ஆண்டிகளால் உலகமே வியக்கும் வண்ணம் கட்டப்பட்டது அருள்மிகு #திருசெந்தூர்_சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில், ஒரு கட்டிடக் கலை அதிசயம். Image
கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்தில் இருந்தும் உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள். ஆனால், திருச்செந்தூர் Image
முருகன் கோயில் கடற்கரையில் இருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் உள்ளது. எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்தில் Image
இருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல்
இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கு
இருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது.
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டியவர்வகளும் புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகள்
1. மௌனசுவாமி
2. காசிசுவாமி
3. ஆறுமுகசுவாமி
இவர் ராஜகோபுரம் கட்டியவர்
4. ஸ்ரீவள்ளிநாயகசுவாமி Image
5. தேசியமூர்த்திசுவாமி.
ஆகியோர். தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாளும் பெரும் பணக்காரர்களாலும் கட்டப்பட்டு இருக்கும் நிலையில் ஆண்டிகலாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது.
இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம். காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே #மூவர்_சமாதி என்ற பெயருடனே அமைந்துள்ளது. நல்ல அமைதியான இடம். ImageImage
நான்காவதாக, ஞான ஸ்ரீவள்ளிநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப் பிரகாரத்திலுருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது. ஐந்தாவதாக, ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி
சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக் கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது. முதல் மூன்று
சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது. தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது ஜீவசமாதி இருக்கும் இடம் பலருக்கும் தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும்.
ஆனாலும் யாரும் செல்வதில்லை. அடியாருக்கு அடியார் கந்தக் கடவுள் அவரின் கோவில் திருப்பணியை செய்தவர்களை தரிசிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் அமைவதில்லை. இவர்களை தரிசனம் செய்பவர்கள் முருகனின் முழு அருளை முழுமையாக பெற முடியும். அடுத்த முறை செல்லும் போது மறக்காமல் இங்கும் சென்று
தரிசிப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 27
#பகவான்_ரமணர் பொன்மொழிகள்

தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

மனத்தை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும். குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

தியானத்தில் ஆன்ம Image
தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவர் உடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.

கடவுளை ஒவ்வொருவரும் அவர்கள் இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும். கர்த்தா ஒருவன்.
நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.

மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும். ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து
Read 4 tweets
Dec 27
#அரங்கன் #பராசர_பட்டர் #ஶ்ரீவைஷ்ணவம் #தமிழ்
பராசர பட்டர், ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார்.
‘என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்?’ என அரங்கன் கேட்க,
‘முதலில், உம் ஆதிசேஷனைப் போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பார்க்கலாம்’ என்றார் பராசரர்.
‘அட! ஆயிரம் ImageImage
நாக்குகள் இருந்தால் தான் பாடுவீரோ?’ என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட பராசரபட்டருக்கு, ஆயிரம் நாக்குகளை வழங்கினான். ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர்
”மன்னிக்கவும் ரங்கா! என்னால் உன்னை பாட முடியாது!” என்று சொல்லிவிட்டு, அமைதியாகி
விட்டார். ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு! பின்னே, பாடு என்று உத்தரவு போட்டாகி விட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகி விட்டது. அப்படியும் ‘பாட முடியாது’ என்று மறுத்தால்?
”என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய், கொடுத்தேன். பிறகென்ன பாட
Read 10 tweets
Dec 27
#மகாபெரியவா வேதம் பயிலும் குழந்தைகளிடம் பெரியவாளின்
தாய்ப்பாசம் ஈடற்றது. பற்பல முறை தன்னிடம் வரும் செல்வந்தர்களான
பக்தர்களிடம், எனக்கு நீ ஒரு உதவி
செய்வாயோ? என்று மஹாபெரியவா கேட்பார்கள். அவர் கேட்கும் உதவி வேதபாடசாலைக் குழந்தைகளுக்கு தித்திப்பு, காரம் பக்ஷணங்களை பண்ணி நீயே போய்
கொடுத்துட்டு வா என்பது தான். பிறகு சில நாட்களில் கழித்து அந்தப் பாடசாலை குழந்தைகள் மஹா பெரியவாளை தரிசிக்க வந்தால் உடனே அவர்களிடம், அன்று பக்ஷணம் வந்ததா? சாப்பிட்டாயா?என்று அக்கறையோடு கேட்பார்கள்.
மாடு கூடத் திங்காத அழுகல் வாழைப் பழம் வேதபாடசாலைப் பையன்களுக்கு, என்று பழமொழி போல்
கூறப்பட்ட காலத்தில் பெரியவாளின் பெரிய புரட்சி, பாடசாலை குழந்தைகளுக்கு அவர் காட்டிய அலாதி பிரியமும், அவர்களுக்கு செய்து கொடுத்த சௌகர்யங்களும்.
மகா பெரியவா வேதபாடசாலை குழந்தைகளுக்கான வசதிகளை உருவாக்கி கொடுத்த விதமே மிகச் சிறப்பு. ஒருமுறை பெரியவாளுக்கு அப்பளம் கொண்டு வந்த
Read 8 tweets
Dec 27
#மகாபெரியவா
காஞ்சீபுரம் அஷ்டபுஜம் தெரு, சரஸ்வதி அம்மாளுக்கு நெஞ்சுவலி, டாக்டரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போய்க் கொண்டிருந்த போது, பட்டப்பகல் நட்ட நடுத் தெருவில் மஞ்சள் சரட்டில் கோர்த்து இருந்த திருமாங்கல்யம் பறி போய் விட்டது. ஒட்டி உரசினால் போல, சைக்கிளில் வேகமாகப் பறித்துச்
சென்று மறைந்து போனான். வீட்டுக்கு வந்து, பூஜை மாடத்தில் வழக்கமாகப் பூஜிக்கப்படும் பெரியவா பாதுகைகளின் மேலிருந்து ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து, மஞ்சள் சரட்டில் கட்டி கழுத்தில் போட்டுக் கொண்டாகி விட்டது. உடனே நகைக் கடைக்குப் போய், திருமாங்கல்யம் வாங்கிக் கொண்டு வந்து, சரட்டில்
கோர்த்து கழுத்தில் போட்டுக் கொள்ளலாம் - என்பதெல்லாம் நடை முறைப்படுத்த முடியாத செயல் திட்டம். எப்படியும் பெரியவாளிடம் சொன்னால் தான் மனம் நிம்மதி அடையும். மறுநாள் தரிசனத்துக்குப் போனபோது கூட்டம் கூடுதகலாகவே இருந்தது. மூகூர்த்த நாள். சிலர் கல்யாண விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
Read 8 tweets
Dec 26
#MahaPeriyava (Excerpts from a meeting of Arthur Isenberg with Sri Maha Periyava on 20th April 1959 at Numbal near Chennai)

The person who sat opposite me was sixty five years old, slim, a bit on the smallish side. The top of his head was almost entirely bald or shaven, the
lower portion of his face was outlined by a white beard. He had white moustache and white eyebrows. His body was clothed in the saffron-coloured mantle of the Sannyasin. Not that any of this mattered. What did matter was his face, and more particularly, his eyes, which looked at
me with a mixture, or rather a fine blending, of intelligence, kindliness and compassion, while at the same time somehow reflecting a most gentle sense of humour. I had the definite sensation of being in the presence of man thoroughly at peace with himself, a Sage. The impression
Read 24 tweets
Dec 26
Mr. Rangachari, an ardent devotee of #SriRamanaMaharishi who worked as a Telugu Pandit in Voorhees College at Vellore, one day came to Ramanashram at Thiruvannamalai and asked Sri Ramana Maharshi about ‘Nishkamya karma' (desireless action). There was no reply. After a while Sri
Bhagavan went up the hill and a few followed him, including the pandit.
There was a thorny stick lying on the way which Sri Bhagavan picked up; he sat down and began leisurely to work at it. The thorns were cut off, the knots were made smooth, the whole stick was polished with a
rough leaf. The whole operation took about six hours. Everyone was wondering at the fine appearance of the stick made of a spiky material. A shepherd boy put in his appearance on the way as the group moved off. He had lost his stick and was at a loss. Sri Bhagavan immediately
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(