகச் சிறப்பு. ஒருமுறை பெரியவாளுக்கு அப்பளம் கொண்டு வந்த
Read 8 tweets
Dec 27
#மகாபெரியவா
காஞ்சீபுரம் அஷ்டபுஜம் தெரு, சரஸ்வதி அம்மாளுக்கு நெஞ்சுவலி, டாக்டரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போய்க் கொண்டிருந்த போது, பட்டப்பகல் நட்ட நடுத் தெருவில் மஞ்சள் சரட்டில் கோர்த்து இருந்த திருமாங்கல்யம் பறி போய் விட்டது. ஒட்டி உரசினால் போல, சைக்கிளில் வேகமாகப் பறித்துச் Image
சென்று மறைந்து போனான். வீட்டுக்கு வந்து, பூஜை மாடத்தில் வழக்கமாகப் பூஜிக்கப்படும் பெரியவா பாதுகைகளின் மேலிருந்து ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து, மஞ்சள் சரட்டில் கட்டி கழுத்தில் போட்டுக் கொண்டாகி விட்டது. உடனே நகைக் கடைக்குப் போய், திருமாங்கல்யம் வாங்கிக் கொண்டு வந்து, சரட்டில்
கோர்த்து கழுத்தில் போட்டுக் கொள்ளலாம் - என்பதெல்லாம் நடை முறைப்படுத்த முடியாத செயல் திட்டம். எப்படியும் பெரியவாளிடம் சொன்னால் தான் மனம் நிம்மதி அடையும். மறுநாள் தரிசனத்துக்குப் போனபோது கூட்டம் கூடுதகலாகவே இருந்தது. மூகூர்த்த நாள். சிலர் கல்யாண விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
Read 8 tweets
Dec 26
#MahaPeriyava (Excerpts from a meeting of Arthur Isenberg with Sri Maha Periyava on 20th April 1959 at Numbal near Chennai)

The person who sat opposite me was sixty five years old, slim, a bit on the smallish side. The top of his head was almost entirely bald or shaven, the Image
lower portion of his face was outlined by a white beard. He had white moustache and white eyebrows. His body was clothed in the saffron-coloured mantle of the Sannyasin. Not that any of this mattered. What did matter was his face, and more particularly, his eyes, which looked at
me with a mixture, or rather a fine blending, of intelligence, kindliness and compassion, while at the same time somehow reflecting a most gentle sense of humour. I had the definite sensation of being in the presence of man thoroughly at peace with himself, a Sage. The impression
Read 24 tweets
Dec 26
Mr. Rangachari, an ardent devotee of #SriRamanaMaharishi who worked as a Telugu Pandit in Voorhees College at Vellore, one day came to Ramanashram at Thiruvannamalai and asked Sri Ramana Maharshi about ‘Nishkamya karma' (desireless action). There was no reply. After a while Sri
Bhagavan went up the hill and a few followed him, including the pandit.
There was a thorny stick lying on the way which Sri Bhagavan picked up; he sat down and began leisurely to work at it. The thorns were cut off, the knots were made smooth, the whole stick was polished with a
rough leaf. The whole operation took about six hours. Everyone was wondering at the fine appearance of the stick made of a spiky material. A shepherd boy put in his appearance on the way as the group moved off. He had lost his stick and was at a loss. Sri Bhagavan immediately
Read 4 tweets
Dec 26
#மகாபெரியவா
எழுதியவர்:ஆஸ்திக சமாஜம் நரசிம்மன்
தட்டச்சு:வரகூரான் நாராயணன்.

இது நான் நேரே பார்த்து நெகிழ்ந்த சம்பவம். அப்போது நுங்கம்பாக்கம் ஜம்புலிங்க நாயக்கர் தெருவில்
"உபநிஷத் ஆஸ்ரமம்" என்று ஒன்று இருந்தது. பரமாச்சாரியார் பட்டணத்துக்கு வந்தால் அங்கே தங்குவார். வெளியே கீற்றுக் Image
கொட்டகை போட்டிருப்பார்கள். கீற்றுத் தடுப்புக்குப் பின்னால் தான் பரமாச்சாரியார் உட்கார்ந்திருப்பார். மத்தியான நேரத்தில், சுமார் இரண்டு மணிக்கு மேல் பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் வந்து அங்கே பாடுவார்கள். பரமாச்சாரியார் தரிசனம் கிடைத்த மாதிரியும் இருக்கும், சங்கீதம் கேட்ட
மாதிரியும் இருக்கும் என்பதால் ரசிகர்கள் அந்த நேரத்தில் வந்து கூடுவார்கள். நான் போயிருந்த அன்று, மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாடுகிறார். அந்தப்புறம் இருந்து பரமாச்சாரியார் கேட்டுக் கொன்டிருக்கிறார். மத்ய்மாவதி ராகத்தில் 'வினாயகுனி' பாடிக் கொண்டு இருந்தார் விஸ்வநாதய்யர். அதில்
Read 5 tweets
Dec 26
ஆண்டிகளால் உலகமே வியக்கும் வண்ணம் கட்டப்பட்டது அருள்மிகு #திருசெந்தூர்_சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில், ஒரு கட்டிடக் கலை அதிசயம். Image
கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்தில் இருந்தும் உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள். ஆனால், திருச்செந்தூர் Image
முருகன் கோயில் கடற்கரையில் இருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் உள்ளது. எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்தில் Image
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(